Monday, June 25, 2012

ஆனித் திருமஞ்சனம்



சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் திருக்கோவில்
நடராஜ சதகம்
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை 
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே!




வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதம் ஆனி மாதம். 
நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. 

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். 
 ஆனித் திருமஞ்சன தினத்தில் சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் 
சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும் போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 
சிறப்பு அபிஷேகம்முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனை காட்டப்படும். 

பத்துநாட்கள் நடைபெறும் விழாவில் 9ம் நாள் 
தேரோட்டம் மிக முக்கியமானது. 
தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் 
எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. 
மூலவர் நடராஜரே திருத்தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் 
உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.

தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நள்ளிரவாகி விடுவதால் இரவு முழுவதும் நடராஜரும் சிவகாமியம்மையும் ஆயிரம் கால்  மண்டபத்தில்தான் தங்குவார்கள். 

மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். 
அங்கு கடாபிஷேகம் நடைபெறும். 


உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் 
பரவசம் தான்.உணர்ந்தால் ஆனந்த பரவசம் தான் !!..

ஆனித்திருமஞ்சன நாளில் தில்லை காளி அம்மனுக்காகக் காத்திருந்து தரிசனம் தந்து திரும்புவார் நடராஜர். இதில் குளிர்ந்து கோபம் தணிவாள் தேவி என்பதும் ஐதீகம். 

ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சிதம்பரம், திருவாரூர் போன்ற திருத்தலங்களில் ஆனித் திருமஞ்சனம் சிறப்பிப்பது போல் மற்ற சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் போற்றப்படுகிறது. 

ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். 

அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்ததனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். 

அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. 

நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். 

கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், 
தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் 
சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். 
நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், 
மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். 

வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். 

அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. 

அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு 
சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

21 comments:

  1. நாளை 26.06.2012 செவ்வாய்க்கிழமை ஆனி மாதம் உத்ர நக்ஷத்திரத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சனம் என்ற மஹாபிஷேகத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  2. ஆனிதிருமஞ்சனம் அற்புதமான பதிவுதந்தமைக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  3. ஆனித்திருமஞ்சனம் பற்றிய விளக்கம் தெரிந்து கொண்டோம் நன்றி

    ReplyDelete
  4. மானாட மழுவாட மதியாட ....

    என்னும் நடராஜ சதகத்துடன்
    ஆரம்பம் அருமை தான்.

    ReplyDelete
  5. அழகான படங்களுடன், அருமையான
    செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. ஆனித்திருமஞ்சனம் பற்றிய செய்திகளை ஓர் ஆன்மிக இதழில் இன்று மாலையில் ஐந்து மணி சுமாருக்கு, நான் படித்துக் கொண்டிருந்தேன்.

    பிறகு கணினியில் வந்தால் அதே தலைப்பில் உங்களின் இன்றைய பதிவு. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

    ReplyDelete
  7. அந்த ஆன்மிக இதழில் நான் படித்த மேலும் சில தகவல்கள்:

    1) தில்லை என்னும் ஒருவகை வ்ருக்ஷங்களால் சூழப்பட்ட பகுதி என்பதால் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது சிதம்பரம்.

    2) கோயில் என்றாலே சைவ சமயத்தில் சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும்.

    3) தரிசனம் செய்தாலே முக்தி கிட்டும் ஸ்தலம் இது.

    4) ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுடன் அழகாக ஆனந்தக்கூத்தாடும் அற்புதமான இடம்

    5) ஸ்வயம்புவான ஸ்ரீமூலநாதர் (ஆதிமூலநாதர்) என்பவரை வ்யாக்ரபாத மஹரிஷியும், ஆதிசேஷனின் அவதாரமாகிய பதஞ்சலி மஹரிஷியும் பூஜித்த இடம்.

    6) ஸ்ரீ நடராஜாவின் வலது புறத்தில் மாணிக்க வாசகரும், நந்தனாரும் ஜோதி வடிவில் சிதம்பர ரகசியம் என்னுமிடத்தில் இறைவனோடு இரண்டறக்கலந்த இடம்.

    7) தினசரி நடைபெறும் ஆறுகால பூஜைக்கு சமமான மஹா அபிஷேகங்கள் ஸ்ரீ நடராஜாவுக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் நடைபெறும் நாட்கள் ஒவ்வொரு ஆண்டிலும் ஆறு நாட்களாம்.

    அவை
    [1] சித்திரைத் திருவோணம்
    [2] ஆனி உத்திரம்
    [3] ஆவணி சுக்லபக்ஷ சதுர்தஸி
    [4] புரட்டாசி சுக்ல பக்ஷ சதுர்தஸி
    [5] மார்கழி திருவாதிரை
    [6] மாசி மாத சுக்ல பக்ஷ சதுர்தஸி.

    8) இதைத்தவிர ஆனி மாதமும், மார்கழி மாதமும் திருமுறை பாராயனங்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்படும் பிரும்மோத்ஸவங்களும் மிகச் சிறப்பான்வைகளாகுமாம்.

    ReplyDelete
  8. //பத்துநாட்கள் நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது//

    படத்தில் காட்டப்பட்டுள்ள தேர்கள் இரண்டுமே ஜோர் தான்.

    ReplyDelete
  9. //உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம் தான். உணர்ந்தால் ஆனந்த பரவசம் தான் !!..//

    அதே ஆனந்தப்பரவசத்தை தங்களின் இந்தப்பதிவினில் உணர்ந்தோம்.

    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ

    ஆனந்தமான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. படங்களும் செய்திகளும் அருமை..

    ReplyDelete
  11. என்ன பேறு பெற்றேன் யான் !!
    ஆனித்திருமஞ்சனத்தன்று
    நடராஜப்பெருமானையும் பாட எனக்கு
    அருளியதை நான் என் சொல்வேன் !!

    இங்கு வந்து அமீர் கல்யாணி ராகத்தில்
    கேட்டு மகிழவும்.

    சுப்பு ரத்தினம்
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  12. என்ன பேறு பெற்றேன் யான் !!
    ஆனித்திருமஞ்சனத்தன்று
    நடராஜப்பெருமானையும் பாட எனக்கு
    அருளியதை நான் என் சொல்வேன் !!

    இங்கு வந்து அமீர் கல்யாணி ராகத்தில்
    கேட்டு மகிழவும்.

    சுப்பு ரத்தினம்
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  13. sury said...
    என்ன பேறு பெற்றேன் யான் !!
    ஆனித்திருமஞ்சனத்தன்று
    நடராஜப்பெருமானையும் பாட எனக்கு
    அருளியதை நான் என் சொல்வேன் !!

    இங்கு வந்து அமீர் கல்யாணி ராகத்தில்
    கேட்டு மகிழவும்.

    சுப்பு ரத்தினம்
    http://menakasury.blogspot.com //

    அற்புதமான பாடல் பகிர்வுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    அனைவரும் ரசித்து மகிழச் செய்ததற்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //பத்துநாட்கள் நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது//

    படத்தில் காட்டப்பட்டுள்ள தேர்கள் இரண்டுமே ஜோர் தான்.

    June 25, 2012 8:21 PM
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    //உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம் தான். உணர்ந்தால் ஆனந்த பரவசம் தான் !!..//

    அதே ஆனந்தப்பரவசத்தை தங்களின் இந்தப்பதிவினில் உணர்ந்தோம்.

    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ

    ஆனந்தமான பகிர்வுக்கு நன்றிகள்.

    ஆனந்தமான கருத்துரைகளால் மகிழ்ச்சி அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  15. ஆஹா.. தினம் தினம் தரிசனம் காண என்ன பேறு பெற்றோமோ?..

    உடுக்கை தான் டமருகம், சரிதானே?

    ReplyDelete
  16. நான் ஆனித்திருமஞ்சன காலத்தில் ஏதாவது ஒரு நாளில் தில்லையில் இருக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உண்டு. இந்த முறை தாமதமாகி விட்டது. ஜூலை முதல் வாரத்தில் அங்கிருப்பேன்.ஆண்டவனின் திரு உருவை வீதி உலா வரும்போது கூட படம் பிடிக்கத் தடை செய்கிறார்கள். ஆனால் உங்கள் பதிவில் அருமையான படங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. ஆனித் திருமஞ்சனம் கண்கொள்ளாக் காட்சி.

    ReplyDelete
  18. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. 3503+7+1=3511 ;)))))

    ஒரு பதிலுக்கு நன்றி.

    ReplyDelete