கோவை அவினாசி சாலையில் அமைந்திருக்கும் அஷ்டாம்ச வரத
ஆஞ்சநேயர் கோவில் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மிகச் சிறப்பான
வரப்பிரசாதியான அனுமன் தலமாகும்.எழிலான நந்தவனம் அழகாகப்
பராமரிக்கப்பட்டு கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
முன்புறம் அணையாத ஜோதி பிரகாசிக்கிறது. நெய் பக்தர்களால் அர்ப்பணிக்கப்படுகிறது.
ஆயிரத்தெட்டு வடைகளால் வாயு புத்திரனுக்கு சிறப்பலங்காரம்..
தமிழ் அர்ச்சனை மிகவும் சிரத்தையாக ஸ்பஷ்டமாக
இதயத்தில்எதிரொலித்து ஆத்மாவில் சென்று வேண்டுகோள் நிறைவேற்றப்பட்ட உணர்வைத்தருமாறு ஆழ்ந்த சொற்களால் அற்புதமாக செய்யப்படுவது சிலிர்ப்பூட்டும்.அனுமன் எட்டு சிறப்பம்சங்களைக் கொண்டு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயராக எழிகோலத்துடன் அருள்பாலிக்கிறார்.
முத்திரை பதிக்கும் முதல் சிறப்பாக அஞ்சேல் என்று அபயகரத்துடன் தன்னை நாடிவரும் பக்தர்களின் பயத்தைப் போக்குகிறது.
இரண்டாவது சிறப்பு இடது கையில் கதாயுதத்துடன் வணங்குபவர்களின்உள் வெளி எதிரிகளை அக்ற்றி வெற்றியை மட்டுமே தருமாறு வீரத்துடன்விளங்குகிறது.
மூன்றாவதாக மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் நோய் நொடிகளைத்தீர்க்கும் முகமாக அமைந்திருக்கிறது. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக்கிடந்தபோது சஞ்சீவிமலையைப் பெயர்த்து எடுத்து வந்து அவரைக் காத்தமலையின் ஒரு பகுதிதானே மேற்குத்தொடர்ச்சி மலை! அந்த மலையைநோக்கி அமைந்து தன்னை வணங்குபவர்களின் நோய் நொடிகளைத் தீர்க்கிறார்.
நான்காவதாக எமனின் தென்திசை நோக்கிய பாதத்தால் நாடிவரும் பக்தரின் மரண பயத்தைப் போக்குகிறார். ஆயுளைப் பெருக்குகிறார்.
- ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு : ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர். அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது. இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.
- ""ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.
- ஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
- ஏழுலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு :
- ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
- ஜீவ நேத்திரமான விழிகளே எட்டாவது சிறப்பாகும். பகலில் சூரியனாகவும் மாலை நேரத்தில் குளுமையானசந்திரனாகவும் அருள் வழங்குகிறது.
- சுய ரூப பச்சை சார்த்தி அனுமன் தரிசனம் அபூர்வமானது.
தமிழ் மாத சித்திரை -முத்திரை பதிக்கும் விஷுக்கனிஅலங்காரம்
- சாளக் கிராமம் என்னும் விஷேஷ வகைக் கற்களால் அமைக்கப் பட்ட அனுமன் விக்ரகம் சிவலிங்கத்திற்குள் இருப்பது போல் அருமையாக அமைக்கப்பட்டது.
சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களால் வழங்கப்பட்ட உற்சவர் அழகர் ராமரின் விக்ரகம் எழில் கொஞ்சும்.
உற்சவ ராமர்- தமிழர் திரு நாளாம் தைப் பொங்கலன்று இனிப்பான கரும்பால்இனிய அனுமனுக்கு அலங்காரம்.
கரும்பு தின்னக் கூலியா!!
YouTube - Videos
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல தகவல். அடுத்த முறை கோவை செல்லும் போது பார்க்க முயல்கிறேன்.
ReplyDeleteஆஞ்சனேயருக்கு அலங்காரங்கள் அழகோ அழகு! அழகை அழகுச் சித்திரங்களாக, அழகு வர்ணனையோடு கொடுத்தற்குப் பிடியுங்கள் பாராட்டுகளை!
ReplyDelete@வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete@ middleclassmadhavi said...//
varukaikkum paarattukkum Thanks.
திவ்வியமான தரிசனம்... பகிர்வுக்கு நன்றிகள்...
ReplyDeletedear thozi,
ReplyDeleteyou have invite me to worship Anuman in a ecstatic way.Thanks a lot.
tamilvirumbi
உங்கள் அஷ்டாம்ச வரத ஆஞ்ச நேயர் ஆலய விமர்சனம்
ReplyDeleteவெகு அருமை . தொடர என் வாழ்த்துக்கள் .
உங்கள் அஷ்டாம்ச வரத ஆஞ்ச நேயர் ஆலய விமர்சனம்
ReplyDeleteவெகு அருமை . தொடர என் வாழ்த்துக்கள் .
அருமையான தெய்வீக சக்தியளிக்கும் நல்லதொரு பதிவு.
ReplyDeleteதரிஸனம் கொடுத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteதங்கள் தரிசனத்திற்கு நன்றி ஐயா.
@Kavi Tendral said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க.
@ பாரத்... பாரதி... said...
ReplyDeleteரோஜாத் தோட்டத்தின் வாசமான தரிசனத்திற்கு நன்றி.
@ tamilvirumbi said...//தங்கள்
ReplyDeleteதரிசனத்திற்கு நன்றி.
அசகாய சூரனான,அஷ்டாம்ச வரத ஆஞ்சநெயரின் தரிசன்மும் படங்களும் அருமை.
ReplyDeleteஅப்பப்பா.! பதிவிடுவதற்கு முன் எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.விவரங்களை தேடிப்பிடித்து, உள்வாங்கி, கோர்வையாய் எழுதி, அழகான படங்களை இணைத்து, கனினியில் ஏற்றி எங்களிடம் சேர்ப்பிப்பதற்குள் , அதுவும் நாள் தவறாமல்....உங்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.ஹாட்ஸ் ஆஃப்ஃப், ராஜராஜேஸ்வரி அம்மா.
ReplyDeleteஅஞ்சனைதனயனின் அற்புத தரிசனம்.
ReplyDelete@ G.M Balasubramaniam said...
ReplyDelete.உங்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.ஹாட்ஸ் ஆஃப்ஃப், ராஜராஜேஸ்வரி அம்மா.//
Thank you sir.
@ Darshan said...//
ReplyDeleteThank you.
வெகு அருமை . தொடர என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteMy brothers daughter used to take me this temple and explain the alankarams when I go to my native place.
ReplyDeleteNow you made me see all the alankarams by thee photos.
Really very nice.
viji
nice pictures
ReplyDelete;)
ReplyDeleteபாஹிக் கல்யாண ராம்!
பாவன குண ராம்!!
217+2+1=220
ReplyDelete