நூறாவது பதிவு.
ஆங்கிலத்தில் ஏழும்,
தமிழில் தொன்னூற்று மூன்றும் ஆக யானைப் பதிவுடன் நூறு ஆகிவிட்டது.
இன்னும் எடிட் செய்யத்தெரியாது.
திரட்டித்தளங்களில் இணக்கத் தெரியவில்லை.
ஓட்டுப்பட்டை முயன்றும் இணையவில்லை.
டேஷ்போர்டில் பதிவு காட்சிப்படவில்லை. சரிபடுத்தத் முடியவில்லை.
கணிணி கிடைக்கும் நேரத்தில் பதிவுகளைப் பதித்துவிட்டு படங்களை
இணைப்பதுடன் சரி.
உற்சாக விளையாட்டு.
முழுமுதற்கடவுளான ஆணை முகனை வணங்கியே
முதலில் காரியமாற்றத் துவங்குவோம்.
யானை யானை அழகர் யானை
யானை யானை அம்பாரி யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பார்க்க வந்ததாம்..
என்று யானையை மகிழ்ச்சியாக பார்த்து வியந்திருக்கிறோம்.
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
என பழமொழி கேட்டிருக்கிறோம்.
புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்ணை புறநானூற்றில்
சந்தித்திருக்கிறோம்.
மிளகாய் நெடியினால் யானையைத் துரத்திய சமகாலப் பெண்ணைப்
பாராட்டிய ஊர்மக்களை கண்டிருக்கிறோம்.
ஊசியால் குத்திய தையல்காரரை சேற்றை வாரி அடித்த ஞாபகசக்தி வாய்ந்த
புத்திசாலி யானையைக் கதைகளில் படித்திருக்கிறோம்.
திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்பும்,அலங்காரமும்
கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் காட்சியைக் கண்டிருக்கிறோம்.
குருவாயூர் கோவிலில் யானை ஓட்டம் பிரசித்தி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவுத்வேல்ஸ் நகரில் ட்ரோங்கா
மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது.
இங்கு ஆசியக்காடுகளில் மட்டுமே காணப்படும் யானை வகையைச் சார்ந்த
பாண்டிப் என்னும் பெரிய யானை சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்று
மிருகக் காட்சி சாலை ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
லக்சாய் என்று அதிர்ஷ்டப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
துள்ளித்துள்ளி பந்து விளையாடும் யானைக் குடும்பத்தைக்காண,
குடும்பம்,குடும்பமாய் மகிழ்சியுடன் கூட்டம் அலைமோதுகிறது.
Luk Chai
தன்னை நோக்கி வரும் பந்தை அப்படியே அமுக்கி, பந்தின் மேல் ஏற
முயற்சி செய்யும் லக்சாயை கை தட்டி ஆரவரித்து உற்சாகப்படுத்துகிறார்கள்
முயற்சி செய்யும் லக்சாயை கை தட்டி ஆரவரித்து உற்சாகப்படுத்துகிறார்கள்
பார்வையாளர்கள். வயது வித்தியாச்ம் இல்லாமல் ரசிகிறார்கள்.
தாய் பாண்டிப்பும் லக்சாயும் பெரிய பந்தை உதைத்து விளையாடும் கண்கொள்ளாக்காட்சி கண்டு உள்ளம் கொள்ளை போகிறது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானையான லக்சாய் மிகவும் மகிழ்ச்சியாக கால்பந்தை உதைத்து விளையாடிவதை நாள்முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படுவதில்லையாம் ஆஸ்திரேலியர்களுக்கு.
கோல் போஸ்ட் எதுவும் இல்லாமலேயே லக்சாய் பந்தை உருட்டி உருட்டி
விரட்டி விரட்டிச் செல்வதைப் பார்க்கும் போது கால்பந்து போட்டியைப்
பார்க்கும் விறுவிறுப்பும் உற்சாகமும் ஏற்படுவது மிகவும் ஆனந்தமாக்
இருக்கிறது.
அங்கிருக்கும் சிறிய குளத்தில் தண்ணீரில் துதிக்கையால் அளைந்தும்,
பீய்ச்சியும், பந்தை வைத்து சிறிதும் ஓய்வு எடுக்காமல் சுற்றிச்சுற்றி
வருவது கருத்தைக் கவருகிறது.
அழகோ அழகு
ReplyDeleteஅந்த யானைக்குட்டி.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
@சிவகுமாரன் said...
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
THANK YOU SIR.
நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடத்தில் உள்ள பந்து விளையாடும் யானை போன்ற குழந்தை மனமும், எழுத்திலும், எண்ணங்களிலும் யானை போலவே பலசாலியான நீங்கள், மேலும் மேலும் பல அழகிய பதிவுகள் தந்து அசத்த வேணுமாய் விரும்பும் உங்கள் அன்புள்ள vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //
மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி ஐயா.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@ மாதேவி said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி தோழி.
@நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபரவாயில்லை. யாணையாவது கிரிகெட்விளையாடமல் கால் பந்து விளையாடிதே! மகிழ்ச்சி!
ReplyDelete;)
ReplyDeleteஓம் ஹரி
ஓம் ஹரி
ஓம் ஹரி
288+2+1=291
ReplyDelete