Saturday, March 12, 2011

அழகன் முருகனின் ஆனந்த உற்சவம்

[pic24.jpg]

அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
 
[pic21.jpg]
ஆடும் மயிலேறி ஆன்ந்த நடமாடிவந்த முருகன்
IMG_8471.jpg
சிட்னி மாநகரில் வைகாசிக்குன்று என்று அழைக்கப்படும்
 Mays Hill இல் எழுந்தருளியுள்ள எம்பெருமான சிட்னி முருகனின்
 மகோற்சவம் இந்திய மற்றும் ஈழத்தவர் அயலெங்கும் 
செறிந்து வாழும் பிரதேசமாக மாறிவிட்ட இவ்வூரில் எம்பெருமான்
 முருகனுக்கே தனித்துவமான வைகாசி மாதத்தினையும்
 குறிஞ்சி நிலக்கடவுளாகச் சிறப்பிக்கப்படும் அடையாளமாகவும் 
இணைத்து ஆங்கிலத்திலேயே Mays Hill என்று வழங்கப்பட்டு
 வரும் இவ்வூரில் இந்த ஆலயம் எழுந்தருளியிருப்பது வெகு சிறப்பு.
IMG_8474.jpg
வள்ளிக்கு வாய்த்தவன்
தேவமகள் தெய்வயானை நாயகன்
திருமணகோலத்தில்.......
IMG_8436.jpg
கற்பூர ஜோதியில் கருணை பொங்கும் கந்தன்
IMG_8379.jpg
 வெகு சிறப்பாக சப்பரத்தில் முருகப்பெருமான் பவனி
 வர மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து 
சிறப்பித்தார்கள்.ஈழத்தின் புகழ்மிக்க தவில் வித்துவான்களான
 அமரர் சின்னராசாவின் மகன் சுதாகரன், மற்றும்
 தட்சணாமூர்த்தியின் மகன் உதயசங்கர்
தம் நாதஸ்வரக்குழுவினரோடு வந்து இவ்விழாக்காலத்தைச்

 சிறப்பித்தனர். இவர்களின் நாதமுழக்கத்தோடு விழா சிறப்பிக்கப்பட்டது.
.வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிகச்சிறப்பாக
 அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் வள்ளி தேவசேனா 
சமேதராக வலம் வந்தார்.
[pic22.jpg]
நாத உபாசனையில் நாதன் முருகன்..
DSC01036.jpg
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலே இன்பஒளி வீசாதோ??
DSC01032.jpg

IMG_8332.jpg
சேவல் கொடியோனுக்கு ஷோடஷோபசாரம்
நடைபெறுகிறது...
IMG_8389.jpg

18 comments:

  1. அருமை அருமை
    கோவிலையும் திருவிழாவையும்
    நேரடியாக கண்டுகளிப்பதைபோல
    மிகச் சிறப்பான புகைப்படங்கள்
    விளக்கங்கள்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உலகத்து கோயில்களை எல்லாம் கண்முன் கொண்டு வரகிரீர்கள்... நன்றி..

    ReplyDelete
  3. //பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலே இன்பஒளி வீசாதோ??//

    [மேலே உள்ள வரிகள் என் இடுகைப் படிக்க இப்போதெல்லாம் உடனே உடனே வராமலிருக்கும் உங்களுக்கும் பொருந்துமே !]

    However, என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ராஜ அலங்காரத்தில் வேலவன் - அழகுப் படங்கள் - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பாலோயர் விட்ஜெட்டை ரொம்பவும் கீழே வைத்துவிட்டீர்கள்... தேடவேண்டியதாக போய்விட்டது...

    // வலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே //

    இந்த மேட்டர் சூப்பர்...

    மற்றபடி ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இல்லாததால் இந்த இடுகைக்கு நோ பின்னூட்டம்...

    ReplyDelete
  6. மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான பதிவு.. அருமையான படங்கள்

    ReplyDelete
  8. முருகனின் ஆனந்த உற்சவத்தை கண்டேன் களித்தேன்... அருள் பெற்றேன்..

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நானூம் முருகனின் அருள் பெற்றேன்..!!!

    ReplyDelete
  10. மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @ Ramani said...//
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  12. @வேடந்தாங்கல் - கருன் said...
    உலகத்து கோயில்களை எல்லாம் கண்முன் கொண்டு வரகிரீர்கள்... நன்றி..//
    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @ வை.கோபாலகிருஷ்ணன் s//
    ரசித்தவரிகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. @ middleclassmadhavi said...
    வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  15. @ Philosophy Prabhakaran said.//
    மனம் திறந்த கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. @Mahalashmi said...//
    @ தம்பி கூர்மதியன் said...//
    வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  17. ;)
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
    கெளரி கல்யாண வைபோகமே !!

    ReplyDelete