Friday, August 19, 2011

வாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்




வாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்


[photo+of+Laxmiji.jpg]






தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் 
பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று 
செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த 
வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

என்று திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன் போற்றிப்பாடியுள்ளனர்.
Sri Veeraraghavaswami Temple – Thiruvallur
வெண்ணை (திருடி) உண்டவன் இவன் என்று பெண்களால் (கேலி) 
பேச நின்ற எம்பெருமான் திருவள்ளூரில் படுத்து கொண்டிருக்கிறானே.
பெருமாள் கேட்ட எவ்வுள் என்ன ? எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவர் பெருமாள். 

ஆகவே உன் இதயத்தின் உள்ளேயா அல்லது இந்த வீட்டின் உள்ளேயா? என்று பெருமாள் கேட்டார் எவ்வுள் என்பதற்கு அருமையான விளக்கம் தருவர் பெரியோர்.

பெருமாளை சேவிக்க கோயிலுக்குள் நுழையும்போது ராஜகோபுர வாயிலருகே சிற்றோடையாக நீர் ஓடச் செய்திருக்கிறார்கள்.

பாதங்கள் அந்த நீரில் நனையும்போதே உடலும் உள்ளமும் லேசான குளிர்ச்சியால் சிலிர்க்கிறது.
அங்கிருந்தே பெருமாளின் தண்ணருளை உணரத் துவங்கி விடுகிறோம். 
கனகவல்லித் தாயார் பேரெழிலுடன் துலங்குகிறாள்.

சாலிஹோத்ர முனிவருக்காகத் தன் நாயகன் எவ்வுளூர் தலத்தில் சயனித்துவிட, அதுகண்டு பதறிய தாயார், இதே தலத்தில் தர்மசேனபுரம் என்ற நாட்டின் மன்னனான திலீப மகாராஜாவுக்கு வஸுமதி என்ற பெயரில் மகளாகத் தோன்றினாள்.

அன்னையின் குறிப்பறிந்த அச்சுதன், வீரநாராயணன் என்ற வேடனாக வந்து, தாயாரின் உள்ளத்தையும் வேட்டையாடி திருமணம் செய்து கொண்டார். 
[Gal1]
நோய் கண்டு அவதியுறும் பக்தர்களை வைத்திய வீரராகவர் சிகிச்சை செய்து குணப்படுத்துகிறார் என்றால், அந்த சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய வலிகளை, வேதனைகளை இந்தத் தாயார் மெல்ல வருடிக்கொடுத்து ஆறுதல்படுத்துகிறார் .
Sri Kanaka valli Thayar Thirumanjanam

கோதண்டராமர் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார்.

சீதை, லட்சுமணருடன் ராமர் காட்சி தரும் சந்நதியில் ராமரின் தூதுவனான அனுமன் எங்கே? ஓ! அவன்தான் உயிர்காக்கும் அரிய மூலிகைகள் கொண்ட சஞ்சீவி பர்வதத்தை சுமந்து வரப் போய்விட்டானோ?

கோயிலின் பிரதான தெய்வமான வைத்திய வீரராகவர் தம் பக்தர்களின் நோய் தீர்க்க, தான் கொண்டுவரும் சஞ்சீவி மலை பெரிதும் உதவும் என்று கருதியிருப்பானோ!

அதை உறுதி செய்வதுபோல அந்த மண்டபத்தின் ஒரு தூணில் ஆஞ்சநேயன் கைகூப்பி விநயமாகக் காட்சி தருகிறான்.
சக்கரத்தாழ்வார் தனியாக, சற்றே சுவரை ஒட்டி அமைந்திருக்கிறார். பொதுவாக அவருக்குப் பின்னால் திகழும் நரசிம்மரை இங்கே சரியாக சேவிக்க இயலவில்லையே என்ற வருத்தத்தைப் போக்கும் வகையில் சுவரருகே ஒரு நிலைக் கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறார்கள். 

பிம்பமாக நரசிம்மரை தரிசித்து ஆனந்தம் கொள்ள முடிகிறது.

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து, அரக்கன் 
மன் ஊர் தன்னை வாளியினால் மாளமுனிந்து அவனே 
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெருநிலத்தார் 
இன்னார் தூதன் என நின்றான், எவ்வுள் கிடந்தானே 

என்று எவ்வுளூர் தலப் பெருமாளை, ராமனாகவும் கிருஷ்ணனாகவும் பாவித்து திருமங்கையாழ்வார் பாடியதால் இங்கே கோதண்டராமனுக்கும் வேணுகோபாலனுக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. 
திருவள்ளூர் திருத்தலத்தை குருக்ஷேத்திரம் என்று சொன்னால்
மிகையாக இருக்காது.

இந்தக் கோயிலை நிர்வகித்து, சம்பிரதாய வழிமுறைகளை நேர்ப்படுத்தி நடத்தி வந்த, ஸ்ரீமத் அஹோபில மட ஆஸ்தானத்தை அணி செய்த 32, 33, 34, 35, 42ம் பட்டத்தைச் சார்ந்த ஆச்சார்யார்களின், ஜீவசமாதி எனப்படும் பிருந்தாவனங்கள் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் அமைந்துள்ளன.

108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான் இப்படி ஒரு அமைப்பு என்பது, இத்தலத்தின் சிறப்பை ஓங்கச் செய்கிறது.

அந்தத் தெருக்கள் வழியே செல்லும், விவரம் தெரிந்த பக்தர்கள், அந்தந்த பிருந்தாவனங்கள் முன் தம் காலணிகளைக் கழற்றிவிட்டு ஒருசில விநாடிகள் தியானம் செய்வதைக் காண முடிகிறது.

பிருந்தாவனத்துக்குள்ளும் சென்று வழிபட விரும்புபவர்கள், கோயிலுக்கு வந்து விண்ணப்பித்துக் கொண்டால், இங்கிருந்து பட்டர் வந்து பிருந்தாவனக் கதவுகளைத் திறந்து வைத்து ஜீயர் பெருமக்களை தரிசனம் செய்து வைப்பார்கள்.

(1) 32வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீவீரராகவ யதீந்த்ர மஹாதேசிகன்; 

(2) 33வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீசடகோப யதீந்த்ர மஹாதேசிகன்; 

(3) 34வது பட்டம் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீசடகோப ராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன்; 

(4) 35வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகன்; 

(5) 42வது பட்டம் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் 

ஆகியோர்தான் இவ்வாறு பிருந்தாவனங்களில் யாவருக்கும் பொது சொந்தமாக ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

  ‘வற்புறு பிணிதீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி!
   வெற்புறு எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி’

என்று தன் சூலை நோயைத் தீர்த்து நிம்மதியளித்த இந்தப் பெருமாளுக்கு உளங்கனிந்து, தனது போற்றித் திருப்பஞ்சகம் என்ற பாடல் தொகுப்பில் நன்றி தெரிவித்திருக்கிறார் இராமலிங்க அடிகளார்.
 [VEERARAGHAVAN2.jpg]
நோய் தீர்வது மட்டுமல்ல; இங்கு அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் புண்ணியங்கள் எல்லாம் பலமடங்காக விருத்தியாகும் என்பதாலேயே இத்தலம் வீக்ஷாரண்யம் என்று அழைக்கப்பட்டது.

ஹுருதபாப நாசனி கங்கையினும் சிறந்த தீர்த்தம் திருக்குளத்தின் தண்ணீர் எவரது உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன.

அமாவாசை தினங்களில் அதிலும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்ததில் நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.
ஸ்ரீ விஜயகோடி விமானம்

[t9.jpg]
பக்தர்கள் தங்கள் சர்ம நோய் தீர பால், மற்றும் வெல்லத்தை கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைவதாக ஐதீகம்.

வருடத்தில் இரண்டு முறை திருக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருளுகின்றார் வீரராகவப்பெருமாள்.

பிரம்மாண்டமாக இருந்த திருக்குளம் தற்போது தகுந்த பராமரிப்பு இல்லாமல் சுருங்கி விட்டது நீர்

நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே சிறிது தண்ணீர் உள்ளது மற்ற இடம் நந்தவனமாகி விட்டது.

ஹ்ருதபாபநாசினி திருக்குளம்
[t7.jpg]
இப்படி, உலகமே உய்ய, ஆரோக்கிய நல்வாழ்வு பெற அருளும் ஆபத்பாந்தவனான வைத்திய வீரராகவன், சயனித்திருந்தாலும் கண் துஞ்சாது அனைவரையுமே காத்தருள்கிறார் என்பது அனுபவபூர்வமான உண்மை.

சரணு சரணு சரணு சரணு ஸ்ரீ வைத்திய வீரராகவர் திருவடியே சரணம்.


எம்பெருமான் கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது 
அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது.

கன்றை நினைத்து ஓடி வரும் பசு போல அஞ்சிறைப் புள் ஏறி நாம் 
எல்லோரும் உய்ய ஓடி வரும் அச்சுதன் வீர ராகவப் பெருமாள். ....
செங்கண் மாற்(கு) என்றும் படையாழிபுள்ளூர்தி 
பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே! ...
வீரராகவர் பின்னழகு
[t3.jpg]
ஹனுமந்த வாகனம்
[t11.jpg]
இராஜ கோபுரம்

[t10.jpg]





Garden near the pond, Tiruvallur

Another view of the garden near the pond, Tiruvallur

51 comments:

  1. படங்களும் பதிவும் அருமை மேடம்

    1,7,11 படங்கள் பிடித்துள்ளது .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. எம்பெருமான் கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது
    அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது.

    அருமையான வார்த்தை

    மனதை பறிகொடுத்தேன் என்பதை அழகாக கூறியுள்ளது மேலுள்ள வரிகள் .

    அருமை

    நானும் பறிகொடுத்தேன் என் மனதை

    படங்களை பார்த்து ,நன்றி

    ReplyDelete
  3. பகிர்வும் படங்களும் அருமை!

    ReplyDelete
  4. எவ்வுள் என்று கேட்கத் தேவையே இல்லாமல் பகவான் இருதயத்தில் குடியேறி விட்டார்.

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் மிக மிக அருமை
    தலைப்பிடுவதிலும் விஷயங்களை
    வாத்ஸல்யமாக விளக்கிப்போவதிலும்
    பதிவுலகில் நீங்கள்தான் நம்பர் 1
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @ M.R said...
    படங்களும் பதிவும் அருமை மேடம்

    1,7,11 படங்கள் பிடித்துள்ளது .

    பகிர்வுக்கு நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வஸுமதி தாயாரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. @ M.R said...
    எம்பெருமான் கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது
    அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது.

    அருமையான வார்த்தை

    மனதை பறிகொடுத்தேன் என்பதை அழகாக கூறியுள்ளது மேலுள்ள வரிகள் .

    அருமை

    நானும் பறிகொடுத்தேன் என் மனதை

    படங்களை பார்த்து ,நன்றி//

    அழகாய் அருமையாய் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. @ கோகுல் said...
    பகிர்வும் படங்களும் அருமை!//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  10. @
    சாகம்பரி said...
    எவ்வுள் என்று கேட்கத் தேவையே இல்லாமல் பகவான் இருதயத்தில் குடியேறி விட்டார்.//

    இருதயத்தில் குடியேறிய பகவானின் அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. @ Ramani said...
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    தலைப்பிடுவதிலும் விஷயங்களை
    வாத்ஸல்யமாக விளக்கிப்போவதிலும்
    பதிவுலகில் நீங்கள்தான் நம்பர் 1
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    வாத்ஸல்யமான
    வாழ்த்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  12. ''....நிலைக் கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறார்கள்.
    பிம்பமாக நரசிம்மரை தரிசித்து ஆனந்தம் கொள்ள முடிகிறது...''

    எவ்வளவு ஒரு சிந்தனைகள் எல்லோரும் தரிசிக்கப் பல வழிகள் ...நன்றி சகோதரி...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. காணாத தலங்களின் தரிசனத்தை எல்லாம்இந்தத் தளத்திற்கு வந்துபோபவர்கள் தரிசிக்க
    முடிகிறது.......!!!!! மிக்க நன்றி சகோதரி தங்களின் பகிர்வுக்கு .நானும் உங்கள் வருகைக்காகக்
    காத்திருக்கின்றேன்....

    ReplyDelete
  15. படங்களும் பதிவும் அருமை சகோதரி

    ReplyDelete
  16. //நோய் கண்டு அவதியுறும் பக்தர்களை வைத்திய வீரராகவர் சிகிச்சை செய்து குணப்படுத்துகிறார் என்றால், அந்த சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய வலிகளை, வேதனைகளை இந்தத் தாயார் மெல்ல வருடிக்கொடுத்து ஆறுதல்படுத்துகிறார் .//

    நோய் வந்த குழந்தைகள் தாயின் அரவனைப்பைத்தான் விரும்பும். சரியாக சொன்னீர்கள் இராஜராஜேஸ்வரி.

    படங்கள் எல்லாம் அற்புதம்.

    வெள்ளிக்கிழமை வஸுமதி தாயார் தரிசனம் மனதுக்கு இதம் அளிக்கிறது.

    ReplyDelete
  17. //வாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்//

    முதல் படத்தைப்பார்த்துக்கொண்டே இருக்கத்தோனுது. அந்தப்படத்தில் அம்பாள் முகத்திலேயே வாத்சல்யம் நன்கு தெரிகிறது, தங்களின் வாத்சல்யத்துடன் கூடிய அன்றாட பதிவுகள் போலவே.

    மிகச்சிறந்ததான இந்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    வாத்சல்யத்துடன் vgk

    ReplyDelete
  18. காணக்கிடைக்காத படங்கள் .தகவல்களும் நன்று.

    ReplyDelete
  19. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    பரவசமடைந்தேன்..//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  20. @ kovaikkavi said...
    ''....நிலைக் கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறார்கள்.
    பிம்பமாக நரசிம்மரை தரிசித்து ஆனந்தம் கொள்ள முடிகிறது...''

    எவ்வளவு ஒரு சிந்தனைகள் எல்லோரும் தரிசிக்கப் பல வழிகள் ...நன்றி சகோதரி...
    வேதா. இலங்காதிலகம்.//

    நரசிம்மரின் தரிசனம் விஷேஷமல்லவா?
    கருத்துரைக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  21. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள்.//

    அருமையான அற்புதமான வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
  22. @ அம்பாளடியாள் said...
    காணாத தலங்களின் தரிசனத்தை எல்லாம்இந்தத் தளத்திற்கு வந்துபோபவர்கள் தரிசிக்க
    முடிகிறது.......!!!!! மிக்க நன்றி சகோதரி தங்களின் பகிர்வுக்கு .நானும் உங்கள் வருகைக்காகக்
    காத்திருக்கின்றேன்...//

    என் தவறாத வருகை தங்களின் அருமையான தளத்திற்கு எப்போதும் உண்டே சகோதரி!.
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  23. மகேந்திரன் said...
    படங்களும் பதிவும் அருமை சகோதரி//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  24. @ கோமதி அரசு said...//

    வெகுமதியாய் திருமதி பக்கங்களின் கோமதி தாயார் அளித்த பெருமையான கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்//

    முதல் படத்தைப்பார்த்துக்கொண்டே இருக்கத்தோனுது. அந்தப்படத்தில் அம்பாள் முகத்திலேயே வாத்சல்யம் நன்கு தெரிகிறது, தங்களின் வாத்சல்யத்துடன் கூடிய அன்றாட பதிவுகள் போலவே.

    மிகச்சிறந்ததான இந்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    வாத்சல்யத்துடன் vgk//

    மிகச்சிறப்பாய் வாத்சல்யமாய் அருமையாய் அளித்த கருத்துரைகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  26. @ shanmugavel said...
    காணக்கிடைக்காத படங்கள் .தகவல்களும் நன்று.//

    காணக்கிடைக்காத தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மிக அருமையான படங்கள்

    ReplyDelete
  28. உங்கள் பதிவுக்கு வந்து வஸுமதி தாயாரின் அருளைப் பெற்றோம். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  29. திருவள்ளூர் பற்றிய அபூர்வமான விளக்கத்துடன் அழகான படங்களுடன் பதிவு அருமையாக இருக்கு.
    இந்த விசேஷமான குளத்தினை சீர் படுத்த என் கணவர் அவர் நண்பர்களுடன் மிகுந்த பாடு பட்டிருக்கிரார் சுமார் 16 /17 வருடங்களுக்கு முன்னால். உங்க பதிவு அந்த நினைவுகளை எனக்கு ஏற்படுத்திவிட்டது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  30. பகிர்வும்..படங்களும்.. அருமை இராஜராஜேஸ்வரி...

    நன்றி சகோதரி....

    ReplyDelete
  31. படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  32. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..,
    படங்களும் மிக அருமை..
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. எத்தனை கோவில்களில் தரிசனம் செய்து வைக்கிறீர்கள்!நன்றி.

    ReplyDelete
  34. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
    மிக அருமையான படங்கள்//

    நன்றி.

    ReplyDelete
  35. @ கோவை2தில்லி said...
    உங்கள் பதிவுக்கு வந்து வஸுமதி தாயாரின் அருளைப் பெற்றோம். பகிர்வுக்கு நன்றிங்க.//

    கருத்துரைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  36. @ RAMVI said...
    திருவள்ளூர் பற்றிய அபூர்வமான விளக்கத்துடன் அழகான படங்களுடன் பதிவு அருமையாக இருக்கு.
    இந்த விசேஷமான குளத்தினை சீர் படுத்த என் கணவர் அவர் நண்பர்களுடன் மிகுந்த பாடு பட்டிருக்கிரார் சுமார் 16 /17 வருடங்களுக்கு முன்னால். உங்க பதிவு அந்த நினைவுகளை எனக்கு ஏற்படுத்திவிட்டது. பகிர்வுக்கு நன்றி.//

    திருக்குளங்கள் சீராக பராமரித்தாலே நாட்டில் தண்ணீர் பஞ்சம் தவிர்க்கலாமே! அருமையாய் முயற்சிக்கு பாராட்டுக்கள் தங்கள் குடும்பத்திற்கு.

    ReplyDelete
  37. @ கவி அழகன் said...
    படங்களும் பதிவும் அருமை//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  38. @ சென்னை பித்தன் said...
    எத்தனை கோவில்களில் தரிசனம் செய்து வைக்கிறீர்கள்!நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  39. @ ராஜா MVS said...
    நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..,
    படங்களும் மிக அருமை..
    வாழ்த்துகள்.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  40. அசத்தலான ஆன்மீக பதிவு படங்களுடன் பட்டைய கிளப்புகிறது... தொடர்ந்து அசத்துங்கள்...நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மாய உலகம் said...
    அசத்தலான ஆன்மீக பதிவு படங்களுடன் பட்டைய கிளப்புகிறது... தொடர்ந்து அசத்துங்கள்...நன்றியுடன் வாழ்த்துக்கள்/

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  42. படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  43. அழகு புன்னகை கொஞ்சும் முகத்துடன் வஸுமதி தாயார் படம்....

    அஞ்சனைப்புத்திரன் குழந்தையாக முதன் முறை பார்க்கிறேன் எத்தனை அழகு....

    தங்கத்தில் கருடபகவான் ஜொலிக்கிறார்...

    அருமையான விஷயங்கள் இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்...

    வசுமதி தாயாரைப்பற்றி படித்ததுமே என்னுடைய நாலாம் கிளாஸ் டீச்சர் பெயரும் வஸுமதி என்பது நினைவுக்கு வந்தது....

    அம்பாளைப்பற்றி அறிய தந்தமைக்கு, அழகிய படங்களை இட்டு பரவசப்படுத்தியமைக்கு, படிக்கும்போதே மனம் அங்கேயே தங்கவிட்டமைக்கு என் அன்பு நன்றிகள் பா...

    உங்கள் அன்புக்கு என் கோடிநன்றிகள் படத்தை மீராக்கண்ணன் கவிதைகளுக்கு எடுத்துக்க சொன்னீங்கப்பா இப்ப தான் மெயில் பார்த்தேன்...

    ReplyDelete
  44. @ மாதேவி said...
    படங்களும் பதிவும் அருமை.//

    மாதேவியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  45. @மஞ்சுபாஷிணி said...//
    வாங்க மஞ்சுபாஷிணி வாங்க.

    விரிவாய் ஆத்மார்த்தமாய் ரசித்து கருத்துரைத்த பாங்கு உள்ளம் நிறைவடைகிறது. நன்றி.

    ReplyDelete
  46. 913+2+1=916 ;)))))

    பதிலிலும் வாத்ஸல்யம் உள்ளது. நன்றி.

    ReplyDelete
  47. இராஜராஜேஸ்வரி,

    மருத்துவ வீரராகவனின் ஆற்றலையும், தாயாரின் கருணையையும், ஆச்சார்யர்களின் பிருந்தாவங்களையும் குறித்த தனித்துவமான பதிவு. நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete