Sunday, June 24, 2012

ஜேஷ்டாபிஷேகம்



 ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!

அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத்திகழுங்கோயில்தானே!

"நல்லார்கள் வாழும் நளிரங்கம்"என ஆழ்வார்களால் சிறப்பிக்கப்படும் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது.

ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும் அபிஷேகத்தை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர்.

இத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். 


பெரிய திருமஞ்சனம் என்னும்.இதை சேவிப்பது மிகவும் விசேஷம். 


 ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் 
வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். 


தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோவில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும்  திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள்.

திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை 
இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள்.

திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். 
ஜ்வாஜ்ஜல்யமான நடராஜப் பெருமானின் ஆனந்த நடனக் கோலம்

ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் 
என்பது ஐதீகம் !

[paravasudevar%255B2%255D.jpg]

23 comments:

  1. ரங்கனை சேவித்தேன்...

    மகிழ்ச்சி....

    ReplyDelete
  2. ஜேஸ்டாபிஷேகம்-அறிந்து கொள்ள உதவியது.

    ReplyDelete
  3. ஜேச்டாபீஷேகம் எனக்கு புதுசு . பகிர்வுக்கு நன்றி

    www.bhageerathi.in

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  5. ஆனி மாதம் ஜேஷ்டா [கேட்டை] நக்ஷத்திரம் வரும் 02.07.2012 திங்கட்கிழமையன்று வருவதால். அன்று ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மிகச்சிறப்பாக அமர்க்களமாக நடைபெற இருக்கும், ஜேஷ்டாபிஷேகம் என்ற மிகப்பெரிய திருமஞ்சனம் பற்றி, சரியாக ஒரு வாரம் முன்பே, தாங்கள் திட்டமிட்டு இந்தப்பதிவினைத் தந்துள்ளது மிகச்சிறப்பானதொரு செயலாகும்.

    அதற்கு ஓர் தனி பாராட்டு உங்களுக்கு.

    ReplyDelete
  6. //இந்தப் பெரிய திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக்கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும்.//

    ஆஹா! அற்புதம்.

    பொதுவாக பெருமாள் அலங்காரப் பிரியராக இருப்பதால், சிவன் கோயிலைப் போன்று பெருமாள் கோயிலில், தாராளமாக இவருக்கு அபிஷேகங்களே செய்ய மாட்டார்கள். லேசாக தீர்த்தத்தால் ப்ரோக்ஷணம் மட்டுமே செய்வார்கள்.

    அதையே சின்னத் திருமஞ்சனம், பெரிய திருமஞ்சனம் என்பார்கள்.

    [நாம் குளிக்காமல் முகத்தை மட்டும் லேசாக அலம்பிக்கொண்டு, பவுடர்
    முதலியன பூசிக்கொள்வது போல, இந்தப் ப்ரோக்ஷணம் என்பது]

    இந்த ஜேஷ்டாபிஷேக தினத்தின் போது மட்டும் பெருமாளுக்கு தாராளமாக முழுவதுமாக அபிஷேகம் செய்வார்கள் என்பது, அதிசயமானதொரு விஷயம் தான்.

    இந்த பெரிய திருமஞ்சனமான ஜேஷ்டாபிஷேகத்தை அன்று போய் சேவிப்பதும் மிகவும் விசேஷம் தான்.

    நல்லதொரு தகவல்.

    ReplyDelete
  7. //தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோவில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள்.//

    ஆம். அம்மாமண்டபம் காவிரியிலிருந்து மேள தாளங்களுடன் வெகு சிறப்பாக ஊர்வலமாகக் கொண்டுவருவதே, பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக, மிகவும் அழகாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  8. //ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது ஐதீகம்!//

    ஆஹா! ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவம் இதில் அடங்கியுள்ளதே!

    சைவர்கள் [சிவன் கோயில் செல்லும் பக்தர்கள்] பெருமாள் கோயிலுக்கும் செல்வதுண்டு.

    ஆனால் பெருமாள் கோயிலுக்கு மட்டும் செல்லும் வைஷ்ணவர்கள், சிவன் கோயிலுக்கு ஏனோ செல்வது இல்லை.

    அவர்கள் அதாவது வைஷ்ணவர்கள் “சிங்கம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குள் செல்ல மாட்டார்கள்” எனச் சொல்வதுண்டு. கேள்விப்பட்டுள்ளேன்.

    என்னுடன் வேலை பார்த்த திரு. இராமானுஜம் என்பவர் மட்டும் அப்படி இல்லை. பிரதோஷம் தோறும் என்னுடன் நான் போகும் சிவன் கோயிலுக்கு அவரும் வருவார்.

    ReplyDelete
  9. //திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள்//

    அடிக்கடி திரையிட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். அல்லது கதவை சாத்திக்கொண்டே இருப்பார்கள். திரை விலக்கி நாம் தரிஸனம் செய்ய, நாம் செல்லும் நேரம் நல்ல நேரமாக இருந்து நமக்கும் சேவிக்க ஓர் கொடுப்பிணை இருக்க வேண்டும். இதை பலமுறை நான் இந்தக்கோயிலில் முன்பெல்லாம் அனுபவித்துள்ளேன்.

    இப்போது நமக்கு வேண்டியப்பட்டவர்கள் சிலர் நல்ல நண்பர்களாக அங்கு அமைந்து விட்டதால், பிரச்சனை ஏதும் இல்லை. முன்கூட்டியே அவர்களிடம் கேட்டுக்கொண்டு சென்று திவ்ய தரிஸனம் செய்துவிட முடிகிறது.

    ReplyDelete
  10. //திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள்//

    பெருமாள் கோயில் பிரஸாதம் சுவையோ சுவையாகத்தான் இருக்கும்.
    அதுவும் அந்த அக்காரவடிசலும், புளியஞ்சாதமும் .... அடடா ....
    நினைத்தாலே போதுமே .....
    நாக்கிலே நீர் ஊறுமே.

    ReplyDelete
  11. /தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!

    திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!/

    அழகான பாடலுடனும், பள்ளிகொண்ட பெருமாள் படத்துடனும் ஆரம்பித்து

    பஹூத் படா சைஸ் முரட்டு யானையுடன் முடித்துள்ளீர்கள்.

    அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல் வெகு அருமையாக அமைந்துள்ளது. தங்களின் கடின உழைப்பினை ஒவ்வொன்றிலும் நன்கு உணர முடிகிறது.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!

    திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!/

    அழகான பாடலுடனும், பள்ளிகொண்ட பெருமாள் படத்துடனும் ஆரம்பித்து

    பஹூத் படா சைஸ் முரட்டு யானையுடன் முடித்துள்ளீர்கள்.

    அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல் வெகு அருமையாக அமைந்துள்ளது. தங்களின் கடின உழைப்பினை ஒவ்வொன்றிலும் நன்கு உணர முடிகிறது.


    பதிவினை முழுமையாக ரசித்து சிறப்பான கருத்துரைகளால் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. மேலேயிருந்து இரண்டாவது படமும், அதுபோல கீழேயிருந்து இரண்டாவது படமும் வெகு ஜோராக உள்ளன.

    577 என்பது, என்னுடன் சம்பந்தப்பட்ட ஓர் எண்.

    1981-1983 3 வருடங்கள் மட்டும் நான் வசித்து வந்த BHEL Qrs. வீட்டின் Door No. C2/577.

    அந்த மிகவும் ராசியான புத்தம் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் நாங்கள் குடியிருக்கும் போது தான் 28/04/1982 அன்று என் மூன்றாவது மகன் பிறந்தான்.

    அவன் பிறந்த செய்தி ஆஸ்பத்தரியில் என் காதில் விழும்போது ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 65 ஆவது ஸ்லோகமான

    ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவந:!

    ஸ்ரீதர:ஸ் ரீகர: ச்ரேய: ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய:!!

    என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

    அப்போது விடியற்காலம் 4.30 மணி.

    உடனேயே அவனுக்கு நான் “ஸ்ரீதர்” என பெயர் வைப்பது என முடிவு செய்து விட்டேன்.

    அந்த என் கடைக்குட்டிக் கைக்குழந்தையான ஸ்ரீதரும் ஸ்ரீரங்கம் கோயில் மீதும், பெருமாள் மீதும் மிகவும் ஈடுபாடு கொண்டவனாக இருந்து வருபவன்.

    இந்தத்தங்களின் பதிவின் எண்ணிக்கையும் 577 - அதனால் எனக்கு ஓர் இன்ம்புரியாத மகிழ்ச்சி.

    வெற்றிகரமான அழகான பதிவாகத் தந்து அசத்தியுள்ளீர்கள்.

    பா ரா ட் டு க் க ள்

    வா ழ் த் து க ள்

    ந ன் றி யோ ந ன் றி க ள்.


    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  14. கவிரிசூழ் வாசன் அரங்கனின் சிறப்புத் திருமஞ்சன உற்சவத்தைப் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி..!

    ReplyDelete
  15. திருவரங்கம் கோவிலின் இருகரையிலும் பிரவாகிக்கும் காவிரியின் கரையிலே
    பிறந்து வளர்ந்தவனாயினும் திருவரங்கம் கோவிலுக்கு அடிக்கடி சென்றதில்லை.
    இன்று செல்லவில்லையே என்ற மனத்தாங்கலைத் தீர்க்கும் வகையில் தங்கள்
    பதிவினைப் படித்தேன். திருவரங்கக் கோயில் கொண்டோனை மனதாரப் பாடினேன்.
    தங்களுக்கு உளமாற நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  16. very nice post. The golden gopuram darshan is fantastic.

    Bringing back some nostalgic moments when we had been to the temple many years back...

    Mira’s Talent Gallery

    :-) Mira

    ReplyDelete
  17. sury said...
    I sing the song in Raag Atana here.

    திருவரங்கக் கருவறையில் நின்று இறைவனைக் காணும் உணர்வைத்தந்த பாடல் பகிர்வுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. I AM NOT ON MY COMPUTER. WE HAVE PLANNED TO BE IN TIRCHI ON 3 rd JULY.DON'T KNOW WHETHER WE WILL BE LUCKY TO HAVE THE DARSHAN OF LORD RANGA.
    I

    ReplyDelete
  19. படங்கள் அற்புதம்... குறிப்பாக ... கோபுரம் ... வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
  20. //ஆனித் திருமஞ்சன... ஐதீகம்..//

    இந்த வரிகள் மனத்திற்கு மிகவும் பிடித்திருந்தன. ஒற்றுமையாய் காணும் எல்லாவற்றிற்கும் ஒரு தனி அழகு
    வந்து விடுகிறது தான்!

    ReplyDelete
  21. 3494+8+1=3503 ;)))))

    மகிழ்வூட்டும் ஓர் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete