Sunday, June 3, 2012

“குமார சம்பவம்’





அருவமும் உருவும் ஆகிய அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டும்
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய’
ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். 
கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். 
அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று.
சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, ‘ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’ என்று அருணகிரியார் பாடுவார்.
“ஆறெழுத்து அடக்கிய அருமறை’ சரவணபவ, ஓம் குமராய நம என்ற ஆறெழுத்து மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை என்கிறார் நக்கீரர்;  
இவற்றை சொன்னால், வேதங்களையே முழுமையாகச் சொன்னதற்கு ஒப்பாகும்.
வச‌ந்த ‌விழாவாக ப‌த்து நா‌ட்க‌ள் கொ‌ண்டாட‌ப்படு‌ம். முருக‌ப் பெருமா‌னி‌ன் ஜெ‌ன்ம ந‌ட்ச‌த்‌திர ‌‌திரு‌விழாவான வைகா‌சி ‌விசாக‌த் ‌திரு‌விழா தனிச்சிறப்பு வாய்ந்தது..
திரு‌ச்செ‌ந்தூ‌ரி‌ல் முருக‌ப் பெருமா‌ன் மாலை‌யி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ளுடன் வச‌ந்த ம‌ண்டப‌த்தை 11 முறை சு‌ற்‌றி வல‌ம் வரு‌ம் போது ஒ‌வ்வொரு சு‌ற்றுக‌ளி‌ன் முறையே வேதபாராயண‌ம், தேவார‌ம்,திரு‌ப்புக‌ழ், ‌பிர‌ம்ம தாள‌ம், ‌ந‌த்‌தி ம‌த்தள‌ம், ச‌ங்கநாத‌ம், ‌பி‌ள்ளை‌த் த‌மி‌ழ், நாகசுர‌ம்,வே‌ல்வகு‌ப்பு,வீர வா‌ள் வகு‌ப்பு, க‌ப்ப‌ல் பா‌ட்டு உ‌ள்‌ளி‌ட்ட பா‌ட‌ல்க‌ள் இசை‌க்க‌ப்படு‌ம்.
  • முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய,ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். 
  • பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்
  • பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.
  • இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு.  இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.

  • பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.
  • பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார்.
திருச்செந்தூர் கோயில் ஆனை
படிமம்:Thiruchenthur Teample Elephant.jpg

24 comments:

  1. ஆஹா! வைகாசி விசாகதிற்கு ஏற்ற நல்ல பதிவு “குமார சம்பவம்” ;)

    ReplyDelete
  2. வைகாசி விசாகத் திருவிழாவை உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.

    படங்கள் எல்லாம் அழகு.

    ஆறுபடை முருகனையும் தரிசிக்க வைத்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. இருபதுக்கும் மேற்பட்ட முருகன் படங்களைக் கொடுத்து அசத்தி விட்டீர்களே! சபாஷ்.

    கடைசியாகக் காட்டப்பட்டிருக்கும் BOTTOM MOST முருகன் தான் இன்றைய TOP MOST அழகான படமாக எனக்குத் தெரிகிறது. ;)

    ReplyDelete
  4. ”சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது”

    அடடா! நல்லதொரு தகவல்!


    அதனாலேயே

    ‘ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’

    என்று அருணகிரியார் பாடினார்!!

    நல்லதொரு இனிமையான விளக்கம்.

    ReplyDelete
  5. மிகவும் சக்தி வாய்ந்த
    “ஆறெழுத்து
    அடக்கிய
    அருமறை’ யான

    சரவணபவ!

    ஓம் குமராய நம:

    இவற்றை சொன்னால், வேதங்களையே முழுமையாகச் சொன்னதற்கு ஒப்பாகும்.

    ஆஹா! அற்புதமான விளக்கம்.

    ReplyDelete
  6. திருப்பரங்குன்றம்
    திருச்செந்தூர்
    பழநி
    ஸ்வாமிமலை
    திருத்தணிகை
    பழமுதிர்ச்சோலை

    என்ற ஆறுபடைவீடுகளையும் வரிசையாகப் படமாக வெளியிட்டுள்ளது மிகச்சிறப்பு.

    ReplyDelete
  7. வால்மீகி முனிவரால் ஸ்ரீ இராம லக்ஷ்மணர்களுக்கு வர்ணிக்கப்பட்டதே ”குமாரசம்பவம்” என்ற விளக்கமும், அந்தக்கதையின் பெருமையை விளக்கிக் கூறியுள்ளதும் அருமை தான்.

    ReplyDelete
  8. பத்மாசுரனின் வரம் விசித்திரமாக உள்ளதே!

    பெண் சம்பந்தமே இல்லாமல் பிறந்தவர்: சுப்ரஹ்மண்யர்!

    ஆச்சர்யம் தான்.

    அதிசயம் ஆனால் உண்மை!

    தகவல் களஞ்சியத்திலிருந்து வரும் தகவல்களில் ஆதரமில்லாத பொய்களுக்கே இடமில்லை.;)))))

    ReplyDelete
  9. படைக்கும் கடவுளான பிரும்மாவையே சிறையில் அடைத்தவர்;

    தந்தைக்கே பாடம் சொன்னவர்;

    இந்தப் பதிவரைப் போன்றே அறிவுக் கடலாகத் திகழ்ந்த தமிழ் மூதாட்டி ஒளவையையே

    “சுட்ட பழம் வேண்டுமா?
    சுடாத பழம் வேண்டுமா?

    எனக்கேட்டுக் கலங்க அடித்தவர்;

    உலகம் சுற்றும் வாலிபனாகக் கிளம்பி கடைசியில், கோபித்து தண்டாயுதபாணியாக நின்றவர்;

    பின்னர் தேவர்களுக்கே சேனாதிபதியாக மாறி தேவசேனாதிபதி என்ற புகழைப்பெற்றவர்

    என எவ்ளோ தகவல்களை அனாயாசமாக அள்ளி அள்ளித் தந்து அசத்தி வருகிறீர்கள் !

    தினமும் இவற்றைப் படிக்கப்படிக்க பரவஸமாகிப் போகிறோம்!!

    தங்களின் கடும் உழைப்பு வியக்க வைக்கிறது!!!

    ReplyDelete
  10. கீழிருந்து ஆறாவது படம், [யானைக்குக்கீழே உள்ளது]
    இரவு மின்விளக்குகளால் ஜகத்ஜோதியாகத் திகழ்கிறது.

    ReplyDelete
  11. விநாயகப்பெருமான் போன்று எப்போதும் கம்பீரமாக நிற்க வேண்டிய யானை,

    விநாயகரின் தம்பியைப்பற்றி,
    மிக உயர்வாகவும், மிகப்பிரமாதமாகவும், மிகச்சிறப்பாகவும் எழுதியுள்ள

    இந்தப்பதிவரின் பதிவினைக்கண்டு, கூசிக்குறுகி நிற்பதுபோல எனக்குத் தெரிகிறதே! ;)

    யானை இளைத்தாலும் கொம்பு இளைக்காமல் கூர்மையாக உள்ளன.

    அங்குமிங்கும் அலைபாய முடியாதபடி கால்கட்டு வேறு போட்டாச்சே! ;(

    ReplyDelete
  12. திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளும்,
    வசந்தமண்டபத்தை 11 முறைச்சுற்றி வரும்போது முறையே

    1. வேதபாராயண‌ம்,
    2. தேவார‌ம், ‌
    3. திரு‌ப்புக‌ழ், ‌
    4. பிர‌ம்ம தாள‌ம், ‌
    5. ந‌த்‌தி ம‌த்தள‌ம்,
    6. ச‌ங்கநாத‌ம், ‌
    7. பி‌ள்ளை‌த் த‌மி‌ழ்,
    8. நாகசுர‌ம், ‌
    9. வே‌ல்வகு‌ப்பு, ‌
    10.வீர வா‌ள் வகு‌ப்பு,
    11.க‌ப்ப‌ல் பா‌ட்டு

    போன்றவை இசைக்கப்படுமா?

    ஆச்சர்யம்...

    ஆனந்தம் ஆனந்தம் ... ஆனந்தமே!!

    ஆனால் ஆடிட் செய்ததில் 11/11 மிகச்சரியாக இன்று Tally ஆகி விட்டது. ;)))))

    ReplyDelete
  13. இந்திராJune 3, 2012 at 6:39 PM

    அறுபடை முருகனை தரிசிக்க தந்தமைக்கு மிகவும் நன்றி அம்மா

    ReplyDelete
  14. இன்று ஜூன் 3 தெரியுமோ!

    இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

    இன்று தான்
    “வைகாசி விசாகத்திருநாள்”.

    நாளைக்கு வைகாசி அனுஷம்
    ஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தி மஹோத்ஸவம்.

    இன்றைய தங்கள் பதிவு வழக்கம்போல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    அதனால் வழக்கம்போல்
    என் மனமார்ந்த ஆசிகள்/வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றியோ நன்றிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  15. மெய்ப்பொருள் காண்பதறிவு, ஆனந்தம்.!
    பதிவு அருமை!

    ReplyDelete
  16. பதிவு அழகு..சந்திப்ஆபாம் சொந்தமே

    ReplyDelete
  17. வைகாசி விசாகம் அன்று திருச்செந்தூர் பற்றி அருமையான பதிவு.
    மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வைகாசி விசாகத்தில் அத்தனை படைவீடும் பார்த்த நிறைவு.. உங்களுக்கு ஒரு அரோகரா!

    ReplyDelete
  19. Rajeswari,
    I used to go to temple on this day and follow fasting.
    But due to health condition I am not allowed to go out and even not allowed to observe full fasting.
    But on seeing your post i felt happy viewing all Kandavels with beautiful alankaram.
    Thanks dear. Thanks a lot.
    viji

    ReplyDelete
  20. படங்களும் பகிர்வும் அற்ப்புதம் .

    ReplyDelete
  21. இது தெய்வீகப்பதிவரின்

    5 5 5 ஆவது பகிர்வு

    என்பதை நினைக்க மிகவும்

    சந்தோஷமாக உள்ளது. ;)))))

    -oOo-

    ம ன மா ர் ந் த

    பா ரா ட் டு க் க ள் !

    vgk

    ReplyDelete
  22. ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் தர்சனம் திருநாளில் மனம் குளிரவைக்கின்றது.

    ReplyDelete