கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும்.
திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும்.
அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும்.
முதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா நடக்கும். நான்காம் நாள் முதல் அர்த்த நாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, மலை யடிவாரத்தில் விழா நடைபெறும். 9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்று நடைபெறும். அன்று இறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார்.பதினான்காம் நாள் திருவிழா வின்போது இறைவன் மலைக் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய, வைகாசி மாத ஏகாதசி தினத்தில்தான் பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது.
இறைவன் அதைக் காவல் செய்தது துவாதசி தினம். தேவர்கள் அமுதம் உண்டது திரயோதசி தினம். அன்று பௌர்ணமியும்கூட.
இதனால் வைகாசி மாத ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி தினங்களில் செய்யப்படும் தான- தர்மம் பன்மடங்கு பலனைத் தரும்.
வைகாசி விசாகத்தன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும்,
திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும்.
பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரு நரம்புகள் முருகனின் பன்னிரு கரங்க ளாகக் கருதப்படுகின்றன.
வைகாசி விசாகத்தன்று பல்வகை காவடிகளை எடுத்துக்கொண்டு பக்தர்கள் கால் நடைப் பயணமாக முருகன் ஆலயங் களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள்..
தஞ்சையில் நடக்கும் கருட சேவை வைகாசி விசாக நட்சத்திரத்தில் அல்லாமல் திருவோண நட்சத்திரத்தன்று தொடங்கி நான்கு நாட்கள் விமரிசையாக நடைபெறும்
ஆரம்பத் தில் 12 கருட சேவையாக நடைபெற்ற இத்திரு விழா தற்போது
22 கருட சேவையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.
வழங்கியதுவைகாசி விசாகத்தில்........
விசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம். தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம்.
விசாகத்தன்று முருகனின் அனைத்து திருத்தலங் களும் விழாக்கோலம் பூணும். இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட்டால் புத்திர பாக்கியம் உள்ளிட்ட பல பேறுகள் கிட்டும்.
வைகாசி விசாகத்தன்று பிறக்கும் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவர்
வைகாசி விசாகத்தில் சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து
யாககுண்டம் அமைத்து வழிபட .ஏற்ற நாள் ..
சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும்.
பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை
மலர் மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் , புண்ணியங்கள் பெருகும்.
அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியது வைகாசி விசாக தினத்தில் தான்..
இராயப்பேட்டை ஸ்ரீநிவாசர் கருட சேவை
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_10.html
லயிக்கவைக்கும் லங்காவி தீவில் இருந்த முருகன் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்திருநாள் அன்று அர்ச்சகர் பேசினார்..
சந்திர கிரஹணத்தை ஒட்டி சந்நிதியை திருத்தாளிட்டுவிட்டு நாங்கள் அங்கே சென்றிருந்தபோது கொடுத்த தொலைபேசி எண் கண்களில் பட கூப்பிட்டு நலம் விசாரித்து எங்கள் குடும்பத்தை வாழ்த்தினார்..
முருகனுக்கு சார்த்திய வெண்பட்டு வஸ்திரம் , சிறிய வெள்ளி வேல் ஆகியவற்றை அன்று ஆசீர்வதித்து அளித்ததை பொக்கிஷமாக வணங்கி வருகிறோம்.. அன்று பாலாபிஷேகத்தில் கண்குளிர தரிசித்த முருகன் இன்று அசிரீரியாக பேசியதாக உணர்ந்து சிலிர்த்தோம்..
நெடுநாளைக்குப் பின் உங்கள் பதிவு பக்கம் இடறு தான் வார முடிந்ததது அம்மா, தாமதத்திற்கு வருந்துகிறேன்
ReplyDeleteஇணைத்த படங்களும் அதனுடன் நீங்கள் கூறிய கருத்துகளும் அருமை
சென்னை டூ சென்னை படித்துப் பாருங்களேன்
எத்தனை கோவில்கள்?எத்தனை விசாகம்?உங்கள் பதிவைப் படித்துப் படங்களைப்பர்த்து பக்தி பரவசமாகி விட்டேன்
ReplyDeleteவிசாகத் திருவிழா பற்றிய
ReplyDeleteபல தகவல்கள் அறியமுடிந்தது
சகோதரி..
நன்றிகள் பல..
Is it so many festivals for Vishakam????????
ReplyDeleteHappy viewing all the pictures.
viji
விசாகத்திருவிழா கண்டு மகிழ்ந்தேன்.அருமை அருமை..நன்றிகள் பல..
ReplyDeleteஇன்றைய எல்லப்படங்களும் ரொம்ப ஜோராக உள்ளன. கடைசிபடம் திறக்காமல் உள்ளது.
ReplyDeleteகடைசிக்கு முந்தியபடம் சும்மா ஜொலிக்குது.
படு ஜோராக உள்ளது.
நெருக்கமாகக்கட்டிய மல்லிகைச்சரம் + இதர புஷ்பமாலைகள் வசீகரிக்கிறது.
கீழிருந்து நாலாவது படத்தில் பின் அலங்காரத்தை இப்படி அருமையாகக் காட்டி பின்னிப்பெடலெடுக்க வைத்துள்ளீர்களே!
ReplyDeleteமுகத்தை மட்டும் பார்த்தால் முன் அலங்காரம் போல உள்ளது.
அம்பாளுக்கு பல முகங்கள் காட்டப்பட்டுள்ளதால், கழுத்துக்குக் கீழ் உள்ள பகுதிகளைப் பார்த்து பின்னலங்காரம் தான் என கண்டு மகிழமுடிகிறது.
எப்படித்தான் இவ்வளவு அழகாகப் படங்களைக்காட்டி வியப்பில் ஆழ்த்துகிறீர்களோ! ;)))))
மிகப்பெரிய ஓம் என்ற எழுத்திற்குள் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ள சுப்ரஹ்மணியர் புஷ்ப அலங்காரங்கள் நன்றாக உள்ளது.
ReplyDeleteசும்மா ஜம்மென்று கும்மென்று பூ மெத்தைகளின் உள்ளே ஸ்வாமி குட்டியூண்டாக உள்ளார்.
முதல் படத்தில் கஜலக்ஷ்மி?யும்,
ReplyDeleteசுழலும் 3 கழுகளுக்குக்கீழே உள்ள
பெருமாள்? படமும் ஜோராகவே உள்ளன.
அனைத்துக் கருடன்களும் மூக்கும் முழியுமா உள்ளனர்.
//லயிக்கவைக்கும் லங்காவி தீவில் இருந்த முருகன் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்திருநாள் அன்று அர்ச்சகர் பேசினார்//
ReplyDeleteநீங்களே போன் நம்பர் கொடுத்து, அவ்ர் உங்களுடனும், உங்கள் குடும்பத்தாருடனும், பேசியிருக்கிறார் என்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டக்கார அர்ச்சகராகத் தான் இருக்க வேண்டும்! ;)))))
//முருகனுக்கு சார்த்திய வெண்பட்டு வஸ்திரம் , சிறிய வெள்ளி வேல் ஆகியவற்றை அன்று ஆசீர்வதித்து அளித்ததை பொக்கிஷமாக வணங்கி வருகிறோம்//
ஆஹா! உங்களைத்தவிர யாருக்குக் கிடைக்கும் இந்த அரியதோர் பாக்யம்? மகிழ்ச்சியாக உள்ளது.
//அன்று பாலாபிஷேகத்தில் கண்குளிர தரிசித்த முருகன் இன்று அசிரீரியாக பேசியதாக உணர்ந்து சிலிர்த்தோம்//
மஹா புண்ணியவதி தான் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்.
லயிக்கவைக்கும் லங்காவியை இப்போது மீண்டும் போய் கண்டு களித்தேன்
8 out of 32 [25%] பின்னூட்டங்கள் ஒருவரே கொடுத்துள்ளார். அவருக்கு நீங்கள் ஒரு பதிலும் கொடுத்திருக்கிறீர்கள்.
பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக இன்றைய ”
ReplyDeleteவிசாகத் திருவிழாக்கள்” படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல் மிகவும் அருமையாக உள்ளது.
மனமார்ந்த
ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுக்கள்.
இன்று போல் என்றும் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க! வாழ்க!!
அடாது மழைபெய்தாலும், வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்தினாலும் விடாது தந்திடும்
பதிவுகளும் அதற்கான தங்களின் கடும் உழைப்பும் மிகவும் வயக்க வைக்கின்றன.
தொடரட்டும் தங்களின் இதே ஆர்வமும். துடிப்பும்.
பிரியமுள்ள
vgk
என் இன்றைய முதல் பின்னூட்டட்தில்
ReplyDelete//இன்றைய எல்லப்படங்களும் //
எல்லப்படங்களும் = எல்லாப்படங்களும்
கடைசியாகக் கொடுத்த பின்னூட்டத்தில்
//அதற்கான தங்களின் கடும் உழைப்பும் மிகவும் வயக்க வைக்கின்றன.//
வயக்க = வியக்க
நேற்றும் இன்றும் வேலை ஜாஸ்தி, இரவு தூக்கமும் இல்லை. இப்போது எனக்குத் தூக்கம் கோஜா வாங்குகிறது.
அதனால் ஏதேதோ எழுத்துப்பிழைகள் தூக்கக்கலக்கத்தில் ஏற்பட்டுள்ளது.
பிழைகளுக்காக வருந்துகிறேன்.
அம்பாள் பொருத்தருளவும். vgk
இறைவனின் அருளிருப்போருக்கு மட்டுமே, செயலிலும் இறைவனின் தன்மையான கனிவு காணப்படும். இறைவனின் பெருமைகளை கனிவுடன் முன்வைக்கும் தங்களுக்கு இறையருளால், அனைத்து நலனும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். அருமை! அருமை! தொடருங்கள் சகோதரி!
ReplyDelete5.04 pm தோன்றிடும் பிரிஸ்பேன் நிலாவை எப்படியும் ஆறுமணிக்குள் பார்த்துவிடலாம் என ஆசையாக இருந்தேன். ஆனால் இரவு எட்டு மணி ஆகியும் அது எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteஇதுவரை இன்னும் அந்தக்கடைசிபடம் திறக்கவே இல்லை. ;(
கீழிருந்து ஆறாவது படமும் நல்ல அமர்க்களமாகவே உள்ளதுங்கோ!
அதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
மேலே உள்ள கலர் குடை அழகு.
திருவாசி அழகு.
சிவனும் பார்வதியுமா?
அது என்ன இருவருக்கும் ஆண்டாள் கொண்டை போல அலங்கரிக்கப்பட்டு உள்ளதே!
மஞ்சள்+சிகப்பில் குண்டான முரட்டு மலர் மாலை ஜோர் ஜோர்
அதன் மேல் பட்டு வஸ்திரம் வேறு.
ஸ்வாமி+அம்பாள் நெஞ்சிலே எவ்வளவு பெரிய வேலைப்பாடுகளுடன் ஹாரங்கள்.
அம்பாள் கழுத்தினில் இரண்டு பந்துகள் போல தங்க ஆபரணங்கள். அவற்றை நாங்கள் தங்கப்பொட்டு என்று சொல்லுவோம். வரலக்ஷ்மி நோன்பின் போது அம்பாளுக்கு காதோலைக் கருகமணியுடன் இந்தப் பொட்டுக்களையும் சேர்த்து கழுத்தில் கட்டுவதுண்டு.
ஸ்வாமியின் வேஷ்டிககட்டு, அதில் பட்டையான பச்சை ஜரிகைக்கரை, அம்பாளின் விசிறி மடிப்புடன் கூடிய புடவைக் கட்டு இரண்டும் அருமையாக உள்ளன.
அம்பாள் கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்களே!
குளிர்ச்சியான அம்பாள் அருகில் இருப்பதால், ஸ்வாமிக்கும் குளிருதோ!
நீலக்கலரில் ஸ்வெட்டர் போல ஏதோ அணிந்துள்ளாரே!!
கீழே பெள்யமாக கைகூப்பி நிற்கிறாரே அவர் யார்? நந்தியாரோ?
அவரும் அழகாக நல்முத்து மாலை அடியில் ஹாரம் வைத்ததாக அணிந்துள்ளதுடன், ஏதோ புடவை [மடிசார் கட்டுபோல] கட்டிக்கொண்டுள்ளாரே!!
அடியில் முரட்டு சூலாயுதம் வேறு அதுவும் ஜோராக மாலை அணிந்தபடி.
அனைத்தும் அருமை. ;)))))
இது எந்தக்கோயில், என்ன ஸ்வாமி என்று தாங்கள் ஏதும் குறிப்பிடவில்லையே!
ஏன் ஏன் ஏன் ???
very nice post. Thanks for the opportunity to learn the events in the month in detail and for the darshan of the deities at their best decoration.
ReplyDeleteMira’s Talent Gallery
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//இது எந்தக்கோயில், என்ன ஸ்வாமி என்று தாங்கள் ஏதும் குறிப்பிடவில்லையே!//
திருக்கல்யாண கோலத்தில் சொர்ணாம்பாள் காரணீஸ்வரர் .
கருத்துரைகள் அளித்து பதிவினைப்பெருமைப் படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎன் இன்றைய முதல் பின்னூட்டட்தில்
//இன்றைய எல்லப்படங்களும் //
எல்லப்படங்களும் = எல்லாப்படங்களும்
கடைசியாகக் கொடுத்த பின்னூட்டத்தில்
//அதற்கான தங்களின் கடும் உழைப்பும் மிகவும் வயக்க வைக்கின்றன.//
வயக்க = வியக்க
நேற்றும் இன்றும் வேலை ஜாஸ்தி, இரவு தூக்கமும் இல்லை. இப்போது எனக்குத் தூக்கம் கோஜா வாங்குகிறது.
அதனால் ஏதேதோ எழுத்துப்பிழைகள் தூக்கக்கலக்கத்தில் ஏற்பட்டுள்ளது.
பிழைகளுக்காக வருந்துகிறேன்.
அம்பாள் பொருத்தருளவும். vgk/
சரியாகத்தானே புரிந்துகொள்கிறோம் !
பிழையாக ஏதுவும் படவில்லை!
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
//இது எந்தக்கோயில், என்ன ஸ்வாமி என்று தாங்கள் ஏதும் குறிப்பிடவில்லையே!//
****திருக்கல்யாண கோலத்தில் சொர்ணாம்பாள் காரணீஸ்வரர்****
தகவலுக்கு மிக்க நன்றிகள்.
*****சரியாகத்தானே புரிந்துகொள்கிறோம் !
பிழையாக ஏதுவும் படவில்லை!*****
சரியாகவே புரிந்து கொண்டாலும், எழுத்துப்பிழை எழுத்துப்பிழை தானே.
புரிதலுக்கு நன்றிகள்.
திருச்செந்தூரை விட்டு விட்டீர்களே..
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteதிருச்செந்தூரை விட்டு விட்டீர்களே..
http://jaghamani.blogspot.com/2012/06/blog-post_03.html
குமார சம்பவம் என்கிற முந்தைய பதில் திருச்செந்தூரைக் குறிப்பிட்டாகிவிட்டதே !
திருச்செந்தூர் விட்டுவிட்டு வைகாசி விசாகமா !
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
3306+9+1=3316 ;)
ReplyDeleteஇரண்டு பதில்கள் ஆறுதல் அளிப்பதாக ! நன்றி !!