சேக்கிழார் பெருமான் பெரிய புராண பாடலை தில்லையம்பலத்தில் தொடங்கி திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூரில் முடித்ததாக வரலாறு.
பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனம் காணப்படுகிறது.
அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்று வணங்கப்படுகிறது..
சங்க காலப் பாடல்களில் அரங்கேற்ற அய்யனார் திருக்கோயில்
மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு
பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார்.
மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு
பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார்.
திருக்கயிலாயத்தில் சேரமான் பெருமாள் நாயனாரால் சிவபெருமானைப் போற்றி ""ஞான உலா'' எனும் பாடல் பாடப்பட்டது.
அதை பூவுலகிற்கு தந்தருள்வதற்காக அய்யனார் திருவுளங்கொண்டு எழுந்தருளிய திருத்தலம் இது.
எனவே அரங்கேற்ற அய்யனார் என்ற பெயர் பெற்றார். ""ஞான உலா'' பாடல் அரங்கேறிய 18 கால் கல் மண்டபம் இன்றும் உள்ளது.
கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்ட நூல்தான் திருக்கயிலாய ஞான உலா.
இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் ஆகியோருக்கு ஏற்பட்ட சனிக்கிரஹ உபாதையை நீக்கிய திருத்தலம் இது.
நவகோள்களில் குரு, சனி, புதன் ஆகியோரின் பரிகார தலமாகவும் விளங்குகிறது
பூர்ண புஷ்கலா தேவியரோடு அய்யனார், இடது கையில் ஓலை சுவடியும். வலது கையை முழங்கால் மீது வைத்தும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அய்யனார் சிரசிலும், மார்பிலும், மணிக்கட்டிலும் ருத்ராட்சம் அணிந்து சிவ ஸ்வரூபமாக உள்ளார்.
கோயிலின் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மற்ற அய்யனார் கோயில்களிலிருந்து மாறுபட்டு உள்ளது.
ராஜகோபுர வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் தென்படுவது பலி பீடமும், கல் யானையும்.
கல் யானைக்கு இடது புறமும், வலது புறமும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் கோயிலின் உள்ளே செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்தில் விதானம் யந்த்ர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடலில் புதிய ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.
மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும்
வழியில் பிரதட்சிண மண்டபம் அமைந்துள்ளது.
ஸ்ரீபூர்ண புஷ்கலா சமேத அய்யனாருக்கு திருக்கல்யான உற்ஸவமும், இரவு கேரள செண்டை வாத்ய கோஷங்களோடு யானை வாகனத்தில் அய்யனார் புறப்பாடும் தரிசித்து அரங்கேற்ற அய்யனாரை வழிபட்டு சந்தோஷமான புதிய வாழ்வின் அரங்கேற்றத்தைக் காண பக்தர்கள் வருகை தருகிறார்கள்..
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், சிறுகனூர் என்னும் சிற்றூருக்கு 5 கி.மீ. வட மேற்கிலும், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் திருக்கோயில்.
கிராமத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனாருக்கு மிகப் பெரிய கற்கோயில் திருப்பட்டூரில் உள்ளது.
பூர்ண புஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார்
இங்கு பக்தர்களைக் காத்தருள்கிறார்.
ஆஹா
ReplyDelete”ஞான உலா”
என்ற குட்டியூண்டு பதிவு!
[குட்டியூண்டு கதைகள் ஞாபகம் வருகிறது]
http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html
ReplyDeleteஇந்த மேற்படி குட்டியூண்டு கதை இணைப்பில் கூட இந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாவைப்பற்றி பேசப்பட்டுள்ளது.;)
http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html
ReplyDeleteஇந்த மேற்படி குட்டியூண்டு கதை இணைப்பில் கூட இந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாவைப்பற்றி பேசப்பட்டுள்ளது.;)
சேக்கிழார் பெருமானின் பெரிய புராணப் பாடல் தொடங்கிய இடம், முடிந்த இடம் என்று வரலாறுகளைத் தேடிப்பிடித்து, பட்பட்டென பட்டுபோல கொடுத்துள்ளதும் அதுவும் எங்கள் ஊர்பக்கமாக உள்ள திருப்பட்டூரில் முடித்துள்ளதும் கேட்கவே அருமையாகவும் பெருமையாகவும் உள்ள்து. ;)))))
ReplyDeleteமிகப்பெரிய யானை,
ReplyDeleteஅதுவும் கல் யானை! கல்யாணகுணங்கள் கொண்ட யானையோ?
பெரியய்யா!
பெரியசாமி!
எழுத்தச்சன்!
அரங்கேற்றியவன்!
அரங்கேற்றிய ஐயன்!
அடடா... எவ்ளோ பெயர்கள்?
அது தானே தங்களின் தனிச்சிறப்பு!
தகவல் களஞ்சியாமா கொக்கா?
நக்கீரனார்
ReplyDeleteபுறநானூறு
சேரமான் பெருமாள்
ஞான உலா
இன்றும் உள்ள 18 கால் மண்டபம்
சாஸ்தா
வெள்ளைக்குதிரைகள்
திருக்கயிலாய ஞான உலா
திருமுறைகளில் ஒன்று
வியாக்ரபாத முனிவர்
பதஞ்சலி முனிவர்
குரு, சனி, புதன் பரிகார ஸ்தலம்
அடடா .....
ஒரே குட்டியூண்டு பதிவினில் எவ்ளோ தகவல்கள். சூப்பர் தான்.
/இந்தக்கோயிலில் அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடலில் புதிய ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை./
ReplyDeleteஇந்தத்தங்களின் பதிவைப் படித்ததுமே அதே ஆற்றல் பிறந்து விட்டது எனக்கு.
பேரெழுச்சியுடன் பின்னூட்டம் இடத் தொடங்கிவிட்டேன்... அதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் தானே.
நீங்கள் சொல்லும் இதே ரூட்டில் தான் இன்னும் கொஞ்சம் போனால், மிகப்பிரபலமான மதுர காளியம்மன் கோயிலும் வருகிறது.
ReplyDeleteஒருமுறை போகவர கார் வைத்துக்கொண்டு, குடும்பத்துடன், அங்கு சென்று தரிஸித்து வந்தது மகிழ்ச்சியாக நினைவுக்கு வந்தது.
முதல் பட கோபுரம் அழகு.
ReplyDeleteஎளிமை+புதுமை....
இரண்டாவது படத்தில் கல் மண்டபம் ஜோர் தான். பழமையின் புகழைப் பறைசாற்றுவதாக....
மூன்றில் மூவர் வழக்கம் போல்....
நான்கில் ஐயனார் + 2 தேவிகள் + நாகர் + இடதுபுற ஓரம் விநாயகரோ?
மிகவும் நன்றாகவே உள்ளது.
ஐந்தாவது படம் தான் மிக அழகு.
ReplyDeleteஎங்கள் கிராமதேவதையான மாந்துறைக் கருப்பரை நினைவுபடுத்துகிறது.
ஊருக்கு ஊர் உள்ள கருப்பர் தான் என்றாலும் அந்த யானைகள், குதிரைகள், வேல்கள், ஒரு பெரிய ஆலமரம் + விழுதுகள் என நம் நாட்டின் கிராமங்களின் பக்தியின் அடிப்படை விழுதுகளாக அமையப்பெற்றவை அல்லவா!
கிராமிய சூழலில் இவைகளைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது!! ;))))
குட்டிப்பதிவாகினும் மிகவும் சுட்டிப்பதிவு தான் இது.
ReplyDeleteசுண்டிவிரல் நீளம் மட்டுமுள்ள பொடி வெள்ளரிப்பிஞ்சை, புதிதாகப் பறித்து, நறுக்குன்னு கடிச்சு சாப்பிட்டால் ஏற்படும் ருசியோ ருசியுள்ளது, இந்தப் பதிவில்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பிரியமுள்ள vgk
oooooooooooooooo
தினமுமே இதுபோல சிறிய பதிவுகளாகவும், பத்துக்கு மேற்படாத படங்களாகவும் கொடுத்தால் நல்லது, மேடம்.
ஆசைஆசையாக நீங்கள் நிறைய படங்களைச் சேர்த்தால், அவை திறக்கவே மறுக்கின்றன.
என்னைப்போல தங்கள் பதிவுகளை ஊன்றிப்பார்த்து, படித்து மகிழும் ஒருவருக்கு, படங்கள் காட்சியளிக்காவிட்டால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதையும் எண்ணிப்பாருங்கோ.
vgk
Its a pretty news. Liked the post.
ReplyDeleteviji
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
Just amazing!!! . How you are collecting this informations? Hats off to you.
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
3316+11+1=3328
ReplyDelete