Wednesday, March 30, 2011

பெயர் சூட்டும் வைபவம்.





பெயர் காரணம் தொடர் பதிவாகவே சுற்றிச் சுற்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எங்கள் இல்லத்தில் பெயர் சூட்டும் விழா வைபவமாகவே சிறப்பாக நடைபெறும்.

தாய்மாமா மடியில் வைத்து காதில் பெயர் சொல்லும் வரை பிரம்ம ரகசியமாகவே  காக்கப்படும்..!.

அனைத்து உடன்பிறந்தவர்களையும் அழைத்து குடும்பவிழா மகிழ்ச்சியாகத
தொடங்கும். சர்க்கரைப் பொங்கல் வாழை இலையில் தங்கக்காசுடன் பூஜை அறையில் கற்பூர தீப ஆராதனையுடன் படைக்கப்படும்.

தங்கக்காசில் பொங்கலைத் தொட்டு வாயில் வைத்து குழந்தைக்கு இனிப்பான உணவை அறிமுகப்படுத்துவார்.

புத்தாடை அணிந்த குழந்தையின் வலதுகாதில் மென்மையாக மூன்று முறை  சொல்லும் போது தான் அனைவரும் தெரிந்து கொள்வோம்.
தங்கக்காசில் பொங்கலைத் தொட்டு குழந்தையின் வாயில் வைத்து ,
வரிசையாக அனைவரும் குழந்தையின் இரண்டு காதிலும் மூன்று மூன்று முறை பெயர் சொல்லி மகிழ்வோம்.
குருவாயூர் கோவிலில் குழ்ந்தைகளுக்கு அன்னப்பிராசனம் நடக்கும் எழில் கோலம் கண்நிறைந்த கோலம் நிறைய முறை கண்டு களித்திருக்கிறோம்.

எங்கள் மாமனார், மாமியாருக்கு ஒன்பது குழந்தைகள். டஜன் கணக்கான பேரன் பேத்திகள்.
அவர்கள் யாரையும் பெயரைச் சுருக்கியோ, செல்லப் பேரிட்டோ அழைப்பது கிடையாது. முழுப் பெயரையும் அருமையாகச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
 மாமனாரின் கோபம் உறவினர்களிடையே வெகுபிரசித்தம்.அவர் குழந்தைகளை
அருகில் அமர்ந்து கொஞ்சுவாராம்.எடுத்து கையில் வைத்துக் கொண்டதில்லையாம்.
என் மகனை முதலில் கைகளில் வாங்கிக் கொண்டதை வியக்காதவர்கள் குறைவு.  முதல் பேரனல்லவா!..
மகன் பிறப்பது ஆனந்தம். மகனுக்கு மகன் பிறப்பது பேரானந்தம் என்று கூறினாராம்.
பேரனை எங்கும் அழைத்துச் செல்வார். தோட்டத்திற்காகட்டும், உல்லாசப் பயணத்திற்காகட்டும்.வீட்டின் ஒரு பகுதியிலேயே அலுவலகம் இருந்ததால், சாப்பிடவோ, படிக்கவோ கூப்பிட்டால் மறுத்துவிட்டு, பேரனின் புகலிடம் தாத்தாவின் மேஜைக்கடியில் தஞ்சமடைந்து விடுவார்கள்.
தாத்தாவிடம் கதை கேட்பதில் கொள்ளைப் பிரியம் அவர்களுக்கு. என்னிடம் வர மறுத்துவிடுவார்கள்.


எனக்கு எப்படி பெயர் வைத்தீர்கள் என்று தாயாரிடம் கேட்டேன்.
விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்தேனாம். ஞானானந்த கிரிமடத்தில் பூஜை செய்து வந்த அம்மாவின் பெரியப்பா விநாயக சதுர்த்தி பூஜை செய்துவிட்டு பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தாராம்.



பஞ்சாங்கம் பார்த்து, நட்சத்திரமும் ராசியும் அறிவித்துவிட்டு, அவரது இஷ்ட தெய்வமான விநாயரின் தாயார் பெயரான ராஜராஜேஸ்வரி என்று வைத்தாராம்.

திருவரங்கத்தில் சங்கு சக்கர முத்திரை வைத்து ரங்கநாயகி என்று அழைத்தார்கள்.
ஆறுமுகமாக இருந்த அப்பாவழித் தாத்தா அச்சுத ராமானுஜ தாசர் என்றும், அவரது தம்பி அருணாசலமாக இருந்தவர் அழகிய மணவாள ராமானுஜ தாசர் என்றும் தாஸ்யப் பெயர் ஏற்றார்கள்.

எங்கள் பள்ளியில் உறவினர்பெண் பெயரும் ராஜேஸ்வரி. இருவரும் முதல் இரண்டு ரேங்க் மாறி மாறி எடுப்போம். எங்கள் ஆசிரியர் ராஜேஸ்வரி என்று பெயர் வைத்தால் நன்றாகப் படிப்பார்கள் என்று தன் பெண்ணுக்கும் ராஜேஸ்வரி என்று பெயர் சூட்டியதாக வகுப்பில் கைதட்டலுக்கு நடுவே அறிவித்தார்.

கல்லூரியில் உளவியல் பாடம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நூலகத்தில் தேடித் தேடி உளவியல் பத்தகங்களாகப் படித்து நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருப்பேன்.

ஆசிரியர் கேள்விகேட்டவுடனே முன் எச்சரிக்கையாகச் சொல்லிவிடுவார் ராஜேஸ்வரியைத் தவிர வேறு யாருக்கவது பதில் தெரியுமா? என்று.
யாரும் வாயைத்திறக்க தயாராக இருக்க மாட்டார்கள்.தெரிந்தால் தானே?
கடைசியில் நான்தான் பதில் கூறும்படி இருக்கும்.

என் முதல் வகுப்பு ஆசிரியை மேரி செல்வம் அவர்கள் என் எஸ்.எஸ்.எல்.சி . புத்தகத்தை ராசியானது என வாங்கிப் படித்து தேர்வு எழுதி பாஸ் செய்தார்கள். அவர் எட்டாம் வகுப்புத் தேறி ஆசிரியை ஆனவராம்.

என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. அவரது மூன்று தம்பிகளுள் இரண்டு தம்பியரின் மனைவியர் பெயரும் ராஜேஸ்வரிதான்.
அப்போது எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பெயரும் ராஜேஸ்வரி.
எங்களை அவரவர் கணவரின் பெயருடன் சேர்த்து அடையாளப் படுத்துவார்கள்..
அனைவரும் அண்ணி என்று என்னை அழைப்பதைப் பார்த்து என் மகன்களும் சிறுவயதில் அண்ணி என்று அழைத்தர்கள்.

21 comments:

  1. ஸ்ரீசக்ரராஹ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே....என்ற பாட்டில் ராஜராஜேஸ்வரி என்று வரும் ,,, பிறகு மீண்டும் ஸ்ரீசக்ரராக சிம்மசனேஸ்வரி என்று தொடங்கும்.

    உங்கள் பெயரை முதன் முதலில் அழகிய செந்தாமரையின் படத்துடன் பார்த்ததும், என் உதடுகள் அந்தப்பாட்டைத்தான் உச்சரித்தன.

    நல்ல பொருத்தமான பெயர் தான் தங்களுக்கு. வாழ்த்துக்கள் + அன்பான ஆசிகள். அனைத்து வளங்களும் பெற்று நீடூழி நீங்கள் வாழ்க.

    ReplyDelete
  2. @வை.கோபாலகிருஷ்ணன்//
    அன்பான ஆசிகள். அனைத்து வளங்களும் பெற்று நீடூழி நீங்கள் வாழ்க.//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. //என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. அவரது மூன்று தம்பிகளுள் இரண்டு தம்பியரின் மனைவியர் பெயரும் ராஜேஸ்வரிதான்.
    அப்போது எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பெயரும் ராஜேஸ்வரி.//

    எங்கும் ராஜேஸ்வரி மயம்... சர்வம் சக்தி மயம் மாதிரி....

    வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி....

    ReplyDelete
  4. கம்பீரமான பெயர். அகிலம் காக்கும் அன்னையுடையது மட்டுமல்ல என் அன்னையுடையதும் இந்த பெயர்தான். உங்கள் பெயரை பார்க்கும்போதெல்லாம் அன்னையின் நினைவுதான் வரும்.

    ReplyDelete
  5. @ சாகம்பரி said...
    கம்பீரமான பெயர். அகிலம் காக்கும் அன்னையுடையது மட்டுமல்ல என் அன்னையுடையதும் இந்த பெயர்தான். உங்கள் பெயரை பார்க்கும்போதெல்லாம் அன்னையின் நினைவுதான் வரும்.//
    அருமையான பின்னூட்டத்திற்கு ந்ன்றி அம்மா.

    ReplyDelete
  6. // முழுப் பெயரையும் அருமையாகச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்//
    ரெம்ப நல்ல விஷயம்'ங்க அது... எல்லாரும் follow பண்ணினா நல்லா இருக்கும்... இப்பவெல்லாம் இந்த காரணத்துக்காகவே சிலர் சுருக்க முடியாத பேரை தேடி வெக்கறாங்க...

    //அவரது இஷ்ட தெய்வமான விநாயரின் தாயார் பெயரான ராஜராஜேஸ்வரி என்று வைத்தாராம்//
    வாவ்... அழகான பெயர் காரணம்... அழகான பெயரும் கூட... :)

    //எங்கள் ஆசிரியர் ராஜேஸ்வரி என்று பெயர் வைத்தால் நன்றாகப் படிப்பார்கள் என்று தன் பெண்ணுக்கும் ராஜேஸ்வரி என்று பெயர் சூட்டியதாக வகுப்பில் கைதட்டலுக்கு நடுவே அறிவித்தார்//
    ஆஹா... இது சூப்பர்...:)

    //கடைசியில் நான்தான் பதில் கூறும்படி இருக்கும்//
    சூப்பர் ஸ்டுடென்ட்... நானும் கல்லூரி நாட்களில் இப்படி இருந்ததுண்டு... அதற்கு என் அப்பா செய்த கிண்டல் "மக்கு கூட்டத்துல கொஞ்ச கம்மி மக்கு"...:))

    //என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. அவரது மூன்று தம்பிகளுள் இரண்டு தம்பியரின் மனைவியர் பெயரும் ராஜேஸ்வரிதான்//
    ஆஹா... ரெம்ப கஷ்டம் தான்....ஹா ஹா...;))

    //அனைவரும் அண்ணி என்று என்னை அழைப்பதைப் பார்த்து என் மகன்களும் சிறுவயதில் அண்ணி என்று அழைத்தர்கள்//
    இதோ போல் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. :)... இப்போ பசங்க காலேஜ் போயாச்சோ...?

    ReplyDelete
  7. @அப்பாவி தங்கமணி said...//
    Thank you.

    ReplyDelete
  8. "பெயர் சூட்டும் வைபவம்...
    எதிர்காலம் புகழ் சூடி வாழ
    பெயர் சூட்டும் வைபவம்
    எம்மினத்துக்கே உரிய
    பெருமை........

    ReplyDelete
  9. Very nice writeup dear.
    The pictures are very well.



    i felt very bad that my grandsons naming cerimany held here at USA jut for formalities, becaue the name was selected even before he born.
    viji

    ReplyDelete
  10. @ சிவரதி said...
    "பெயர் சூட்டும் வைபவம்...
    எதிர்காலம் புகழ் சூடி வாழ
    பெயர் சூட்டும் வைபவம்
    எம்மினத்துக்கே உரிய
    பெருமை........//
    well said.. Thank you.

    ReplyDelete
  11. @ viji said...
    Very nice writeup dear.
    The pictures are very well.//
    நன்றிங்க விஜி.

    ReplyDelete
  12. உங்கள் வேகமான பதிவுகளுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை தோழி.ஆனால் எல்லாமாகச் சேர்த்து வாசிக்கிறேன்.இந்தப் பதிவின் விபரங்கள் அருமை.எனக்குப் புதிது !

    ReplyDelete
  13. @ஹேமா said...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. அன்பான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. அன்பின் இராஜராஜேஸ்வரி - அருமையான பெயர் சூட்டும் வைபவத்தினை அழகாக எழுதியமை நன்று. மலரும் நினைவுகளை, அசை போட்டு , ஆனந்தித்து எழுதியமை நன்று. ஒரே வீட்டில் இத்தனை இராஜராஜேஸ்வரிகளா..... ம்ம்ம்ம் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. @
    cheena (சீனா) said...//

    இன்றும் எங்கள் இல்லத்தில் ஒரு பெயர் சூட்டு விழா இனிது நிறைவேறிய தருணத்தில் இந்த கருத்துரை மேலும் இனிமை கூட்டியது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  17. @cheena (சீனா) said...//

    நன்றி. தங்கள் அருமை கருத்திற்கு. நான்காவது மருமகள் எந்த ராஜேஸ்வரி என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க வந்தார் அருமையாக அகிலாண்டேஸ்வரி ஆக. மணமகனுக்கு சொந்த மாமாவின் மகள் தான் அவர்.

    ReplyDelete
  18. Very nice writeup
    The pictures are very well.

    ReplyDelete
  19. very nice to read.. how is that your uncle got the name RajaRajeswari ? What has Swami Gnanananda got to do with it ? N.R.Ranganathan. 9380288980

    ReplyDelete