ஸ்ரீநிவாஸ கோவிந்த
ஸ்ரீ வேங்கடேச கோவிந்த
பக்தவத்ஸல கோவிந்த
பாகவதப்ரிய கோவிந்த
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
ஸ்ரீ வேங்கடேச கோவிந்த
பக்தவத்ஸல கோவிந்த
பாகவதப்ரிய கோவிந்த
வேங்கடேசம் நனாதோ நனாத, சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத, ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச’’
அதிகாலை வேளை.கணீரென்ற குரலில் பாடியபடியே பட்டாச்சாரியார் பெருமாளுக்கு ஆராதனை செய்யும் ஒலி எங்கும் எதிரொலித்துப் பரவி நம் காதில் நுழைந்து சிலிர்க்கச் செய்கிறது.
அதற்கு அர்த்தம்...
‘‘வேங்கடவனே, உன்னை அன்றி வேறு கடவுள் நான் அறியேன். நான் உன்னையே நினைத்து சதா சர்வகாலமும் பிரார்த்திக்கிறேன்.என்மேல் இரக்கம் காட்டு. வேங்கடவா எனக்கு நன்மையையே அருள்வாயாக.’’
இருப்பது ஏழுமலை அல்ல... கடல் தாண்டிய கண்டம் ஒன்றில் திருப்பதி கண்முன் பிரத்யட்சமாகிறது -ஆஸ்திரேலியா, ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில்.
நம் பண்டைய இந்து ஆகம சாஸ்திர கோயில் கட்டுமான விதிகளில் சில. :1.கோயில் கட்டப்படும் இடம் கன்னி இடமாக, அதாவது முன்னர் எந்தக் கட்டடங்களும் கட்டப்படாத இடமாக இருக்க வேண்டியது அவசியம்.
2.அந்த இடம் தீவாக இருக்கவேண்டும்.
3.கோயிலைச் சுற்றி வனப்பகுதி இருக்க வேண்டும்.
4.கோயில் அருகே நீர்ப் பரப்பு இருக்க வேண்டும்.
5.கோயில் அருகே சமுத்திரம் இருக்க வேண்டும்.
இந்த எல்லா விதிகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டு கட்டப்பட்டது இக்கோயில். இந்தியாவில்கூட இப்படி இல்லாதபோது, ஆஸ்திரேலியாவில் ஒரு கோயிலில் இப்படி இருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறதா? வாருங்கள் சிட்னி, ஹெலன்ஸ்பர்க் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாளின் திவ்ய தரிசனத்திற்குச் செல்வோம். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை தரிசிப்பதால் கிடைக்கப் போவது அகமகிழ்ச்சியும் ஆனந்தமும் ...
விடியற்காலையிலேயே தரிசனம் ஆரம்பமாகிவிடுகிறது. வேண்டிய-தெல்லாம் அருளும் வேங்கடவனை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி (அவர் எங்கே உறங்குகிறார்? எல்லாம் அறிதுயில்!) துளசி சாத்தி பக்தி மணம் கமழ அலங்காரங்கள் செய்து ஆராதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வேங்கடவா! உன்னையே நம்புகிறேன். நீயே வேண்டும் வரம் அருள்வாயாக என வேண்டி ஆரம்பித்துவிடுகிறார்கள் பக்தர்கள்.
செய்யும் பணிக்காக கண்டங்கள் பல தாண்டினாலும் எம்பெருமானை தினமும் வேண்டிடும் பணியினை மறக்கமுடியுமா?
மறப்பதாவது ஒன்றாவது என்று ஆஸ்திரேலிய இந்துக்கள் சாதித்துக் காட்டியிருப்பது இக்கோயிலையும் இங்கு கிரமப்படி நடக்கும் பூஜை புனஸ்காரங்களையும் பார்த்தாலே புரியும்.
ஆஸ்திரேலிய பக்தர்கள் சொல்கிறார்கள்,‘‘நாங்களோ வேலை என்று இங்கு வந்துவிட்டோம். பிரபஞ்சத்தையே ரட்சிக்கும் அந்த நிராதாரன், ஸ்ரீமன் நாராயணனை எங்கள் குழந்தைகளும்,அடுத்த தலைமுறையினரும் ஒவ்வொரு விநாடியும் இதயத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாமா?
நினைத்த நேரத்தில் பூலோக வைகுண்டமான திருப்பதிக்குச் செல்ல முடியாது. அதற்குக் கொஞ்சமேனும் இணையாக நாங்கள் வாழத் தேர்ந்தெடுத்த நாட்டிலேயே ஒரு கோயிலைக் கட்டினால் என்ன என்ற எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில்!’’
கோயில் இருக்கும் மலைமீது ஏறப் போகிறோம். மலை ஏறும்முன் ஒரு மகத்தான சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஆழ்வார்களும்,ஆசார்யார்களும் எம்பிரான் வேங்கடவனின் பெருமையையும் தொன்மையையும் பாடவும் சொல்லவும் கேட்டிருக்கிறோம். படித்து நெகிழ்ந்திருக்கிறோம்.
Praying deity figures at the entrance to Sri Venkateswara Temple, Helensburgh,
ஆனால் ஜகத்குரு ஆதிசங்கரரின் திருப்பதி வேங்கடாசலபதி தரிசன அனுபவம் மூலம் நமக்குக் கிடைத்தது ஓர் அரிய ஸ்தோத்திரம். மலைமேல் நாமெல்லாம் ஏறிச் செல்கிறோம். ஆனால், அத்வைதத்தையும் பலப் பல ஆன்மிகப் பொக்கிஷங்களையும் நமக்களித்த ஆதிசங்கர மகான் திருப்பதி தெய்வத்தைக் காண கொள்ளை ஆசையோடு சென்றார். நெருங்கியதும் திருப்பதி மலையே அவர் கண்களுக்கு சாளக்ராம வடிவில் தெரிந்ததால், மலையில் பாதம் பட்டால்கூட பாவம் என்று கருதி, மலை ஏறவே முடியாமல் தயங்கி நின்றார். அதை கவனித்துவிட்ட வேங்கடேசப் பெருமான், தனது கருட வாகனத்தை அனுப்பி ஜகத்குருவையும் அவர் சீடர்களையும் தன்னை தரிசிக்க அழைத்து வரச் செய்தார் என்று ஒரு கதை உண்டு.
அப்படிச் சென்ற ஆதிசங்கரர்,கலியுக வரதனின் பொற்பாதங்களில் ஸ்ரீசக்கரத்தை (ஜன ஆகர்ஷண யந்திரம் என்றும் சொல்வர்) வைத்து இறைவனின் திருபாதங்களில் இருந்து கேசம் வரை போற்றிப் பாடிய பாடலே அற்புதமான, ‘‘ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேஸாந்த ஸ்லோகம்’’
. மலை ஏறுவோம்! ஆஸ்திரேலியப் பெருமாள் சேவை சாதிக்கும் இடத்தைச் சுற்றிலும் என்ன இயற்கை அழகு !‘‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’’ என்று உரத்துக் குரல் எழுப்பத் தோன்றும். கடவுளே ரசித்து ரசித்து ஓவியம் தீட்டியதுபோல இருக்கும் ரெயின் ஃபாரஸ்ட் பகுதியில் இருக்கிறது. வழி நெடுக நடைபாதைகளும், நீரருவிகளும் ஆஸ்திரேலிய ஆன்மிக அனுபவத்திற்கு எழில் கூட்டுகிறது. மலைக்குன்றில் கார் ஏற ஏற... மெதுவாக கோபுர தரிசனம் தென்படுகிறது
நியூ சௌத் வேல்ஸ் மாகாணம் ஹெலன்ஸ்பர்கில் உள்ள இந்தக் கோயிலே ஆஸ்திரேலிய கண்டத்தின் முதல் இந்துக்கோயில். உலகின் தென் துருவத்தில் முதலில் எழுந்த ஓர் இந்துக் கோயில்.
1970களுக்கு முன் ஆயிரத்து சொச்சம் இந்தியர்களே ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தனர். கோயில் கட்ட முடிவெடுத்ததும், 1978-ல் பகவான் கிருபையால் நிர்வாகம் அமைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. இந்தியர்கள் மட்டும் அல்லாமல்,ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி நாட்டு இந்திய வம்சாவளியினரும் கோயில் கட்ட பொருளுதவி அளித்தனர். 1978-ல் சில இந்தியர்களின் உதவியோடு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்தது 1985-ல்தான்.
திருமலை திருப்பதி தேவஸ்தானமே பொருளுதவியும் ஊக்கமும் அளித்து,அயல்நாட்டில் கட்டப்பட்ட கோயில் இது என்ற சிறப்பையும் பெறுகிறது.
பெருமாள், விக்னங்களை விரட்டியடிக்கும் கணபதி, தாயார் சந்நதியுடன் கூடிய திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 1985 ஜூன் மாதம் சிறப்பாக நடந்தேறியது.திருப்பதியில் இருக்கும் பெருமாளைப் போலவே எழில் நிறை அலங்காரத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளைப் பார்க்கப் பார்க்க பரவச மிகுதியால் கண்கள் பனிக்கிறது.
தாயார் சந்நதியில் ஸ்ரீமஹாலட்சுமி தாமரையில் உட்கார்ந்திருப்பதை கண்ணாரக் காணலாம். விசேஷ நாட்களில் லட்டு, பூ, பாயசம் பிரசாதமாகத் தருகிறார்கள்.
பெருமாள் கோயில் என்றே பலரும் அழைப்பதால், இங்கு சிவனும் இருப்பது வரும்போது தெரியாமல் வருகிறோம். ஆனால், இங்கே சிவ தரிசனம் கிட்டிடுவது ஓர் ஆச்சரியமான ஆத்மார்த்தமான இன்பம். இக்கோயிலில் இருக்கும் சந்திரமௌலீஸ்வர லிங்கம்,நர்மதை ஆற்றிலிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
முதலில் வெறும் பெருமாள் சந்நதி மட்டுமே இருந்த இக்கோயிலில் சிவனும் பிரதிஷ்டை செய்யப்பட்டபின், இது சிவா - விஷ்ணு கோயில் ஆயிற்று.
விஷ்ணவே சிவ ரூபிணே’’
ஹரியே சிவன், சிவனே ஹரி. அகில உலகமும் நிறைந்து இருக்கும் மெய்ப்பொருளும் உண்மையும் இவ்விருவரே என்பதற்கு சாட்சியாக இருக்கிறது சிவ விஷ்ணு வழிபாடு.
ஆஸ்திரேலியாவின் முதல் இந்துக்கோயிலில் சிவனும் திருமாலும் நாங்கள் இருவரும் ஒருவரே வேறல்ல என்ற உண்மையை உணர்த்துவதுபோல் காட்சிதர, அதை உணர்ந்து சிவனையும், விஷ்ணுவையும் வழிபடுவது மனதுக்கு திருப்தி அளிக்கிறது.
சந்திரமௌலீஸ்வரர் இங்கு அருள் புரிவதால், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடும் சிவராத்திரி சிறப்பு பூஜையும் நடக்கிறது.சோமவார பூஜை, வருடந்தோறும் நடக்கும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையும் ஆருத்ரா தரிசனமும் இங்கு விசேஷம். அதனால்தான் சிவ-விஷ்ணுவுக்காக இரட்டை ராஜகோபுரங்கள்.
அபிஷேகப் பிரியனான சிவனுக்கு வில்வ இலைகள், எருக்கு, தும்பை மலர்களுடன் ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமமும் இங்கே நடப்பது சிறப்பு.கோயில் விமானம் சோழ நாட்டு மன்னர்கள் கட்டிய கோயில்களின் பாணியில் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணாரக் காணலாம்.பார்வதி தேவி ராமேஸ்வரத்தில் இருக்கும் அதே பெயரில் பர்வதவர்த்தினியாக இங்கு தரிசனம் தருகிறாள். சித்ரா பௌர்ணமி அன்று மீனாட்சி கல்யாணம் நடத்துகிறார்கள்.
பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நதிகள் கோஷ்டப் பகுதியில் உள்ளன.
கோயில் வளாகத்தினுள் கற்பூரம் ஏற்றிட அனுமதியில்லை.நினைத்த இடத்தில் எல்லாம் இல்லாமல் அதற்குரிய இடத்தில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றுவது பார்க்க அழகு.கோயில் அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கியிருக்கிறார்கள்.
கோயில் அமைத்து 25வருடங்கள் பூர்த்தியான விழாவை 2010-ம் வருடம் திருப்பதி பிரம்மோற்சவம் நடந்த அதே அக்டோபர் மாதத்தில் பிரம்மோற்சவமாகவே கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள் ஆஸ்திரேலிய வாழ் இந்திய மக்கள்.
Lord Narasimha.
பத்து நாட்களுக்குமேல் நடந்த இவ்விழாவில் நியமப்படி ஹோமங்கள், உற்சவமூர்த்தி திருவீதி உலா என்று சகலமும் நடந்துள்ளன. விசேஷ நாட்களில் திரளும் பெருங்கூட்டத்தை கவனிக்க பக்தர்களே கோயில் கைங்கர்யம் செய்கிறார்கள். பெருமாள் அனுக்கிரஹத்துடன் வைகுண்டம் சென்ற அனுபவத்தை,திருப்பதி போகாமல் சிட்னியிலேயே அனுபவிக்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள் !
கோயில் கேன்டீன் உணவை சுவைக்க வேண்டுமானால் வார இறுதியில் செல்வது நலம். சனி, ஞாயிறு மட்டுமே திறந்திருக்கும் கேன்டீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டுமென்றே இந்திய மக்கள் கூட்டம் அலைமோதும். மனம் நிறைந்த தரிசனத்திற்குப்பின் வயிறும் நிறையும் ஆனந்த அனுபவம்.
சுதர்சன ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவகிரக ஹோமம், விஷ்ணுசஹஸ்ரநாம ஹோமம் எல்லாம் நம் விருப்பப்படி முன்னரே ‘புக்’ செய்து பண்ணிக்-கொள்ளலாம்.
Hanuman bearing Lord Rama.
நாமகரணம், ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, புது வாகனத்திற்கு பூஜை, பிரம்மோபதேசம் என எல்லாமே முறைப்படி நடத்திட நம் இந்திய நாட்டு புரோகிதர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலிய பக்தர்கள் தந்த நன்கொடையில் கட்டப்பட்ட கல்யாண மண்டபத்தில் திருமணங்களும், கல்யாண உற்சவமும் நடத்தலாம்.
கோயிலில் கிட்டத்தட்ட எல்லா தெய்வங்களுமே இருப்பதால் ஸ்ரீராமநவமி, ஹனுமத் ஜெயந்தி, கந்தசஷ்டி, வைகுண்ட ஏகாதசி என்று எந்த ஒரு விழாவையும் விடாமல் வெகு விமரிசையாக நடத்துகின்றனர்.
தென்துருவத்தில் இருந்தாலும் தெவிட்டாத தரிசனம் தந்து அருள் புரிகிறார், ஆஸ்திரேலிய பெருமாள். கூடவே சிவனும் சீரான வாழ்வுக்கு அருள்புரிகிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து காரில் சென்றால் 54 கிலோமீட்டர் தூரம்.
ஹெலன்ஸ்பர்க் ஸ்டேஷனிலிருந்து நிறைய கோச்சுகள் செல்கின்றன. கோயிலில் இறங்கிட வசதி.
இயற்கை எழில் கொஞ்சும் ராயல் நேஷனல் பார்க் கோயில் அருகில் உள்ளது. கோலா கரடிகள், கங்காருக் குட்டிகள், எமு பறவை என்று பார்த்துக் களிக்கலாம்.
கோயில் இருக்கும் அழகான பாதையில் நடந்து செல்லச் செல்ல மனம் ஆனந்த நிலைக்குச் செல்லும். ஆஹா, எத்தனை அழகு ஆஸ்திரேலியா!
கோயில் நேரம் :
வாரம் முழுதும் காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை.
மதியம் 12 -- 4 மணிவரை கோயில் நடை சாத்தியிருக்கும்
Sri Subramania Swami Temple with Sri Venkateswara Temple and mandapam in the background
Thanks to-bhakti
இன்றும் வேங்கடவன் தரிசனம். அதுவும் ஆஸ்திரேலியா ஹெலன்ச்பெர்க் வேங்கடவன்... கோவில் சிற்பங்களும் அதன் சுத்தமும் கண்ணைக் கவர்கின்றன.
ReplyDeleteநல்ல கோவில் பற்றிய தகவல் அளித்துக் கொண்டு வரும் உங்களுக்கு மிக்க நன்றி.
என் கண்ணே பட்டு விடும் போல் உள்ளது படங்கள் அனைத்தும் .
ReplyDeleteஅருமை அருமை .
அவ்வளவு அழகு .தெளிவு படங்களில் .
பகிர்வுக்கு நன்றி மேடம்
arumai....
ReplyDeletepadankalum nallaayirukku..
நேற்றைக்குதான் குற்றாலத்துல பார்த்தோம் அதற்குள்ள ஆஸ்திரேலியாக்கு போய்டீங்க..
ReplyDeleteபதிவு அழகிய படங்களுடன் அருமையாக இருக்கு.அதுவும் கோவில் சிற்ப படங்கள், வராகர், லக்ஷ்மி நரசிம்மர்,சுதர்சனர், கருடாழ்வான் படங்கள் எல்லாம் மிக அழகு..
பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteகாலையில் அருமையான ஆன்மீக தரிசனம்... படங்கள் க்ளோஸ் அப்பில் அற்புதமாக இருக்கிறது... நன்றி
ReplyDeleteஅழகான படங்களுடன் விளக்கங்கலும்
ReplyDeleteஅருமை. ஆமா, எப்படி இவ்வளவு
படங்கலும்சேகரிச்சு விளக்கங்கலும் சொல்லி தினசரி ஒரு பதிவு போட
முடியுது உங்களால.?
அனைத்தும் அழகு, அற்புதம். பதிவுக்கு நன்றிகள். vgk
ReplyDelete@வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஇன்றும் வேங்கடவன் தரிசனம். அதுவும் ஆஸ்திரேலியா ஹெலன்ச்பெர்க் வேங்கடவன்... கோவில் சிற்பங்களும் அதன் சுத்தமும் கண்ணைக் கவர்கின்றன.
நல்ல கோவில் பற்றிய தகவல் அளித்துக் கொண்டு வரும் உங்களுக்கு மிக்க நன்றி.//
வேங்கடவன் தரிசன கருத்துரை வழ்ங்கிய வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteRAMVI said...
ReplyDeleteநேற்றைக்குதான் குற்றாலத்துல பார்த்தோம் அதற்குள்ள ஆஸ்திரேலியாக்கு போய்டீங்க..
பதிவு அழகிய படங்களுடன் அருமையாக இருக்கு.அதுவும் கோவில் சிற்ப படங்கள், வராகர், லக்ஷ்மி நரசிம்மர்,சுதர்சனர், கருடாழ்வான் படங்கள் எல்லாம் மிக அழகு..//
மிக அழ்கான கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesaid...
ReplyDeleteகாலையில் அருமையான ஆன்மீக தரிசனம்... படங்கள் க்ளோஸ் அப்பில் அற்புதமாக இருக்கிறது... நன்றி//
அற்புதமான கருத்துரைக்கு நன்றி..
நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு நன்றி .
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅனைத்தும் அழகு, அற்புதம். பதிவுக்கு நன்றிகள். vgk//
அழ்கான அற்புதமான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅனைத்தும் அழகு, அற்புதம். பதிவுக்கு நன்றிகள். vgk//
அழ்கான அற்புதமான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.
M.R said...
ReplyDeleteநேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு நன்றி .//
கருத்துரைக்கு நன்றி
Lakshmi said...
ReplyDeleteஅழகான படங்களுடன் விளக்கங்கலும்
அருமை. ஆமா, எப்படி இவ்வளவு
படங்கலும்சேகரிச்சு விளக்கங்கலும் சொல்லி தினசரி ஒரு பதிவு போட
முடியுது உங்களால.?//
ஏதோ எளிய முயற்சியு, தங்களைப்போன்ற அருமையானவர்களின் ஆசீர்வாதமும்.
கருத்துரைக்கு நன்றி அம்மா..
Chitra said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க.//
கருத்துரைக்கு நன்றிங்க..
vidivelli said...
ReplyDeletearumai....
padankalum nallaayirukku..//
கருத்துரைக்கு நன்றி
M.R said...
ReplyDeleteஎன் கண்ணே பட்டு விடும் போல் உள்ளது படங்கள் அனைத்தும் .
அருமை அருமை .
அவ்வளவு அழகு .தெளிவு படங்களில் .
பகிர்வுக்கு நன்றி மேடம்
அருமை அருமையான கருத்துரைக்கு நன்றிகள் ,,
அறிய பல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி..
ReplyDeleteஇலக்குமி கடாட்சம் பெற்றோம் சகோதரி.
ReplyDeleteகோபுரம் மற்றும் விமானத்தின் படங்கள்
மனத்தைக் கவர்ந்தது.
பதிவுக்கு நன்றி சகோதரி.
வேங்கடவனை வேண்டினால் வேண்டும் வரம் தருவான். அருமையான படங்களுடன் மிகமிக அற்புதமான திருத்தல மகிமை. பகிர்வுக்க நன்றி அம்மா.
ReplyDeleteநம் மக்களின் இறை பக்தி போற்றுதலுக்குரியது.
ReplyDeleteகோவில்கள் பற்றி பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். எனக்கு ஒரு சந்தேகம். கோவிலில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்று பிரித்து வைத்துள்ளார்களே இது சரியா?
ReplyDeleteபாலா said...
ReplyDeleteகோவில்கள் பற்றி பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். எனக்கு ஒரு சந்தேகம். கோவிலில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்று பிரித்து வைத்துள்ளார்களே இது சரியா?/
கருத்துரைக்கு நன்றி
பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்று பிரித்து வைத்துள்ளார்களே இது வருத்தத்தைத்தான் அளிக்கிறது..
அடேங்கப்பா...ஆஸ்திரேலியப் பெருமாள்! எல்லாப் படமும் நன்றாக இருந்தாலும் கருமேகப் பின்னணியில் கடைசிப் படம் கண்ணைக் கவர்கிறது.
ReplyDeleteDrPKandaswamyPhD said...
ReplyDeleteநம் மக்களின் இறை பக்தி போற்றுதலுக்குரியது.//
போற்றுதலுக்குரிய கருத்துரைக்கு நன்றி ஐயா.
கடம்பவன குயில் said...
ReplyDeleteவேங்கடவனை வேண்டினால் வேண்டும் வரம் தருவான். அருமையான படங்களுடன் மிகமிக அற்புதமான திருத்தல மகிமை. பகிர்வுக்க நன்றி அம்மா.//
கருத்துரைக்கு நன்றி
மகேந்திரன் said...
ReplyDeleteஇலக்குமி கடாட்சம் பெற்றோம் சகோதரி.
கோபுரம் மற்றும் விமானத்தின் படங்கள்
மனத்தைக் கவர்ந்தது.
பதிவுக்கு நன்றி சகோதரி.//
கருத்துரைக்கு நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅறிய பல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி..//
கருத்துரைக்கு நன்றி
ஸ்ரீராம். said...
ReplyDeleteஅடேங்கப்பா...ஆஸ்திரேலியப் பெருமாள்! எல்லாப் படமும் நன்றாக இருந்தாலும் கருமேகப் பின்னணியில் கடைசிப் படம் கண்ணைக் கவர்கிறது.
கருத்துரைக்கு நன்றி
ஆஸ்திரேலிய வேங்கடவன் தரிசன பகிர்வுக்கு நன்றிங்க. படங்கள் ரொம்ப நல்லா இருக்குங்க.
ReplyDeleteஎங்களை எங்கெல்லாம் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கிறீர்கள்!
ReplyDeleteநன்றி!
அருமையோ அருமை!
ReplyDeleteவெங்கடேசா கோவிந்தா...
ReplyDeleteஅவ்வளவும் அருமை. உங்களைப் பார்க்கும்போது( படிக்கும்போது )பெருமையாகவும்பொறாமையாகவும் இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெளி நாட்டில் இருக்கும் தமிழர்கள்
ReplyDeleteநம்முடைய கலாச்சாரங்களையும் பாரம்பரிய
பண்பாடுகளையும் விட்டுக் கொடுக்காமல்
வாழ்வதை நினைக்கையில்
பெருமிதமாக உள்ளது
படங்கள் மிக மிக அருமை
நேரில் பார்ப்பதைப்போன்ற உணர்வினை
ஏற்படுத்திப்போகிறது
சிறப்பான பதிவினைத் தந்தமைக்கு
நன்றி வாழ்த்துக்கள்
படங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteகோவை2தில்லி said...
ReplyDeleteஆஸ்திரேலிய வேங்கடவன் தரிசன பகிர்வுக்கு நன்றிங்க. படங்கள் ரொம்ப நல்லா இருக்குங்க.//
கருத்துரைக்கு நன்றிங்க
middleclassmadhavi said...
ReplyDeleteஅருமையோ அருமை!//
கருத்துரைக்கு நன்றிங்க
G.M Balasubramaniam said...
ReplyDeleteஅவ்வளவும் அருமை. உங்களைப் பார்க்கும்போது( படிக்கும்போது )பெருமையாகவும்பொறாமையாகவும் இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//
அருமையான பெருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
Ramani said...
ReplyDeleteவெளி நாட்டில் இருக்கும் தமிழர்கள்
நம்முடைய கலாச்சாரங்களையும் பாரம்பரிய
பண்பாடுகளையும் விட்டுக் கொடுக்காமல்
வாழ்வதை நினைக்கையில்
பெருமிதமாக உள்ளது
படங்கள் மிக மிக அருமை
நேரில் பார்ப்பதைப்போன்ற உணர்வினை
ஏற்படுத்திப்போகிறது
சிறப்பான பதிவினைத் தந்தமைக்கு
நன்றி வாழ்த்துக்கள்//
பெருமிதமான சிறப்பான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
சமுத்ரா said...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை//
கருத்துரைக்கு நன்றிங்க
சென்னை பித்தன் said...
ReplyDeleteஎங்களை எங்கெல்லாம் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கிறீர்கள்!
நன்றி!//
தரிசனம் கருத்துரைக்கு நன்றி.
மாதேவி said...
ReplyDeleteவெங்கடேசா கோவிந்தா.../
நாராயணா.. நன்றி.!
விசா சிரமங்கள் இல்லாம ப்ளைட் டிக்கெட் அவஸ்தைகள் இல்லாம நீண்ட தூர பிரயாண களைப்பு இல்லாம அருமையான பெருமாள் தரிசனம் கண்டேன் உங்க புண்ணியத்தால்பா...
ReplyDeleteஅருமையான சிற்ப வடிவங்கள் எல்லாம் எத்தனை தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள்....
இப்படி ஒரு கோவில் அமைக்க என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்று எழுதியதைக்கண்டு ஆச்சர்யமாக இருந்தது...
இங்கிருக்கும் மக்கள் எல்லோருமே ரொம்ப பாக்கியசாலிகள்...
தெய்வ தரிசனம் அதனுடன் சனி ஞாயிறு இந்திய உணவு ரூபத்தில் பிரசாதங்கள்....
அருமையான படங்கள் கட்டுரைப்பா...
குவைத்ல இப்படி ஒரு கோவில் இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குவதை தவிர்க்கவே முடியலைப்பா...
அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி அருமையான தெய்வ தரிசனம் செய்ய வைத்தமைக்கு...
@ மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteகுவைத்ல இப்படி ஒரு கோவில் இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குவதை தவிர்க்கவே முடியலைப்பா...
அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி அருமையான தெய்வ தரிசனம் செய்ய வைத்தமைக்கு...//
இத்தனை அன்புடன் நினைக்கும்போது கோவில் வந்துவிடும் குவைத்துக்கு.
ஆத்மார்த்தமான அருமையான கருத்துரைகளுக்கு நன்றி.
அழகிய கட்டுரை...
ReplyDeleteபடங்கள் மிக அழகு...
ரெவெரி said...
ReplyDeleteஅழகிய கட்டுரை...
படங்கள் மிக அழகு...//
கருத்துரைக்கு நன்றி.
அற்புதமான படங்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
;)
ReplyDeleteபுத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்ப்பயத்வ - மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.
942+2+1=945 ;)
ReplyDeleteபதிலுக்கு நன்றி.