தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அனுமன் அவதரித்தார்
புத்திரகாமேஷ்டி யாகத்தினால் தசரத சக்ரவர்த்தித் திருமகனாக
ராமபிரான் அவதரித்தார்.
ஒரு நாள் விளையாடுவதற்காக அவர் அரண்மனையிலிருந்து வெளியே வந்த போது அழகிய குரங்குடன் குரங்காட்டி உடுக்கை அடித்துக் கொண்டே வேடிக்கை காட்டியதை தன் சகோதரர்களுடன் கண்டு களித்தார்
பகவானை மகிழ்விக்க ஹனுமன் உருவில் வந்த
சிவபெருமான் அல்லவா அந்த குரங்கு!
ராமரின் பால லீலைகளைப் பார்க்க ஒரு நாள் ஜோதிடனாகி ராமனின் கையைப் பிடித்துப் பார்த்தவராயிற்றே!மறுநாள் துறவியாக மாறி ஆசீர்வதமும் செய்துவிட்டார்.
ஆனாலும் ராமபிரானைப் பிரிய மனமில்லாமல் ஆட்டுவிக்கும் குரங்காட்டியாகவும், ஆடுகின்ற குரங்கும் தானேயாகி வந்துவிட்டார்.
குரங்கு தனக்கு வேண்டுமென
தந்தை தசரத சக்ரவர்த்தியிடம் பிடிவாதம்செய்தார்.
குரங்குக்குப்பதிலாக குரங்காட்டி விரும்பும் அளவு பணம் கொடுத்து, குழந்தை ராமரிடம் குரங்கைக் கொடுத்துச் செல்ல ஆணையிட்டார்.
தன்னையே பிரபுவின் சரணாரவிந்தத்தில் அர்ப்பணிக்க வந்த அந்த குரங்கை ராமபிரான் தன் கரங்களால் அன்புடன் பற்றிக் கொண்டார்.
இத்தனை நேரம் தானே தன்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்த குரங்கு இப்போது ஆட்டுவிப்பவன் ராமனாகவும் ஆடுகின்றவன் தானாகவும் நெடுங்கால ஆசை பூர்த்தி அடைந்ததாயிற்று.அளவு கடந்த ஆனந்தத்துடன் ஆடலாயிற்று.
குரங்காட்டி குரங்கினுள் மறைந்தானோ? அல்லது தனது காரியத்தை நிறைவேற்றிவிட்டு கைலாயம் தான் சென்றாரோ?? யாருக்குத் தெரியும்??
அருமையான பதிவுங்க..
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த அனுமனை பற்றி உள்ளது..
கோயில்கள் பற்றி இன்று இல்லையா.. இருந்தாலும் நான் சொல்வன்..
சமீபத்தில் செங்கல்பட்டிலிருந்து வையாவூர் போகும் வழியில் ஒரு கோயிலை பார்த்தேன்.. அதில் அனுமர் முதுகில் கருடர் நின்றிருப்பது போல சிலைவடிவம் இருந்தது.. சிறப்பு..
பதிவும் சிறப்பு..
@
ReplyDeleteதம்பி கூர்மதியன் said.../
அரிய தகவலுக்கும், கருத்துகளுக்கும் நன்றிங்க.
எனக்கு மனசஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் இங்குள்ள ஹனுமார் கோவில் சென்று அவர் நெஞ்சினில் வெண்ணெய் சாத்தி விட்டு வருவேன்.அடிக்கடி வடமாலையும் சாத்துவேன். 5 வருடங்கள் முன்பு ஹனுமாரை அழகாக நானே வரைந்து கலர் பிரிண்ட் போட்டு 51 பேர்களுக்கு வினியோகம் செய்து, இன்று அது பலர் வீடுகளில் ஃப்ரேம் போட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. என் வீட்டு பூஜை அறையிலும் ஒன்று உள்ளது.
ReplyDeleteஉங்களின் இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. நாமக்கல் & நங்கநல்லூர் மிகப்பெரிய ஆஞ்சநேயர்களை தரிசித்து உள்ளேன்.
துபாயில் கூட ஒரு இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்ரகத்துடன் தினமும் பூஜை நடக்கிறது. என் மகனுடன் 2-3 தடவை போய்ப் பார்த்து வந்தேன்.
இங்கு உங்கள் பதிவில் நிறைய ஹனுமான் படங்கள் அழகழகாக கொடுத்து, புதிய சில கதைகளும் தெரிந்து கொள்ள உதவியுள்ளீர்கள்.
நன்றி.
ஸ்ரீராமர் + ஹனுமார் போல நம் நட்பும் தொடரட்டும். அன்புடன் vgk
@ வை.கோபாலகிருஷ்ணன் sai/
ReplyDeleteதங்களின் ஆத்மார்த்தமான தகவல்களுக்கு என் ஆழ்ந்த மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
நான் நாமக்கல்லில் படித்த காலத்தில் நிறைய முறை ஆஞ்சநேயர் தரிசனம் செய்திருக்கிறேன்.
ReplyDelete5 வருடங்கள் முன்பு ஹனுமாரை அழகாக நானே வரைந்து கலர் பிரிண்ட் போட்டு 51 பேர்களுக்கு வினியோகம் செய்து, இன்று அது பலர் வீடுகளில் ஃப்ரேம் போட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. என் வீட்டு பூஜை அறையிலும் ஒன்று உள்ளது.//
அஞ்சனை சுதன் ஆஞ்சநேயரே போற்றி!.
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
பல கோடி நமஸ்காரங்கள் ஹனுமனுக்கு தங்களின் அருமையான் பின்னூட்டத்தைப் பெற்றுத் தந்தமைக்கு.
எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு.ஆனாலும் படங்கள் ஒரு பயத்தையும் பக்தியையும் தருகிறது !
ReplyDeleteஎன்னுடைய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை ஏற்படும்போது மனோ தைரியத்திற்காக லிகித நாம ஜெபம் எழுத சொல்வேன். மாலையாய் கட்டி இராம தூதனிடம் சேர்ப்பித்து வெற்றியடைந்தார்கள். ஆஞ்சனேயரின் அருள் கிட்டினால் தோல்விக்கதைகள் முடிந்துவிடும்.
ReplyDelete@சாகம்பரி said..
ReplyDeleteஆஞ்சனேயரின் அருள் கிட்டினால் தோல்விக்கதைகள் முடிந்துவிடும்.//
அருமையாய் கருத்து கூறியமைக்கு நன்றிங்க.
@ஹேமா said...//
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க.
@கவிதை வீதி # சௌந்தர் s//
ReplyDeleteஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்..ஜெய ஜெய ராம்
அருமையான பதிவுங்க..
ReplyDeleteஅருமையான பதிவுங்க..
ReplyDelete@சிவரதி said...
ReplyDeleteஅருமையான பதிவுங்க..//
நன்றிங்க.
அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மிக அருமை.பாராட்டுக்கள் சகோதரி...
ReplyDeleteஆஹா....
ReplyDeleteஅனுமன் பத்தி எவ்ளோ தகவல்கள்.. எவ்வளவு புகைப்படங்கள்... அனைத்துமே மிக மிக அருமை...
நங்கநல்லூர் கோவிலில் அனுமன் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிப்பார்...
விரிவாக நிறைய விஷயங்களை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்த பதிவு மிகவும் அற்புதம்...
வாழ்த்துக்கள்....
அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மிக அருமை.பாராட்டுக்கள்
ReplyDelete;)
ReplyDeleteகோவிந்தா! கோபாலா!!
ஸ்ரீ ரங்கா ரங்கா!
300+2+1=303 [My Comment No. 1 & Your Reply ;)]
ReplyDelete