பிரிஸ்பேன் நகரின் பிரதான சுற்றுலாத்தலமான (Lone Pine Koala Sanctuary )
லோன் பைன் கோலா சரணாலயத்திற்குச் சென்றிருந்தோம்.


ஆஸ்திரேலியாவின் பிரபலமான அடையாளச் சின்னமாக விளங்கும்



லோன் பைன் கோலா சரணாலயத்திற்குச் சென்றிருந்தோம்.


ஆஸ்திரேலியாவின் பிரபலமான அடையாளச் சின்னமாக விளங்கும்
பாலூட்டி வகைப் பிராணி.
வ்ருகை தந்தவர்களின் குறிப்பு காணக் கிடைத்தது.ரஷ்ய முன்னாள்
அதிபரும் வந்திருக்கிறார்.
இங்கு கோலாவைத் தூக்கி அணைக்கலாம். உணவு ஊட்டலாம்
புகைப்படம் எடுத்து நினைவுப் பரிசாக பத்திரப் படுத்தலாம்.
இதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தொகை சரணாலயத்திற்கும்,
கோலாக்களைப் பாதுகாக்கவும் பயன் படுத்துகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான கங்காரு, ஈமு,முள்ளம்பன்றிபோல்
காட்சியளிக்கும் எக்கின்னா,டிங்கோ எனப்படும் காட்டுநாய்,
பறக்கும் நரி, பலவிதமான பறவையினங்கள் எனத்தனி உலகமே
இயங்கிவருகிறது.
டிங்கோ -காட்டுநாய்
ஈமு
எக்கின்னா
கங்காரு
பறக்கும் நரி








கோலாவின் முக்கிய உணவு யூகலிப்டஸ் இலைகளே ஆகும்.
ஆறு நூறு வகையான யூகலிப்டஸ் வகைகளில் ஐம்பது வகையான
இலைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் விசிதிரக்குணமுள்ளது.
இந்த இலைகளில் ஐம்பது சதவீத அளவு நீர்ச்சத்தும் ஐந்து சதவிகித கார்போ
ஹைடிரேட்டும் இதர சத்துக்களும் கோலாவுக்குக் கிடைத்துவிடுகின்றன.
இவ்வளவு குறந்த சத்துக்களில் வாழவேண்டியிருப்பதால் பத்தொன்பது மணி
நேரத்தைத் தூங்கியே கழித்துப் போதையில் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.
உலகில் அழிந்து வரும் இனங்களில் கோலாவும் ஒன்று.
குடியிருப்புக்காகவும், பயிர்த்தொழிலுக்காகவும்,இன்ன பிறத்தேவைகளுக்காகவும்
காடுகள் அழிக்கப்படுவதால் கோலா இனம் அருகிவரும் இனமாகவும்,
பாதுகாக்கப் படும் இனமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் மட்டுமே காணப்படும் கோலாக்கள்,
சாம்பல்நிற வழுவழுப்பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும்,
பெரிய மூக்கும் கொண்டிருக்கிறது.
கோலாவின் முரடான பாதங்களும்,கால்களில் உள்ள கூரிய நகங்களும்
மரங்களைப்பிடித்து ஏறுவதற்குப் பயன்படுகின்றன,
கோலா என்றால் தண்ணீர் இல்லை என்பது பொருளாகும் ஆஸ்திரேலியப்
பூர்வகுடிகளின் மொழியிலிருக்கும் சொல்லாம்.
கோலாக்கள் தண்ணீரே அருந்தாத விலங்காகும்.
யூகலிப்டஸ் இலைகளில் இருந்தே தேவையான நீர் கிடைத்து விடுவதால்
இருக்கலாம்.
ம்ரங்களிலெயே வசிக்கும் இவை நிலத்திற்கு அபூர்வமாகவே வருகின்றன.

the rare blue-eyed baby koala

கோலா பற்றிய அருமையான தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி
ReplyDeleteபறக்கும் நரி, //
ReplyDeleteஆ பயமா இருக்கு அந்த படங்கள் கிடைக்கலையா..
கோலா கரடிகள் ரொம்ப அழகா இருக்கு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅழகாக இருக்கின்றன. தகவல் மற்றும் படங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteKoala - Looks cuddly!
ReplyDeleteபகிர்வுக்கு தாங்க்ஸ்!
இனிமே இந்தபக்கம் வரக்கூடாதுன்னு முடிவுபண்ணிடலாம் போலிருக்கு.!!
ReplyDeleteஇங்க நான் ஒரு இடத்துக்குமே போக முடியலையேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கன்.. அங்கபோனன் இங்கபோனன்னு வெறுப்பேத்துறீங்களே.!!
சரி அத விடுங்க.. கோலா-நேர்ல தான் பாக்க முடியல உங்க பதிவிலயாச்சும் பாத்தேனே.!! அதுக்கு ஒரு தேங்க்ஸ்...
படங்களுடன் நிறைந்த நல்ல பதிவு. வித்தியாசமான செய்திகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
All photos, just cool!!!
ReplyDeleteகோலா பற்றிய தகவல்கள் புதிதாக அறிந்து கொள்கிறேன் நன்றி.
ReplyDeleteபடங்கள் பகிர்வுக்கு நன்றி.
@Lakshmi said.../
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
@ Chitra said...&
middleclassmadhavi said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபறக்கும் நரி, //
ஆ பயமா இருக்கு அந்த படங்கள் கிடைக்கலையா..//
வந்துவிட்டார் பாருங்க உங்களைச் சந்திக்க.
கருத்துக்கும்,பகிர்விற்கும் நன்றி.
@ தம்பி கூர்மதியன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
யதா பாவம் தத் பவதி!
த்ங்கள் விருப்பப்படி நிறைய இடங்கள்
சுற்றிப்பார்க்க வாழ்த்துக்கள்.
@ Rathnavel said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
ReplyDeleteமுத்ல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பலவிதப் பிராணிகளின் படங்களும், கோலா பற்றிய தகவல்களும் அருமை.
ReplyDeleteகோலா படங்களுடன் நல்ல பதிவு.
ReplyDeleteஅழகிய கோலாக்களை நாங்கள் டிஸ்கவரியில்தான் பார்ப்போம்.
கோலாக்களின் படங்கள் நேரில் பூங்காவிற்குச் சென்று பார்த்த உண்ர்வைத் தந்தன.
ReplyDeleteபறக்கும் நரி புது அறிமுகம். நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
கோலா கரடிகள் ரொம்ப அழகா இருக்கு
ReplyDelete204+2+1=207
ReplyDelete