உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக ஒரு நூற்றாண்டு காலம் உலக வல்லரசாக கோலோச்சிய இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் வைர விழா கொண்டாட்டங்கள், லண்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது..
1952ம் ஆண்டு பிப்ரவரி 5ல்எலிசபெத், இங்கிலாந்து ராணி ஆனார். 1953ல் அவருக்கு முடிசூட்டு விழா நடந்தது.
1977ல் அவரது வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
2002ம் ஆண்டு பொன் விழா நடந்தது.
இப்போது 60 ஆண்டுகளான நிலையில் இங்கிலாந்து முழுவதும்
4 நாட்கள் வைர விழா கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
பேரரசி விக்டோரியாவிற்கு அடுத்தப்படியாக அறுபதாண்டு வைரவிழா கண்ட பெருமை எலிசபெத் அரசியை மட்டுமே சேரும் ..
அவர் விக்டோரியாஅரசியின் 63 ஆண்டு கால சாதனையை
முறியடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது !
அரசியார் அனுபவம், கௌரவம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றோடு
நமது நாட்டையும் காமன்வெல்த் நாடுகளையும் ஒன்றிணைத்து
அறுபது ஆண்டுகள் அழைத்து வந்துள்ளார்.
பிரிட்டன் ராணி பெருமையுடன் சூடிக் கொள்ளும் மணிமுடியின் உச்சியில், இந்தியாவுக்குச் சொந்தமான 105 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம் திகழ்கிறது.
ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட
இந்த வைரம் தான்,விலை மதிப்பிட முடியாதஉலகின்
மிகப் பெரிய பழமையான வைரம்..
இங்கிலாந்து ராணிதான் நியூசிலாந்து கனடா,
ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் ராணி..
அந் நாடுகளில் தன்னிச்சையான அரசாங்கம் நடந்தாலும் Head of the State ஆக இன்னமும் பிரிட்டிஷ் மகாராணியார் மதிக்கப்படுகிறார்...
எலிசபெத் ராணிதான் அரசத் தலைவர். நாற்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலனி நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் அமைப்பாக இன்றைக்கும் இருக்கிறது.
ராணி எலிசபெத்தின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவுகூறும் வண்ணம் உருவாக்கிய தங்க நாணயம் எலிசபெத் ராணியின் முகமும் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கான கங்காருவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 100 கிலோ தங்க நாணயம் உருவாக்கப்பட்ட முந்தைய சாதனையைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக 1000 கிலோ தங்க நாணயம் உருவாக்க 99.9 சதவீதம் தூய்மையான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விற்பனை செய்யாமல் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கவும்ஆஸ்திரேலிய நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
85 வயதாகும் ராணி எலிசபெத், அரச பதவிக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இங்கிலாந்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது..
லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில்ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள மாபெரும் படகு ஊர்வலத்தில் மஹாராணியும்
ஒரு படகில் பயணிக்கிறார்..
வைர விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஐக்கிய ராஜ்ஜியத்திலும் உலகின் வேறு பல இடங்களிலுமாக 4000 ஜோதிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை
அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.
கொண்டாட்ட காலம் முழுக்கவும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு,பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரிட்டன் ராணியின் வைரவிழாவை முன்னிட்டு அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிக்பென் கடிகார கோபுரம், எலிசபெத் கோபுரமாக பெயர் மாற்றப்பட உள்ளது.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மிகப்பெரிய ஓவியம் ரிடியூ ஹாரின் அலங்கார வாயிலின் முன்பு அரசியார் நிற்பது போல வரையப்பட்டுள்ளது.
அவருக்குப் பின்பக்கம் அவரது பாட்டியார் விக்டோரியா ராணியின் ஓவியம் காணப்படுகிறது.
அரசியார் வெண்மை நிறத்தில் உடை அணிந்து காட்சி தருகின்றார்.
கொல்கத்தாவில் சுமார் 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் விக்டோரியா ராணியின் நினைவிடமாக , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் செலுத்திய ஆட்சியின், ஆதிக்கத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது.
;) கோலாகலக் கொண்டாட்டங்கள்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, மீண்டும் வருவேன் கோலாட்டத்துடன்.
/ஒரு நூற்றாண்டு காலம் உலக வல்லரசாக கோலோச்சிய இங்கிலாந்து ராணி இரண்டாம்ம் எலிசபெத்தின் வைர விழா கொண்டாட்டங்கள், லண்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது/
ReplyDeleteஆஹா! ஒரு மஹாராணியாரின் சரித்திரத்தை அழகான படங்களுடனும், அற்புதமான தகவல்களுடனும், வெளியிட்டுள்ள
எங்கள் எழுத்துலக/பதிவுலக ராணிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
/அரசியார் அனுபவம், கௌரவம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றோடு நமது நாட்டையும் காமன்வெல்த் நாடுகளையும் ஒன்றிணைத்து அறுபது ஆண்டுகள் அழைத்து வந்துள்ளார்./
ReplyDeleteபாராட்டப்பட வேண்டியதோர் மகிழ்ச்சியான செய்தி தான்.
இந்தியாவுக்குச் சொந்தமான,
ReplyDeleteஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில்
கண்டெடுக்கப்பட்ட,
105 காரட் எடை கொண்ட,
விலை மதிப்பிட முடியாத,
உலகின் மிகப் பெரிய பழமையான கோஹினூர் வைரம் தான்,
பிரிட்டன் ராணி பெருமையுடன் சூடிக் கொள்ளும் மணிமுடியின் உச்சியில் உள்ளது என்பதைக்கேட்க .....
இந்தியர்களாகிய நமக்கு
உ ச் சி கு ளி ர் ந் து
போ கி ற தே! ;)
நியூசிலாந்து கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் தன்னிச்சையான அரசாங்கம் நடந்தாலும் Head of the State ஆக இன்னமும் பிரிட்டிஷ் மகாராணியார் [இங்கிலாந்து ராணி தான்] மதிக்கப்படுகிறார்.
ReplyDeleteமிகவும் சுவையான மற்றும் சுவாரஸ்யமான தகவல். ;)
1000 கிலோ தங்க நாணயம்!
ReplyDelete99.9 சதவீதம் தூய்மையான தங்கம்!!
அதுவும் ஒரு நினைவுச் சின்னமாக!!!
அதுவும் ஆஸ்திரேலிய நாட்டில்!!!!
நாணயத்தின் ஒருபுறம் ராணியார்!
மறுபுறம் ஆஸ்திரேலிய கங்காரு!!
தங்க நாணயம் மஹாமுரடாக
ஜோராக மோத முழங்கவே உள்ளது!
சும்மாவா ஒரு டன் எடை அல்லவா!!
அந்தத்தங்க நாணயத்தின் இருபுறமும் நல்ல பளபளப்பாகவே காட்டியுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete1000 கிலோ தங்க நாணயம்!/
தங்கமான கருத்துரைகள்
தந்து பதிவை மிளிரச்செய்ததற்கு தங்கமான நன்றிகள் ஐயா.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கே எங்களையும் அழைத்துச்சென்று, கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சிகளையும், வான வேடிக்கைகளையும் அழகாகக் காட்டி ஒரேயடியாக அசத்திவிட்டீர்களே! ;)
ReplyDeleteஅந்த இரண்டாவது படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால் நம் கண்களை யாரோ குத்தவருவது போல சற்றே பயமாக அல்லவா உள்ளது!
ReplyDeleteதங்க நாணயங்களின் இருபுறமும் காட்டியுள்ள படத்திற்குக் கீழே கருப்புக்கோட்டும், கருப்புத்தொப்பியும் அணிந்துள்ள மஹாராணியாரின் பார்வையும் புன்சிரிப்பும்
ReplyDelete’நல்ல ராயல் லுக்’
ஆகவே உள்ளது.
இதே ‘ராயல் லுக்’ ஐ,
சற்றே இளமையுடன்,
தைப்பூச சமயம்
எங்கேயோ பார்த்த
ஞாபகமும் வந்தது.
மொத்தத்தில் இன்றைய தங்களின் பதிவு முற்றிலும் வித்யாசமானது.
விசித்திரத் தகவல்கள் நிறைந்தது.
அழகான பதிவு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
vgk
லண்டனில் கொண்டாடப்படும் எலிஸபெத் மகாராணியின் வைரவிழா பற்றிய செய்திகள் படிக்க படிக்க ஆர்வம் தந்தன. படங்களும் அவ்வாறே. ஆண்டு முழுக்க கொண்டாட்டம் என்பதால், மகாராணியாரைப் பற்றிய தங்கள் பதிவுகளையும் ஆண்டு முழுக்க எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteகோலாகலக் கொண்டாட்ட படங்கள்
ReplyDeleteவண்ணமயமாய் மனதை கொள்ளைகொண்டது சகோதரி...
உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு சகலகலாவல்லி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ ..!
ReplyDeleteவித்யாசமான பதிவு ஒருவாரம் ஸ்ரீவாரிசேவை புரிந்து இன்றுதான் வந்தேன்.இனிமேல்தான் மற்ற பதிவுகளை சுவாசிக்க வேண்டும். நன்றி அம்மா.
ReplyDeleteதகவல்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteபடங்களும், உங்களின் கருத்துகளும் அருமை ! நன்றி !
ReplyDelete3375+9+1=3385 ;)
ReplyDeleteதங்கமான மஹாராணியார் ராஜாத்தி[தீ] அவர்களின் ஓர் பதிலுக்கு நன்றி.