Friday, June 8, 2012

பரமானந்த மய மஹா வரசித்தி ஆஞ்சநேயர்




சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக.ஒரே கர்ப்பகிரகத்தில் மகாகணபதியும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்

பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பிக்கும் செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்றித்தந்து அனுமனுடன் மங்களகரமாக்குவது மரபு..

































தன் அழகிய தந்தம் ஒடித்து மகாபாரத காவியம் எழுத பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து கண்ணபரமாத்மாவின் தேரிலிருந்து அனுமன் அனுக்கிரஹித்து நிறைவுபடுத்தினார்...
ஆரம்பம் கணபதி என்றால். அதை வெற்றிகரமாக முடித்து தருவது ஆஞ்சநேயர். என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக ஒரே கர்ப்பகிரகத்தில் மகாகணபதியும், ஆஞ்சநேயரும் திருநெல்வேலி கெட்வெல் வளாகத்தில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.

கெட்வெல் ஆஞ்சநேயருக்கு வாலின் ஆரம்பத்தில் பொட்டுவைக்க ஆரம்பித்து 48 நாட்கள் தொடர்ந்து பொட்டு வைத்து நுனியில் முடித்தால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
""சாந்த சொரூபியான இவரை வணங்கினால் செல்வ செழிப்பு, எமனிடம் பயமில்லாத தன்மை, கல்வி, வீரம், பக்தி, குடும்ப ஒற்றுமை, உத்தியோக உயர்வு, எதிரி பயமில்லா நிலை ஆகியவை கிடைக்கும்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து ஒரு பகுதி விழுந்த இடம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. 

அந்த மலையைப்பார்த்தபடி மேற்கு பார்த்த ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு பரிவார மூர்த்திகள் எட்டு பேர். அந்த எட்டு பேர்களில் ஒருவர் எமன். 

அந்த எமனுக்கு அனுக்கிரகம்புரிய தென் திசையை நோக்கியபடி ஆஞ்சநேயரின் திருப்பாதம். எனவே இவரை வணங்கினால் எமபயம் என்பதே இல்லை. 

அதே போல் குபேரதிசையான வடக்கு நோக்கிய வால். இவரத வாலின் நுனியில் நவகிரகமும் அடக்கம். இவரது வாலின் அமைப்பே ஓம்கார வடிவில் அமைந்திருக்கும்.

சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் அடிப்படையில் தான் இங்கு சிவலிங்க வடிவில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். 
இங்கு சிவனை நினைத்து வழிபட்டால் ஆஞ்சநேயர் தெரியமாட்டார். 
ஆஞ்சநேயரை நினைத்து வழிபட்டால் சிவன் தெரிய மாட்டார். 

இந்த அதிசயத்தை அபிஷேகத்தின் போது நாம் காணலாம்.

இவர் அபிஷேகத்தில் சிவசொரூபமாகவும், அலங்காரத்தில் விஷ்ணு சொரூபமாகவும் இருக்கிறார். இவரது வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் ஆட்சி செய்கிறார்கள்.
இவரது அழகில் மயங்கி, இவரிடம் கேட்டு பெற வேண்டியதை கேட்காமல் போனாலும் கூட இவரத வலது உள்ளங்கையில் குடியிருக்கும் ஐஸ்வரிய லட்சுமி ஐஸ்வரியத்தை அள்ளிக்கொடுத்திடுவாள்.

கெட்வெல் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்“நலம் பெருக” என்னும் வார்த்தைக்கேற்ப தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அவரவர் கோரிய பலன்களையும் அதற்கும் மேலாக பல வரங்களையும் தந்து, தனது பெயருக்கேற்றபடி மஹா வரசித்தி ஆஞ்சநேயராகத் திகழ்கிறார்.  

ஸீதா பிராட்டியாரை தேடி ஹனுமான் தென்திசை நோக்கி வந்தபோது தாமிரபரணி நதிக்கரையில் தங்கி இவ்விடத்தில் அவர் சந்தியாவந்தனம் (சூரிய நமஸ்காரம்) செய்ததாக கூறப்படுகிறது.

கெட்வெல் மருத்துவமனையின் முன் அழகிய அசோகவனம் போன்ற குளுமையான சோலையில் பரமானந்தமாய் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கெட்வெல் மருத்துவமனைக்கு சொந்தமாய் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆலயமாகும். 

ஓரொரு கற்பகிரகமும் அதனுள் ஆஞ்சநேய மூர்த்தி, சர்வ வியாதிகளையும் நீக்கும், ரோகஹர விநாயகர் சமேதராக காட்சியளிக்கிறார். 

ஆதிக்கு கணபதி மீதிக்கு அனுமன், 
எனவே எடுத்த காரியம் சித்திக்கும்.

ஆஞ்சநேய காயத்திரி மந்திரம்
” ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்”


25 comments:

  1. ; GETWELL ANJANEYAR ! ;)))))

    மருத்துவமனை
    வளாகத்தில்
    அமைந்துள்ள
    ஹனுமனுக்கு
    மிகப்பொருத்தமான
    பெயர்தான்.

    ReplyDelete
  2. அனைத்து ஹனுமார் ஸ்வாமி படங்களும் அருமை.
    மனதுக்கு மகிழ்ச்சியும் தெம்பும் தைர்யமும் அளிப்பவையாக உள்ளன.

    ReplyDelete
  3. நாளைய சனிக்கிழமைக்கு ஏற்ற பொருத்தமான பதிவு

    ReplyDelete
  4. இரண்டாவது படத்தில் உள்ள பூ அலங்காரம் சூப்பர்.

    மேலும் அதே படத்தில் வெள்ளிக்கவசத்தில், ஹனுமனும்,
    குட்டிப்பிள்ளையாரும் நல்ல அழகாக உள்ளனர்.

    ReplyDelete
  5. முதல் இரண்டு படங்களிலும்
    ஹனுமனின் அந்த வால் ..... அடேங்கப்பா!

    படமெடுத்த பாம்பு போல மேல் நோக்கி
    தடியாக துருத்துக்கொண்டல்லவா இருக்கிறது. ;)))))

    செம்ம ....... ஸ்ட்ராங்க் தான்
    போங்க !!

    ReplyDelete
  6. 1008 தேங்காய்களைக் கோர்த்து மாலை செய்வது என்றால் எவ்ளோ கஷ்டம்.

    அதுவும் வத்தலோ தொத்தலோ அல்ல.

    மஹாமுரட்டுக்காய்கள்.

    மோதமுழங்க பார்க்க தீர்க்கமாகவே உள்ளன.

    யாழ்ப்பணம் காய்கள் நல்ல முரடாக இருக்கும் என்று கேள்வி.

    அவை தேங்காய் மாலை அல்ல ...... மலை தான்.

    சஞ்சீவிமலையைப் பெயர்த்துக்கொண்டுவந்தவருக்கு
    இது பொருத்தம் தான்.

    ReplyDelete
  7. ஆரம்பம் கணபதி என்றால்.
    அதை வெற்றிகரமாக முடித்துத் தருவது
    ஆஞ்சநேயர். என்ற தத்துவ விளக்கம் அழகு!

    ReplyDelete
  8. ஆதிக்கு கணபதி
    மீதிக்கு அனுமன்,
    எனவே எடுத்த
    காரியம் சித்திக்கும்.

    கேட்கவே மிகவும்
    மகிழ்ச்சியாக உள்ளது.;)

    ReplyDelete
  9. ஆஞ்சநேய காயத்திரி மந்திரம் அற்புதம்

    ” ஆஞ்சநேயாய

    வித்மஹே

    வாயுபுத்ராய

    தீமஹி

    தந்நோ

    ஹனுமன்

    ப்ரசோதயாத்”
    .
    அருமையோ அருமையாகச்
    சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. GET WELL = நலம் பெருக !! ;)))))

    இதை
    எழுதிய,
    பதிவிட்ட,
    பார்த்த,
    படித்த,
    பின்னூட்டங்கள் இட்ட
    எல்லோருக்கும்
    நலம் பெருகட்டும்.

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    GET WELL = நலம் பெருக !! ;)))))

    இதை
    எழுதிய,
    பதிவிட்ட,
    பார்த்த,
    படித்த,
    பின்னூட்டங்கள் இட்ட
    எல்லோருக்கும்
    நலம் பெருகட்டும்.

    பிரியமுள்ள
    vgk/

    நலம் நல்கும் கருத்துரைகள் அளித்து
    பதிவைப்பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. சென்னை பித்தன் has left a new comment on your post "பரமானந்த மய மஹா வரசித்தி ஆஞ்சநேயர்":

    சென்னை அடையாரில் மத்ய கைலாஷ் ஒரு கோவில் இருக்கிறது-அங்கு ”ஆதியந்தப் பிரபு” அருள் பாலிக்கிறார்-பாதி கணபதி,பாதி அனுமார் உருவம்!
    பக்தி மணம் கமழும் பதிவுக்கு நன்றி.

    பக்தி மணம் கமழும் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  13. சென்னை பித்தன் has left a new comment on your post "பரமானந்த மய மஹா வரசித்தி ஆஞ்சநேயர்":

    சென்னை அடையாரில் மத்ய கைலாஷ் ஒரு கோவில் இருக்கிறது-அங்கு ”ஆதியந்தப் பிரபு” அருள் பாலிக்கிறார்-பாதி கணபதி,பாதி அனுமார் உருவம்!
    பக்தி மணம் கமழும் பதிவுக்கு நன்றி.

    பக்தி மணம் கமழும் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  14. எங்கள் ஊர் கெட் வெல் ஆஞ்சநேயர்! அருமையான தகவல்கள். ஒரு முறை சென்றிருக்கிறேன்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  15. Very nice name ...Getwell Anjaneyar...

    ReplyDelete
  16. Om Ram! Om Ram! Om Ram!
    எம்மிதயக் கள்வனின் அழகு சொட்டும் படங்களுடன் தேனமுதாம் தமிழில் பதிவிட்டு கண்களில் நீரினை வரவழைத்த எம்மினிய சகோதரிக்கு நன்றிகள்! தொடருங்கள் சகோதரி!

    ReplyDelete
  17. ஆஞ்சநேயர் வைணவமா?
    ஆதிக்கு கணபதி மீதிக்கு ஆஞ்சனேயர் - ரசித்தேன்.
    நடுவில் இருப்பது அம்மன் படம் போல இருக்கிறதே?

    ReplyDelete
  18. anjana garba sambhootam kumaram brahma charinam'
    dhushta graha vinaashayaa hanumantham upaasmahe

    Just I returned after performing an archana on behalf of my grandkids for whose welfare I pray , I see the beautiful portraits of Lord Hanuman.
    I feel blessed indeed.
    Thanks a lot
    subbu rathinam

    ReplyDelete
  19. kindly listen to anjaneya Gayathri
    with all the pictures published by you here;
    http://youtu.be/jmXiIKm5yW0
    here
    you may also listen to the gayathri in my blog:
    http://pureaanmeekam.blogspot.com
    subburathinam

    ReplyDelete
  20. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete
  21. இங்கே அம்பத்தூரை அடுத்துள்ள கள்ளிக்குப்பத்தில் இயங்கி வரும்’பால குருகுலம்’என்கிற இல்லத்து வளாகத்திலும் ஆதியந்த ப்ரபுவாக வினாயகர் பாதி ஆஞ்சனேயர் பாதியாகவும் அருள் பாலிக்கின்றனர்.அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய ஓர் இடம், பால குருகுலம்....

    ReplyDelete
  22. இன்னுமொரு சிக்சர்! ஜெய் பஜரங்கபலி!

    வெற்றிலையின் மகிமை பற்றி ஒரு பதிவு எண்ணியுள்ளேன்.. வெற்றிலையை அனைவருக்கும் தந்தவளிடம் வெற்றிலையை என் அண்ணன் கேட்டு, அவள் என் வாழ்க்கைத் துணையானாள். (வெற்றிலையாய் மடிக்கப் பட்டேன்!)

    ReplyDelete
  23. 3348+10+1 = 3359 ;)

    ஓர் GET WELL பதிலுக்கு நன்றி.

    ReplyDelete