Tuesday, September 27, 2011

மோட்சபுரி ஹரிதுவார்


Temples at Rishikesh





















நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று ஹரிதுவார். அவை காசி, காஞ்சி, துவாரகா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா ,மாயாபுரி. 

ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. 

இங்கிருந்து 'கிளம்பினால்,' நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்தில் இங்கே வந்து தங்கிவிடுகிறார்கள்--மேட்சபுரி??

டெல்லியில் இருந்து பேருந்து மூலம் ஹரித்துவார் சென்றோம்.

இனிய பயணம்.கோவையில் அறிமுகமாகாதவர்களாகக் கிளம்பியவர்கள் நெருங்கிய குடும்பநண்பர்களாக மாறினோம்.

முகத்திலும் முதுகிலும் அறைந்த மாதிரி தகித்த டெல்லி வெயிலில்
இருந்து தப்பிய உணர்வு..

ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் 16 கி,மீட்டர்கள்தான்.

புராணகாலத்தில் கங்கைக்கரையில் ரிஷிகள் வந்து கங்கையில் மூழ்கி 
எழுந்து தவமும் தியானமுமாக இருப்பார்களாம்.

நாளில் பலமுறை கங்கையில் குளித்துக்கொண்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கொண்டே இருப்பதால்.  ரிஷி கேசம் என்று பெயராம்..

 ஆசிரமங்களும் ,நிறைய பெயர்களின் ட்ரஸ்ட்களும் நிறைந்திருக்கின்றன.. சாரிட்டபிள் ட்ரஸ்ட்தான் எல்லாமே......

 ராம்ஜூலா பாலம். 650 அடி நீளம் -இரண்டு மீட்டர் அகலம் கொண்டது..பாலம் கடந்ததும் நிறைய கடைகள். பெருங்காயம் வாங்கினார்கள். உயர்ந்த தரமாம்.
 
சிவானந்தா பாலம் என்று தான் பெயர் பொறித்திருந்தது. ஆனால்....இந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மண ஜூலாவுக்குத் துணையாக இருக்க மக்கள் ராம்ஜூலான்னு கூப்பிடப்போய் இப்போ ராம்ஜூலா என்ற பெயரே வழக்கில்வழங்குகிறது

சிவானந்தா ஆஸ்ரமம்தான் பாலம் கட்டும் செலவில் பாதி கொடுத்திருக்கிறார்களாம். .

நாம் நடக்கும்போது பாலம் லேசாக  ஆடுகிறது... .
நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன.

நடைப்பாலமென்றாலும் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எல்லாம் கூட இதன்மேல் ஓட்டுகிறார்கள்.

மாடுகளும் நிதானமாக நடந்து செல்கின்றன.
பாலத்தில் நடக்கும்போது மழைத்தூறல் ரசிக்கவைத்த்து.

கரையை ஒட்டிப்போகும் பாதையில் ஒரு கீதாபவன் கோவில், உச்சியில் குடையின் கீழ் நாலு பக்கமும் பார்த்தமாதிரி நாலு திருவுருவச்சிலைகள். ராமன், லக்ஷ்மணன், ஹனுமன்,சீதா.

கீதா பவன் ஆஷ்ரமம்.
Rishikesh, India: The entrance gate (from the inside)





















பரந்து விரிந்த. லக்ஷ்மிநாராயணன் கோவில்நிறைய அறைகள் பக்தர்கள் வந்து தங்குவதற்காக. 

அங்கங்கே பெரிய ஹால்கள் வகுப்புகள் நடத்த, பிரசங்கம் பண்ண இப்படி. ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் இடங்கள். மருந்து விற்கும் இடங்கள். ஏழைகளுக்கு இலவச மருந்து கொடுக்கும் இடம், தங்கியுள்ள பக்தர்களுக்கான பலசரக்கு சாமான் விற்கும் கடை கண்ணிகள் பெரிய முற்றங்களின் நடுவில் மரங்கள். தியானம் செய்ய பெரிய ஆலமரம் உள்ள தோட்டம், புல்வெளி, கங்கைக்குப்போகும் தனிப்பட்ட படித்துறைகள் இப்படி ஏராளம் ஏராளம். .

கங்கைக்கு ஒரு கோவில். 'ஸ்ரீ கங்கா கோயில்'தமிழிலும் எழுத்து! கவனத்தை ஈர்த்தது.

இமயம்வரை தமிழ் போய் வெற்றிவாகை சூடி இருப்பதாக சொல்லிக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!.

கங்காமாதா ஆரத்தி கண்கொள்ளாக்காட்சி.
Uttaranchal Photo - haridwar
ஒரு பக்கம் கோவில்களுக்கே உரித்தான பாத்திரக்கடைகளில் தாமிரச்சொம்புகளாக அடுக்கி இருந்தது. .

வாங்கி கங்கையை நிறைத்து மூடிபோட்டு ஈயம் வைத்து ஸீல் செய்து வாங்கிக்கொண்டோம்.. .

நதியின் வேகத்தில் கால்தவறினால் இழுத்துச்செல்லும் அபாயத்தைத் தவிர்க்க இரும்புக்கம்பிகளை நட்டு அதில் இரும்புச்சங்கிலி போட்டு வைத்திருந்தது பிடித்துக்கொண்டு முங்கி எழவேண்டும்.

இமயத்திலிருந்து உருகி வந்த குளிர்ச்சியான நீர் நடுநடுங்க வைத்தது. 

பாதங்களைதேய்த்து ரத்தஓட்டத்தைச் சீராக்கிய பின் பிள்ளைகளுக்கு நீர்விளையாட்டு மிகப்பிடித்து விட்டது. எழுந்து வரமனமில்லை. .

பெண்களுக்குத் தனி இடமாக உடை மாற்றிக்கொள்ள ஒரு சின்ன அறை உண்டு .


Uttaranchal Photo - rishikesh
File:An array of jewellery being sold at Rishikesh.jpg


22 comments:

  1. மிக மிக அருமையான பதிவு
    ரிஷிகேஷின் விளக்கம் இதுவரை கேள்விப் படாதது
    அறியத் தந்தமைக்கு நன்றி
    மஹாலய அமாவாசையன்று மிகச் சரியாக
    ஹரித்துவாரை பதிவிட்டு எம்மை தரிசிக்கச் செய்தமைக்கு
    எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பு காலை வணக்கங்கள் ராஜேஸ்வரி..

    ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இன்னிக்கு தான் நான் போன இடம் பற்றி இவ்ளோ அழகா விலாவரியாக சொல்லி இருக்கீங்க....

    நான் ஹரித்வார் போனேனே :) அங்க கங்கையில மூழ்கி ரெண்டு முறை எழுந்துட்டேன் மூணாவது முறை மூழ்குமுன் என் உடல் என் அனுமதியே இல்லாம நடுங்க ஆரம்பிச்சுது... பக்கம் இருந்த ஒரு பாட்டிம்மா என்னை பார்த்து ஆப் காஃப்ரஹே ஆப் காஃப்ரஹே அப்டின்னு கத்தி என்னை சரியா உட்கார வெச்சாங்க படிக்கட்டு மேலே.. :)

    அருமையான தரிசனம்.. உடலை உருக்கும் குளிர்.....


    இதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டதுப்பா உங்க பகிர்வு படிக்கும்போது... தெய்வ தரிசனம் இங்க அமோகம்.....

    ரமணி சார் சொன்னது போல மஹாளய அமாவாசை ஆன இன்னைக்கு சரியான பொருத்தமான பகிர்வுப்பா...

    மனம் அமைதியடைந்தது எனக்கு.... ஹரித்வார் போகனும்னு ஆசை அது நிறைவேறியது.. அடுத்து காசிக்கு போகணும், ரிஷிகேஷ் போகணும்....அதுவரை உடல்நலம் நல்லா இருக்கணும்.... இறைவன் அருள் செய்யணும்....

    இன்றைய காலை அருமையாக விடிந்தது உங்க பகிர்வு கண்டு ராஜேஸ்வரி....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....

    ReplyDelete
  3. நானும் ஹரித்துவார் ரிஷிகேஷ் சென்று வந்திருக்கிறேன். உங்கள் பகிர்வில் விளக்கம் மிக அருமை ராஜி..

    செந்தில் கடைசி ஃபோட்டோ நகைகள் என்பதால் மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்றீங்கன்னு நினைக்கிறேன்..:)

    ReplyDelete
  4. தில்லியில் இருந்தபோது ஹரித்து வாருக்குப் பலமுறை போயிருக் கிறேன். பதிவைப் படிக்கும்போது மீண்டும் ஒரு முறை போய் வந்தது போல் உள்ளது!

    ReplyDelete
  5. மஹாளயபக்ஷ அமாவாசையான இன்று மோட்சபுரியான ஹரித்வாரில், ஸ்படிகம் போன்ற தூய்மையான கங்கா ஜலத்தில் பித்ருகார்யங்கள் செய்தது போன்ற ஒரு நிறைவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.

    ReplyDelete
  6. பாராட்டுகள் நன்றி .... கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நான் இந்த ரிஷிகேஷ் சென்று அங்கேயே தங்கிவிடுவது என எண்ணம் கொண்டிருந்தவன் பின்னாளில் கடவுள் மறுப்பாளனாக இந்த சூழல் மாற்றிவிட்டது என்னை மெய் மறக்க செய்யும் இடங்களுள் இந்த இடமும் உண்டு அந்த எண்ணத்தை உங்களின் இந்த இடுகை நிறைவு செய்து விட்டது மீண்டும் பாராட்டுகளும் நன்றிகளும்

    ReplyDelete
  7. நானும் உங்க கூடவே பிரயாணம் பண்ணின மாதிரி ஃ பீலிங், அருமையான படங்கள்...!!!

    ReplyDelete
  8. மாலைபட்ச அமாவாசையன்று ஹரித்வார், ரிஷிகேஷ் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  9. நானும் ஹரித்வார் சென்றுள்ளேன
    தங்கள் கட்டுரையும் வண்ணப்
    படங்களும் மீண்டும் பார்க்க
    தூண்டுகின்றன
    நன்றி சகோதரி





    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    அத்தனை படங்களும் அருமை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. கடைசி படம் கவிதை! நிறைய விவரங்களுடன் வழக்கம் போல சுவாரஸ்யப் பதிவு. கங்கா கோவில் தமிழ் எழுத்தை போட்டோ பிடிக்கவில்லையா...!

    ReplyDelete
  12. ஹரித்வார்-ரிஷிகேஷ்.... எத்தனை முறை சென்றாலும், மீண்டும் செல்ல மனது துடிக்கும் ஒரு இடம்.... காலையிலிருந்து மாலை வரை கங்கா மையாவில் குளித்துக் கொண்டு இருக்கச்சொன்னாலும் குளித்துக் கொண்டு இருப்பேன் நான்... :)

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. ரிஷிகேஷின் விளக்கம் இதுவரை கேள்விப்படாதது...வழக்கம் போல சுவாரஸ்யப்பதிவு...படங்களும் அருமை...

    ReplyDelete
  14. ரிஷிகேஷ் பற்றி பல புதிய தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. கங்கை நீரின் பிரவாகமும் தூய்மையும் இங்குதான் காணமுடிந்தது. காசியில் ஓடும் கங்கை நீரில் இவ்வளவு தூய்மையில்லை. ரிஷிகேஷ், ஹரித்துவார் இடையில் முன்னிகே ரதி என்ற இடத்தில் கங்கையின் தோற்றமும் நினைவிற்கு வந்துவிட்டன. அடுத்து அருமையான புகைப்படங்களுடன் மானஸாதேவி பற்றிய பதிவினை எதிர்பார்க்கிறேன். நவராத்திரி சமயத்தில் ஒரு இனிய நினைவூட்டல். நன்றி தோழி.

    ReplyDelete
  16. wow wow super arpudham perima.........atleast once in a life every human being has to visit this place....then there is no use of this birth upto me.........

    ReplyDelete
  17. மாயா பூரிக்கு இந்த மாய உலகத்தையும் அழைத்து சென்று விட்டீர்கள்... ரிஷ்கேஷ் சொல்லும் போதே.... ஏதோ லைஃபோட எண்டுக்கு வந்துவிட்டதாக ஒரு மாயை மனதில் தோன்றுகிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  18. சில ஃபோட்டோக்களை எதிர்பார்த்தேன்.ஆற்றங்கரையில் மிகப்பெரிய சிவன் சிலை நின்றகோலத்தில் இருப்பார்.ரிசிகேஸ் சில சிவன் சிலைகள்.ஆற்றில் பூஜை அழகான தொண்ணையில் அர்ச்சனை பொருள் கிடைக்கும்.முக்கியமா புரோகிதர்கள் அர்ச்சனை செய்துவிட்டு குறைந்தது 200,300 ரூபாய் கூசாமல் கேப்பாங்க.மாலை ஆராத்தியின் போது மக்கள் குவிதல்.சீர்படுத்தி அமரச்செய்து இனிமையான ஆரத்தி பாடல்களுடன் ஆரத்தி நடைபெறும்.யூ ட்யுபில் ஆரத்தி வீடியோவை காணலாம்.

    பூமிக்கு அடியிலும் தர்மசாலாக்கள்.திதி கொடுக்கும்போது நம்மூரில் முக்கியமா இடம்பெறுவது வாழைஇலை,அரிசி.இங்கு வாழை இலையும் அரிசியும் பார்க்கவே முடியாது.ப்ரோகிதர் கோதுமை மாவை உருட்டி வைத்து திதி கொடுத்ததை பார்த்தபோது எல்லா சாஸ்த்திர சம்பிரதாயங்களும் மனதைப் பொறுத்ததுதானென்றும் தோன்றியது.தானமாக மாடு வாங்க ப்ரோகிதர் 2000 பணம் கேட்டதும்,மாட்டின் வகை பொறுத்து தொகை கேட்டதும்.அடப்பாவிங்களா கொள்ளையடிக்க மனசா்ட்சியே இல்லையானு நினைத்தேன்.தென்னிந்திய உணவு கிடைக்கும் சோட்டிவாலா உணவகம்.

    நினைவுபடுத்தியமைக்கும் பகிர்விர்கும் நன்றி.

    ReplyDelete
  19. அழகான படங்களுடன் பதிவு அருமை. ரிஷிகேஷ் பெயர் விளக்கம் அருமை.

    ReplyDelete
  20. Aha!
    JUst last month i visited over here.
    YOu made me recollect the memories.
    fine writing and photos.
    I smiled on seeing the beads shop photo.
    I too spend times over here.
    viji

    ReplyDelete
  21. நானும் ஹரித்துவார் சென்றுள்ளேன்.இந்த அளவு விளக்கம் தெரியவில்லை.அடுத்தமுறை சென்றால் கவனிக்க வேண்டும்.உருத்திராட்ச மரத்தையும் அங்கு தான் கண்டேன்.நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    ReplyDelete