வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
வரம் தரும் அன்னையே வணங்குவோம் உன்னையே இன்றும் என்றும் என்றென்றும்!
வரலக்ஷ்மி விரதம் கர்னாடகாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும் மிக உற்சாகமாக பெண்கள் ஆழ்ந்து பூஜைகள் செய்து கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று.
பூஜை செய்யும் போதும் செய்து முடித்த பிறகும் உண்டாகும் அமைதிக்கு எதுவுமே இணையில்லை. மிகவும் ஸ்ரத்தையோடு செய்ய வேண்டும் என்பதே அடிப்படை.
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
வரம் தரும் அன்னையே வணங்குவோம் உன்னையே!!
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி.
மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) செய்வார்கள்.
மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் இந்த ஒரு நாள் மற்ற கவலைகளை கஷ்டங்களை மறந்து, அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து செய்வார்கள்.
தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை எப்படியெல்லாம் ஆராதிப்பார்களோ அது போல் வரலக்ஷ்மியை தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிப்பார்கள்.
மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) செய்வார்கள்.
மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் இந்த ஒரு நாள் மற்ற கவலைகளை கஷ்டங்களை மறந்து, அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து செய்வார்கள்.
தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை எப்படியெல்லாம் ஆராதிப்பார்களோ அது போல் வரலக்ஷ்மியை தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிப்பார்கள்.
எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் - அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும்.
இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை.
இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை.
நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.
பூஜையை குரு முகமாக எடுத்துக்கொள்ளாதவர்கள், அம்பிகை மேல் இருக்கும் பலவிதமான பாடல்களினால், பதிகங்களினால் அவளை ப்ரார்த்தனை செய்யலாம். இல்லாவிட்டால் மனதை ஒருமுகப்படுத்தி அவளை சில நிமிடங்கள் தியானிக்கலாம்.
வரலக்ஷ்மி விரதம் பண்டிகை எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள எளிமையான வழி - பெரும் மகானான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்லி விட்டுப்போன வழி.
ஸ்ரீ ராகக் கீர்த்தனையான ”ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம்” மிக அற்புதமான கீர்த்தனையில் தெளிவாகச் சொல்கிறார்
”ஸ்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே” என்று. ஸ்ராவண (ஆவணி)
மாதத்து பெளர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக் கிழமைக்கு உரியவளே என்று பொருள்.
”வரலக்ஷ்மி, ராவே மாயிண்டிகி” என்ற தெலுங்குப் பாடலும் புகழ்பெற்றது -.
” வாத்சல்யமாக வாடி” என்றழைப்பது நெருக்கததை ஏற்படுத்துகிறது .
முதல் நாளே கலசத்தை தயார் செய்து மாவிலை சாற்றி, தேங்காய் வைத்து, அம்பாள் முகத்தை வைத்து, அலங்காரங்கள் செய்து, அடுத்த நாள் காலையில் குளித்து தன்னையும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, அம்பிகையை வீட்டு வாசலில் இருந்து உள் அழைத்து வருவார்கள்.
பின் வகைவகையான கொழுக்கட்டைகள், சர்க்கரைப் பொங்கல், வடை, பச்சரிசி இட்லி, விதவிதமான பழங்கள், ஆகியவற்றை தயார் செய்து கொண்டு, பதினாறு விதமான உபசாரங்களை (ஆராதனைகள்) செய்வார்கள். விதவிதமான நாமாவளிகள், பாடல்கள் ஆகியவற்றினால் ஆராதித்து, நைவேத்யம் செய்து, சுமங்கலிப்பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் தருவார்கள்.
மாலையில் விளக்கேற்றி பாடல்களாலும், ஸ்தோத்திரங்களாலும் துதிப்பார்கள்.
மறு நாள் காலை மறு பூஜை செய்து, மாலையில் மீண்டும் ஆராதனைகள் செய்து, இரவு பிரியாவிடை அளிப்பார்கள்.
அவள் எங்கேயும் செல்ல மாட்டாள்.
வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திலேயே அவளை
ஐக்கியம் செய்வார்கள்..
மறு நாள் காலை மறு பூஜை செய்து, மாலையில் மீண்டும் ஆராதனைகள் செய்து, இரவு பிரியாவிடை அளிப்பார்கள்.
அவள் எங்கேயும் செல்ல மாட்டாள்.
வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திலேயே அவளை
ஐக்கியம் செய்வார்கள்..
பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
அழகு உருவம் எடுத்து உலவி நடந்து வந்தாள் மகாலக்ஷ்மியே
வரலஷ்மி விரத நாள் பார்த்து வ்ந்தருள் புரிகிறாள்.
சுற்றத்தார்கள் நண்பர்கள் என அனைவரையும் .அழைத்துக் கொண்டாடும் நட்பும், உற்சாகமும், அன்பும், ஆனந்தமும் ததும்பும் பண்டிகை இது. ..
எல்லா மதங்களிலும் அன்பே முதன்மையானது - அதுவே இறுதியானதும் கூட. அந்த அன்பை பெருக்கி வெளிப்படுத்தும் பல வகையான வழிகளில் இவ்வாறான பண்டிகைகளும் ஒன்று தானே.
அழகான பதிவு.
ReplyDeleteஎங்கள் வீட்டுக்கு அலங்காரத்துடன் வரம் தரும் லக்ஷ்மி வந்தாளே!
ReplyDeleteஎல்லோருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.
அம்மனின் பின் அலங்காரம் வெகு ஜோர்.
பிரசாதங்கள் பெற்றுக் கொண்டோம்.
நன்றி.
பக்தி பரவசமானேன்
ReplyDeleteகலக்கிட்டீங்க. கொழுக்கட்டை, வடை பிரஸாதங்களும், அம்மனின் பின் (பின்னல்) அலங்காரம் தாழம்பூவுடன் அழகோ அழகு. அனைத்துமே அழகு!
ReplyDeleteவந்தாள் வரலக்ஷ்மி. நன்றி!
அழகான படங்களுடன் விவரணைகளும் அசத்தலா இருக்கு.
ReplyDeleteலட்சுமி கடாட்சம் பெற்றோம் சகோதரி.
ReplyDelete@
ReplyDeleteChitra said...
அழகான பதிவு.//
நன்றி சித்ரா.
This comment has been removed by the author.
ReplyDelete@ UNAVUMATHI said...
ReplyDeleteகலக்கல் பதிவு. வெள்ளிக்கிழமை விஷேச பதிவு.//
விஷேச கருத்துரைக்கு நன்றி.
@கோமதி அரசு said...
ReplyDeleteஎங்கள் வீட்டுக்கு அலங்காரத்துடன் வரம் தரும் லக்ஷ்மி வந்தாளே!
எல்லோருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.
அம்மனின் பின் அலங்காரம் வெகு ஜோர்.
பிரசாதங்கள் பெற்றுக் கொண்டோம்.
நன்றி.//
பிரசாதமாய் த்ந்த கருத்துரைக்கு நன்றி.
@ goma said...
ReplyDeleteபக்தி பரவசமானேன்//
நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகலக்கிட்டீங்க. கொழுக்கட்டை, வடை பிரஸாதங்களும், அம்மனின் பின் (பின்னல்) அலங்காரம் தாழம்பூவுடன் அழகோ அழகு. அனைத்துமே அழகு!
வந்தாள் வரலக்ஷ்மி. நன்றி!/
அழகான அலங்காரமான கருத்துரைக்கு நன்றி ஐயா.
@ அமைதிச்சாரல் said...
ReplyDeleteஅழகான படங்களுடன் விவரணைகளும் அசத்தலா இருக்கு.//
அசத்தலான கருத்துரைக்கு நன்றி.
@ மகேந்திரன் said...
ReplyDeleteலட்சுமி கடாட்சம் பெற்றோம் சகோதரி//
கருத்துரை கடாட்சத்திற்கு நன்றி.
தாங்கள் படங்களுக்குப் படும் பாடு பதிவில் தெரிகிறது அருமை..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
வரலஷ்மி நோன்பு குறித்து
ReplyDeleteமிகப் பிரமாதமாக விளக்கியுள்ளீர்கள்
எங்கள் வீட்டில் கொண்டாடும் பண்டிகைகளில்
இந்த வரலஷ்மி நோன்புக்குத்தான்
அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவோம்
நீங்கள் சொல்வது போல அதனால் அதிக
வளமும் நலமும் வளர்வதை
நாங்கள் கண்கூடாகக் கண்டு வருகிறோம்
படங்களும் பதிவும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Wow.today ur post is outstanding. pictures are awesome...thanks to share this.
ReplyDelete@ ♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteதாங்கள் படங்களுக்குப் படும் பாடு பதிவில் தெரிகிறது அருமை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று/
அருமையானகருத்துரைக்கு நன்றி.
பாப் -அப் விண்டோ பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.
@Ramani said.../
ReplyDeleteமனம் கவர்ந்த அருமையான பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
முதல் படத்தை பார்த்ததுமே எல்லா செல்வமும் கிடைத்தது போன்ற உணர்வு ...அருமையான பதிவு !
ReplyDeleteஅழகான படங்கள். அதுவும் அம்மனின் ஜடை அலங்கார படம் மிக அழகு.இவையெல்லாம் உங்க வீட்டு பூஜை படங்களா மேடம்?
ReplyDeleteபாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மேடம் அலங்காரம் ஜோர்.
ReplyDeleteவீட்டில் வரலக்ஷ்மி பூஜை முடித்து வந்து பார்த்தால் உங்கள் பதிவு. சர்வ ஜனோ சுகினோ பவந்து. அருள் நிறையக் கிடைக்கப் பிரார்த்தனைகள். கமெண்ட் பெட்டி மாற்றியது சந்தோஷம். திறக்க எளிது.
ReplyDeleteவெள்ளிக்கிழமை.. அம்மன் பதிவு எதிர்ப்பார்த்தேன்..
ReplyDeleteபாராட்டுகள்..
வரலட்சுமி எங்கள் வீட்டுக்கும் வந்தாள். படங்களுடன் பதிவு ஜோர்.
ReplyDeleteஜடை அலங்காரம் ரொம்ப அழகாயிருக்கு.
வரமாலக்ஷ்மி பண்டிகையை பூஜை செய்து கொண்டாடி விருந்துண்ட நிறைவை படங்களும் வர்ணனையும் அளித்தன .. மிகவும் நன்றி ... சிலபடங்களை அப்படியே சேமித்துவிட்டேன் .....
ReplyDeleteசரியான நேரத்தில் அருமையான பகிர்வு!!
ReplyDeleteவழக்கம் போல படங்களும் பகிர்வும்
ReplyDeleteஅமர்க்களம். கரெக்டாக விரத நாளில்
வந்தது அதை விட சந்தோஷம்.
அழகான பதிவு!
ReplyDeleteநன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஆன்மீகப் பசி போக்க நல்ல விஷயங்கள்,அம்பாள் படங்கள்! வயிற்றுப் பசியைத்தூண்டும் படம்- இட்லி,கொழுக்கட்டை,வடை,பாயசம்!
ReplyDeleteபுகைப்படங்கள் மிகவும் அழகு சகோ... சாப்பிட வேற கிடைத்ததா... மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
வரம் தரும் வரலக்ஷ்மியை வணங்குவோம்... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசில வருடங்கள் ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டும் ஆவணி பௌர்ணமியை வைத்துப் பார்த்தால் செப்டம்பர் 9ம் தேதிதான் வருகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஏதாவது இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்
ReplyDeleteஅரிய செய்திகளும் அருமையான படங்களும்... கண்களும் மனமும் நிறைவுடன்... நன்றி கூறுகின்றன..
ReplyDeleteவழக்கம்போல் உங்கள் பதிவு அருமை. ஒவ்வொரு முறையும் உங்கள் வலையைப் படிக்கும்போது உங்களால் எப்படி முடிகிறது என்ற கேள்வியே என்னுள் எழுகிறது. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நீங்கள் பெற ஆண்டவனை வணங்குகிறேன்.
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
;)
ReplyDeleteசர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !
சரண்யே த்ரயம்பிகே கெளரி
நாராயணீ நமோஸ்துதே !!
892+2+1=895 ;)
ReplyDelete