Friday, March 11, 2011

தேன் மதுரத் தமிழ் ஓசை

ஆஸ்திரேலிய தமிழ்ச்சமூகத்தின் பேராதரவுடன்
இயங்கிவரும் இருபத்தி நான்கு மணி நேர சமூக
வானொலி ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டு
ஸ்தாபனம் தனது ஆண்டு நிறைவு விழாவை வெகு
சிறப்பாகக் கொண்டாடியது.
ஆண்டுதோறும் கண்ணுக்கும், செவிக்கும் கலை
நிகழ்ச்சிகளால் விருந்து படைப்பதோடு,அறுசுவை
உணவால் நாவுக்கும் சிறப்பாக விருந்தோம்புகிறது.
எழுபதிற்கும் அதிகமான நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும்,
அறிவிப்பாளர்களும், தொண்டர்களும் வானொலி
நிகழ்ச்சிகளுக்கு பேராதரவு தரும் நேயர்களுடன்
இணைந்து கோலாகலமாக ஆண்டுதோறும் சிறப்பாக
நடத்துவது வழக்கமாகும்.
இலங்கைப் போர்ச்சூழல் காரணாமாக அதற்கு முந்தய
ஆண்டு விழா நிகழ்த்தப்படாமல் துக்கம் அநுஷ்டிக்கப்
பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

[image007.jpg]

[image051.jpg]

[image057.jpg]

 Bowman Hall, Blacktown என்ற இடத்தில் மாலை 6.05 மணிக்கு
 ஆரம்பமாகி இரவு 10 மணி வரை அரங்கு நிறைந்த 
இருக்கைகளோடு சிட்னியின் மிகப்பிரமாண்டமான
 இலங்கை இந்திய மளிகைக்கடையான உதயா சூப்பர் மார்ட்
 நிறுவனர்களின் பேராதாரவோடு அரங்கு நிறைந்த
இருக்கைகளோடு இனிதே நடந்தேறியது.
[image001.jpg]

[image085.jpg]

இந்த நிகழ்வினை தமிழ் மூத்த குடிமக்களின் பிரதிநிதியாக
 திரு.நிக்கலஸ் இராஜநாயகம், மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் 
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் திரு. மகேசன்
 (வானொலி மாமா) ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து
 வைத்தார்கள். தொடர்ந்து இளையோர் சமூகத்தில் இருந்து
 தமிழ்தாய் வாழ்த்து, ஆஸ்திரேலிய தேசிய கீதம், ஆஸ்திரேலிய
 தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண் ஆகியவை பாடிச்
 சிறப்பிக்கப்பட்டன.

[image009.jpg]
தாயகத்தில் போரால் கொல்லப்பட்ட இன்னுயிர்களை
 நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியோடு
 முக்கிய நிகழ்வுகளுக்கு நகர்ந்தது. ஆஸ்திரேலிய தமிழ்
 ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும்,
 சிட்னியின் பிரபல நடன ஆசிரியையுமான திருமதி கார்த்திகா
 கணேசரின் மாணவியர் புகழ் பெற்ற திரையிசை நடனங்களை
 ஜனரஞ்சகமாக வழங்கினர். அவை சிறப்பான வழிநடத்துதலொடுக் 
கச்சிதமாகக் காண்போர் மனதைக் கவர்ந்தன.


[image104.jpg]
[image095.jpg]
வானொலியின் இயக்குனர்களில் ஒருவரான
 திரு ஈழலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
[image013.jpg]
[image039.jpg]
வானொலி நிகழ்வுகளில் முன்னோடியாக
ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
 முழுமையாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக "துளிர்"
 என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் சிறுவர்கள்
 இந்த நிகழ்விலே துளிர் பொது அறிவுப் போட்டி ஒன்றை
 நடத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள்.
இந்த நாட்டில் பிறந்து தமிழ் கற்றும் வாழும் இப்பிள்ளைகள்
 முழுமையான தமிழ் அறிவிப்போடு, பார்வையாளர்களில்
 இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறார்களை இரண்டு பிரிவாக
வைத்து, தமிழ் இலக்கியம், சினிமா, அறிவியல், புவியியல்,
 விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் கேள்விகளை
 இருபகுதிக்கும் கேட்டு நடாத்திய இந்தப் போட்டியினை
 வெகுவாக ரசித்ததோடு சரியான பதில்களை அவர்கள்
 சொல்லும் போது வயது வேறுபாடின்றிக் கைதட்டி 
ஆரவாரித்து உற்சாகப் ப்டுத்தியது பார்வையாளர் சமூகம்.
[image038.jpg]

[image037.jpg]

[image034.jpg]

[image033.jpg]
அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
 போது நேயர்கள் குழுமியிருந்த மேசைகளில் மிக்சர்,
 மென்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.
 இந்தப் பணியிலும் வானொலி அபிமானிகள் தாமாக வந்து
 இணைந்து பங்கேற்றது சிறப்பு.


[image077.jpg]


[image082.jpg]

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அபிமானிகள் இணைந்த
 சிட்னி கானஸ்வரா இசைக்குழு பழைய, புதிய பாடல்களைப்
 பாடி ஆடவும் செய்து சிறப்பித்தது. 
 பாடல் விருந்துகளுக்குக்
 ஒலிவாங்கியும் கட்டுண்டு ஒத்துழைத்தது சிறப்பு.
 இந்த இடத்தில் நிகழ்வில் முழுமையாக வழங்கப்பட்ட
 சிறப்பான ஒலித்தரத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.
[image078.jpg]
நிகழ்ச்சிகளை திரு.நவரட்ணம் ரகுராம், மற்றும்
 திரு செல்லையா பாஸ்கரன் ஆகியோர் தொகுத்து 
வழங்க அரங்க அமைப்பை திரு சிவசம்பு பிரபாகரனும்
 நெறிப்படுத்தினார்.
இந்த ஒன்று கூடலின் நிர்வாகத் தயாரிப்பாளராக
 திரு அலேசியஸ் ஜெயச்சந்திராவும் பொறுப்பேற்றதோடு
 ஒவ்வொரு பணியிலும் வானொலி அறிவுப்பாளர்களும்
 தொண்டர்களும் நியமிக்கப்பட்டுத் தம் பணியைச் செவ்வனே
 செய்தார்கள். மெல்பன் கலையகத்தில் இருந்து நிகழ்ச்சித் 
தயாரிப்பாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா
 அவர்களும் வந்து சிறப்பித்தார்.

இரவு உணவு இடைவேளைக்குப் பின் அமெரிக்கன்
 முறையிலான தரகு விற்பனை (American Auction)
 என்ற புதுமையான நிகழ்வை திரு மகேஸ்வரன் பிரபாகரன்
 நடத்தினார். அதில் வானொலிப்பெட்டி உள்ளடங்கலாக
 பெரும் விலைமதிப்புள்ள பரிசுப் பொருள்களை
 இளைஞர் குழு தன் திறமையால் வென்று அனைவரின்
கரகோஷத்தைப் பெற்றது.
[image064.jpg]

[image072.jpg]
சிட்னி கலையகம் 1, சிட்னி கலையகம் 2,
 மெல்பேர்ண் கலையகம், ரொரொண்டோ கலையகம்
 என்று அரங்கின் நான்கு மூலைகளிலும் இரவு உணவு
 பரிமாறும் பகுதிகள் அமைக்கப்பட்டு இடியப்பத்தோடு
 சைவ அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டு பாயாசத்தோடு
 சிறப்பிகப்பட்டது.
[image097.jpg]
உணவு பரிமாறும் வேளையில் அறிவுக்களஞ்சியம்
 என்ற பொது அறிவு வினாக்கொத்து வழங்கப்பட்டு
 நேயர்களின் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டது.
  மொபைல் இன்டர் நெட்டில் விடைகளைத் தேடிக் கண்டு
 பிடித்து எழுதியது சுவாரஸ்யம். தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்று 
சொன்னவர் யார் என்று கேட்ட கேள்விக்கு யாரோ
"பாரதிராஜா" என்று எழுதிவைத்தார்
தன் பொது அறிவை எப்படிப் பறைசாற்றி
இருக்கிறார் பாருங்கள்!!

[image106.jpg]

நிறைவாக ஆனால் முத்தாய்ப்பாக,
 ஈழத்தின்பாப்பிசைப் பிதா "சின்ன மாமியே"
 புகழ் நித்தி கனகரத்தினம் தன் இனிய மலரும்
 நினைவுகளொடு தனக்கே உரிய கிண்டலுமாகக்
 கலந்து கட்டி வழங்கிய பாப்பிசை விருந்து பார்வையாளர்களை
 ஆட வைத்து அலங்கரித்தது. இன்னும் வேண்டும் வேண்டும் 
என்று அரங்கமே யாசிக்க, நேரக்கட்டுப்பாடு
 கருதி சரியாகப் பத்து மணிக்கு இந்தவிழா நிறைவேறியது.

10 comments:

  1. தேன் மதுரத்தமிழ் ஓசை நிகழ்ச்சிகள் யாவும் அருமையான பட விளக்கங்களுடன் நல்லதொரு பதிவு.

    அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு விசா/பாஸ்போர்ட் இல்லாமலேயே அழைத்துச் செல்கிறீர்கள்.

    பாராட்டுக்கள், மேடம்.

    ReplyDelete
  2. தேமதுரத் தமிழோசை
    உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்

    ReplyDelete
  3. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. @ Archu said...//
    நிச்சயம் வகை செய்வோம்.

    ReplyDelete
  5. மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இவ்வளவு

    நேர்த்தியாக

    நிகழ்ச்சிகளைப்

    பகிர்ந்து கொளும் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  7. ;)
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
    கெளரி கல்யாண வைபோகமே !!

    ReplyDelete