

ஜுன் மாதம் 14 ந் தேதி ஒவ்வொரு ஆண்டும்
உலக ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது.
தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில் இந்தியாவில்
தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தானாக முன்வந்து தானங்களிலேயே சிறந்த ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஜூன் 14ம் தேதி, உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் ஹீரோ என்பது
இந்த ஆண்டு ரத்த தானத் தினத்தின் மையக்கருத்து.
இந்த ஆண்டு ரத்த தானத் தினத்தின் மையக்கருத்து.

ரத்ததானம் செய்வது என்பது மிகமிக உன்னதமான உயிர்காக்கும் சேவை.
ரத்தம் கொடுப்பதனால் நமக்கு இழப்புகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏராளமான தருணங்களில் ரத்தத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது.

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது

ஓ நெகடிவ் போன்ற அரிய குரூப் ரத்தம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.அது போன்ற குரூப் ரத்தம் உள்ளவர்கள் தாங்களே முன் வந்து ரத்த தானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

ரத்த வகைகளை கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற கார்ல் லான்ஸ்டீனரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம் உலக ரத்த தானம் செய்வோர் தினமாக, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் நாள் கொண்டாடப்படுகிறது.

மக்களிடையே ரத்ததானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்ததானம் அளிப்பவர்களை பெருமைப்படுத்தும் நோக்கிலும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.



தானத்தில் சிறந்ததென ஆயிரம் தானத்தை சொல்வோம்.
அன்னதானம் பசிபோக்கும்.
கல்விதானம் வறுமை போக்கும்.
உறுப்புதானமும், ரத்ததானமும் பிறரை வாழவைக்கும்.

உயிர் காக்கும் அருமருந்தாம் ரத்தத்தை, அட்சய பாத்திரமாய் அள்ளி அள்ளி வழங்கும் ரத்த கொடையாளர்களால் தான், இந்த உலகம் மனிதாபிமானத்தோடு இயங்குகிறது.

இன்று, தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தினம். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை விட, செங்குருதியை அள்ளி வழங்கும் வள்ளல்கள் தான் உன்னதமானவர்கள், உயர்ந்தவர்கள்.
உயிர்காப்பதே உயரிய நோக்கமாய் தொடர்ந்து ரத்ததானம் செய்தவர்கள் என்றும் போற்றத்தகவர்கள் !











ரத்த தானம் பற்றிய அருமையான பதிவு, தமிழகம் இராண்டாம் இடம் என்ற கூடுத தகவல் புதுமை.
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்
நல்ல பதிவு சகோ.!
ReplyDeleteதானத்தில் சிறந்தவற்றில் ஒன்று ரத்ததானம்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDelete[இதுவரை மூன்று முறை ரத்ததானம் செய்து, விபத்தினால் மிகவும் அபாய நிலையில் இருந்தவர்களை காக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றேன்.]
மிகவும் நல்ல பகிர்வு இரத்ததானம் பற்றியது அக்கா .
ReplyDeleteஅருமையான பகிர்வு....
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDelete'மனிதத்துவம்' கொண்ட மனிதர் ஐயா தாங்கள்.!
Wow!!!!!!!!!!
ReplyDeleteToday only I came to know that a day for blood donation.
Its really really great.
Thanks for the post.
viji
அருமையான பயனுள்ள பகிர்வு..
ReplyDeleteகுருதி தான செய்வோம்..
ReplyDeleteசிலர் குடிதனைக் காத்திடுவோம்..
சிறப்பான பதிவு சகோதரி ! ரொம்ப நன்றிங்க !
ReplyDelete3416+1+1=3418
ReplyDelete