கேள்வி ஒரு உளி கேட்கப்படுபவனை அது செதுக்குகிறது
கேள்வி ஒரு தூரிகை கேட்கப்படுபவனை அது ஒவியமாக்குகிறது
கேள்வி ஒரு தோணி அதைச் செலுத்துபவனை அது கரைசேர்க்கிறது
கேள்வி ஒரு வேள்வி அது கேட்கப்படுபவன வேதமாக மாற்றுகிறது
கேள்வி ஒரு கடமை அது செய்பவனை கர்மவீரனாக்குகிறது
கேள்வி ஒரு தீக்குச்சி அது உரசுபவனுக்கு வெளிச்சத்தைத் தருகிறது
தன்னுள் எந்நாளும் எழும் கேள்விகளுக்கும் பதில் கண்டுகொண்டவன் யோகி
தன்னிடம் எந்நாளும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ப்வன் ஞானி
யோகியான பின் ஞானியாகிறானா அல்லது
ஞானியான பின் யோகியாகிறானா??
இதுவே இப்போதைய கேள்வி??
அறியாமையால் விளைந்த கேள்வி
அறிந்தபின் கேட்கும் கேள்வி
ஆத்திரத்தில் எழும் கேள்வி
துயரத்தில் எழும் கேள்வி
தூஷணையில் எழும் கேள்வி
பற்றினால் எழும் கேள்வி
பாசத்தில் எழும் கேள்வி
பெருமையில் பொங்கும் கேள்வி
கேள்வியில் தான் எத்தனை வகை?
கேள்விப்பட்டதில்லை??
கேள்விப்பட்ட பூக்கள்.......





















நல்ல கேள்விகளும்.
ReplyDeleteகண்ணுக்கு குளிர்ச்சியான மலர்களும்..
@அன்புடன் மலிக்கா said...//
ReplyDeleteஅன்புடன் வருகைக்கு நன்றி.
யோகியான பின் ஞானியாகிறானா அல்லது
ReplyDeleteஞானியான பின் யோகியாகிறானா??//
Good Question.
நான் இதற்கு அழகாக ஒரு பின்னூட்டம் அளித்திருந்தேன். அதை யாரோ கடத்திச்செல்ல வழி செய்து விட்டீர்கள். ஏதோ கோல்மால் நடந்துள்ளது. நான் உங்களுடன் மீண்டும் டூ
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் said//
ReplyDeleteஇவ்வளவு கேள்விகளா என்று உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைர்யம் தானே உங்ககளுக்கு? இது எப்படியிருக்கு, காட்டியுள்ள பூக்களைப்போலவே அழகோ அழகு தானே! பர்ராட்டுக்களும் வாழ்த்துக்களும் எல்லாப் பூக்களாலும் அர்சித்தவாறே, அழகிய பூக்களை அள்ளித்தந்த பூவிற்கு.
Thank you Sir.
nalla kelvikalum!
ReplyDeletemalarkalum!
254+4*+1=259 [*1 out of 4 is not appearing directly - but it is there in your reply]
ReplyDelete