ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியது. சுத்த சைவம் என்பதால் இந்தியாவிலிருந்து செல்லும் போது விமானத்தில் எதுவும் சாப்பிடாதாததால் விமானப் பணிப்பெண் நீங்கள் திரும்பும் போது சைவ உணவு ஏற்பாடு செய்கிறோம் உங்கள் ரிட்டன் பயணச்சீட்டைத்தாருங்கள் இருக்கை எண்ணையும், தேதியையும் குறித்துக் கொள்கிறோம் என்று சொல்லி குறித்துக் கொண்டு , இப்போது அருமையான சைவ உணவு வழங்கினார்கள்.
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியது. சுத்த சைவம் என்பதால் இந்தியாவிலிருந்து செல்லும் போது விமானத்தில் எதுவும் சாப்பிடாதாததால் விமானப் பணிப்பெண் நீங்கள் திரும்பும் போது சைவ உணவு ஏற்பாடு செய்கிறோம் உங்கள் ரிட்டன் பயணச்சீட்டைத்தாருங்கள் இருக்கை எண்ணையும், தேதியையும் குறித்துக் கொள்கிறோம் என்று சொல்லி குறித்துக் கொண்டு , இப்போது அருமையான சைவ உணவு வழங்கினார்கள்.
ஒரு கால் இழந்த வெள்ளைக்காரர் ஒருவர் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் விமானப் பணிப்பெண்களிடம் கேட்டு பானமும் கொறிப்பதற்கான பண்டங்களும் கேட்டு சாப்பிட்டபடியே இருந்தார்.
முன் பக்கத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஏதாவது அழும் குழந்தையோ, அடம் பிடிக்கும் குழந்தையோ கண்ணில் தென்பட்டால் அது இந்தியக் குழந்தையாக மட்டுமே இருந்தது ஆரய்ச்சிக்குரியது.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்டாப் ஓவர் என்று அழைக்கப்படும் தங்கும் நேரம் பன்னிரண்டு மணிநேரமாக இருந்தது. சிட்டி டூர் என்று அழைத்துச் செல்கிறாகள். நான் உலகப்பிரசித்தி பெற்ற , புதுப் பொலிவுடன் இருந்த விமான நிலையத்தையே சுற்றிப்பார்க்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே ஒருமுறை செந்தோசா தீவு மற்றும் பல இடங்களைப் பார்த்துவிட்டதால், விமான நிலையத்தையே சுற்றி வந்தேன்.நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??
இந்திய அரங்கு ஒன்று நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.மெகந்தி வைத்து அழகு படுத்தினார்கள். நிறைய ஆங்கிலேய பெண்களும், சில ஆண்களும் கூட வியப்புடன் மருதாணி போட்டுக்கொண்டார்கள்.
காதலன் படத்தில் பிரபுதேவா நக்மாவுக்குச் செய்து கொடுத்த கிலுகிலுப்பை போல் பனை ஓலையிலும், ஒயரிலுமாக செய்து அன்பளிப்பாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்கள். அதுமட்டுமா? பழ்ங்கால ராந்தல் விளக்கு, பாத்திரங்கள் அடுக்கி கிராமத்து வீடு போல் அலங்கரித்து ,அங்கே அமரவைத்து படம் எடுத்து அப்போதே கையில் படத்தைக் கொடுத்து அசரவைத்தார்கள்.
கண்களையே நம்பமுடியவில்லை கிளிக்கூண்டுடன் ஜோதிடம் பார்க்கிறேன் என்றார். இ-மெயிலும், வந்த விமானத்தின் பெயரும் பதிந்து கொண்டு, கிளியைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னார். அது பல அட்டைச் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, என் பெயருக்கான சீட்டை எடுத்துக்கொடுத்தது
அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.
நம் கிராமத்தில் கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டின் படமும், ஜோசியக்காரர் ராகத்துடன் படிக்கும், பலனும், அதை வாய்பிளந்து கேட்கும் மக்களுமாக சூழ்நிலையே கலக்கலாக இருக்குமே! இங்கோ !ஆங்கிலத்தில் பலன் எழுதியிருந்த நான்கு வரியைப் படித்ததும் சரியாக் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார் - அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.ஆக்டோபஸ் ஜோதிடம் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை முயற்சிப்பார்களோ என்னவோ.
அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.
நம் கிராமத்தில் கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டின் படமும், ஜோசியக்காரர் ராகத்துடன் படிக்கும், பலனும், அதை வாய்பிளந்து கேட்கும் மக்களுமாக சூழ்நிலையே கலக்கலாக இருக்குமே! இங்கோ !ஆங்கிலத்தில் பலன் எழுதியிருந்த நான்கு வரியைப் படித்ததும் சரியாக் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார் - அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.ஆக்டோபஸ் ஜோதிடம் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை முயற்சிப்பார்களோ என்னவோ.
சில கணிணிகளும் அதற்கு மேல் காமிராவுமாக இருந்த இடத்தில் காமிராவைக் கிளிக் செய்துவிட்டு, இ மெயில் தட்டச்சு செய்தால் அடுத்த நொடி புகைப்படம் அந்த மெயிலுக்குச் சென்றடைகிறது.
அங்காங்கு இருந்த கணிணியில் இந்தியவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சாட் செய்தேன். முப்பது நிமிடங்களில் கணிணி தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. காத்திருப்பவர் நமக்குப்பிறகு யாரும் இல்லாவிட்டால் மீண்டும் நாமே இயக்கலாம்.
கால் பிடித்துவிடும் இயந்திரம் ஆங்கங்கே இருக்கிறது. முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.
சுற்றிச்சுற்றி கால் அசரும் போதெல்லாம் நேரம் செட் செய்துவிட்டு கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் மீண்டும் நடக்க உற்சாகமாக இருக்கிறது.
மசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.
திரைப்பட அரங்கில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருக்க இருக்கையில் சிலர் தூங்கிக் கொன்டிருந்தார்கள்.
அரேபிய உடையுடனும்,பர்தாவுடனும் ஒரு கூட்டம் கடக்க, துபாய் செல்லும் விமானம் கிளம்பத்தயாரானது தெரிகிறது.
சீருடை அணிந்த ஜப்பானிய மாணவர்கள் தங்கள் ஆசிரிய வழிகாட்டியுடன் லண்டன் பயணத்திற்குத் தயாரானார்கள்.
சென்னை செல்லக் காத்திருந்த மாணவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
அரேபிய உடையுடனும்,பர்தாவுடனும் ஒரு கூட்டம் கடக்க, துபாய் செல்லும் விமானம் கிளம்பத்தயாரானது தெரிகிறது.
சீருடை அணிந்த ஜப்பானிய மாணவர்கள் தங்கள் ஆசிரிய வழிகாட்டியுடன் லண்டன் பயணத்திற்குத் தயாரானார்கள்.
சென்னை செல்லக் காத்திருந்த மாணவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
டிரேவலேட்டர்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன.அருமையான இயற்கைச் சூழலிலான பட்டாம்பூச்சி பூங்கா கண்ணயும் கருத்தையும் கவர்ந்தது.
காகடஸ் கார்டனில் கள்ளிச் செடிகளின் அணிவகுப்பு. கள்ளிக்கேது முள்ளில் வேலி ??
சூரியகாந்திப் பூங்கா சூர்யப் பிரகாசத்துடன் போட்டியிட்டு மலர்ந்து , முகம் மலர்ச்சியுறச் செய்தது.
காவேரி உணவகத்தில் சைவ உணவு கிடைக்கிறது. பில்டர் காபியும்.
கண்ணாடிச் சுவர்களின் வெளியே விமானம் இறங்குவதும்,புறப்படுவதுமாக காட்சிப்படுகிறது. மழை பெய்து சூழலை மேலும் அழகாக்குகிறது.
விமான நிலயத்தில் வாங்கும் பொருள்களுக்கு சலுகை அறிவிப்புகளோடு கண்கவரும் விற்பனை நிலையங்கள் ஏராளம்.
ஸ்குரூக்கள் என்னும் விமான நிலையப் பணியாளருக்கான சிறிய ஜீப் போன்றும், இருசக்கர வாகனம் போலும் பணித்துக் கொண்டிருந்தன.
அதிநவீன தொலைக்காட்சிப்பெட்டிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பகிக் கொண்டிருக்க, மிக வசதியான இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள்.
மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது. அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஸ்குரூக்கள் என்னும் விமான நிலையப் பணியாளருக்கான சிறிய ஜீப் போன்றும், இருசக்கர வாகனம் போலும் பணித்துக் கொண்டிருந்தன.
அதிநவீன தொலைக்காட்சிப்பெட்டிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பகிக் கொண்டிருக்க, மிக வசதியான இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள்.
மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது. அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் விளயாட அருமையான விளையாட்டிடத்தில் மகிழ்ச்சியாக பல்வேறு தேசக் குழந்தைகள் விளயாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வண்ண வண்ண கிரையான்களும், காகிதங்களும் உலோக அச்சில் காகிதத்தை வைத்துத் தீட்டினால் உருவங்கள் தோன்ற குதூகலத்துடன் குழந்தைகள் கைவண்ணம் கண்டு மகிழ்கிறாகள்.
உலகின் சிறந்த விமான நிலையத்தில் மறக்க முடியாத நினைவுகள்.
ஆஹா...
ReplyDeleteஇவ்ளோ அருமையா கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்தது... நீங்க எப்படி தான் இவ்ளோ ஃபோட்டோஸ் அப்லோட் பண்றீங்களோ!?
நான் இலவசமாக சிங்கப்பூர் ஏர்போர்ட்டை சுற்றி பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி...
//காதலன் படத்தில் பிரபுதேவா நக்மாவுக்குச் செய்து கொடுத்த கிளுகிளுப்பை //
அது ”கிலுகிலுப்பை”ங்கோ!!
@ R.Gopi said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
குழந்தைக்குக் கொடுத்திருந்தால் அது கிலுகிலுப்பை.
எல் கே said...
ReplyDeleteசிங்கபூரிலும் கிளி ஜோசியமா ?? நல்லதா சொன்னுச்சா ?? நல்ல விவரணை. நேரில் பார்த்த திருப்தி
March 27, 2011 2:43 PM//
நல்லதா தான் சொல்லுச்சு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ReplyDeleteசிங்கப்பூர் விமான நிலையத்தை சுற்றி வந்தது போல் ஒரு பிரமிப்பு.அழகாய் படம் பிடித்துள்ளிர்கள்.
//நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??//
நான் அங்கு இருந்தால் தொலைந்து விடுவேனோ என்று அங்கும் என்னை கவனாமாக பார்த்து கொண்டேயிருப்பார்கள் என் மனைவி..//
உங்களை பத்திரமாக கவனமாக பார்த்துக்கொண்ட உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.
//கால் பிடித்துவிடும் இயந்திரம் ஆங்கங்கே இருக்கிறது. முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.
ReplyDeleteசுற்றிச்சுற்றி கால் அசரும் போதெல்லாம் நேரம் செட் செய்துவிட்டு கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் மீண்டும் நடக்க உற்சாகமாக இருக்கிறது.
மசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.//
நான் துபாய் சென்றபோது (2004) மிகவும் ரசித்தது இந்த கை, கால், கழுத்து, முதுகு பிடித்து விடும் எந்திரம் தான். என் மகன் வீட்டுக்கு அடியிலேயே இருந்ததால் தினமும் 3 முறைகள் போய் உட்காருவேன். ஒவ்வொருமுறையும் உட்கார 1 திர்காம் (நமது 12 ரூபாய்கள்) தொடர்ந்து 2 திர்காம் போட்டுவிட்டு ஆடோமேடிக் மெஷினில் போய் அமர்ந்துவிடுவேன். எழுந்துவரவே மனசு வராது எனக்கு. அவ்வளவு இதமாக இருக்கும்.
அனைத்தும் அருமை.
கிளி ஜோஸ்யத்தில் உங்களுக்கு கூறப்பட்ட பலாபலனை எங்களுக்கும் சொல்லக்கூடாதா?
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@வை.கோபாலகிருஷ்ணன் sa//
ReplyDeleteகிளி ஜோஸ்யத்தில் உங்களுக்கு கூறப்பட்ட பலாபலனை எங்களுக்கும் சொல்லக்கூடாதா?
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//
விரைவில் துன்பங்கள் நீங்கி ,புகழும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். முன்னேற்றமான காலகட்டம் சந்திக்கத் தயாராகுங்கள். என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
சரியாக இருக்கிறதா என்று கேட்டார். யாராவது சரியாக இல்லை என்று சொல்லும்படியான வாசகம் எந்த சீட்டிலும் இருந்திருக்காதே ஐயா!
நான் அவரிடம் அவ்ர் குடும்ப ஷேமத்தைப் பற்றி விசாரித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் சந்தோஷமாகப் பேசினார்.
DrPKandaswamyPhD has left a new comment on your post " ":
ReplyDeleteநல்ல வர்ணனை ராஜேஸ்வரி.
இப்போதுதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். வந்தவுடன் உங்கள் வர்ணனை சரியா என்று பார்த்துவிடுகிறோம். //
நீங்கள் செல்லும் போது இன்னும் பல வசதிகளை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். நான் முதல் முறை சென்றதிற்கும் அடுத்த முறை சென்ற போதும் எண்ணற்ற மாற்றங்கள்.
வெளியே இலவச சுற்றுப்பயணத்திற்கே அதிகம் ஆர்வப்படுகிறார்கள்.
நானும் சாங்கி ஏர்போர்ட்டில் இதையெல்லாம் ரசித்திருக்கேன். ரசித்ததை அழகா சொல்லியும் இருக்கீங்க.
ReplyDeleteஆமா கிளி என்ன் சொல்லிச்சு?
Lakshmi has left a new comment on your post "சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்":
ReplyDeleteநானும் சாங்கி ஏர்போர்ட்டில் இதையெல்லாம் ரசித்திருக்கேன். ரசித்ததை அழகா சொல்லியும் இருக்கீங்க.
ஆமா கிளி என்ன் சொல்லிச்சு? //
வருகைக்கு நன்றி அம்மா.
ஃஃஃஃஃமசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.ஃஃஃஃ
ReplyDeleteஇந்தப் பதிவில் இந்த இடம் என்னைக் கொஞ்சம் கவர்ந்திழுக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
♔ம.தி.சுதா♔ has left a new comment on your post "சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்":
ReplyDeleteஃஃஃஃஃமசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.ஃஃஃஃ
இந்தப் பதிவில் இந்த இடம் என்னைக் கொஞ்சம் கவர்ந்திழுக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
நன்றிங்க.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் அருமையான சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றீர்கள்.
ReplyDeleteசுவையாக எழுதியுள்ளீர்கள். புகைப்படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.
@ Dr.எம்.கே.முருகானந்தன் //
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
பார்த்த மாதிரியே எழுதுவது நட்பான எழுத்து ராஜேஸ்வரி கூடவே பேசிக்கொண்டு நடப்பது போல் இருந்தது நன்றி.
ReplyDelete@சாகம்பரி said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
தாய் நாடு தாண்டாத என்னைப் போன்ற தற்குறிக்கும் சிக்கப்பூர் ஏர்போர்ட்டை சுற்றிக் காட்டிய ராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஎனக்கும் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியுள்ளது உங்கள் பதிவு!
ReplyDeleteசூப்பர்!
@ சிவகுமாரன் said.../
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
@ middleclassmadhavi said...//
ReplyDeleteவாங்க! கருத்துக்கு நன்றிங்க.
அற்புதமான வர்ணனை. ;-))
ReplyDeleteகிளி என்ன சொல்லிச்சு? கரெக்ட்டான்னு கேட்டாரே! கரெக்டா? ;-))
@ RVS said...
ReplyDeleteகரெக்ட்டா கருத்து கூறியதற்கு நன்றிங்க.
wow
ReplyDeleteI felt as if i were with you.
I wish i could visit these places.
viji
@ viji said...
ReplyDeletewow
I felt as if i were with you.
I wish i could visit these places.
viji//
விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ரசித்ததை அழகா சொல்லியும் இருக்கீங்க. இலவசமாக சிங்கப்பூர் ஏர்போர்ட்டை சுற்றி பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஉலகின் சிறந்த விமான நிலையத்தில் மறக்க முடியாத நினைவுகள்.
ReplyDeleteநேரில் பார்த்த திருப்தி
vவாழ்த்துக்கள்.
ஹ்ம் போரடிச்சா இந்த ஏர்போர்ட்லதான் சுத்திகிட்டு இருப்பேன்:)
ReplyDelete;)
ReplyDeleteகோவிந்தா! கோபாலா!!
ஸ்ரீ ரங்கா ரங்கா!
309+2+1=312 [My Comment + Your Reply ;)]
ReplyDelete