தண்ணீரால் நான்கு பக்கமும் சூழ்ப்பட்ட பூமிப் பந்து,
நதிக்கரைகளே நாகரிகத்தின் தொட்டில் என்று மலரத்துவங்கியது.
தண்ணீர் தண்ணீர் என்றே நீ
தரையைத் தோண்டி அலையாதே
விண்ணின் மழையை நேசிப்பாய்
விழுந்த மழையை சேமிப்பாய்
மண்ணில் வாழ்க்கை மலர்ந்திடுமே
எல்லா நலனும் விளைந்திடுமே!
வான்புகழ் கொண்ட வள்ளுவரும் வான்சிறப்பு என்று அதிகாரத்தை
அமைத்து சிறப்பித்தார்.
திருக்கோவில்களில் குளங்களை அமைத்தும்,தாயைப் போன்று பலன் தருகிறது
கங்கையில் ஆரத்தி எடுத்து கங்கா மாதா ஆராதிக்கப் ப்டுகிறாள்.
கங்கையில் புனிதமாய காவிரி அரங்கனை மாலை போல் அணைத்து
திருவரங்கத்தையும் பல திவ்ய தேசங்களையும் கொண்டாடுகிறாள்.
நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும்.
இப்போது தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டும்,
ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது. ”பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்கிற நிலையில்தான் உள்ளது!
தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!!தண்ணீர் சேமிப்பு முறைகளைக்கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்! ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும்!!
ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது! உலகின் 263 ஏரிகள்,மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை
இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும்.
அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதான்மாக பங்கிட்டுக்கொண்டாலே நாம் எதிர்கால தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும்!
கடந்த 60 ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான,, உலகநாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!! ( ஆச்சரியம்)
நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியவில்லை
வேண்டாம் என்று மிகுந்த எச்சிலை வெளியே துப்புவது மாதிரிதானே அண்டை மாநிலங்கள் அணை நிரம்பி, சேதமாவதைத்தடுக்க தண்ணீரை அணுப்புகிறார்கள்.
வீணாகக் கடலில் கலக்கும் நீரை தரக்கூடத்தயங்கும் மாநிலம் தமிழகத்தில் குப்பை கொட்டிவிட்டு, அரிசி, காய்கறிகளை அபகரிக்கிறதே!
ஜப்பானில் தண்ணீர் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பிளாஸ்டிகைக் கண்டு பிடித்துள்ளனர்.
மருத்துவத்துறையிலும் பயன் படுத்த முடியும் இது சாதனையாகும்.
சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும்.வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும்
பெருமை.
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள் சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை
உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய். என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது. தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.
நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)
வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும்.
(கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)
ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது) நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன் கரசேவையாக பொற்கோவில் குளம் தூய்மை படுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் அந்த மண் சந்திரமண்டலத்து மண் மாதிரி நினைவுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுவாகவே
நதிநீர்ச் செல்வம் என்பது மிக அதிகமாக ‘வெள்ளம்’
போல நிறைந்து காணப்படுவதுதான் பெரிய விசேஷம்.
ஆனால் இருக்கும் செல்வத்தை எப்படி உபயோகிப்பது
என்பது மட்டும் நன்றாகவே நமக்குத் தெரிந்தாலும் நாம்
செய்யமாட்டோம். உலகில் நாம்தான் தனி மனித வகை ஆயிற்றே!
நதிநீர்ச் செல்வம் எத்தனை இன்றியமையாததோ அத்தனை
செல்வத்தையும் ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரித்துப் பயன்படுத்திக்
கொள்வதும் மிக மிக முக்கியம்.
எல்லா நதிகளையும் இணைத்து குறுக்காகக் கால்வாய்கள் ஏற்படுத்துவோம்
(கட்டுமானப் பணிகள் எல்லாமே பலவீனமானவை என்று நிபுணர்கள்
சொல்வதையும் சேர்த்து) என்று அரைகுறையாகவே இதுநாள் வரைச்
செய்தார்களே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள் என்று கேட்கத்
தோன்றுகிறது. அப்படி உருப்படியாக செய்திருந்தால், சென்னைக்குப்
போடப் பட்டிருந்த தெலுங்குக் கங்கைக் கால்வாய் மிக அகலமாக விரிவு
படுத்தப்பட்டு இந்த வெள்ள காலத்தில் சென்னை மட்டுமல்ல வட
தமிழ்நாட்டுக்கே அல்லவா பயன் பட்டிருக்கும். தண்ணீருக்கு இப்போதும்
தவிக்கும் தென்புலத்தாருக்கு தண்ணீர் ஊற்றிய பெருமை வந்துவிடுமே..
இத்தனைக்கும் ஒரு 15 டி..எம்.சி. தண்ணீர் மட்டுமே சென்னைக்குத்
தருவதாக ஒப்பந்தம் வேறு ஒன்று உண்டு. இதையும் ஒழுங்காகத்
தருவதில்லை. காரணம் ஆந்திரப் பகுதியில் சரியாக அமைக்கப்படாத
வாய்க்கால் கட்டுமானப் பணிகள். (சத்ய சாய்பாபா டிரஸ்ட் உதவியால்
ஆந்திர எல்லை-சென்னைக் கால்வாய் உருவாக்கப்பட்டது என்பது உபரி விஷயம்)
கோவிலில் தரும் தீர்த்தம், அபிஷேக நீர், காயத்ரி மந்த்ரம் ஓதும்
போது மந்திரத்திற்கு இடையிடை நீரின் உபயோகம், நெய்வேத்யத்துக்கு
நீர் உபயோகித்தல் என பல விஷயங்களுக்கும் புனிதமானது.
வெளிநாட்டில் virtual water என்று வரப்போகிறது.

ஒரு கிலோ நெல் விளைவிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறதோ
அதற்கும் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய போகிறார்கள் மூன்றாவது உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான்
இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும்
இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற
முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று,
, உலக வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா
மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும்,
செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில்
இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.
சீனா எல்லைக்குள் உள்ள பிரம்மபுத்திரா நதியில்,
இந்திய எல்லைக்குள் இந்நதி நுழைவதற்குச் சில கிலோமீட்டர்
தூரத்தில், 540 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை
கட்ட சீனா முடிவெடுத்திருக்கிறது.
இந்த அணை வெறும் புனல்மின்நிலையம் மட்டுமே அல்ல
என்பதும், தேக்கப்படும் நீர் சீனாவின் தென்மேற்குப் பகுதியில்
விவசாயத்துக்குத் திருப்பிவிடப்படும் திட்டங்களும்
அந்நாட்டு அரசிடம் இருக்கிறது இத்திட்டம் அரசியல் ரீதியாகவும்,
சுற்றுச்சூழல் ரீதியாகவும் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல
வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக,
யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு
விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த
பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள்,
இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர்.
பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல்,
ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல்
தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்பப்படுகின்றது.
இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால்
கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி,
சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள்.
இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில்
ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது.

தோழி,
ReplyDeleteதண்ணீர் குறித்து நல்ல பதிவு இட்டுருக்க்ரீர்கள்.ஆனால் இரண்டாயிரத்து எழுபதில் ,ரெம்ப மோசமாக தண்ணீர் பற்றா குறை வரும் என்று ஆருடம் கூறி இருக்கேறார்கள்.மிகவும் பயமாக இருக்கிறது
ஜப்பானில் தண்ணீர் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை
ReplyDeleteமாசுபடுத்தாத பிளாஸ்டிகைக் கண்டு பிடித்துள்ளனர்.//
Interesting.
தண்ணீரை புனிதமாக கொண்டாடுவது தான் நமது பழைய மரபு. அதை கைவிட்டதன் பலனை விரைவில் அனுபவிக்கப்போகிறோம்..
ReplyDeleteபடங்களின் தொகுப்பும், உங்கள் வார்த்தைகளின் செறிவும் அசத்தல்..
ReplyDeleteநதிநீர்ச் செல்வம் எத்தனை இன்றியமையாததோ அத்தனை
ReplyDeleteசெல்வத்தையும் ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரித்துப் பயன்படுத்திக்
கொள்வதும் மிக மிக முக்கியம்
மிக மிக முக்கியம்
மிக மிக முக்கியம்
மிக மிக முக்கியம்
@Elangai Tamilan said...//
ReplyDeleteமிகவும் கவலை கொள்ளத்தக்கது தான்.
@ Mahalashmi said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
@பாரத்... பாரதி... said...
ReplyDeleteபடங்களின் தொகுப்பும், உங்கள் வார்த்தைகளின் செறிவும் அசத்தல்..//
ரோஜாக்கூட்டத்தின் மணமான கருத்துக்கு நன்றி.
@முனைவர்.இரா.குணசீலன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
நல்ல பதிவு. மிகவும் விரிவாக தண்ணீர் பற்றி சிந்திக்க வேண்டிய பல விடயங்களையும் எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
ReplyDelete@ மாதேவி said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
"தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம்"
ReplyDeleteஎன்ற தலைப்பைப்பார்த்ததுமே எனக்கு கண்ணீர் வருகிறது. அடுத்த உலகப்போர் என்று ஒன்று உண்டாகுமென்றால் அது தண்ணீருக்காகவே இருக்கும் என்று எங்கோ படித்தேன். அதுவே எனக்கு கவலை தருவதாக இருந்தது.
நன்றி
உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையான சிந்தனியில் உதித்த அழகான இடுகை. பல அரிய தகவல்கள் - நல்வாழ்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete@ cheena (சீனா) said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஐயா.
275+2+1=278
ReplyDelete