"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'
"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று அற்புத மான ஸ்ரீராகத்தில் , மத்யமாவதி ராகத்திலும் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.
செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்று
அழைத்த பெரிய தனவந்தரிடம் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, உபநயனம்
செய்ய வேண்டும். பூணூல் போட ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான்.
உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.
கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து
அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். "
"பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன்.
ஏதாவது பொருள் கொண்டு வந்து தன் கடையில் அடமானம் தந்தால்...
நல்ல காசு தருவதாக சொன்னார் தனவந்தர்..
வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஊஞ்சலில் வந்து உட்கார்ந்த தனவந்தரின்மனைவி சரஸ்வதி தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள் "பவதி... பிக்ஷாம் தேஹி...'என்று உபகாரம் கேட்டவருக்கு சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் ..
அவளை மனதார வாழ்த்தி விட்டு, அடகுக் கடையில் மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடுக்கச்சொன்னார்..
கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் தனவந்தர்...
நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்று சொல்லிவிட்டு தன்
கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.
கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.
மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.
""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''
சரஸ்வதி வெலவெலத்துப் போனாள்.ஒரு பாத்திரத்தில்
விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை
வலம் வந்து விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-
விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது.
விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை
வலம் வந்து விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-
விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது.
சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்
மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக்குச் சென்றார்.
கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். அங்கே அது இல்லை.
கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. ..!
கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். அங்கே அது இல்லை.
கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. ..!
அடுத்தநாள் கடைக்கு வந்த பிராமணரிடம் மாலை வந்து பணம் வாங்கிக்கொள்ளச்சொல்லி..
பிராமணர் எங்கே செல்கிறார் என்று கவனித்தார்..
அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்...
பின்னர்மறைந்து விட்டார்...''
பிராமணர் எங்கே செல்கிறார் என்று கவனித்தார்..
அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்...
பின்னர்மறைந்து விட்டார்...''
திடுக்கிட்டார். கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.
கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.
அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.
"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'
தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். . தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.
அவர் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி
அவருக்கு குரு உபதேசம் செய்தார்.
அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.
"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'
தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். . தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.
அவர் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி
அவருக்கு குரு உபதேசம் செய்தார்.
புரந்தரதாசர். சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.
நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையேசொல்லிக்கொடுத்தார்.
ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.
மாயாமாளவகெளளை என்னும் இராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் புரந்தரதாசர் ..
காலஞ்சென்ற திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் தமிழ் நாட்டில் புரந்தரதாசரின் பதங்களைப் பாடி பக்தியை ஊட்டினார்.
எம்.எஸ்.ஸின் "ஜகதோ தாரணா'வும் கேட்க கேட்க பக்தியை நம் மனத் தில் விதைப்பவை.
இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும்
(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது;
தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை
என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே
தாசரைப் பற்றிய பதிவும் படங்களும் அருமை.
ReplyDeleteஉள்ளம் கொள்ளைகொள்ளும் அற்புதமான படங்களுடன் நல்ல தகவலை தந்த சகோவிற்கு வாழ்த்துக்கள்.!
ReplyDeleteஅழகிய அற்புதப் பதிவு!
ReplyDeleteநல்ல பகிர்வும் படங்களும்.... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபாக்யாத லக்ஷ்மி பாரம்மா! அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்ததும் கூட.
ReplyDeleteகோவிலுக்குச் சென்று அருமையான கதா காலக்ஷேபம் கேடதுபோன்ற ஒரு மனநிறைவு. அருமையான பதிவு.
விட்டல விட்டல பாண்டுரங்கா
Mira’s Talent Gallery
:-) மீரா
புரந்தரதாசரின் கதை இதுவரை அறிந்ததில்லை..படித்ததில் மனம் பக்தி பரவசமாகிறது.வெள்ளிக்கிழ்மைக்கு பொருத்தமான பதிவு.
ReplyDeleteபகவானை ஸ்மரிக்க விரதம் எல்லாம் இருக்கவேண்டாம் "ஷட்ரஸ திவ்யான்னுமு திண்டிபோத்து கிருஷ்ணா எனபாரதே" வழிபாட்டை எளிமைபடுத்திய மஹான்
ReplyDelete"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா-
ReplyDeleteநம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'
ஆஹா, இது காதினில் தேன் சிந்திடும் எவ்வளவு அழகானதோர் பாட்டு !
”சௌபாக்யாத லக்ஷ்மி”
வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.
மிகப்பெரிய வைர வியாபாரியாக இருந்து செல்வச் செருக்கினால், பாண்டுரங்கனை மறந்து,
ReplyDeleteதன் கடைக்கு பகவானே ஏழைப் பிராமணனாக வந்து, வைர மூக்குத்தி மூலம் நாடகம் ஆடியதும் தெரியாமல்
இருந்த ”புரந்தரதாஸரின்” இந்தக்கதையை ஸ்ரீமதி விசாஹாஹரி அவர்களின் கண்வர் ஹரிஜீ அவர்கள் மிகவும் நகைச்சுவையாகச் சொல்லி நான் பலமுறைகள் கேட்டுள்ளேன்,
அந்த மூக்குத்தியை உற்று நோக்கும் அவருக்கு க்ஷீராப்தியில் பகவான் பள்ளி கொண்டிருப்பது தெரியவரும்.
பகவான் புரந்தரதாஸரைத் தடுத்தாட்கொள்வார்.
எனக்கு மிகவும் பிடித்தமான வெகு சுவாரஸ்யமான கதை இது. சுமார் நூறு முறைகளுக்கு மேல் தினமும் இரவு கேட்டுள்ளேன்.
ஆசேது ஹிமாசலம் வரை இவர் போகாத பெருமாள் கோயில்கள் இல்லை.
எல்லாக் கோயில்களிலும் சேர்த்து சுமார் 5 லட்சம் கிருதிகள் பாடியுள்ளதாகக் கேள்வி.
நேரில் குடும்பத்துடன் பண்டரீபுரம் போய் ஸ்ரீ பண்டுரங்கனை தரிஸிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.
ReplyDeleteஇங்குள்ள கோவிந்தபுரமும் போய் வந்துள்ளேன்.
இடுப்பினில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு செங்கல் மேல் நிற்கும் ஸ்ரீ பாண்டு ரங்கனைக் காட்டியுள்ளது அருமை. [2 வது படம்]
அதன் தாத்பர்யம்:
சம்சார சாஹரத்தில் மூழ்கும் நிலையில் தத்தளிக்கும் மக்கள் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிஸிக்க வந்தால் போதும்.
அவர்கள் கஷ்டமெல்லாம், இடுப்பளவு ஜலம் போலவே ஆக்கப்படும்.
[ஆழம் அதிகம் இல்லாத நதியில் இடுப்பளவு ஜலம் மட்டுமிருந்தால் எவ்வளவு ஆனந்தமாகக் நாம் குளிக்க முடியும்? - அதுபோலவே தான் இதுவும்]
துளசிபூஜை செய்து கொண்டிருக்கும் போது, வைர மூக்குத்தியை அந்த ஏழை பிராமணனுக்கு தானம் செய்தவள் பெயர் [அதாவது வைர வியாபாரியாக இருந்து பிறகு புரந்தரதாஸராக பகவானால் தடுத்தாட் கொள்ளப்பட்டவரின் மனைவி பெயர்] லக்ஷ்மிபாய் என்று நினைக்கிறேன். தாங்கள் சரஸ்வதி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியோ!
ReplyDelete//ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற
ReplyDelete"ஸ, ரி, க, ம, ப, த, நீ..'
என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.//
வாழ்க! மிக நல்ல தகவல் இது.
//பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
ReplyDeleteஉத்தியுடன்
(ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே//
நிச்சயமாக நினைவில் நிறுத்துக்கொள்ள வேண்டியதொரு மஹான் தான்.
ஏழையொருவன் தன் இல்லாமையால் கடவுளை வனங்குவதோ வேண்டிக்கொள்வதோ, பக்தி செலுத்துவதோ அதிசயம் இல்லை.
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்த ஓர் வைர வியாபாரி, அத்தனைச் சொத்துக்களையும் துச்சமாக நினைத்து, உற்றத்தார் சுற்றத்தார் தடுத்தும் கேட்காமல், நீங்கள் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் இதற்கும் இனி சம்பந்தமே இல்லை, எனச்சொல்லி தன் ஒரே குழந்தை + மனைவி லக்ஷ்மிபாயுடன் ஸ்ரீ பாண்டுரங்கனுக்குச் சேவை செய்யச் சென்று விட்டார் என்றால் சும்மாவா!
பகவான் அவரைத் தடுத்தாட்கொண்டு விட்டார் என்பதும் அவரின் குருவாகிய வியாசராஜருக்கும் நன்றாகவே தெரியும்.
//நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையேசொல்லிக்கொடுத்தார். //
ReplyDeleteஆம், இதையும் ஹரிஜீ மூலம் கேட்டுள்ளேன்.
பக்த துக்காராம் க்தை
கோபண்ணா என்று அழைக்கப்பட்ட
பக்த இராமதாஸர் [தாசீல்தாரராக பணியாற்றும்போது, தன்னை மறந்து ஸ்ரீராம பக்தியால், அரசாங்க வரிப்பணம் முழுவதையும் போட்டு வெகு அழகாக ராமருக்கு பத்ராசலத்தில் கோயில் கட்டி பிறகு அதற்காக சுல்தானால் சிறையில் அடைக்கப்பட்டு, எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவித்து, கடைசியில் ஸ்ரீ ராமலக்ஷ்மணர்களாலேயே, மஹாலக்ஷ்மியான அம்பாள் ஸீதாதேவியின் அருளால், கலகலவென ஜொலிக்கும் தங்க ரேக்கு நாணயங்களாக மூட்டையாக்க் கொடுக்கப்பட்டு, அதை தலையாரி போல ஸ்ரீராமலக்ஷ்மணர்களே சுமந்து போய் சுல்தானிடம் கொடுத்து, அதைப் பார்த்த சுல்தான் பித்துப்பிடித்தவன் போல ஆகி, ஸ்ரீ இராமதாஸரை சிறையிலிருந்து விடுவிக்கிறான் என்ற கதையையும் ஸ்ரீ ஹரிஜி அவர்கள் சொல்லிக் கேட்கணும்.
நம் கண்களில் அப்படியே தாரைதாரையாகக் கண்ணீர் வரும்.
அந்த ஸ்ரீ இராமதாஸரை சுல்தான் சிறையில் அடைத்திருந்த கோட்டை இன்னும் ஹைதராபாத்தில் நினைவுச்சின்னமாக உள்ளது.
நான் அங்கு சமீபத்தில் சென்று போய் பார்த்து வந்தேன்.
ஸ்ரீ இராமலக்ஷ்மணர் பிரத்யக்ஷமாக தலையாரிபோல வேடமிட்டு வந்து சுல்தானிடம் பணத்தைக் கொடுத்து விட்டு ஸ்ரீ இராமதாஸரை சிறையிலிருண்டு விடுவித்தவுடன் மறைந்து போன இடம்.
பிறகு அந்த சுல்தானே இராம பக்தனாகி, இராமதாஸரின் பக்தனாகி, பத்ராசலம் ஸ்ரீ இராமர் கோயிலுக்கு நிறைய பொருளுதவி செய்திருக்க்கிறார் என அந்தகதையை மிக உருக்கமாகச் சொல்லுவார் ஹரிஜீ.
நல்லதொரு மிக் அருமையான பதிவு.
ReplyDeleteபா ரா ட் டு க் க ள்
வா ழ் த் து க ள்
ந ன் றி க ள்
பிரியமுள்ள
vgk
[ நேற்று பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை Out of Headquarters அதனால் தாமதமாக வர நேர்ந்து விட்டது. ;( ]
புரந்தரதாசரின் கதையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.இன்று முதன்முதலில் உங்கள் வலைப்திவுக்கு வந்தது கோவிலுக்குள் நுழைந்தது போல் இருந்தது. நன்றி.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநல்லதொரு மிக் அருமையான பதிவு.
பா ரா ட் டு க் க ள்
வா ழ் த் து க ள்
ந ன் றி க ள்
பிரியமுள்ள
vgk
மிக சுவாரஸ்யமான மேலதிக தகவல்கள் தந்து பதிவை வளப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதுளசிபூஜை செய்து கொண்டிருக்கும் போது, வைர மூக்குத்தியை அந்த ஏழை பிராமணனுக்கு தானம் செய்தவள் பெயர் [அதாவது வைர வியாபாரியாக இருந்து பிறகு புரந்தரதாஸராக பகவானால் தடுத்தாட் கொள்ளப்பட்டவரின் மனைவி பெயர்] லக்ஷ்மிபாய் என்று நினைக்கிறேன். தாங்கள் சரஸ்வதி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியோ!/
தாங்கள் நினைத்த லக்ஷ்மிபாய் மிகச்சரியாகப் பொருந்துகிறது..
நவகோடி நாராயணனுக்கு சரஸ்வதிதேவியை விட லக்ஷ்மிபாய் சரியான ஜோடி !
புரந்திரதாசருக்கு சரஸ்வதி அருள் !
prurandara dasarin wife name is saraswathi bai
Deletepurandaradsa's wife name is saraswathi bai its correct
Deleteதி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteபகவானை ஸ்மரிக்க விரதம் எல்லாம் இருக்கவேண்டாம் "ஷட்ரஸ திவ்யான்னுமு திண்டிபோத்து கிருஷ்ணா எனபாரதே" வழிபாட்டை எளிமைபடுத்திய மஹான்
அருமையான கருத்துரை வழங்கி பதிவைப் பெருமைப்படுத்தியதற்கு இனிய நன்றிகள் ஐயா..
சமுத்ரா said...
ReplyDeleteதாசரைப் பற்றிய பதிவும் படங்களும் அருமை.
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஉள்ளம் கொள்ளைகொள்ளும் அற்புதமான படங்களுடன் நல்ல தகவலை தந்த சகோவிற்கு வாழ்த்துக்கள்.!/
அற்புதமான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றிகள்...
Atchaya said...
ReplyDeleteஅழகிய அற்புதப் பதிவு !
அழகிய அற்புத கருத்துரைக்கு இனிய நன்றிகள்...............
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல பகிர்வும் படங்களும்.... பகிர்வுக்கு நன்றி./
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Mira said...
ReplyDeleteபாக்யாத லக்ஷ்மி பாரம்மா! அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்ததும் கூட.
கோவிலுக்குச் சென்று அருமையான கதா காலக்ஷேபம் கேடதுபோன்ற ஒரு மனநிறைவு. அருமையான பதிவு.
விட்டல விட்டல பாண்டுரங்கா
நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
தா ராணி said...
ReplyDeleteபுரந்தரதாசரின் கதை இதுவரை அறிந்ததில்லை..படித்ததில் மனம் பக்தி பரவசமாகிறது.வெள்ளிக்கிழ்மைக்கு பொருத்தமான பதிவு.
பொருத்தமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Aha ha..
ReplyDeleteAha.....
Enna jadai kunjala alankaram....
Aha por patham...
Kutty, en chella kutty.....
Jal Jal enndru pattukku adum en kutty kanna.....
Really really very happy Rajeswari. Thanks Thanks a lot dear.
viji
viji said...
ReplyDeleteAha ha..
Aha.....
Enna jadai kunjala alankaram....
Aha por patham...
Kutty, en chella kutty.....
Jal Jal enndru pattukku adum en kutty kanna.....
Really really very happy Rajeswari. Thanks Thanks a lot dear.
viji/
உற்சாகமான கருத்துரையால் பதிவைப் பெருமைப்படுத்தியமைக்கு ம்னம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !
FOOD NELLAI said...
ReplyDeleteஎத்தனை பொருளிருந்தும், ஈய மனமில்லையெனில், அவன் இல்லாதவனே!-நல்ல கருத்து. நயம்பட சொல்லியிருக்கின்றீர்கள் சகோ.
நயம்பட அளித்த கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்..
viji said
ReplyDelete//ஆஹா ஹா
ஆஹா
என்ன ஜடை குஞ்சல அலங்காரம்!
ஆஹா பொற்பாதம்!
குட்டி, என் செல்லக்குட்டி!!
ஜல்ஜல் என்று
பாட்டுக்கு ஆடும்
என் குட்டிக்கண்ணா! //
கடைசியிலிருந்து இரண்டாவது படத்தைத் தாங்கள் வெகு அழகாகவே வர்ணித்துள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி! ;)))))
ஏழு சுவரங்களின் மூலகர்த்தா. மூக்குத்திக் கதை மிக அருமை. புரந்தரதாசர் கேள்விப்பட்டுள்ளேன். மிக்க நன்றியம்மா. (இன்றும் தொல்லையில்லாமல் வந்து போகிறேன்.)
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது.. உங்கள் வலைத்தளம் வந்தால். இறையருள் பரிபூரணமாய் உங்களுக்குக் கிடைக்க இந்த எளியேனின் பிரார்த்தனையும்.
ReplyDeletenew information thanks for sharing
ReplyDeleteஅறியாத கதை ! படங்கள் வழக்கம் போல் சூப்பர் ! நன்றி சகோதரி ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅற்புதமான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
3463+9+1=3473 ;)))))
ReplyDeleteஇரண்டு பதில்களும் மகிழ்வளிக்கின்றன.