Wednesday, June 20, 2012

சூழ்வினை தீர்க்கும் சுதர்சன சக்கரம்


மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய 
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.


சக்கராயுதம்- சுதர்சனம் என்பது மகா சக்கரம். 

நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது. 

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். 

காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் . 

காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், 
திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார். 


குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள 
பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். 

 மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். 

பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். 

இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும்


ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால்  நவகிரகங்களால் 
ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். 

அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாகஅயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்..!


சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப்  பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். 

சிசுபாலன் நூற்றியோராவது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது 
சுதர்சனச் சக்கரமே!

மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது. 


அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு.
இந்திரத்யும்னன் என்ற மன்னன்அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. 


ருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு 
உடனே கருட வாகனத்தில் தோன்றினார். 

அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.


பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். 

ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம். 

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது

திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.

"ஸ்ரீ ஸுதர்ஸன மகா மந்திரங்களை யார் ஒருவர் மன ஒருமைப் பாட்டுடனும், பக்தியுடனும், அன்புடனும் ஜபம் செய்து வருகிறாரோ அவருக்கு எல்லா விதக் கார்யங்களும் வெற்றியுடன் நடக்கும்" என்று கயிலை நாதரான ஸ்ரீ பரமேஸ்வரர் தமது பத்தினியான உமை அம்மையாருக்கு உபதேசம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தனை மகிமை உள்ளது சுதர்சன மந்திரம்.

சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை,
வியாழக் கிழமைகளில், விஷ்ணு கோலமிட்டு,  ஓம் நமோ நாராயணாய 
எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி 
தருவார் மஹாவிஷ்ணு.   ஓம் நமோ நாராயணாய.



ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் 
வெற்றி கிட்டும் 

A rare Double Golden Sudarshana Saligrama with an 
OM mark at the center







22 comments:

  1. இனிய பகிர்வு.... நல்ல படங்களும் பகிர்வும் ரசித்தேன்...

    எனது இன்றைய பகிர்வு

    மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்....

    http://www.venkatnagaraj.blogspot.in/2012/06/blog-post_13.html

    டேஷ்போர்டில் அப்டேட் ஆகாததால் இந்தத் தகவல்.... :(

    ReplyDelete
  2. நாளை வியாழன்று நீங்கள் எழுதியபடி சக்கரத்தாழ்வாரை பூஜிக்கிறேன் அம்மா மிகவும் நன்றிஅம்மா.

    ReplyDelete
  3. சக்கராயுதம் என்ற சுதர்சனம் குறித்த தங்கள் விரிவான விளக்கம் அருமை! சங்கு சக்கரத்தானைப் பற்றிய படங்கள், விளக்கங்கள், இன்னும் கூடுதல் அம்சம்

    ReplyDelete
  4. "சூழ்வினை தீர்க்கும் சுதர்சன சக்கரம்"

    மிகவும் அழகான தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. மஹா சுதர்ஸன மஹாமந்திரமான

    ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
    ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!

    என்பதுடன் ஆரம்பித்துள்ளது மிகச்சிறப்பக உள்ளது

    ReplyDelete
  6. படங்கள் எல்லாமே வழக்கம்போல நல்ல அழகாக தேர்வு செய்து கொடுத்துள்ளீர்கள்.

    கீழிருந்து நாலாவது படத்தில் உள்ள கோலமும், அதில் ஆங்காங்கே முத்துப்போல சுடர்விட்டு எரியும் தீபங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது..

    ReplyDelete
  7. சக்கராயுதம்- சுதர்சனம் என்பது ..................
    ..................

    சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது

    ஸ்ரீராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.


    அற்புதமான தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. /ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால்,

    அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் /

    கேட்கவே மெய்சிலிர்ப்பதாக உள்ளது.

    ReplyDelete
  9. காஞ்சீபுரம் அஷ்டபுஜ பெருமாள்

    குடந்தை ஸ்ரீ சக்ரபாணி பெருமாள்

    மதுரை திருமோகூர் பெருமாள்

    திருக்கோவிலூர் பெருமாள்

    திருக்கண்ணபுரப்பெருமாள்

    உடனே பிரயோகிக்கும் நிலையில்
    காட்சி தரும் திருவெள்ளறைப் பெருமாள்.


    என ஏராளமான பெருமாள் கோயில்களையும்
    அவற்றின் சிறப்புக்களையும் தந்து அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  10. நாளைய வியாழக்கிழமைக்கு [குருவாரத்திற்கு] .ஏற்ற நல்லதொரு பதிவு.

    சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை,
    வியாழக் கிழமைகளில்,

    விஷ்ணு கோலமிட்டு,

    ஓம் நமோ நாராயணாய

    எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி

    வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு.

    இதைக்கேட்கவே மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  11. ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!

    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!

    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!


    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  12. உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன், என் பதிவொன்றில் தங்களைப் பற்றி கூறியுள்ளேன். படித்துப் பாருங்கள்


    படித்துப் பாருங்கள்

    சென்னையில் ஓர் ஆன்மீக உலா

    ReplyDelete
  13. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.!

    ReplyDelete
  14. Most Respected Madam,

    Please visit my blog for a surprise

    http://gopu1949.blogspot.in/2012/06/awesome-blogger-award.html

    Kindly accept the award.

    vgk

    ReplyDelete
  15. வணக்கம்,

    மிக அருமை படங்கள் பார்க்க பார்க்க தெய்வ தரசினம் கிடைக்கும்.

    வாழுதுகள்.

    ReplyDelete
  16. Sahastrathiya sankaasam sahasra vadhanam prabhum
    This Sudharsana Shadgam
    I am chanting for several years.
    Sudharsana as you wisely said relieves all our Fears, relieves us from all our debts ( not material ) that we are unable to repay in our present janma.
    Your posting is timely indeed.
    God Bless you.
    subbu rathinam.

    ReplyDelete
  17. Being Thursday, You made me chant the great slokas by your writings Rajeswari. Really great/ Thanks for the post.
    viji

    ReplyDelete
  18. very nice post ma. thanks for sharing the mantra. the pictures are so divine and thanks for giving a nice darshan of the divine lord in various forms in a single post.

    Mira’s Talent Gallery


    :-) Mira

    ReplyDelete
  19. அழகான படங்கள்.....!

    ReplyDelete
  20. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி.

    ReplyDelete