Wednesday, March 16, 2011

முருகா சரணம்...


பச்சை மயில் வாகனனுக்குப் பச்சை சார்த்தி
பரவசப் படுத்தினார்கள்.
 குறிஞ்சி நிலக்கிழவோன்
முருகனுக்கு குன்றுதோராடி, பலகுன்றிலும்
அமர்ந்து,உலகெங்குமுள்ள பல தேவாலயம்
தோறும் அருளும் முருகனைச் சிறப்பிக்க முருகன்
பிறந்த வைகாசி மாதத்தையே குன்றுக்குச் சூட்டி
அழகு முருகனுக்கு ஆலயம் அமைத்த சிட்னிமக்கள்.



பச்சை நிறத்தி பார்வதி மைந்தன் காமனைக் கடிந்த
கண்ணுதல் கடவுளாம் திரு நீலக்கண்டரின்
நெற்றிக்கண் நெருப்பில் உதித்த சேயோன்

திருமகள் தனக்கும் மருகன்
இச்சையெல்லாம் தீர்க்கும் பாலசுப்ரமணியன்,
தத்தும் மயில் வாகனன்,
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே ஊர்ந்து
வாழ்வை வளம் பெறச் செய்வான்.



பாலோ தேனோ பாகோ வானோர் நேசத்து அமுதேயோ
பாரோர் சீரோ வான்முத்தோ என சீராட்டும் சீரலைவாய்
செந்தூர் கந்தப் பெருமாள்.

கந்தனென்று சொல்ல வந்த வினை நீக்கி
சொந்தமென்று கொண்டாடி வருவான்.

வள்ளிக்கு வாய்த்தவன் வந்தவினை விரட்டிடுவான்.
அகர முதலென உரைசெய்யும் அட்சரங்கள்
பகர உரை செய்யும் தமிழ்க்கடவுள்.
மருவுமடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள்..
ஜெகதலமும் வானும் மிகுதி பெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்......




image023.jpg (400×300)
முருகனைக்கூப்பிட்டு முறையிட்டபேருக்கு
துன்பம் தொலைந்தோடுமே...

முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்
தமிழ்க் கடவுள்...


அப்பனைப்பாடும் வாயால் பிள்ளை சுப்பனப் பாடுவேனோ
கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடமாட்டேன்
என்ற புலவனை திருமுருகாற்றுப் படை பாடச் செய்த
சரவணபவ குகன் முருகன்....

ஓம் என்னும் பிரணவத்தின் பொருளை மறந்த
பிரம்மாவைதண்டித்து, அப்பனுக்கு பாடம் சொன்ன
சுப்பன் பிரணவத்துள் ஒளிரும் சுடர்...

கார்த்திகைப் பெண்களால் கண்ணிமை போல்
காத்து விழிபோல் வளர்க்கப் பட்டவன்..


அன்னைஉமையவள் அன்புடன் சேர்த்தணைக்க
ஆறுருவும் ஓருருவாய் ஆறுமுகம் ஆனாய் போற்றி..

ஆறு திருமுகமும் கரமது பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து உதித்தான் ஆங்கே உலகம் உய்ய...

9 comments:

  1. வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா! என்ற பாடல் வரிகளை நினைவுறுத்திய காட்சிகள். பரவசம். நன்றி

    ReplyDelete
  2. வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா! என்ற பாடல் வரிகளை நினைவுறுத்திய காட்சிகள். பரவசம். நன்றி

    ReplyDelete
  3. தோழி,
    தாங்கள் நன்றாக முருகனை தரிசனம் செய்து வைத்தீர்கள் .நாளைய தினம் பங்குனி உத்திர்ரம்

    ReplyDelete
  4. நன்றாக முருகனை தரிசனம் செய்து வைத்தீர்கள் பரவசம். நன்றி

    ReplyDelete
  5. @ Elangai Tamilan said...
    தோழி,
    தாங்கள் நன்றாக முருகனை தரிசனம் செய்து வைத்தீர்கள் .நாளைய தினம் பங்குனி உத்திர்ரம்//
    பங்குனியின் உத்திரத்தில்
    பழனிமலை உச்சியிலே
    பழ்னி முருகனின் அருட்காட்சி!!
    நன்றி.

    ReplyDelete
  6. @ Mahalashmi said...//
    வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. முருகு என்றால் அழகு
    முருகன் என்றால் அழகன்

    தாங்கள் தரும் எல்லாப் பதிவுகளுமே
    படங்களுமே அது போல அழகோ அழகு.

    வாழ்க, தங்கள் பணி தொடர்க!

    ReplyDelete
  8. ;)
    ஓம் ஹரி
    ஓம் ஹரி
    ஓம் ஹரி

    ReplyDelete