Thursday, March 3, 2011

சிவராத்திரி


கல்லணை கட்டிய கரிகால சோழ மன்னன் புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய முப்பத்தாறு சிவாலயங்களில், முப்பத்தி ஓராவது தலமான கோவை கோட்டை ஈஸ்வரர் -ச்ங்கமேஸ்வரரை சிவராத்திரியில் வலம் செய்யும் பேறு கிடைத்தது.


[Image1]


கன்னியருக்கு ஒன்பது நாள் நவராத்திரி
காளையருக்கு ஓரிரவு சிவராத்திரி!!
மாசிமாத சிவராத்திரியன்று விரதம் இருந்து, உறங்காமல் முதுகெலும்பு
நேராக வைத்திருந்தால் சுழுமுனை நாடி தூண்ட இயற்கை அன்னை உதவி
புரிகிறாள்.

நூற்றெட்டு முறை கோவிலை சிவநாமத்துடன் வலம் வருபவர்கள் அந்த எண்ணிக்கையில் கொண்டைக்கலை, பூக்கள்,வில்வஇலைகள் அல்லது
1,2,3,4,5, என்று 108 வரை எழுதிய தாள்கள் போன்றவற்றால் அடையாளம்
அறிகிறார்கள். அந்த அடையாளப் பொருள்கள் ஒரே பாத்திரத்தில் சேகரிக்கப்
படுவதால் இரவுமுழுவதும் ஒரு சுற்றுக்கு ஒன்று என்று பக்தர்களால் போடப்
பட்டு நிறைக்கப் படுவது ஆச்சரியப் படுத்துகிறது.

ஒவ்வொரு கால அபிஷேகமும்,பூஜையும் நிறைவேறிய பின் பிரசாதம் வழங்கப் படுகிறது.குங்கும அர்ச்சனையில் பெருந்திரளான மக்கள் பங்கு பெற்று ஒரே குரலில் அர்ச்சனை மந்திரங்கள் சொல்வது பிரம்மிப்பூட்டும்.
அன்று பக்தி சொற்பொழிவுகள், திருமுறைப்பாராயணம் சிறப்பாக நடைபெறும்.
கார்த்திகை சோமவாரமான திங்கள் கிழமைகளில் ஆயிரத்து எட்டு புனித நீர் நிறைந்த சங்குகளை சிவலிங்க வடிவிலோ. பிரம்மாண்ட தாமரை வடிவிலோ
தானியத்தின் மீது அலங்கரித்து வைத்து அபிஷேகிப்பது பக்திப் பரவசமான நிகழ்வு ஆகும்.
[Gal1]
மூலவர் ச்ங்கமேஸ்வரரின் மேற்பகுதியில் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் நம்
படைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளைக் களைந்து நம் விதியையும்
மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றதாக அமைக்கப்பட்டதாகும்.


அசுரனின் கொடுமையிலிருந்து விடுதலை பெற சங்குபுஷ்பங்கள் நிறைந்த
இந்த ஸ்தலத்தில் தேவர்களால் ஸ்தாபிககப்பட்டு, வணங்கி பூஜை புரிந்த
புனிதமான பழம்பெருமை வாய்ந்த அற்புதக் கோவில் .
பன்னிருகரங்களிலும் ஆயுதம் ஏந்தி,காலடியில் சூரபத்மனை வதைக்கும் அற்புதத் தோற்றத்தில், ஆறுதிருமுகமும் ஒரேதிசையில் நம்மை
மட்டுமே நோக்கிப் புன்னகைக்க சோமாஸ்கந்தராக, வடக்கு நோக்கிய மயிலின்
மேல் ஷண்முக சுப்ரமணியர் என்ற பெயரில் அருள் பாலிப்பது தனிச்சிறப்பு.
கோவில் அமைப்பு இவரே மூலவர் என்று கூறும் வண்ணம் இருக்கிறது.
அன்னை அகிலாண்டேஸ்வரி இடப்பக்கம் எழிலுற அருள் பாலிக்கிறார்.
திருமணத்தடைநீக்கி, புத்திர பாக்கியமருளி, தொழில் அபிவிருத்தி நல்கி கருணைக் கடலாம் அம்பிகை கொலுவிருக்கிறார்.
தூணில் மேற்கு நோக்கிய அனுமன் அபயம் அளிக்கிறார்.
பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விஷேஷமானவர்.
வன்னிமரத்தடி விநாயகர், நீலகண்டர், பைரவர், நவக்கிரகங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும்.
ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பெருந்திரளான மக்கள் பங்கேற்க அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படும்.
கோவிலுக்கு அருகில் கல்விக் கடவுளாம் ஹயக்கிரீவருக்கான ஆலயம்
ஒன்றும் இருக்கிறது.

8 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  2. @Rathnavel said...//
    முதல் வருகைக்கும், உங்கள் முதல் பதிவிற்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. கரிகால சோழ மன்னன் கட்டிய கோட்டை ஈஸ்வரர் தர்சனம் கிடைக்கப்பெற்றோம்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. பழ்மையான கோவிலைப் புதிய முறையில் தரிசனம் செய்தோம். நன்றி.

    ReplyDelete
  6. ;)
    பாஹிக் கல்யாண ராம்!
    பாவன குண ராம்!!

    ReplyDelete
  7. கோவை கோட்டை ஈஸ்வரர் சங்கமேஸ்வரரை சிவராத்திரியில் வலம் செய்யும் பேறுபெற்ற [ஸ்ரீஇராஜராஜ] ஈஸ்வரிக்கு வந்தனங்கள்.

    தகவல்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete