Saturday, March 5, 2011

பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்


ராஜகோபுரம்


       ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தெற்குப் ராஜகோபுரத்தில் தெற்குப் பார்த்த தட்சிணா மூர்த்தியின் நான்கு தோற்றங்கள் சிற்ப்பு வாய்ந்தவை. கிழக்கு பார்த்த வாசல்.  ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன


தல வரலாறு    


       இத்தலத்தின் வரலாறு கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்டுள்ளது.


              இறைவன் பட்டீசுவரசுவாமி ,  இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் குளிர்ச்சியாகத் திருப்பெயர்கள்.  சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது.  ஆஞ்சநேயர், மாய கிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.


         பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், அக்கோயிலில் பலவிதக் கலைப் பாணிகளும் சங்கமித்துள்ளது.  அதிசயமில்லை என்று புரிகிறது.  அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர்.  பின்னர் கி.பி. ஏழாம் நு}ற்றாண்டு வரை, பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம் - என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசர்கள் கொடி நாட்டிய இடம் இப்பகுதி.
‘ஆரூரார் பேரூரர் என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும் என்றும் அப்பர் சுவாமிகள் சுவாமிகள் தனது சேஷத்திரக்கோவையில்; இரண்டிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே சுமார் கி.பி. 650-க்கு முன்னரே பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.  பேரூர் பற்றிய தனித் தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.


சுயம்புவாக சுவாமி தோன்றியது. கயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் அவரிடத்தில் “சுவாமி தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகராகக் கருதக் கூடியது எது? என ஒரு சந்தேகம் கேட்டாராம்.  அதற்கு பெருமான் பதில் கூறிய போது “உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிய கயிலாயம் என மூன்று உள்ளன.  அவை ஒத்த சிறப்புடையவை தாம்.  ஆனால், எளிய மனிதருக்கும் சென்று முக்தி அடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு என்றாராம்.


நாரதேசுவரம்


இந்த மகிமையைக் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்த முருக பெருமான் அதை நாரதருக்கு உணர்த்த, நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம்.  (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கின்றது.


இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட முனிவர், காஞ்சிமா நதிக்கரையோரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிடேகத்துக்கென ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம்.  நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்று.  நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சூழ காஞ்சி நதி அம்போல் அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டீசுவரப் பெருமான்.


இந்தப் புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டீசுவர பிரானின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம்.


   இத்திருக்கோயிலில் முருகப்பெருமான், விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மையருக்கும் நடுவில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் பாலதண்டபாணியாகக் காட்சியளிக்கின்றார்.


    8 திசை காவலர்களும் கதை வேலைப்பாட்டில் காட்சியளிக்கும் வேசரவிமானமுள்ள, சோழ அரசனால் அமைக்கப் பெற்ற கருவறையில் இறைவன் லிங்க வடிவில் பட்டீஸ்வரன் (பட்டிப்பெருமான்) என்னும் நாமத்துடன் தரிசனம் தருகின்றார்.  கிழக்குதிசை நோக்கியுள்ள மூலவரின் பின்புறத்தில் காமதேனுவும் இடம் பெற்றுள்ளது.


பட்டிபுரி - காமதேனுபுரம் - பட்டிநாதர்


ஒரு சமயம் பிரும்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணாயர்ந்து விட்டாராம்.   இதை  அறிந்த மகாவிஷ்ணு  காமதேனுவை  அழைத்து "நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரும்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக" என்று கட்டளையிட்டு இருக்கிறார்.  அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததாம்.  ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.  அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிணகைலாசம் பற்றிச் சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அதே இடத்தை அடைந்தது.  அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தவமிருந்தது.  ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையட்டாய்க் குலைத்து விட்டது.  கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.


  பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார்.  "பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் என் கன்றின் குளம்படித் தழும்பையும்  மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்" என்று ஆறுதல் கூறினார்.


  "இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது.  அதை திருக்கருவூரிலேயே அருளுகிறேன்.  இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம்.  உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும்.  எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும் என்று அருளினார்.


பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊருரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே.


        
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள்


என்று சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார்.  அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.  அதற்கு அவர் "அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது.  அந்தப் பரவசத்தை அனுபவித்துதான் உணரமுடியும்" என்றார்.


    உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து "சிதம்பரத்தில் இருப்பது திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறிச் சென்றனர்.


    அப்பேர்ப்பட்ட பெருமையுடைய இந்த கனக சபையை திருமலை நாயக்க மன்னாpன் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் கட்டினான்.  1625 முதல் 1659 வரை 34 வருடங்கள் கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார்.  இறைவன்.  அதனால்தான் இத்தலம் மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.  இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயாpல் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம்.


    கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான 8 சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள்.  அதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருயே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதைத் தாண்டினால் குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது.  அதைத் தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர் அவரோடு சிவகாமியம்மை காட்சியளிக்கின்றனர்.  நடராஜரின் மண்டபத்தை 4 வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம்.  இறைவனுக்கு பணிந்த நிலையில் தூண்கள் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளன.


     ஆனந்த தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வீசுகிறஹஸ்தம், வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம் ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்ந்த நிலையிலுள்ளது.  சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது.  கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாக அமைக்கப்பட்டுள்ளன.  முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது.


      சபாபதி, அழகிய திருச்சிற்றம்பல நாதர், கூத்தப்பிரான் என்பவை நடராஜரின் வேறு பெயர்கள்.


      சிவகாமி அம்மையார் வலதுகையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள்.  திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் ஒன்றாகவும், நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத்தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.  இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.


      சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையில் மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை 28 வருடங்களாக பாடுபட்டு செய்தவரின் பெயர் கம்பனாச்சாரி.  குனகசபையில் 36 த்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தூண்கள் உள்ளன.


      சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்தபின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  மன்னர், கம்பனாச்சாரியாரோடு ஏராளமான பொதுமக்களும் கோவிலுக்குள் வந்து கம்பனாச்சாரியாரின் சிலைகளை பார்வையிட்டனர்.  மகிழ்ச்சியான அந்த தருணத்தில், கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் இரண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைகளில் ஒருபக்கம் உள்ள சிலையில் குறை உள்ளது என்று கூறினான்.  அதைக் கேட்ட கம்பனாச்சாரியார் குறையை நிரூபிக்குமாறு கேட்டார்.  உடனே அந்த இளைஞன் நடராஜரின் இடதுபுறத்தில் இருந்த குதிரைவீரன் சிலை முழுவதும் சந்தனத்தை பூசுமாறு கூறினான்.  அதன்படியே பூசப்பட்டது.  சிலையின் ஒரு இடத்தில் மட்டும் சந்தனம் ஈரமாகவே இருந்தது.  அந்த இடத்தை உடைக்குமாறு இளைஞன் கூறினான்.  உடைக்கப்பட்ட இடத்திலிருந்து உள்ளே வசித்து வந்த தேரை குதித்து ஓடியது.


      சிற்ப சாஸ்திரம் படித்த தனக்குத் தொpயாத இந்தக் குறை ஒரு இளைஞனால் கண்டறியப்பட்டது கண்ட கம்பனாச்சாரியார் தனது கைகளை வெட்டிக் கொண்டார். இக்கதையை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் நடராஜர் சந்நிதிக்கு இடதுபுறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கருகே உடைந்த குதிரைவீரன் சிலையின் மிச்சத்தினை காணலாம்.


      கம்பனாச்சாரியாரின் சிற்பத் திறமைக்கு எடுத்துக் காட்டாக தூண்கள் முழுவதும் நிறைந்துள்ள ஏராளமான சிற்பங்களைக் காணலாம்.  துற்போது 8 அழகிய சிற்பங்களுக்கும் பாதுகாப்பிற்காக கம்பிக்கூடு (வேலி) போடப்பட்டுள்ளது.


      கனகசபையின் இருபுறமும் (பக்கத்திற்கு 4) ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்கள்..


இந்த கனக சபை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
சிற்பங்களின் மேல் வரலாறு சிறப்பாக வர்ணணிக்க்ப் பட்ட
விதம் சிற்பங்களை உணர வழிவகுக்கிறது. கஜ சம்ஹாரமூர்த்தி, முருகனின் எழில் தோற்றம், ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு பாவம்
காட்டும் காளி என வியப்பின் எல்லையில் நின்று காண கண்கோடி
இல்லையே என்று ஏங்க வைக்கும் இடம் கனகபை ஆகும்.
பெயரே பேரூர் அல்லவா? சுருக்க மனமிலாமல் அத்தனை அறிந்த
தகவல்களையும் அளித்து விட்டேன்.
இறவாப் பனையும், பிறவாப்புளியும் நான்கு யுகங்களாக இருப்பதாக
ஐதீகம். 


                             ’காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத்
                              திருமாலுக்கு அமர்ந்துறையக்
                              குன்றமன்னதோர் கோயிலாக்கியும்’ 
என்று நெடுஞ்சடையன் பராந்தகனைப் பற்றிச் செப்பேடு பேசுகிறது. 
             
இத்தகு சிறப்புக்கள் பல பொருந்திய பேரூர் சிற்ப வளத்தால் உலகப் பெருமை பெற்றது.  அது போலவே இலக்கியப் பெருமை யும் உலகறிந்த வொன்று.  ’பாமலி புலவர் போற்றும் பட்டி நாயகனார்’என்ற கூற்றிற் கேற்ப புலவர் பெருமக்கள் பலர் பல இலக்கியங்களை யாத்துள்ளனர்.  பேரூரைப் பற்றிய நூல்களில் தலையாயது கஞ்சியப்ப முனிவர் பாடிய பேரூர் புராணமாகும். தத்துவங்களை அடியாகக் கொண்டே நூலை யாத்துள்ளனர்.  36 படலங்கள் நூலில் உள்ளன.  நடராசப் பெருமான் கோயில் மண்டபத்தில் 36 தூண்கள் உள்ளன.  இவையெல்லாம் தத்துவத்- தோடு தொடர்புடையன.
               
  ’கங்கையும் பணிவெண்டிங்களும் ’ எனத் தொடங்கும் விநாயகர் வாழ்த்தில் 36 சொற்கள் உள்ளன.


                 கற்பனை, இலக்கியச்சுவை, தத்துவக்கருத்து முதலியன நூல் முழுதும் விரவிக் கிடக்கின்றன.  காவலர் வழிபாடு படலத்தில் சிவமூர்த்திகள் 24 குறிக்கப் பெறுகின்றன.  ஒவ்வொரு மூர்த்தங் களையும் வழிபடுவதால் வரும் பயனும் கூறப்பட்டுள்ளது.

13 comments:

  1. அழகிய வர்ணனை! உங்களுடன் வந்த மாதிரியே இருந்தது!

    ReplyDelete
  2. தங்களின் பதிவுகள் அனைத்திலும் தெய்வீக மணம் கமழ்கிறது.

    எங்களை எங்கெங்கோ அழகாகக் கூட்டிச் செல்லுகின்றீர்கள்.

    நேரில் போனால் கூட இவற்றை நாங்கள் இவ்வளவு ஒரு ரசனையோடு ரசிப்போமா என்பது சந்தேகமே.

    தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @ middleclassmadhavi said...
    @வை.கோபாலகிருஷ்ணன் //
    vaazththukku Thanks.

    ReplyDelete
  4. கோவில் தரிசம் அருமை.

    ReplyDelete
  5. கனக சபையின் எழிலார்ந்த அமைப்பு மனதைக் கொள்ளை கொண்டது.

    ReplyDelete
  6. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Aha..........................
    This where
    and this where....
    I born and broughtup.
    My fathers very big house was at Angallamman koil street.
    The entrance at Vysial street and backyard at Dharmarajakoilstreet.
    Paror......
    Still I never miss to go when I go to Coimbatore.
    What a pretty pleasent and happy malarum niniukal.
    I excited and felt happy to read this. Thanks Thanks for sharing.
    viji

    ReplyDelete
  8. viji said...//
    ஆத்மார்த்தமான அருமையான பின்னுட்டத்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  10. எனது வாழ்வில் மறக்க இயலாத கோவில், இந்தக் கோவிலை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் எனது திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்து நாங்கள் சென்ற முதல் கோவிலும் இதுதான்

    ReplyDelete
  11. sivayanama
    thanx for sharing sources from my site www.perur.in

    ReplyDelete
  12. sivayanama

    thx for sharing ( sources for www.perur.in)

    ReplyDelete