ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளே பிரதான சுற்றுலாததளங்களாக
இந்தியாவில் கோவா கடற்கரை மாதிரி பிரதான இடம் பெற்றிருக்கின்றன.
வித்தியாச இடமாக குகைப் பகுதிக்கு சென்றிருந்தோம்.
வீடு மாதிரி முன் பகுதியில் தோற்றமளித்தது.
நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றால் வியப்பளிக்கும்
பூர்வ குடிகள் வாழ்ந்த அற்புதமான குகை காட்சியாக விரிந்தது.
சுண்ணாம்புப் பாறைகளால் பவளப் பாறைகள் வியப்பூட்டும்
இயற்கை அன்னையின் வண்ணக்கோலம்.
பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள்.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளானAborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட
ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளானAborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட
கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை.
James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் 1838 ஆம் ஆண்டு.
தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை
முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்த "Jenolan Caves" பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி
ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு.
ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப்
பார்த்தாலே போதுமானது.
ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும்
ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும்
தனித்தனிக் கட்டணங்கள் வசூலிக்கிறார்கள்...
ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள்
குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம்.
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுழைவுச் சீட்டை
வாங்கியிருக்கிறோமோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும்.
அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி
ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சொல்லி விட்டு
எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம்
சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் .
கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக
இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு
இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள்
ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில்
உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை
இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத்
தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.
அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே "Jenolan Caves"இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச்சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.
Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும்
குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி ஒவ்வாமையால் அவதிப்பட நேர்வதும் உண்டு.
இயற்கையின் எழில் கோலம் நம் கருத்தைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கிறது.
wow.. its very nice experience for u. gud :-)
ReplyDelete//இயற்கையின் எழில் கோலம் நம் கருத்தைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கிறது.//
ReplyDeleteகுகையின் வண்ணக்கோலங்கள் அழகு.
பகிர்வுக்கு நன்றி.
அமெரிக்காவில் இந்த மாதிரி குகைப் பார்த்தோம்.
Qகுகையின் வண்ணக்கோலங்கள் அழகு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletevery nice
ReplyDeleteகுகையின் வண்ணக்கோலங்கள் அழகு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
கல்லுக்குள் தேரை போல, குகைக்குள் வண்ணக்கோலங்கள், வரைந்து காட்டியுள்ள, தங்கள் நெஞ்சுக்குள் நல்ல நல்ல எண்ணங்கள் இருப்பதை நன்கு உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு என் நன்றிகள்.
ReplyDelete;)
ReplyDeleteஓம் ஹரி
ஓம் ஹரி
ஓம் ஹரி
281+2+1=284
ReplyDelete