Saturday, March 12, 2011

யுரேக்கா டவர்ஸ்



புல்வெளிப்பிரதேசமான மெல்போர்ன் நகரின் உயர்ந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்றிருந்தோம்.
ஆர்க்கிமிடிஸ் யுரேக்கா.. யுரேக்கா...என்று ஓடிவந்தது போல மெல்போர்ன் நகருக்கு தனித்துவமான அடையாளச் சின்னமாக விளங்கி கருத்தைக்கவர்ந்தது.
1zgqecx.jpg (200×573)

மெல்பர்னின்  உயரமான கட்டிடம் யுரேகா டவருக்குசசென்றோம். நுழைவுச்சீட்டு எடுத்து  அதை பார்க்கப்போனோம்.2002ல் இதன் பணிகள் ஆரம்பமாயின. 2006ல் முடிந்தது. 
·பெண்டர் கட்சாலசிடிஸ் [ Fender Katsalidis] நிறுவனத்தால் வரையப்பட்டு குரோகோன் [ Grocon] நிறுவனத்தால் கட்டப்பட்டது இது. 
அதன் பிரதான சிற்பியான நொண்டா கட்சாலிடிஸ்[ Nonda Katsalidis] ஒரு முக்கியமான கலைஞர்.
297 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் 91 அடுக்குகள் கொண்டது. 
கீழே உள்ள ஒன்பது அடுக்குகளும் கார் நிறுத்துமிடங்கள். 
மிச்சமுள்ள அடுக்குகள் எல்லாமே குடியிருப்புகள். தனித்தனி கான்கிரீட்
 துண்டுகளாக கீழே வைத்தே செய்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களில்
 தூக்கி வைத்து கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடம் இது.
அதிவேக மின்தூக்கிவழியாக மேலே ஏறிச்சென்றோம். 
அங்கே நான்குபக்கமும் பார்ப்பதற்கான கண்ணாட்சிச்சாளரங்கள்.
 வெளியே இளவெயில் பரவிய நகரம். 
அப்பால் யாரா உருகி வழியும்
வெள்ளி போல சென்று வளைந்து கிளைபிரிந்து கடலில் கலக்கும் காட்சி.
 உயரத்தில் இருந்து பார்க்கும்போது நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறோம்.
Eureka Tower Melbourne Australia
 நகரங்களை, சமவெளிகளை. அப்போது சிறிய விஷயங்களில் இருந்து மனம்
விலகிவிடுகிறது. ஒருவகையான அமைதியும் தியானநிலையும் கைகூடுகிறது.


பார்வைமேடையில் ஒரு வசதி. ஒரு கண்ணாடிப்பேழைக்குள் நாம் சென்றதும் அந்தப்பேழையை இயந்திரம் மூலம் தள்ளி கட்டிடத்தைவிட்டு வெளியே நீட்டச்செய்கிறார்கள்.
 காலடியில் அதல பாதாளத்தில் வண்டுகள்  வரிசையாகச் செல்வது போல கார்கள். அவற்றின் கண்ணாடிகள் மின்னி சென்றன

13 comments:

  1. தாங்கள் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமின்றி எங்களுக்கும் அதைக்காட்டி, சுவையான செய்திகளை எடுத்துரைக்கும் உங்களின் அன்பான, பண்பான, ஈரமான, குளுமையான, உயர்ந்த மனதிற்கு முன் இந்தக் கட்டடம் அவ்வளவு உயரமானதாகத் தெரியவில்லை எனக்கு.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. போட்டோக்கள் அருமையாக இருக்கு அதுக்கு தகுந்த வர்னனைகளுடன் :-)

    ReplyDelete
  3. அருமையான புகைப்படப் பயணம்.

    ReplyDelete
  4. @வை.கோபாலகிருஷ்ணன் said..//
    தங்களின் உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துரைகளுக்கும்
    முன்னால் அந்தக் கட்டிடம் எனக்கும் பார்த்த போது இருந்ததைவிட இப்போது
    சற்று குறைவாகத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. @ஜெய்லானி said...//
    தங்களின் கனிவான வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. @கலாநேசன் said...//
    நன்றிங்க..

    ReplyDelete
  7. சிறிய விஷயங்களில் இருந்து மனம்
    விலகிவிடுகிறது. ஒருவகையான அமைதியும் தியானநிலையும் கைகூடுகிறது.//
    Interesting.

    ReplyDelete
  8. சில படங்கள் தரவிறக்கம் ஆகவில்லை. வெறுமனே ஒன்றுமில்லாமல் தெரிகின்றது. எனக்கு மட்டும் தானா?

    படங்களை வலையேற்றுவதற்கு முன்பு சற்று கோர்த்து கவனமாக நேர்வரிசையில் ஏற்றுங்க

    ReplyDelete
  9. பிரமிப்பூட்டும். பதிவு. சிறப்புப் படங்கள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. ;)
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
    கெளரி கல்யாண வைபோகமே !!

    ReplyDelete
  11. 251+2+1=254 [என் பின்னூட்டம் + தங்கள் பதில் ;)]

    ReplyDelete