Friday, June 1, 2012

சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்


Image and video hosting by TinyPic
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் 
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் 
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம் 
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி: 

அடர்ந்த காடுகள் நிறைந்த  தீயத்தூர் என்னும் பகுதியின் வழியாக ராமேஸ்வரம் சென்ற ஒரு முனிவர். சிவபூஜை செய்ய வேண்டிய மாலை நேரம் வந்ததால் என்ன செய்வதென்று யோசித்த போது சுயம்புலிங்கம் அவர் கவனத்தை ஈர்க்க் மனம் மகிழ்ந்து லிங்கத்தை அருகிலிருந்த மிகப் பெரிய ஏரிக்கரையில் எழுந்தருளச் செய்து, முறைப்படி பூஜைகளைச் செய்து சென்றார்.

விண் வழியாக வந்த பிரம்மாவும் அக்னி பகவானும் சூரியனும் இந்த சுயம்புலிங்கத்தின்அருள்தன்மையை அறிந்து கீழிறங்கி வந்து வழிபட்டனர். 
அக்னி என்றால் தீ; பிரம்மாவிற்கு அயன் என்றும்; சூரியனுக்கு ஊர்ந்து செல்பவன் என்றும் பெயர் உண்டு. 
இவர்கள் சிவபூஜை செய்த இடம் என்பதால் இந்த ஊருக்கு தீயத்தூர் என்ற பெயர் வந்து அதுவே நிலைத்தும் நின்றது. இந்த விவரம் லிங்கபுராணத்தில் இருக்கிறது.
Image and video hosting by TinyPic\
முப்பெரும் தேவியரில் ஒருவரான திருமகள் செல்வத்திற்கு அதிபதியாகவும், திருமாலின் துணைவியாகி அவர் மார்பில் இடம்பெறவும் விரும்பி தவ வலிமைமிக்க கார்ஜீனிய மகரிஷியிடமும், அகத்திய முனிவரிடமும் "இதற்கு என்ன வழி?' என்று கேட்டாள். 


"தீயத்தூர் ஏரிக்கரையில் எழுந்தருளி இருக்கும் சுயம்பு லிங்கத்தை, ஏரியில் மலர்ந்திருக்கும் தாமரை மலரால் அர்ச்சித்து பூஜை செய்தால், திருமாலின் துணைவியாகி அவரது மார்பில் இடம்பெறலாம். உன்னை வழிபடுவோருக்கு செல்வத்தை வாரி வழங்கும் அதீதமான ஆற்றலைப் பெறலாம்' என்றனர்.

உடனே மகாலட்சுமி தீயத்தூர் வந்து முனிவர்கள் சொன்னபடி 
ஏரியில் பூத்த ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வழிபட்டாள். 
அவள் எண்ணம் ஈடேறியது.
Image and video hosting by TinyPic
திருமகள் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்த இத்தலத்து ஈசன், அந்த நிகழ்ச்சி யின் அடிப்படை யிலேயே "ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 

காக்கும் கடவுளான திருமாலின் மார்பில் இடமும், தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கும் உயர்வையும் திருமகள் இங்கு பெற்றதால், தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரரை வழிபடுபவர்கள் செல்வந்தர்களாகும் வரம் பெறுகின்றனர்..

ஸ்ரீராமர் தம்பி லட்சுமணனுடன்  சீதையைத் தேடி  இந்த வழியாகச் சென்றபோது இவரை வழிபட்டதாக வரலாற்றில் இருக்கிறது. 


 ராமேஸ்வரம் சென்ற தவ வலிமைமிக்க மகரிஷிகள் பலரின் பாதம்பட்ட புண்ணிய பூமி இது. இப்பகுதி மக்கள் இந்த         சிவனை வழிபட்டு பல நன்மைகளைப் பெற்றதன் பலனாக மூலவருக்கு கோவில் கட்டினார்கள். 


அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளுக்கு தனி மண்டபம் கட்டி, அவளுக்கு பெரிய நாயகி என்று பெயரிட்டு எழுந்தருளச் செய்தனர். 

விநாயகர், வள்ளி- தெய்வானை சமேதரான முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனி   சந்நிதிகளை அமைத்துள்ளனர்.


ஆங்கீரச முனிவர் உள்ளிட்ட பல தவ முனிவர்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றும்; அவர்கள் அனைவரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சூட்சும உடலுடன் இங்கு வந்து வழிபடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் அந்த  நாளில் இங்கு வந்து ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரரை வணங்கினால் இறைவனின் அருளும் மகரிஷிகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும். வழிபடும் பக்தர்கள் அனைவருமே எல்லா செல்வங்களும் பெற்று உன்னத நிலைக்கு வருவார்கள் என்பது நம்பிக்கை..

உலகிலுள்ள அனைத்து வகையான ஹோமங்களுக்கும் அதிபதியாக 
விளங்குபவர் ஆங்கீரச மகரிஷி. 

இவர் முதன்முதலாக சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று ஒளிகளைக் கொண்டு பிரம்மாண்டமான ஹோமம் ஒன்றை இந்த தீயத்தூர் திருத்தலத்தின்தான் நடத்தினாராம். 


உலகில் முதன்முதலாக சாம்பிராணி  போட்டு புகை எழுப்பி சிவனை வழிபடும் முறை உண்டான ஆலயமும் இதுதான் என்கின்றனர்.

விநாயகரின் திருமணத்திற்கு விநாயகரே நேரில் வந்து சிவனை தரிசித்து ஹோமத்திற்காக அக்னியைப் பெற்றத் தலம்; 
சூரிய பகவானின் மனைவி சாயா தேவி தவம் புரிந்த தலம்; 
ஸ்ரீ பிரம்மா தம் ருத்ர ஹோமத்திற்காக 
பிரம்மாக்னியை இத்தலத்திலிருந்து எப்போதும் பெறுகிறார்; 
ஸ்ரீ ராமபிரான் நேரில் தரிசித்தத் தலம்; 
திருமகளும், அம்பிகையும் மானிட வடிவில் நடந்து வந்து சிவனைத் தரிசித்தத் தலம்; 
அக்னி பகவான் பலத்த சாபத்தால் தாம் இழந்த சக்தியைத் திரும்பப் பெற்றத் தலம்; 
சூரிய பகவான் இன்றும் தன் ஒளியைத் தீயத்தூர் எல்லையில் மட்டும் வெப்பம் குறைவாக வீசுகிறார்; 
சித்தர்களும், மகரிஷிகளும் இத்தலத்தில் பர்ணசாலை அமைத்து ஆயிரத்தெட்டு ஹோம குண்டங்களை இரவு பகலாக வளர்த்த இடம்; 

கர்ஜீனிய முனிவர் பிரபஞ்சத்திலே சுயம்புக்கெல்லாம் மூத்த மிகப் பழமையான தீயத்தூர் சிவலிங்கத்தை மஹாலக்ஷ்மி ஆயிரத்தெட்டு அக்னிதாமரை மலர்களால் பூஜை செய்வதை நேரில் பார்த்து அதிசயித்தார்
கமலாலய அக்னி தீர்த்தத்தில் அக்னிதாமரை பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு அக்னிதாமரை பூத்தத் தலம்; 

கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு; 

ஸ்ரீராமர் பித்ரு ஹோமம் வளர்க்க அரனைக் கட்டையில் அக்னியைப் பெற்றத் தலம்; 

சீதை அக்னி பிரவேசம் செய்தபின் அவள் திருமேனியைக் காக்கும் ராமநாமாக்னி வளையத்தைச் சுற்றி உஷ்ணம் வந்ததற்காக மன்னிபுக்கோரி பிராயசித்தம் பெற்றத் தலம்; 

சர்வேஸ்வரன் தீயத்தூர் புனித பூமியில் தான் சிருஷ்டிக்கும் முன் ஏகாந்த சீருஷ பத யோகம் பூண்டார்; 

அங்கபிரதட்சணம் - அண்ணாமலை, தேனிமலை, நெடுங்குடி, திருக்கோலக்குடி, தீயத்தூர் ஆகிய தலங்களில் செய்வது தீவினைகளின் கொடுமைகளை இப்பிறவியிலேயே தனிக்கும் இத்தகைய சிறப்பு பெற்றது இத்திருத்தலம். 
[Gal1]
தீராத பகை, பண நெருக்கடி, மனவேதனைக்கு ஆளானவர்கள், மூன்று மணி நேரம் சாம்பிராணி புகையிட்டு இந்த சிவனை வழிபட்டால் அனைத்து துயரங் களும் விலகும். 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு செல்வத்தை இழந்தவர்கள், தங்கள் கைகளால் சந்தனம் அரைத்து இவருக்குப் பூசி வழிபட்டால் இழந்த செல்வம் அனைத்தையும் பெறுவர்.
Lord-Lakshmi-Devi-WallpapersLord-Lakshmi-Devi-Wallpapers
திருமணத் தடை உள்ளவர்கள்,  பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், பெற்ற குழந்தையை இழந்து தீராத துயரில் ஆழ்ந்த வர்கள் இங்கு வந்தால் 
மன அமைதி  பெறுவர்.

  • அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் ஆவுடையார் கோவில் அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து அருள் பொழிகிறது.
[Image1]



27 comments:

  1. சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்
    பற்றிய அழகானதொரு பதிவை வெள்ளிக்கிழமையான இன்று படிக்க நேர்ந்துள்ளது எங்கள் பாக்யம்.
    -oOo-

    ReplyDelete
  2. வரிசையாக 22 லக்ஷ்மி அம்பாள்களைக் காணச்செய்துள்ளது மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
    -oOo-

    ReplyDelete
  3. கீழிருந்து ஆறவது படமான BRIGHT கஜலக்ஷ்மி அனைத்து ஸாமுத்ரிகா லக்ஷணங்களும் அமைந்த எனக்கு மிகவும் பிடித்தமான படம். ;)))))

    நம் TRADE MARK ஹனுமன் போல, இதுவும் எப்போதுமே நீங்கள் காட்டும்போதெல்லாம், என்னை மிகவும் மகிழ்வித்து என் மனதை மயக்குகிறது. ;)))))

    -oOo-

    ReplyDelete
  4. அக்னியும் சூர்யனும் பூஜித்த இடமாகையால் அது தீயத்தூர் எனப்படுகிறது என்ற லி ங் க புராணத்தகவல் கொடுத்துள்ளது அருமை.

    -oOo-

    ReplyDelete
  5. மகாலட்சுமி தீயத்தூர் வந்து முனிவர்கள் சொன்னபடி ஏரியில் பூத்த ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வழிபட்டாள்.

    அவள் எண்ணப்படி திருமாலின் துணைவியாகி அவர் மார்பில் இடம்பெற்றாள்.

    ஆ யி ர ம்
    ம ல ரே
    வா .........

    ஓ ர்
    ஆ யி ர ம்
    ம ல ரே
    வா .......

    ஆஹா! அழகான அருமையான தகவல்.

    கடைசியில் “வக்ஷஸ்தலத்தையே” பிடித்து குடிகொண்டு விட்டாளே!

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளதே!

    -oOo-

    ReplyDelete
  6. திருமகள் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்த இத்தலத்து ஈசன், அந்த நிகழ்ச்சி யின் அடிப்படை யிலேயே "ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

    காக்கும் கடவுளான திருமாலின் மார்பில் இடமும், தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கும் உயர்வையும் திருமகள் இங்கு பெற்றதால், தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரரை வழிபடுபவர்கள்

    செ ல் வ ந் த ர் க ளா கு ம்
    வ ர ம் பெறுகின்றனர்..

    அச்சா! பஹூத் அச்சா!!

    இது தானா அந்த ரகசியமான விஷயம்?


    நீங்கள் கட்டாயம் போய் வழிபட்டு வந்திருப்பீர்கள் என்று நன்றாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. ;))))).

    -oOo-

    ReplyDelete
  7. அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளுக்கு தனி மண்டபம் கட்டி, அவளுக்கு பெரிய நாயகி என்று பெயரிட்டு எழுந்தருளச் செய்தனர்.

    பெ ரி ய நா ய கி !

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஸ்தலமா?


    எங்கேயே பார்த்த ஞாபகம் ............

    எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))

    இதைச் சொல்லுவதோ எங்களின் பெரிய நாயகி அல்லவோ! ;)))))

    ReplyDelete
  8. ஸ்தல மஹிமைகளை வரிசையாகக் கூறியுள்ளது, படிக்கவும் கேட்கவும் மிகவும் சுவையாக உள்ளது.

    கர்ஜீனிய முனிவர் மிகவும் கொடுத்து வைத்தவர் தான் போலிருக்கு.

    பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகாரம் தரும் ஸ்தலம் என்ற்ல்லாவா ஒரு மிகப்பெரிய பட்டியலே கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)))))


    தொடரும்....

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்
    பற்றிய அழகானதொரு பதிவை வெள்ளிக்கிழமையான இன்று படிக்க நேர்ந்துள்ளது எங்கள் பாக்யம்.

    கருத்துரைகளால பதிவை அழகுபடுத்தும் பாக்கியம் பெற்றதறகு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  10. கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு;

    அதுபோலவே கணவன்மார்கள் வழிபட்டால், மனைவியின் பரிபூரண அன்பு கிட்டிடும் தானே ? ;)))))))))))

    -oOo-

    ReplyDelete
  11. அழகிய தாமரைகளுடன் ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள

    தாமரை நெஞ்சத்திற்கும், அவரின் சிரத்தையான ஈடுபாட்டுடன் கூடிய,
    கடுமையான உழைப்புக்கும்,

    என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்,
    நன்றியோ நன்றிகள். !!

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  12. அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளுக்கு தனி மண்டபம் கட்டி, அவளுக்கு பெரிய நாயகி என்று பெயரிட்டு எழுந்தருளச் செய்தனர்.

    பெ ரி ய நா ய கி !

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஸ்தலமா?


    எங்கேயே பார்த்த ஞாபகம் ............

    எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))//

    தமிழ்மண நட்சத்திரமாக தாங்கள் வெளியிட்ட உத்திரட்டாதி
    நட்சத்திரக்காரர்களுக்கான ஆலயம் !

    ReplyDelete
  13. //
    எங்கேயே பார்த்த ஞாபகம் ............

    எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))

    இதைச் சொல்லுவதோ எங்களின் பெரிய நாயகி அல்லவோ! ;)))))

    //

    எங்கேயோ பார்த்த ஞாபகம்....
    எங்கேயோ கேட்ட ஞாபகம் ;)))))

    என்று இருக்க வேண்டும்.

    Sorry for the typing error. vgk

    ReplyDelete
  14. கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு;

    அதுபோலவே கணவர்மார்கள் வழிபட்டால், மனைவியின் பரிபூரண அன்பு கிட்டிடும் தானே ? ;)))))))))))

    ReplyDelete
  15. அழகிய தாமரைகளுடன்,
    ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள தாமரை நெஞ்சத்திற்கும்,
    அவர்தம் கடுமையான உழைப்புக்கும், என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்,
    நன்றியோ நன்றிகள். !!

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  16. அழகிய தாமரைகளுடன்
    ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள தாமரை நெஞ்சத்திற்கும்,
    அவர்களின் கடுமையான உழைப்புக்கும், என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்,
    நன்றியோ நன்றிகள். !!

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  17. இந்திரா has left a new comment on your post "சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்":

    இதுவரை கேள்விபடாத ஸ்தலம் இவ்வளவு தகவல்யாரும்பொறுமையாக எங்களுக்குகூற மாட்டார்கள் தங்களுக்குஅருள்பேராறற்றல் உடல்நலம் நீளஆயுள் நிறைசெல்வம் அனைத்தும் தந்தருளட்டும் என வேண்டுகிறேன் மிகவும் நன்றி அம்மா //

    அருமையான கருத்துரைக்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  18. VijiParthiban has left a new comment on your post "சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்":

    அக்கா மிகவும் அற்புதமாக தீயத்தூர் பற்றி கூறினீர்கள். நான் படிக்கும் பொழுதே உருகிபோனேன் . இன்னும் அந்த புண்ணிய பூமிக்கு சென்றால் எப்படி இருக்கும் . ச்சே.... நினைத்தாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அக்கா....
    அம்பாளின் படங்கள் அனைத்தும் அருமை... /

    மகிழ்ச்சியான நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  19. அருமையான படங்களுடன் தெய்வீக பதிவு...இரண்டாவது படம் எங்குள்ளது சகோதரி...?

    ReplyDelete
  20. இரண்டாவது படத்தில் காட்டப்பட்டுள்ள தனலக்ஷ்மியும் மிகச்சிறப்பாகவே உள்ளது.

    வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் .......

    ஸ்லோகம் கொடுத்துள்ளது அழகு!

    மூன்றாவது படத்தில் காட்டப்பட்டுள்ள தீயத்தூரின் அடர்ந்த காட்டுப்பகுதியும்
    நீர் நிரம்பியக்குளமும் அழகான கலர்கலரான பசுமை மிகுந்த இயற்கைக்காட்சிகளே! ;)))))

    எல்லாமே அழகோ அழகாகத் தருகிறீகளா! எதைப்பற்றிப் பாராட்டிச்சொல்வது எதை விடுவது என எனக்கு அடிக்கடி ஒரே குழப்பமாகி விடுகிறது.

    தொடரட்டும் தங்களின் இத்தகைய ஆன்மிக/சமுதாய எழுத்துப்பணிகள்.

    அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. I never heard about this place. Aha nice post.
    It is very pleasure to get the grace of all ambals.
    What a lucky day today.
    Thanks for posting this post Rajeswari.
    viji

    ReplyDelete
  22. தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராமேஸ்வரம் அருகிலா இருக்கிறது?

    ReplyDelete
  23. தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராமேஸ்வரம் அருகிலா இருக்கிறது?

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகில் இருக்கிறது தீயத்தூர் !

    ReplyDelete
  24. தீயத்தூர். தீமையைச் சுட்டெரிக்கும் ஊர்.
    கேள்விப்பட்டதே இல்லையே அம்மா. என்ன அழகான படங்கள் அத்தனை அருளையும் இந்தப் பதிவிலேயே வழங்கிவிடுவாள் அம்மா. மிக நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  25. ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் திருத்தலம் அழகிய சிறிய கோயில். படங்களுடன் விரிவான தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. 3246+15+1=3262 ;)))))

    பின்னூட்டங்களை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. தங்களின் இரண்டு பதில்களுக்கு நன்றி,

    ReplyDelete