





அலைமகளே வருக, ஐஸ்வர்யம் தருக!
அட்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!
சங்கு சக்ரதாரி நமஸ்காரம்..
சகல வரம் தருவாய் நமஸ்காரம்..
பத்மபீட தேவி நமஸ்காரம்..
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்..
சோழ மன்னர் ஒருவர் இயற்கை எழில் நிறைந்த தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் உள்ள பெருமகளூருக்கு விஜயம் செய்த போது குளம் ஒன்றில் தாமரைப் பூ ஒன்று பேரழகுடன் மலர்ந்திருப்பதைக் கண்டார்.

அந்தப் பூவைப் பறித்துவர முயன்றும் அந்தத்
தாமரைப் பூவைப் பறிக்க முடியவில்லை.
யானையின் மூலம் அந்தத் தாமரையைப் பறிக்க முயன்றார் மன்னர்.
யானை, குளத்தில் இறங்கியபோது தண்ணீர்
முழுவதும் செந்நிறமாக மாறியது.
சோழ மன்னரின் ஆணைப்படி தண்ணீர் முழுவதையும் இறைத்த போது, தாமரை தண்டினால் ஆன சுயம்பு லிங்கம் வெளிப்படக் கண்டு ஆனந்தம் அடைந்து திருக்குளத்தின் ஒரு பகுதியை சமன்படுத்தி அழகிய திருக்கோயிலும் எழுப்பினார்.
சதுர்வேதிமங்கலம் என்றும், பெருமுள்ளூர் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது காலப்போக்கில் மருவி பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது.
இறைவனின் பெயர் ஸ்ரீசோமநாதர். அம்பாள் குந்தளாம்பிகை, சுந்தராம்பிகை என இரண்டு பெயர்களில் போற்றப்படுகிறாள்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது
வடக்கில் லட்சுமி தீர்த்தமான திருக்குளம் உள்ளது. வள்ளி தேவசேனா சமேத முருகன், பைரவர் ஆகியோரும் அருள்புரிகின்றனர்.
இறைவன் தாமரைத் தண்டினால் ஆனவர் என்பதால்
மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.
மூலவருக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட
சிவலிங்கத்திற்குத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது.
தலைமுடியில் ஏதேனும் குறைவு உள்ள பெண்கள்
குந்தளாம்பிகை சமேத ஸ்ரீசோமநாதரை வழிபட்டால் குறை நீங்கும்.
ஸ்ரீசோமநாதரை வழிபட்டால் பெண் குழந்தை பிறக்கும்
என்பது நம்பிக்கை.
லட்சுமி தீர்த்தம் சிவபெருமான் தலையிலிருந்து
விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது .

இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும்.
உலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு
சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.
அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் ..
பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது.
மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை
தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்
மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும், புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.
விநாயகப்பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள்.
சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக
பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் திருமேனி காட்சி தருகின்றது.
திரிபுவன சித்தர் தவ செய்த இடமான, பெருமகளூரே, பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகத் திகழ்கிறது..
அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமான மூலவர், இந்த யுகத்திலிருந்துசோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவலத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார்.
சேதுகரை செல்லுகையில் ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.



தலைமுடிப் பிரச்சினைக்குமொரு அருள்பாலிக்கும் அன்னை இருக்கிறார்! அரிய தகவலுக்கு நன்றி தோழி!
ReplyDeleteபெருமகளுரின் அம்பாளை பற்றிய தகவலை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தொடர்ச்சியாக நிறைய கோவில்களைப் பற்றிச்சொல்லி எங்களைத் திக்குமுக்காட வைக்கிறீர்கள்.
ReplyDeleteWow!!!!!!!
ReplyDeleteVery interesting and as usual pretty pictures.
viji
படத்தில் காட்டியுள்ள தாமரைப்பூக்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDelete//இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும்//
தண்டிலிருந்து உருவானதே லிங்கம்!
அரியதோர் பெரியதோர் மிகவும் சுவாரஸ்யமான தகவல் தான்.
//தலைமுடியில் ஏதேனும் குறைவு உள்ள பெண்கள் குந்தளாம்பிகை சமேத ஸ்ரீசோமநாதரை வழிபட்டால் குறை நீங்கும்.//
ReplyDeleteபெண்களின் தலையாய தலைமுடிப் பிரச்சனைகளுக்கு நல்ல்தொரு தீர்வு!
//ஸ்ரீசோமநாதரை வழிபட்டால் பெண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.//
தகவல் களஞ்சியத்திலிருந்து எனக்குக் கிடைத்துள்ள இந்தத்தகவல் TOO LATE.
பத்மபீட தேவி நமஸ்காரம்.
ReplyDeleteபக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்.
நிறைவாய் அருளும் அன்னை பற்றிய மிகவும் நிறைவான பதிவு.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபத்மபீட தேவி நமஸ்காரம்.
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்.
நிறைவாய் அருளும் அன்னை பற்றிய மிகவும் நிறைவான பதிவு.
நிறைவான கருத்துரைகளால் பதிவை நிறைத்தமைக்கு மனநிறைவான இனிய நன்றிகள் ஐயா..
சதுர்வேதிமங்கலம் என்ற பெயரே மிகவும் அழகாக உள்ளது.
ReplyDeleteஅதைப்போய் பிறகு பெருமுள்ளூர் என்று அழைத்து இப்போது அதுவும் மருவி பெருமகளூர் என்று ஆகிவிட்டதே! ;(
இறைவனின் பெயர் ஸ்ரீசோமநாதர். OK
அம்பாளின் இருபெயர்களான குந்தளாம்பிகை, சுந்தராம்பிகை
ஆகிய இரண்டுமே அழகாகத்தான் உள்ளன.
மேலிருந்து இரண்டாவதாகக் காட்டியுள்ள அந்த நீரில் அசைந்திடும் தாமரையும், அதன் நடுவே லிங்கம் போல மஞ்சள் கலரில் காட்டியுள்ள தாமரை மொட்டும், எவ்ளோ அழகு .....
ReplyDeleteவிரிந்த செந்தாமரை ....
நடுவில் மொட்டுடன்
அழகோ அழகு தான். ! ;)))))
கடைசிபடமும் கண் கொள்ளாக்காட்சி தான்.
ReplyDeleteஅடபோங்க, எல்லாமே அழகோ அழகாகவே காட்டி அசத்திறீங்க!
எதைப்பற்றி
பாராட்டி எழுதுவது?
எதை விடுவது?
தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாகிறது. இதனால் முடிப் பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது.
சரி, முடிப்பிரச்சனைக்கு இங்கு போய்
வேண்டிக்கொண்டால் தீரும் என்று பார்த்தால், அது மகளிருக்கு மட்டும் என்று வேறு சொல்லிவிட்டீர்கள்.
அதனால் நான் இத்துடன் இன்று எஸ்கேப்.
பிரியமுள்ள
vgk
அழகான தாமரை மலர்கள்.. தலபுராணம்.. மெய்சிலிர்க்க வைத்தது
ReplyDeleteஅழகான தாமரை மலர்கள் ! அறியாத பல தகவல்கள்... நன்றி சகோ !
ReplyDeletepoovaana padhivu ma. Enjoyed it. The temple history hearing for first time. thanks for sharing.
ReplyDeleteMira’s Talent Gallery
:-) Mira
3446+6+1=3453 ;)))))
ReplyDeleteஒரே பதில் .... நன்றி.