Saturday, September 24, 2011

ஜெயமளிக்கும் ஜெயமங்கள ஆஞ்சநேயர்




[Image1]
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் பெற்றது கோயம்புத்தூர் அருகிலுள்ள இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில்.
இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி இருக்கும் அருமையான அருள்பொங்கும் திருத்தலம்.
கோயில் நுழைவு வாயில்
[Gal1]
ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் தெற்கே விநாயகர் கோயிலும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரர் கோயிலும், அதனை ஒட்டி வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோயிலும், அதற்கு அருகில் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலும் ஒன்றை ஒன்று அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள தல சிறப்பு அமைந்தது.
மகா மண்டபம்
கோயில் உள்ள கல்வெட்டில் கலி 4404-ல் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளதாக இருக்கிறது.,

சிவன் பார்வதி கோயில் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருக்கிறது,கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். 
துவஜஸ்தம்பம்
[Gal1]
பெரும்பாலும் ஆஞ்சநேயர் உருவ சிலைகள் வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்பி நின்று கொண்டு கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியவாறு இருப்பதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். 

ஆனால் இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார்.

ஆஞ்சநேயர் இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டையும், வலது கையில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட நிலையில் ஆசீர்வாதம் செய்யும் வகையிலும், இடது கையில் சவுகந்திக மலருடனும், வாலின் நுனி தலைக்குப்பின்புறம் மணியுடன் நேராக நிமிர்ந்து அனைத்து உயிர்களையும் கனிவோடு நோக்கும் கருணை விழிகளுடன் காட்சி அளிக்கிறார்.
ஆஞ்சநேயர் கோயிலுக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதில் பூமியிலிருந்து மேலெழுந்த ஒரு நீள்வடிவ சுயம்பு பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
[irugampalayam-2.JPG]
திருவிழா : ராமநவமி, ஒவ்வொரு தமிழ்மாத முதல் சனிக்கிழமையும் பஜனையும், ஆன்மீக சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறுகிறது.

விநாயகரின் பின்புறம் நந்தி
இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை 
நந்தியின் பின்புறம் விநாயகர்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 இப்பகுதியில் மூன்று சித்தர்கள் வாசம் செய்து கொண்டு இருப்பதால் அருள் மணமும், சக்தியும் நிறைந்துள்ளதாக பெரியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
[Gal1]
பிரார்த்தனை : நவ கிரகதோஷங்கள் நீங்கி மும்மூர்த்தி அனுகிரகம் ஒன்று சேர கிடைப்பதாக ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தையும், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் உடனடியாக நடைபெறும்.
நேர்த்திக்கடன் : கோயிலுக்கு வரும் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் ஒவ்வொரு நாளும் உணவு சமைக்க அரிசி எடுக்கும் போது ஆஞ்சநேயரை நினைத்து ஒரு கைப்படி அரிசியை எடுத்துத்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைப்பார்கள்.

இவ்வாறு 30 நாட்கள் எடுத்து வைத்த அரிசியை கோயிலிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது பல மூட்டை அரிசியாக சேர்கிறது.

இதன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
Hanuman.jpg
  •  ஒவ்வொருமாதமும்தமிழ்மாதமுதல் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஊருக்கு வந்து திருவிழாக்கோலமாக கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
தமிழ்மாத முதல் சனிக் கிழமை அன்று மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. ராமாயணதொடர்சொற்பொழிவுகள்,கலைநிகழ்ச்சிகள் என 
ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.

சுமார்முப்பதாயிரம் மக்கள் பங்குபெறுகின்றனர்.

மறுநாள் இந்தவிழாக்குழுவினரே உழவாரப்பணியினை மேற்கொண்டு கோவிலின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர்.
சுற்றுச்சுவரில் அருமையான தத்துவங்கள் கவனத்தை ஈர்த்தன.....

முழுமுதல் கடவுள் தேங்காய் அலங்காரத்தில் கண்கொள்ளாக்காட்சி..

27 comments:

  1. இந்த பதிவை வாசிக்கும் பொழுது பக்தி பரவசம் என் வசமானது

    ReplyDelete
  2. யாரிடம் கற்பதென்று தெரியாமல் யார் யாரிடமோ கற்றுக் கொண்டிருக்கிறோம்...அருமையான ஆசான்களைக் காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஊட்டியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் ..மிகவும் பிரசித்தம்.
    பல ஆண்டுகளுக்கு முன்,ஆஞ்ச்நேயர் காலண்டரிலிருந்து குங்குமம் கொட்டும் அதிசயம் நடந்து அந்தஸ்தலித்திலேயே அனுமனுக்குக் கோவில் கட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  4. சனிக்கிழமை ஆஞ்சநேயர் தரிசனம் பெறவைத்ததற்கு நன்றி.

    பறக்கும் ஆஞ்சநேயர் நேராய் எங்கள் வீட்டிற்கே வந்தது போலிருந்தது. நன்றி அம்மா.

    ReplyDelete
  5. ஆஹா முதல் இரண்டு படங்கள் அருமை

    நான்காவது படம் கலரும்,வடிவும் அழகு

    பத்தாவது படம் வெள்ளை பிள்ளையார்

    அப்புறம் தேங்காய் பிள்ளையார் அருமை

    ப்திவிறக்கம் செய்து வைக்கலாம் பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  6. தேங்காய் அலங்காரம் அருமை...

    நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  7. இந்த இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேய நேரில் தரிசனம் செய்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை நேரில் பார்த்த அனுபவம் உங்கள் பதிவு மூலம் கிடைத்தது. நன்றிகள்.

    ReplyDelete
  8. படங்களும், பதிவும் வழக்கம்போல அருமை...

    ReplyDelete
  9. படமும் சிறப்பே வாழ்க்கைக்கில்
    தொடங்கும் பாடமும் தனி சிறப்பே
    ஆஞ்சநேயர் பற்றிய செய்தி
    அதுவும் புரட்டாசி முதல் சனியன்று வந்துள்ளது மிகவும் நன்று
    வாழ்த்துக்கள்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. பணிவுக்கே பணிவை கற்றுத்தந்தவன். சொல்லின்செல்வன் இருகரம் கூப்பி ராமனைப் சதா பணியும் அனுமனைப் பணிமனமே

    ReplyDelete
  11. Respected Madam,
    Copy & Paste செய்ய முடியவில்லை. அதை முதலில் சரிசெய்யுங்கோ!!

    முழுத்தேங்காய்களால் உருவாக்கப்பட்டுள்ள முழுமுதற்கடவுளான விநாயகர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. எவ்வளவு பொறுமையாக அழகாகச் செய்திருக்கிறார்கள்!!

    பதிவுசெய்து எங்களுக்குக் காட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. யாரிடம் கற்பது எட்டுமே அருமையாக உள்ளன.

    தியானம் ஜபம் செய்ய ஏற்ற இடங்களில் ஆஞ்சநேயர் சந்நதிக்கு பலகோடி மடங்கு பலன். ஆஹா! தங்களின் பதிவை தினமும் படித்தாலே அதே பலன் கிடைத்திடுமே!!

    துளசியின் மகிமை விளக்கமும் நன்றாக உள்ளது.

    வாழ்க்கைக் கணக்கில் ஏழெட்டு முடிந்து, எட்டெட்டுக்குள் உள்ளேன். ஓய்வு தான்.

    இருப்பினும் அந்த ஓய்வு தங்களின் பதிவுகளைப் படிப்பதன் மூலம், மிகவும் பயனுள்ளதாய், இன்பமூட்டுவதாய் இருந்து வருவதில் ஒரு சந்தோஷமே!

    ReplyDelete
  13. ஜெய் ஆஞ்சநேயா

    வாயு புத்திரன் நம்மை நோக்கி வருவதுபோல
    2 ம் படம் அற்புதம் சகோதரி.
    அருள் பெற்றோம்.

    ReplyDelete
  14. ஜெயமளிக்கும் ஜெயமங்கள ஆஞ்சநேயர் படங்களும்,
    தகுந்த விளக்கங்களும்,
    வழக்கம் போல் மிகவும் அருமை.

    முதல் படத்தில் வாலாட்டும் ஹனுமார்
    அடுத்த படத்தில் காலாட்டும் ஹனுமார்!

    இரண்டுமே ஜோர் ஜோர் !!

    பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்,
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  15. சாமி படங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கிறது அக்கா.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சில காலமாக வலைப்பக்கமே வரவில்லை. என் முந்தைய பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். இனி ரெகுலராக வருவேன். வழக்கம்போல் உங்கள் பதிவு பிரமாதம்.

    ReplyDelete
  18. யாரிடம் கற்பது அருமை!

    ReplyDelete
  19. அழகிய படங்களுடன் அருமையான ஆன்மீக பதிவு... ஜெய் ஹனுமான்

    ReplyDelete
  20. ஆஹா! ஆஞ்சநேயர் படங்களில் எவ்வளவு அழகு!

    ReplyDelete
  21. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்று சொல்வார்கள்.நீங்கள் ஆஞ்சநேயரில் ஆரம்பித்துப் பிள்ளையாரில் முடித்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  22. ஒவ்வொரு படமும் அற்புதம்.
    தகவல்களோ நான் அறியாதது.
    நன்றி.. நன்றி..

    ReplyDelete
  23. எல்லாம் அற்புதம் சகோதரி ! ஆனாலும் தேற்காய் விநாயகர் புதுமைத் தோற்றம் தான் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  24. தேங்காய் அலங்காரம் அற்புதம். விபூதி பிள்ளையாரும் அழகாக இருக்கிறார்.

    ReplyDelete
  25. செல்லும் வழி இல்லையே .பஸ் ரூட் போட்டு இருக்கலாமே ..?

    ReplyDelete