Tuesday, June 12, 2012

அன்னபூர்ணேஸ்வரி அன்னை !



அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹீ ச பார்வதி ||
அன்னம் நிறைந்தவளே! பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே! மாதா பார்வதியே! ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இடு!
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர: |
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம் ||
எனக்குத் தாய்- பார்வதி! தந்தை- மகேஸ்வரன்! 
சொந்தங்கள்- சிவபக்தர்கள்! என் தேசம்- மூவுலகமே!

நித்ய ஆனந்தகரீ வர அபய கரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ |
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || 

வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் 
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே 
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

கோடி சந்திர, சூரிய, அக்னிக்கு ஒப்பானவள்; சந்திர கலை போன்ற அழகிய கோவைப் பழ வதனம் கொண்ட ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி


கோவிலின் முன்பாக அழகான தோரண வாயில். இருபத்தி ஐந்து அகலமான படிக்கட்டுகளில் ஏறி உள்ளே சென்றால் விஸ்தீரமாண பரப்பளவில் அமைந்துள்ள அன்னையின் திருக்கோயில் பிரமிக்கவைக்கிறது..

கர்ப்பகிரஹமும் திருக்கோயிலின் மற்றகட்டுமானப் பணிகளும் கேரள பாணியில் மரத்தினாலேயே அமைந்துள்ளது.

சங்குசக்கரம் தாங்கிய திருக்கோலத்தில் மூலவரான அன்னபூர்ணேஸ்வரி தங்கத்திருமகளாய் புன்னகை தவழ் உயிர்த்துடிப்புடன் அருட்கோலம் கொண்டு பிரத்யட்சமாய் அருட்கோலத்தில் வசீகரிக்கிறாள்...

ஆறடிஉயரத்தில் முழுவதும் தங்கக்கவசம் அணிந்த ஸ்வர்ணத்திருமேனி!  ஏழுதலை வெள்ளி நாகம் வெண்கொற்றக் குடையாக சூழ்ந்து தெய்வீக அதிர்வலைகளை எண்ணத்தில் நிரப்புகிறது 

சந்நிதிக்கு எதிரே பொன் நிறத்தில் ஒரு சிம்மம் இரண்டுகால்களை கீழே ஊன்றிக்கொண்டு முன் இரண்டு காலக்ளில் ஒரு அட்சய பாத்திரத்தை ஏந்த்திக்கொண்டு நிற்கிறது.

அம்பாள் இங்கு சிம்ஹவாஹினியுமாய் அருள்கிறாள் !
அருளும் சக்தியும் மிகுந்த திருத்தலம் 

மறை ஆகமங்களுடன் மகத்தான சாத்திரம் 
மகிமைசேர் புராணங்களும் நிறைவாகக் கற்றாலும் அன்னபூரனேஸ்வரியின் அருளைப் பெற்றிடார் 
நிறை உடைய மாந்தர் ஆகார்.

பூர்ணாகுதி உச்சிகாலபூஜை ஆன பின்பு மதிய உணவு ஆரம்பமாகிறது. 

மூன்றுமணிவரை இடைவிடாது உணவு வழங்கப்படுகிறது. . 

கீழே அமர இயலாதவர்களுக்கு தனியே மேஜை,  நாற்காலி வசதி இருக்கிறது. 

கர்னாடக வழக்கப்படி சாதம் போட்டதும் முதலில் தெளிவான ரசம் , 
பிறகு காய்கறிகள் நிறைய போடப்பட்ட சாம்பார் பிறகு பாயசம் மோருடன் அருமையான உணவு. தட்டுக்களை அலம்ப பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள்.

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உணவுக்கு முன்பாக வித்தியாசமாக இரண்டுவேளையும் - ஃபில்டர்காபி , டிபன் கொடுக்கிறார்கள். 
இடையிடையே சுக்கும் ஏலமும் போட்ட இனிய பானகம் வேண்டுமளவு அளிக்கிறார்கள் 

குழந்தைகளுக்கு பசும்பால் தருகிறார்கள்.  
திருக்கோயிலில் பக்தியோடு பல சமூகப்பணிகளும் நடைபெறுகின்றன. மலைநாட்டுவிவசாயிகள் தங்கள் விளைபொருட்களில் ஒருபகுதியை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்கிவருகின்றனர்.

அள்ள அள்ளக் குறையாது உணவை வாரி வழங்கும் அட்சய பாத்திரமாகவே விளங்கும் ஹொர நாடு அன்னபூர்ணேஸ்வரி திருக்கோயில்  ஜோஷிகள் எனும் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

திருப்பணிகள், அன்னதானம் அனைத்தும் தனிப்பட்ட குடும்பத்தினரால் வியப்பளிக்கும் வகையில் நிர்வாகிக்கப்பட்டுவருகிறது .

அன்னபூர்ணேஸ்வரி திருமேனி சிருங்கேரி அபிநவ தீர்த்த மஹாசுவாமிகளால் 1973 ஆம் ஆண்டு அட்சய திரிதியை தினத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பச்சைப்ப்சேல் என்று பசுமையான மலைத் தொடர்கள் சலசலக்கும் சிற்றோடைகள் , உள்ளத்தை நிறைக்கும் தூய்மையான இனிய காற்று ,  கண்களையும் கருத்தையும் கவரும் காப்பி தோட்டங்கள் ஏலக்காய் தோட்டங்கள் என்று பயணத்தின் போது வழி நெடுக உற்சாகப்படுத்துகின்றன..
Annapoorneshwari Temple
Horanadu Shree Annapoorneshwari Temple, Horanadu








Horanadu Shree Annapoorneshwari Temple, Horanadu

16 comments:

  1. அன்ன பூர்ணே ஸதா பூர்ணே .... ஸ்லோகத்துடன் ஆரம்பித்துள்ள
    அழகான பதிவு. ;)

    ReplyDelete
  2. நித்யா ஆனந்தக்ரீ வர அபய கரீ ....
    மாதா அன்னபூர்ணேச்வரீ!!

    போன்ற அழகிய அற்புத ஸ்லோகங்களை ஆங்காங்கே தமிழ் அர்த்தத்துடன் விளக்கிக் கொடுத்திருப்பது ஆனந்தமாகவும் அருமையோ அருமையாக உள்ளன.

    ReplyDelete
  3. பச்சைப்பசேலென்ற பசுமையான மலைத்தொடர்கள்...

    சலசலக்கும் சிற்றோடைகள் ....

    உள்ளம் உவகை கொள்ளும் தூய்மையான இனிமையான காற்று ..

    கண்களையும் கருத்தினையும் கவரும் ஏலக்காய் மற்றும் காஃபி தோட்டங்கள் ...

    வழிநெடுக இது போன்ற உற்சாகத்துடன் எங்களையும் அங்கு அழைத்துச்சென்றது போன்ற உணர்வு இந்த பதிவினிலே மகிழ்விக்கிறது ...
    எழுத்துக்களே மனதை மயக்குவதாக மிகுந்த ரசனையுடன் உள்ளது.

    ReplyDelete
  4. கடைசி படத்தில் 4 யாளிகளுடன் கூடிய அழகான மண்டபமும், நுழைவாயிலும், சுத்தமான 2 வழிப் படிக்கட்டுகளும், வெகு ஜோராக கவரேஜ் செய்யப்பட்டுள்ளது.

    இனிமேல் தான் படிப்படியாக ஏறி நான் மேலே சென்று ஒவ்வொன்றாகப் பார்த்து மகிழ வேண்டும். ;)

    ReplyDelete
  5. கீழிருந்து ஐந்தாவது படத்தில், காட்டுப்பாதையில் ஓர் மஞ்சள் கலர் போர்டு.

    ஜாங்கிரி பிழியப்பட்டது போன்ற கன்னட எழுத்துக்கள், அதுவும் ஜாங்கிரிக்கலரிலேயே.

    அத்துடன் ஆங்கிலமும் தமிழும், வரை படத்துடன், விலாசம், பின்கோட், டெலிபோன் நம்பர் என எல்லாவற்றுடனும் முழு கவரேஜ் செய்து கொடுத்துள்ளது மிகச்சிறப்பு தான்.

    ReplyDelete
  6. அந்த அன்னபூரணி தாயின் உணவு வழங்கும் இடமே பளிச்சென்று, மிகத்தூய்மையாக, வழவழப்பான தரையுடன், சுத்தமாக சுகாதாரமாக, அக்ஷயபாத்திரம் போல வரிசையாக சாப்பாட்டுத்தட்டைக் கவிழ்த்து வைத்து, அருகே எவர்சில்வர் டம்ளர் ஜொலிக்க சூப்பராக உள்ளதே.

    பார்த்தாலே பசி தீரும் போல உள்ளதே!

    சும்மாவா! அன்னபூரணியல்லவா!!

    அருமையானதொரு போட்டோ கவரேஜ் தான். மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்ன பூர்ணே ஸதா பூர்ணே .... ஸ்லோகத்துடன் ஆரம்பித்துள்ள
    அழகான பதிவு. ;)

    அழகான கருத்துரையால் பதிவை அலங்கரித்த கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  8. முதல் மூன்று படங்களுமே அழகு தான் என்றாலும் மூன்றாவது படத்திற்கு தாங்கள் முதலிடம் கொடுத்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது.

    அது வெகு அழகாக அம்சமாக உள்ளது.

    அந்த அன்னபூரணித் தாயைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

    அன்னம் மட்டுமல்லாமல் சாப்பிட்டவர்களுக்கு தாம்பூலமும் தரத் தயார் என்பது போல அழகான வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பாருங்களேன்.

    ReplyDelete
  9. உச்சிக்காலபூஜைக்குப் பிறகு மூன்று மணி வரை அன்னதானம்!

    கீழே அமர முடியாதவர்களுக்கு டேபிள், சேர் வசதிகள்!!

    சாதம்

    தெளிவான ரஸம்

    கொத்சு போல நிறைய
    காய்கறிகளுடன் சாம்பார்

    பா ய ஸ ம்

    மோர் SOME MORE மோர் if necessary.

    தட்டுகளை எடுக்க அலம்ப தனியே ஆட்கள்

    அதுவும் உணவுக்கு முன்பாக 2 வேளையும் ஃபில்டர் காஃபியுடன், டிபன்

    சுக்கும் ஏலமும் போட்ட தித்திப்பு பானகம் வேறு.

    குழந்தைகளுக்குப் பசும்பால் வேறு!

    அடடா! உடனே போய் வரவேண்டும் போல ஆவலைத் தூண்டி விட்டுவிட்டீர்களே!

    ;))))))

    ReplyDelete
  10. அன்னபூரணித் தாயார் கோயிலைப் பற்றிய அனைத்துத் தகவல்களும், அள்ள அள்ளக் குறையாத அக்ஷயபாத்திரமாக இந்த அழகிய பதிவினில் கொடுத்துள்ளது மிகவும் திருப்தியாக உள்ளது.

    படங்கள் எல்லாமே மிகவும் அழகாக உள்ளன.

    மிகவும் சிரத்தையுடன் கூடிய தங்களின் கடுமையான உழைப்புக்கு எங்களின்

    மனமார்ந்த

    வா ழ் த் து க ளு ம்

    உளமார்ந்த

    பா ரா ட் டு க் க ளு ம்

    நெஞ்சார்ந்த

    ந ன் றி க ளு ம்.

    வாழ்க!
    வாழ்க!!
    வாழ்கவே !!!

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  11. எல்லாம் வல்ல தாயே போற்றி ..!

    ReplyDelete
  12. அன்னையை தரிசித்தேன். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்காத இடங்களுக்கெல்லாம் நீங்கள் அழைத்துச்செல்கிறீர்கள். பயணக்கட்டணம் ஏதாவது நிர்ணயுங்கள்.

    ReplyDelete
  13. அழகிய படங்கள் அழகான வார்த்தைகள் மூலம் அருமையான தரிசனம். உங்கள் செயல் சிறக்க வாழ்த்துகிறேன் அம்மா

    ReplyDelete
  14. படங்கள் அனைத்தும் அருமை ! நன்றி சகோதரி !

    ReplyDelete
  15. 3385+9+1=3395 ;)

    தங்க அன்னபூரணி அம்பாளின் ஓர் பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete