Thursday, March 17, 2011

மாறியது வடிவம்



பீர்பால் பானைக்குள் பூசனிக்காயை வளர்த்து 
பானைக்குள் பூசணியைப் போக வைத்து 
அக்பரிடம் பாராட்டுப் பெற்றார்.
இப்போது அணு உலை, மற்றும் பஞ்சபூதங்களாலும்
பாதிக்கப்பட்ட ஜப்பான் சதுரமாகவும், முக்கோணமாகவும்
பல வடிவங்களிலும் தர்பூச்ணி விளைவித்து சாதனை
படைத்தார்கள்.

சூடான கோடைக்கு குளிர்ச்சியான தர்பூசணிPrintE-mail
[ 100 டிகிரி வெப்பத்தைத்தாண்டி கோடைக்காலம் மக்களை வாட்டி
 எடுக்கும் இந்நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய
 ஒரு குளு குளு பழம் சந்தேகமில்லாமல் தர்பூசணிதான் என்று
 சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்
 இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர்,
 இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.















அதன்படிதர்ப்பூசணியில் உள்ள 
ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் 
என்ற சத்துக்கள்உடம்பை ஆரோக்கியமாகவும்,
 சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக 
சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள்
 சில காய்கறிகளிலும்பழங்களிலும் உள்ளனதர்பூசணியில் அதுபோல் 
உள்ள `சிட்ரூலின்என்ற சத்துபொருள்ரத்த நாளங்களை விரிவடைய 

செய்துரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்தர்பூசணியை சாப்பிட்ட பிறகு,ஏற்படும் 
வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாகஎனும் வேதிப்பொருளாக
 மாற்றப்படுகிறதுஅது இதயத்துக்கும்ரத்த ஓட்டம்
 சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானதுசர்க்கரை நோய்க்காரர்களுக்கும்,
 இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம்இதில்முக்கியமானது என்னவென்றால்தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவதுவெண்மை பகுதியில்தான் 
சத்து உள்ளதாம்.



இது தெரிந்தால் நம்மவர்கள்வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும்
 சாப்பிடுவதைப் போல்,தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு
 வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம்உடலுக்குக் குளிர்ச்சியை 
தருவதோடுஇரும்புச் சத்தும் நிறைந்ததாகும்இதில் இருக்கும்
 இரும்புச் சத்தின் அளவுபசலைக் கீரைக்கு சமமானதாகும்.



பழத்தின்சிவப்பு பகுதியை மட்டும்கத்தியால் செதுக்கி எடுத்து
முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டுதுண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும்மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையானபுத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.



















விதை நீக்கப்பட்டதர்பூசணித் துண்டுகளை
மிக்ஸியில் போட்டு
ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டுகுளிர்பதனப் பெட்டியில் 
வைத்து பரிமாறலாம்விருப்பமானால்சிறிது சர்க்கரைஎலுமிச்சம் பழச்சாறு
ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
மிகவும் எளிமையானபுத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

இந்த தர்பூசணி பற்றி சுவையான தகவல் ஒன்று:

ஜப்பானில் சில்லறைக்கடைகளும்பழங்கள் விற்பனை
 செய்யும் கடைகளும் ஒரு பிரச்சினையைச் சந்தித்தன.














அவர்களது கடைகள் மிகப்பெரியதாக இல்லை.
ஆகவே கடையிலிருக்கும் சிறிய இடமும் வீணாகக்
 கூடாது எனக் கருதினர்.

தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.











வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.
ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.
இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.
எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை
 பெட்டி வடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.








அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் வைத்து வளர்ததால்
பெரிதாகும் போது பெட்டி வடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.
அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்
.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை
 அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும்
 விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.






14 comments:

  1. தர்பீஸ் பற்றிய பதிவில் பீஸ் பீஸாக நிறைய பயனுள்ள தகவல்கள்....
    தோலை மட்டும் சாப்பிடும் அபாயம் இருக்கிறது.. ;-)))
    பல வடிவத்தில் தர்பீஸ் பார்க்க அழகாக இருக்கிறது.. ஏற்கனவே சைனாவில் இருந்து தான் ஆப்பிள், பேரிக்காய் போன்றவை அபரிமிதமான அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன... இந்தக் கோடைக்கு யாராவது Laughing Buddha தர்பீஸ் வாங்கிக் கொடுத்தா நான் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்..
    நல்ல பதிவு.. நன்றி.. ;;-)

    ReplyDelete
  2. @ RVS said...//
    வருகைக்கு ந்ன்றிங்க.

    ReplyDelete
  3. அடடா வெய்யிலுக்கு ஜில்லுனு ஒரு க்ளாஸ் ஜூஸ் போட்டு இருக்கலாமே இராஜேஸ்வரி..

    இடுகை அருமை..

    ReplyDelete
  4. @ தேனம்மை லெக்ஷ்மணன் sa//
    ஜில்லுன்னு ஜூஸ்மாதிரி ஒரு பின்னூட்டம். நன்றிங்க.

    ReplyDelete
  5. What an innovative thought from Japanese? Hats off to them. God should show some mercy to them atleast for the world to enjoy their intelligence...

    Lovely Post Rajeshwari... many new infos...nice to read...:)

    ReplyDelete
  6. அப்பாவி தங்கமணி said...
    What an innovative thought from Japanese? Hats off to them. God should show some mercy to them atleast for the world to enjoy their intelligence...//
    We pray God to save them.
    Thank you for visit.

    ReplyDelete
  7. இந்த கோடையில ஜில்லுனு இருக்கு உங்க கட்டுரை!

    ReplyDelete
  8. மிகவும் பிரயோசனமான தகவல்கள் மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  9. அருமை..! How you managed to get these pics? Looks great.

    ReplyDelete
  10. தோழி,
    தாங்கள் தர்பூசணி குறித்து இட்ட இடுகை பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது

    --

    Murugappan kugan
    http://kathirkamamblogspotcom.blogspot.com

    ReplyDelete
  11. மிகவும் பிரயோசனமான தகவல்கள் நல்ல பதிவு. மிக்க நன்றி

    ReplyDelete
  12. வெயில் காலத்திற்குத் தேவையான முக்கிய பதிவு. ஆனால், தர்பூசணியின் அருமையை தெரிந்து கொள்வதற்குள் விலை ஏறிவிட்டது.

    ReplyDelete
  13. அடிக்கிற வெய்யிலுக்கு வெகு அருமையாக குளுமையாக இருக்குது இந்தப்பதிவு.

    வழக்கம்போல பல தகவல்கள். பல அழகிய படங்கள். உங்களுக்கு திருஷ்டி சுத்திப்போடச் சொல்லுங்க.

    ஆனாலும் கூட நான் இந்த தர்பூசணி சாப்பிட்டதே இல்லை. பார்த்தாலே [அதன் உள்பகுதியின் சிவப்பு நிறம்] எனக்குப்பிடிப்பதில்லை. அதனால் அதன் ருசியும் எனக்குத்தெரியாது. இங்கு எங்கு திரும்பினாலும் அது தான் விற்கப்படுகிறது.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete