ஆஞ்சநேய மதிபாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!
இலங்கை சென்று ராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த ராமரின்தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜைக்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார்.
ஆஞ்சநேயர் வர தாமதமாகவே,. ராமர் சீதாதேவி,பிடித்து வைத்த
மணல் லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டார்.
அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்த தையறிந்து கோபம் கொண்டார். வாலால் லிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார்.
ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், சிவஅபச்சாரம் செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார்.
வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.
ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது.
கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர்
காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது.
ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில்
இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்தி இருக்கிறது.
இம்மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம்
வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால்
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர்
என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி,
ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில்
மட்டும் இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
இரண்டு ஆஞ்சநேயர் தரிசனம்: ஆஞ்சநேயர் சன்னதி,
எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர்
என இரண்டு மூர்த்திகள் அருகருகில் காட்சி அருளும்
"இரட்டை ஆஞ்சநேயர்'களை தரிசிக்கலாம்.
அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி "ராமரக்ஷை மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
"அபய ஆஞ்சநேயர்' பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்கிறார். வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை செய்து. தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக அபயம் அளிக்கிறார் அபய அனுமன்..
ஆஞ்சநேயரே இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை.
ஆஞ்சநேய வீரா அனுமநத சூரா
வாயு குமாரா வானர வீரா" கோடி நமஸ்காரங்கள்!
வினுகொண்டா ஸ்வயம்பு ஆஞ்சநேய சுவாமி
அழகிய படங்கள்;அருமையான பதிவு
ReplyDeleteஆஞ்சனேயரின் அருமை பெருமையை விளக்கும் பகிர்வு. நல்லா இருக்கு. நன்றி.
ReplyDelete”அபய ஆஞ்சநேயர்”
ReplyDelete”அபாயம் நீக்கும் அபய ஆஞ்சநேயர்” ஆக இருப்பாரோ!
உள்ளே போய் பார்ப்போம்.
மேலிருந்து கீழ் இரண்டாவது படம் வெகு அருமையாக உள்ளது.
ReplyDeleteகோதண்டராமரோ?
காசுமாலைகள்,
ரோஜா + மல்லி மாலைகள்,
வக்ஷஸ்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீலக்ஷ்மி,
பட்டையான ஜரிகை வஸ்த்ரம்,
அழகிய க்ரீடம்.
ஜொலிக்கும் ஆபரணங்கள் நகைகள்,
அருகே அழகிய கோதண்டம்,
திவ்யமாக இரண்டு ஸ்ரீபாதங்களுடன் காட்டியுள்ளது தரிஸிக்க நல்ல அழகாக உள்ளது.
ஆஞ்சநேய மதிபாடலானனம் ....
ReplyDeleteஅழகான பாரிஜாத தரு மூல வாஸனாகிய ஹனுமனின் ஸ்லோகத்துடன் கூடிய சிறப்பான பதிவு.
இந்தப்பதிவு வெளியீடு பற்றிய வழக்கமான தகவல் கூட எனக்குத் தரப்படாததால்
ReplyDelete“மூக்கறுந்த நிலையில் நான்”
என்னைப்போலவே ஹனுமனும் இந்தப் பதிவினில் ..... பாவம்.
”வால் அறுந்த நிலையில்”
//வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.//
என்னப்பொருத்தம் ! ஆஹா !!நமக்குள் இந்தப் பொருத்தம் .....
ஆஞ்சநேயா!
நமக்குள் ஏன் இந்த சோதனை?
பதிவரிடம் என்னைப் பற்றிச் சொல்லி வையுங்கள் ..... பிரபோ!!
//கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
ReplyDeleteஇவருக்கும் வால் கிடையாது.//
ஆஹா!
அப்போ இவராலும் வாலாட்ட முடியாது.
வால் இல்லாதவர்களே நம்மிடம் அவ்வப்போது வால் ஆட்டி வரும்போது, பாவம் ...... வால் இருக்க வேண்டிய இந்த ஹனுமனுக்கு வால் இல்லாதது கொடுமை தான்.
புதிய தகவல்களாக கொடுக்கப்பட்டுள்ளது,
ஆச்சர்யம் அளிக்கிறது.
/ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்./
ReplyDeleteமேற்படி வரிகளுக்குக்கீழ் காட்டியுள்ள படம் அப்படியே அசல் குரங்கு ரூபத்தில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
நெற்றியில் நாமம் வேறு .. சூப்பர்.
/தலவிருட்சம் அத்தி மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது./
ReplyDeleteமுதல் பிரஸவத்திற்கு தாய் வீட்டுக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் சடங்கு ஒன்றில்
“அப்பம் + கொழுக்கட்டைகள்” வயிற்றுப்பகுதியில், புடவைத்தலைப்பில் வைத்துக்கட்டுவார்கள்.
அதில் ஏதாவது ஒன்றை, ஒரு சிறு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லுவார்கள்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என அந்தக்குழந்தையால் எடுக்கப்படும் அப்பம் அல்லது கொழுக்கட்டை மூலம் அறிந்து கொள்வார்கள்.
ஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்தது இந்தப்படத்தைப் பார்த்ததும். ;)))))
/வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை செய்து. தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்./
ReplyDeleteஆஹா, இன்று வெள்ளிக்கிழமை ஆச்சே.
முன்பே தெரிந்திருந்தால் இந்த விசேஷப்பிரஸாதம் வாங்கிச் சாப்பிடப் போய் இருக்கலாமே என நினைக்கத் தோன்றுகிறது.
வழக்கம்போல் நாக்கில் நீருடன் நான்.
;(
//ஆஞ்சநேய வீரா
ReplyDeleteஅனுமநத சூரா
வாயு குமாரா
வானர வீரா"
கோடி நமஸ்காரங்கள்!//
இந்தப் பதிவிட்டவரின் திருக்கரங்களுக்கும் அதில் பாதி அதாவது அரை கோடி நமஸ்காரங்கள்.
மிக அருமையான பதிவு.
பா ரா ட் டு க் க ள்
வா ழ் த் து க ள்.
ந ன் றி யோ ந ன் றி க ள்.
பிரியமுள்ள
vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமேலிருந்து கீழ் இரண்டாவது படம் வெகு அருமையாக உள்ளது.
கோதண்டராமரோ?
காசுமாலைகள்,
ரோஜா + மல்லி மாலைகள்,
வக்ஷஸ்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீலக்ஷ்மி,
பட்டையான ஜரிகை வஸ்த்ரம்,
அழகிய க்ரீடம்.
ஜொலிக்கும் ஆபரணங்கள் நகைகள்,
அருகே அழகிய கோதண்டம்,
திவ்யமாக இரண்டு ஸ்ரீபாதங்களுடன் காட்டியுள்ளது தரிஸிக்க நல்ல அழகாக உள்ளது.
மிக அழகான ரச்னையுடன் திவ்யமான கருத்துரைகள் வழங்கி சிறப்பு சேர்த்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்தப்பதிவு வெளியீடு பற்றிய வழக்கமான தகவல் கூட எனக்குத் தரப்படாததால்
“மூக்கறுந்த நிலையில் நான்”
என்னைப்போலவே ஹனுமனும் இந்தப் பதிவினில் ..... பாவம்.
”வால் அறுந்த நிலையில்”
//வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.//
என்னப்பொருத்தம் ! ஆஹா !!நமக்குள் இந்தப் பொருத்தம் .....
ஆஞ்சநேயா!
நமக்குள் ஏன் இந்த சோதனை?
பதிவரிடம் என்னைப் பற்றிச் சொல்லி வையுங்கள் ..... பிரபோ!!
சில நாட்களாக நெட் பிராப்ளம்..
பதிவு வெளியிடுவதில் சிரமம்..
இன்னும் சில நாட்கள் தொடரலாம் என எதிர்பார்க்கிறேன்..
தாமதத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா..
இந்த
ReplyDelete“அபய ஆஞ்சநேயர்”
கொங்கு நாடாம்
கோவைத் தங்கப் பதிவரின்
5 7 5 ஆவது வைரப்பதிவாகும்.
அதற்கு என் பாராட்டுக்கள்!
எழுச்சியுடன் கூடிய மகிழ்ச்சிகளால், இதை எண்ணும் போது என் மனம் மிகவும் சந்தோஷப்படுகிறது.
உங்களுக்கான அடுத்த இலக்கு
[TARGET IS FIXED BY ME] என்னவென்றால் வரும் ஜூலை மாதம் 15 ஆம் நாள் [15.07.2012] ஞாயிறு அன்று வெற்றிகரமான 6 0 0 ஆவது பதிவினை தாங்கள் வெளியிட வேண்டும்.
இப்போது போலவே தினமும் ஒரு பதிவும், அடுத்த 25 நாட்களில் உபரியாக இரண்டே இரண்டு பதிவுகளும் மட்டுமே, கொடுத்தால் போதும்.
இலக்கை நீங்கள் வெகு சுலபமாக எட்டி விடலாம்.
செய்வீர்கள் தானே!
நிச்சயமாக உங்களால் முடியும்!!
என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
பிரியமுள்ள
vgk
அபய ஆஞ்சநேயர் வாலறுந்த ஆஞ்சநேயர் என இரட்டை ஆஞ்சநேயர் தரிசனம் செய்ய வைத்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் ரசித்து வணங்க வைத்தது.
ReplyDeleteஆனி ரேவதி திருமஞ்சனத்திற்கான விஷேஷ காரணம் ஏதேனும் உண்டா?
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteபடங்களும் பதிவும் அழகு!
ReplyDeleteஅருமையான பதிவு. இதுவரை கண்டிராத படங்களையும் இவ்விடம் கண்டேன். என் இளநீர் பிரதானமாக கட்டப் படுகிறது எனும் கேள்விக்கும் விடை கிடைத்தது! நன்றி மா.
ReplyDeleteஜெய் ஸ்ரீ ராம்
Mira’s Talent Gallery
:-) Mira
பகிர்வும், படங்களும் அருமை...
ReplyDeleteவழமை போலவே படங்களுடன் தகவல்கள் அற்புதம் :)
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அற்புதம் ! நன்றி சகோதரி !
ReplyDeleteபுத்திர் பலம் யசோதையம் நிர்பயத்துவம் அரோகதா
ReplyDeleteஅஜாட்யம் வாக்படுத்வஞ்ச சர்வத் ஹனுமத் பவேத்.
அருள் கொடுத்தீர்கள் ராஜேஸ்வரி
3473+10+1=3484 ;)))))))))
ReplyDeleteஆறுதல் அளிக்கும் இரண்டு பதில்களுக்கும் நன்றி.