







வைசாக அனுஷம் நாள். மஹா பெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் காஞ்சி மடத்தின் பீடாதிபதியான மகான் அவதரித்ததினம்.
காலம் முழவதுமே வெறும் காலில் நடந்தவர் காஞ்சி பெரியவர்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஓரிக்கையில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள பாலாற்றங்கரையில் இருக்கும் ‘ஓரிக்கை’ தலத்தில், ஓர் மணிமண்டபத்தை கற்றளியாக , ஓங்கி கம்பீரமாக மிளிர்கிறது காஞ்சி காமகோடி பீடம்,
பூஜ்ய ஸ்ரீமகா பெரியவாளின்ஞாபகார்த்தமாக எழுப்பப்பட்டுள்ளது மணிமண்டபம்.
பூஜ்ய ஸ்ரீமகா பெரியவாளின்ஞாபகார்த்தமாக எழுப்பப்பட்டுள்ளது மணிமண்டபம்.
இரும்பு மற்றும் ரசாயன பொருள்கள் கலவாது, முழுவதும் கருங்கற்களினாலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை விமான கோபுரம், சோழர்கள் பாணியில் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோயில் விமானம்போல் தோற்றமளிக்கிறது.
100 அடிகள் உயரம். உன்னத வேலைப்பாடுகள் கொண்ட கருவறையில் காணப்படும் ருத்ராட்ச மண்டபத்தின் மையத்தில், பச்சைக் கல்லால் வடிக்கப்பட்ட மகா பெரியவர் சிலை மற்றும் தங்க கவசமிட்ட சந்தன பாதுகைகளை தரிசிக்கலாம்.


பாதுகை பிடியின் மேல் வைரங்கள் மின்னுகின்றன. நைஷ்டிக பிரம்மசர்ய விரதம் பூண்ட மாமுனிவரின் கருவறையும், புருஷாகாரம் என்று சில்ப சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி, அடி முதல் விமான கலசம் வரை உலோக சம்பந்தமே கிடையாது....

மகா யாகத்தின் இறுதியில் நிறைவேற்றப்படும் பூரணாஹூதியின் எந்தத் தெய்வத்தைக் குறித்து ஹோமம் மேற்கொள்ளப்படுகிறதோ, அந்த ஹோமத்தின் பூரணாஹூதியின்போது எழும் உயர்ந்த ஜூவாலையில், அத்தெய்வத்தின் தரிசனம் ஒளி ரூபத்தில் க்ஷண நேரத்தில் சிலர் கண்களுக்குத் தென்படும் என்று சொல்கிறார்கள்.
இந்த கூற்று நூற்றுக்கு நூற்று உண்மையே என்று, ஓரிக்கைத் தலத்தில் நடைபெற்ற அகண்ட ஹோம இறுதியில் பலர் கண்கூடாகக் கண்டனர்.

மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு. மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை

ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது.

ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளை கொண்டுவரச்சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார்.
நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.








ஹர ஹர சங்கர!
ReplyDeleteஜய ஜய சங்கர!!
ஸ்ரீ மஹா பெரியவாளின் அவதார தினமான [வைகாசி அனுஷம்] இன்று இந்தப்பதிவினைத் தந்துள்ளது மிகவும் பொருத்தமாகவும் சந்தோஷமாகவும் உள்ள்து.
ReplyDeleteமஹா பெரியவாளின் பரிபூரண ஆசி எல்லோருக்கும் கிடைகட்டும் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹாபெரிவாளை நமஸ்கரித்து கொண்டோம்
ReplyDeleteஹர ஹர சங்கர!
ReplyDeleteஜய ஜய சங்கர!!
சந்தனம் பற்றிய தகவலை நானும் படித்தேன் சமீபத்தில்....
மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
I dontknow what to say...........
ReplyDeleteYou are doing a wounderful job dear,
Thanks Thanks a lot.
Jaya Jaya Sankara
Hare Hare Sankara.
viji
காஞ்சி காமாக்ஷியுடன் காட்டப்பட்டுள்ள அனைத்துப் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.
ReplyDeleteஎன்னிடம் ஒரு பெட்டி நிறைய மஹா ஸ்வாமிகளின் பல்வேறு படங்களை [Very Rare Pictures of His Holiness] மட்டுமே தனியாக சேகரித்து வைத்துள்ளேன்.
மேலிருந்து நாலாவது படத்தில் [சுவர் கடிகாரம் உள்ள படம்] வலதுபுறத்தில் காட்டப்பட்டுள்ள ஸ்ரீ மஹாபெரியவரின் உருவம், ஒரு வட இந்திய கலைஞரால், மெழுகினால் செய்யப்பட்டது.
ReplyDeleteதத்ரூபமாகச் செய்துள்ளார்.
இது ஸ்ரீமடத்தில் ஸ்ரீ மஹா பெரியவரின் அதிஷ்டானத்தின் நுழைவாயிலின் முன்புறம் ஒரு கண்ணாடி ரூமில் வைக்கப்பட்டு,
அனைவரும் தரிஸிக்கும்படி செய்துள்ளார்கள்.
நான் அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்துவிட்டு, மணிக்கணக்காக இந்த மெழுகுச்சிலையை பார்த்து ரஸித்து நின்றுகொண்டே இருந்ததும் உண்டு.
இனிய மலரும் நினைவுகள் அவை.
ஓரிக்கையில் அமைந்துள்ள மணிமண்டபத்திற்காக நூற்றுக்கணக்கான தூண்களில், ஒரு தூணின் செலவை ஏகதேசமாக நான் ஏற்கவேண்டும் என எனக்கு அன்புக்கட்டளை வந்தது.
ReplyDeleteஉடனே அவர்கள் கேட்ட ஒரு குறிப்பிட்ட விசித்திரமான ஐந்து இலக்கத் தொகையை கொடுக்கும் பாக்யம் பெற்றேன்.
//மகா யாகத்தின் இறுதியில் நிறைவேற்றப்படும் பூரணாஹூதியின் எந்தத் தெய்வத்தைக் குறித்து ஹோமம் மேற்கொள்ளப்படுகிறதோ, அந்த ஹோமத்தின் பூரணாஹூதியின்போது எழும் உயர்ந்த ஜூவாலையில், அத்தெய்வத்தின் தரிசனம் ஒளி ரூபத்தில் க்ஷண நேரத்தில் சிலர் கண்களுக்குத் தென்படும் என்று சொல்கிறார்கள்.
ReplyDeleteஇந்த கூற்று நூற்றுக்கு நூற்று உண்மையே என்று, ஓரிக்கைத் தலத்தில் நடைபெற்ற அகண்ட ஹோம இறுதியில் பலர் கண்கூடாகக் கண்டனர்.//
இதில் வியப்பேதும் கிடையாது.
இந்த மஹானை, வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிஸிக்கும் பாக்யம் பெற்றவர்கள், மிகவும் புண்ணியம் செய்தவர்களே.
இவரைப்பற்றி நன்கு உணர்ந்தவர்களின் வாழ்க்கையில், அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து வருகிறார். வழிநடத்திச் செல்கிறார் என்பது தான் ஸத்தியம்.
சொன்னால் யாராலும் நம்பவே முடியாத அதிசயங்கள் எனக்கே எவ்வளவோ முறை ஏற்பட்டுள்ளன.
அவர் அணிந்து எங்களுக்கு அளித்த அவரின் ஸ்ரீபாதரக்ஷக்கட்டைகள், இன்றும் எங்கள் குடும்பத்தில் பிரதிமாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் வெகு சிறப்பான வேதகோஷ மந்திரங்களுடன், அஷ்டோத்ர அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
அன்று வருகை தருவோர் ஏராளம்.
இன்றுவரை எங்கள் குடும்பத்தை அதிக கஷ்டங்கள் ஏதும் இல்லாமல் நல்வழிகாட்டிக்கொண்டு. வழிநடத்திச் செல்வதும் அந்த பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகளே.
எனக்கே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பல்வேறு Thrilling Miracle அனுபவங்களை, நான் பிறருக்கு சொல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்.
அதனால் அவற்றை நான் என் பதிவிலும் கொண்டுவர விரும்புவது இல்லை.
சிலவற்றை சிலரிடம் மட்டுமே சொல்ல முடியும். எல்லோரிடமும் சொல்லி எல்லோருக்கும் புரிய வைக்க முடியாது அல்லவா?
//மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு. மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை//
ReplyDeleteநீதியரசர் இஸ்மாயில் அவர்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் மிகுந்த பக்தி உண்டு. இருவரும் பலதடவைகள் சந்தித்து பலவிஷயங்களைப்பற்றி மனம் விட்டு பேசியுள்ளார்கள். அதில் இந்த சந்தனம் கொடுக்கப்பட்ட விஷயமும் ஒன்று.
ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் முக்தி அடைந்து விட்டதாக முதல் நாள் இரவு All India Radio இல் செய்து கேட்டதும் உடனே புறப்பட்டு காஞ்சீபுரம் சென்றேன்.
மறுநாள் காலை காஞ்சீபுரமே சோகத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டேன்.
ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமிகளை பொதுமக்களின் பார்வைக்காக அமர வைத்திருந்தார்கள். எக்கச்சக்க கூட்டம். நான் ஸ்வாமிகள் அருகிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.
தொடரும்.....
விடியற்காலமே ஸ்ரீமடத்திற்குள் சென்று விட்ட நான், பிறகு அருகில் உள்ள உணவகத்திற்கு டிபன்+காஃபி சாப்பிட்டு வரலாம் என்று நினைத்துப்போனேன்.
ReplyDeleteஅப்போது காலை சுமார் 9 மணி இருக்கும்.
சாப்பிட்ட நான் திரும்ப ஸ்ரீ மடத்திற்குள் செல்ல முடியாதபடி போலீஸ் கெடுபிடிகள், க்யூ வரிசை சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு Form ஆகி இருந்தது.
தொடரும்.....
சுவாரஸ்யமான,மெய் சிலிர்க்க வைக்கும் கட்டுரை...நன்றி.
ReplyDeleteவெளியூரிலிருந்து வரும் பஸ்கள் எப்போது நிறுத்தப்படும் பஸ் ஸ்டாண்டில் நிற்காமல், 8 கிலோ மீட்டர் தள்ளியுள்ள வேறு ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்தே ஸ்ரீமடம் வரை அமைதியாக க்யூ வரிசை நகர்ந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
ReplyDeleteஅதில் எல்லா மதத்தினரும் நின்று கொண்டிருந்தனர். கிறிஸ்தவப் பாதிரியார்கள் பலர், முகமதிய நண்பர் ஏராளம், முகமதிய சான்றோர்கள், மத குருமார்கள் என அனைத்து மதத்தினரும், கையில் பெரிய பெரிய மாலைகளுடன் க்யூவில் அமைதியாகச் சென்றது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
தொடரும்.....
பிறகு ஒரு வழியாக சுமார் 12 மணிக்கு அதுவும் வேறு ஒரு ஸ்ரீமடத்து சிப்பந்தி ஒருவர் தயவால் நான் உள்ளே போக முடிந்தது. உள்ளே போனால் அங்கு தலைமை தேர்தல் கமிஷனர் சேஷன் அவர்கள் போன்ற பல V V I P க்கள், மந்திரிகள் என ஒரே கூட்டம், கெடுபிடிகள், நான் க்யூவிலிருந்து விலகி அங்கேயே ஓர் இடத்தில் அமைதியாக நின்று விட்டேன்.
ReplyDeleteஅவருக்கு அன்று நடந்த அபிஷேகங்கள் மற்றும் பலவிதமான அடுத்தடுத்த நிகழ்வுகளைக் காணும் பாக்யம் பெற்றேன்.
எவ்வளவு முறை அதற்கு முன்பு நான் என் குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். எவ்வளவு முறை திவ்ய தரிஸனம் செய்திருக்கிறேன்.
எவ்வளவு முறை அவரின் கடைக்கண் பார்வை என் மீது பட்டுள்ளது!
ஒருசில தடவைகள் தனியாக சந்தித்துப் பேசிடும் பாக்யமும் பெற்றுள்ளேன். எவ்வளவு ஞாபகமாக ஒவ்வொன்றையும் பற்றி என்னிடம் விசாரித்துள்ளார்!
மறக்க முடியாத இனிய அனுபவங்கள் அவை.
தொடரும்....
நாட்டின் பலபகுதிகளிலிருந்து பலரும் வந்து காஞ்சீபுரத்தில் முற்றுகை இட்டு விட்டதால் எனக்கு திரும்ப திருச்சிக்கு எவ்வாறு வந்து சேரப்போகிறோம் என்ற கவலை வந்து விட்டது.
ReplyDeleteவாழ்க்கையில் முதன் முதலான அன்று தான் நான் ஒரு 8 கிலோமீட்டருக்கு மேல் நடந்து, பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றேன். ஆட்டோ, கார், டவுன்பஸ் போன்ற எந்த வாகனங்களும் அன்று ஓட முடியாத அளவுக்கு ஊர் பூராவும், ரோடுகள் பூராவும், க்யூ வரிசையில் ஜனங்கள்.
தொடரும்.....
பஸ் ஸ்டாண்டுக்கு வந்தால் அங்கும் நல்ல கும்பல். ஏராளமாக ஸ்பெஷல் பஸ்கள் விட்டிருந்தார்கள். இருப்பினும் திருச்சி பஸ் எதுவும் என் கண்களுக்குப் படவில்லை. எல்லாமே சென்னை செல்லும் பஸ்களாகவே இருந்தன.
ReplyDeleteபரவாயில்லை என்று ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிவிட்டேன்.
சென்னை சென்று, பிறகு திருச்சி பஸ்ஸை அங்கு பிடித்து திரும்ப வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை வருடத்திற்கு ஒருமுறையாவது, ஸ்ரீ மஹாபெரியவா என் சொப்பனத்தில் வந்து காட்சியளித்து வருகிறார்.
இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? யாம் இருக்க பயம் ஏன்? என்பது போல உணர்கிறேன்.
முக்காலமும் உணர்ந்த மஹாமுனிவர். அவருக்குத் தெரியாத விஷயங்காளே எதுவும் கிடையாது.
தெரியாததுபோல நம்மிடம் கேட்டுக் கொள்வார்.
நம் மனதில் உள்ளதை உணர்ந்து கொண்டு, நாம் கேட்கத் தயங்கியவற்றிற்கும் கூட, வேறு விதமாக நமக்கு பதில் தெரியுமாறு நம் பிரச்சனைக்கு மிகச்சுலபமாக தீர்வு அளித்து அருளுவார்.
அவரை நாம் தரிஸித்தால் மட்டுமே போதும். நமக்கு எதுவுமே கேட்கத் தோன்றாது. அவரின் அருட்பார்வை நம் மீது ஒரே ஒரு முறை பட்டு விட்டால் போதும். நாம் அதுவரை செய்த அனைத்துப்பாவங்களும் பஸ்பமாகி விடும், என்பதே ஸத்தியம்.
ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அவதார தினமான இன்று ஏதோ தாங்கள் அவரைப் பற்றிய பதிவு ஒன்று வெளியிட்டு, நான் இதுவரை யாரிடமும் சொல்லிக்கொள்ளாத விஷயங்களில் Just 1% மட்டும் சொல்லிவிடத் தூண்டி விட்டுவிட்டீர்கள்.
ReplyDeleteநானும் மனம் திறந்து சிலவற்றையாவது இங்கு அனைவருக்கும் தெரியும்படி கூறும்படியாகி விட்டது.
இதுவும் ஸ்ரீஸ்வாமிகள் அவர்களின் லீலையாகவே தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
ஸ்வாமிகளை மனதால் மீண்டும் நமஸ்கரித்து, பதிவு கொடுத்த தங்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்.
பிரியமுள்ள
vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர!!
அற்புதமாக பொக்கிஷமான நினைவலைகளைப் பகிர்ந்து பதிவுக்கு பெருமை சேர்த்த த்ங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
3292+13+1=3306 ;)))))
ReplyDelete19ல் 13 கதைபோல அடியேன் எழுதியுள்ள பின்னுட்டங்கள். முடிந்தால் நேரமும் விருப்பமும் இருந்தால் மீண்டும் படித்துப்பாருங்கோ.
தங்களின் ஓர் பதிலுக்கு நன்றி.
அன்பின் இராஜ இராஜேஸ்வாரி - வைகோவின் 13 மறுமொழிகளையும் - தங்களீன் பதிவினையும் அரிய படங்களினையும் பார்த்து படித்து மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன்..
Deleteதங்கள் மகிழ்ச்சியான கருத்துப்பகிர்வுகளுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..!!
மூத்த பதிவர் VGK அவர்களின் கருத்துரைகளே ஒரு சிறிய பதிவாக, இலவச இணைப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன்..
Deleteதங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு இனிய நன்றிகள்..!!
உங்கள் பதிவும், திரு வைகோ அவர்களின் அனுபவங்களும் படிக்க மிகவும் மகிழ்ச்சி. அரியபடங்கள்.மஹா பெரியவர் ஸித்தியடைந்த போது பேப்பர்களில் படித்த விஷயங்கள் நேர் முக வர்ணனைபோலத் தோன்றியது. நன்றி. அன்புடன்
ReplyDeleteநமஸ்காரம்.. வாங்க ,,காமாக்ஷி அம்மா ..வாங்க...
Deleteதங்கள் வருகைக்கும் மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..