

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கையின் பொக்கிஷங்களாக போற்றத்தக்கவை....
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது..

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது ..
ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஜூன் 5ம் தேதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது.
உலக சுற்றுச் சூழல் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது..
மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது.
புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பின்விளைவுகளாக வருத்தம் கொள்ளவைக்கின்றன்..

சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஷ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது.

மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம்
என்பதை யாரும் மறுக்க முடியாது..
காடுகள் இயற்கையின் நுரையீரல்களாகச் செயலபட்டு
சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் காவலர்கள் !
என்பதை யாரும் மறுக்க முடியாது..
காடுகள் இயற்கையின் நுரையீரல்களாகச் செயலபட்டு
சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் காவலர்கள் !

.சுற்றுச்சூழல் கல்வி குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் தகவல்கள் குறித்த தெளிவு, மாணவர்களுக்கு வழி காட்டுவதற்கான திறமை ஆகியவை பள்ளியின் அனைத்து மட்டங்களிலும் சுற்றுச்சூழல் கல்வியாசிரியர்களின் முக்கிய தேவை.......
![[world-environment-day-thumb9328714[2].jpg]](http://lh5.ggpht.com/_6eWpZshQh7Q/TbDZNBnUliI/AAAAAAAABzk/46F9HGAMYG0/s200/world-environment-day-thumb9328714%5B2%5D.jpg)

ஊட்டுவதால் தாயாகும் உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவலனாகும் நம் சூழலின் தோழனாகும் யானைகள்
ம்ற்றும் பல விலங்கினங்கள் நகரமயமாக்கலினால்
அழிக்கப்படுவது இயற்கைச்சமநிலையை பாதிக்கும் !






Libya: Celebrating World Environment Day 2012 With Tree Plantin







சுற்றுச்சூழலைப்பாதுகாப்போம்!நலவாழ்வு வாழ்வோம்.நல்ல பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteநன்றி மிக்க உங்களுக்கு...
பசுமையான பதிவு.
ReplyDeleteஇதை விட தெளிவா சொல்ல முடியுமா என்று, பிரமிக்கறேன்!
ReplyDeleteஅழகாக, நேர்த்தியாக , அறிவுறுத்த பட்டுள்ளது!
வணக்கம்.
ஆஹா!
ReplyDeleteஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் போல
இன்று ஒரே நாளில் இரு பதிவுகளா?
அடடா! இதுபற்றிச் சொல்லவே இல்லையே!!
”ஞான உலா” வைக்கண்டு களித்துவிட்டு
வீதி உலா சென்று வந்தேன்.
வந்து பார்த்தால் “உலக சுற்றுச்சூழல் தினம்”
என்ற அழகான நல்லதொரு பதிவு.
கண்ணுக்குக் குளிர்ச்சியாக!
மனதுக்கு மகிழ்ச்சியாக!!
கருத்துக்கு நெகிழ்ச்சியாக!!!
ஒரே சந்தோஷப் பகிர்வாக .....
அதுவும் இரட்டிப்பு சந்தோஷமாக ....
பலே பலே.
வல்லவனுக்குப் புல்லும் ஓர் ஆயுதம் என்பார்கள்..
ReplyDeleteபுல்லினால் இங்கு கார் ஒன்று உருவாக்கிக் காட்டியுள்ள படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அது மிகவும் அழகாக பசுமையாக உள்ளது. ;)))))
ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் சின்னம் போல இரண்டு கைகளுக்கும்
ReplyDeleteநடுவே பாதுகாப்பாக ஒரு மரத்தினைக் காட்டியுள்ளது சிறப்பு.
மரங்களை மனிதர்கள் பேணி பாதுகாத்திட வேண்டும்
என்பதை நன்கு உணர்த்தும் நல்லதொரு படம்.
//மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ReplyDeleteகாடுகள் இயற்கையின் நுரையீரல்களாகச் செயலபட்டு
சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் காவலர்கள் !//
வெகு அழகாகவே மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
ரஸிக்கும்படியான வரிகள்.
/ஊட்டுவதால் தாயாகும்
ReplyDeleteஉதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவலனாகும்
நம் சூழலின் தோழனாகும்!!/
அட்டா!
இதிலேயே, எல்லாமே அடங்கிப் போய் விட்டனவே!!
சபாஷ்!!!
முதல் படத்தில் உலக மக்கள் அனைவரும் பசுமைப் புரட்சியால் ஒன்று சேர்ந்து கைகோர்த்து உலகத்தையே கட்டிக்காப்பது போலக்காட்டியுள்ளது அருமை.
ReplyDeleteயானைக்கூட்டமும், புள்ளிமான்கள் கூட்டமும் அழகோ அழகு தான்.
காட்டை அழிக்காமல் காத்தால் அவைகள் ஏன் நாட்டை நாடி வ்ரப்போகின்றன?
யோசிப்போம். சிந்திப்போம். செயல்படுவோம்.
எல்லா வனவிலங்குகளையும்
நிம்மதியாகக் காட்டினில் இயற்கைச்சூழலில் வாழவிடுவோம்.
ஜனக்கூட்டங்களால் ஆன உலக வரைபடமும்
ReplyDeleteமழைநீருடன் கூடிய பச்சை மரங்களும்
தாமரைத்தடாகமும்
என இன்றைய
அனைத்துப்படங்களும் அருமையான தேர்வு. ;).
கடைசி படத்தின் கடல் அலைகளுடன், மரங்களின் நடுவே மறையும் சூர்ய அஸ்தமனக்காட்சி மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது.
ReplyDeleteகடைசிக்கு முந்திய படத்தில், மனித முகம் போன்ற அந்த அசையும் கருவி....
அடடா அது படு ஜோர்
கீழிருந்து மூன்றாவது படத்தில் பெரிய பெரிய நகர்புறக்கட்டடங்களுக்கு முன்னால் நின்றுள்ள அந்த அம்மணி ஏன் இந்த ஆட்டு ஆட்டுகிறார்?
ReplyDeleteஅவருக்கு சுளுக்கிக்கொள்ளாதோ...... பாவம்.
ஏதோ முக்கியமான வேலை செய்கிறாரோ?
போட்டோ பிடிக்கிறாரோ?
முகம் பார்க்கும் கண்ணடியில் தன்னை அழகு பார்த்துக்கொள்கிறாரோ?
அல்லது ஏதாவது தொலைநோக்குக் கருவியில் எதையோ தேடுகிறாரோ?
அவர் ஏதோ செய்துவிட்டுப்போகட்டும். நமக்கென்ன?
நல்ல நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து வழக்கம் போல் எங்களுக்கும் காட்டி,
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ப்ரியமுள்ள vgk
சுற்றுச்சூழலைப்பாதுகாப்போம்!நலவாழ்வு வாழ்வோம்.நல்ல பதிவு
ReplyDeleteஅருமையான பகிர்வு .!
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஜனக்கூட்டங்களால் ஆன உலக வரைபடமும்
மழைநீருடன் கூடிய பச்சை மரங்களும்
தாமரைத்தடாகமும்
என இன்றைய
அனைத்துப்படங்களும் அருமையான தேர்வு. ;).
படங்களை ரசித்து , கருத்துக்களை உணர்ந்து பின்னூட்டங்களில் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
சென்னை பித்தன் said...
ReplyDeleteசுற்றுச்சூழலைப்பாதுகாப்போம்!நலவாழ்வு வாழ்வோம்.நல்ல பதிவு
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
Seeni said...
ReplyDeleteஅருமையான பதிவு!
நன்றி மிக்க உங்களுக்கு...
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
ரிஷபன் said...
ReplyDeleteபசுமையான பதிவு.
கருத்துரைக்கு பசுமையான இனிய நன்றிகள் ஐயா..
Lakshmi said...
ReplyDeleteசுற்றுச்சூழலைப்பாதுகாப்போம்!நலவாழ்வு வாழ்வோம்.நல்ல பதிவு
கருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா ..
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஅருமையான பகிர்வு .!
கருத்துரைக்கு இனிய நன்றிகள்
Muthaana பதிவு. பசுமரத்தாணி போல் பதியவேண்டிய சிறு வயதிலேயே, சோறுட்டும்போதே சேர்த்து ஊட்டவேண்டும். பள்ளிகளில் ஏட்டுக் kalviyodu indha vazhkkai kalviyayum, naam kudiyirukkum indha grahathaip patriyum nalla murayil ovoru வகுப்புகளிலும் aasiriyargal ஈடுபாடுடனும் இன்முகத்துடனும் மாணவர்களுக்கு eduththuk koora vendum.
ReplyDeleteMuthaana பதிவு. பசுமரத்தாணி போல் பதியவேண்டிய சிறு வயதிலேயே, சோறுட்டும்போதே சேர்த்து ஊட்டவேண்டும். பள்ளிகளில் ஏட்டுக் kalviyodu indha vazhkkai kalviyayum, naam kudiyirukkum indha grahathaip patriyum nalla murayil ovoru வகுப்புகளிலும் aasiriyargal ஈடுபாடுடனும் இன்முகத்துடனும் மாணவர்களுக்கு eduththuk koora vendum.
ReplyDeleteMira’s Talent Gallery
very nice post.
ReplyDeleteNice pictures also.
viji
பசுமை, அழகு, பயன், தெளிவு எல்லாம் நிறைந்த பதிவு. மிக்க நன்றி
ReplyDeleteசுற்றம் கூடி
ReplyDeleteசுற்றுப்புறச் சூழல் காப்போம்...
அருமையான பதிவு ! படங்கள் மனதை கொள்ளை அடிக்கின்றன.... நன்றி !
ReplyDelete3328+9+1=3338 ;)
ReplyDeleteஓர் பதிலுக்கு நன்றி ! ;)