வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்
வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டந் திசை கை தொழுவார் வினை
ஒல்லை வட்டங் கடந்தோடுடல் உண்மையே
என்று அப்பர் பெருமான் தில்லை திசை நோக்கி தொழுதாலே
வினைகளை எல்லாம் நீக்கும் என அறுதியிட்டு உரைக்கிறார்..
ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் வெளியே வந்து நமக்கு எல்லா
நன்மைகளையும் வழங்கி அருட்காட்சி தருகிறார்...
ஆனி உத்திர திருவிழா முதல் நாள்
கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது .
நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரி தங்க மற்றும்
வெள்ளி மஞ்சங்களில் திருவீதி உலா வருகின்றனர்.
தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின்
திருவீதி உலா நடை பெறுகின்றது.
ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ,
அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும்,
முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்,
சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர,
ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும்,
3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும்,
சூரிய பிரபையில் ஆனி உத்திர தரிசனம்
4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும்,
5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும்,
6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும்,
7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார்.
8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி தங்க ரதத்தில் எழிற் கோலம் காட்டுகின்ற தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.
9ம் நாள் காலை உலகை உய்விக்க நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர்.
பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கொண்டருளுகின்றார்.
ராஜ சபை என்னும் ஆயிரம் கால் மண்டபம்(Thousand Pillared Hall)
ஆனி உத்திரத்தன்று அருணோதய காலத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது,
பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம் நதியாகவே பாயும் அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி.
அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலேதுன்பங்கள் எல்லாம் விலகி ஓடும்.
சர்வ அலங்காரத்துடன், ராஜ சபையில் ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் ..
. சித் சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.
பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆனி திருமஞ்சன மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார்.
இந்த இரண்டு நாட்கள் மட்டுமே பெருமானின் ஜடா முடியை காண இயலும் ஐயனின் திருக்கோலத்தைக் காண கோடி யுகங்கள் தவம் செய்திருக்க வேண்டும் .
பூசனைகள் முடித்து "ஆனந்த தாண்டவத்துடன்" பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலைச்சுற்றி வலம் வந்து சிற்றம்பலத்திற்கு எழுந்தருளூகின்றார்.
11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன்
ஆனி திருமஞ்சன மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது.
அருமையான பதிவு
ReplyDeleteஅற்புதமான படங்கள்
ஆனந்தமான விளக்கங்கள்
அனைத்துக்குமே நன்றிகள்.
நடராஜரை பற்றிய படங்களும் செய்திகளும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநடராஜரை பற்றிய செய்திகளும் படங்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நன்றி
ReplyDeleteஅம்மை அப்பனின் ஆனந்த தரிசனம், கோபுர தரிசனம், குளம், உற்சவங்கள் என சிதம்பரதிர்க்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்!
ReplyDeleteMira’s Talent Gallery
:-) Mira
super dharshan! thank you!
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅருமையான பதிவு
அற்புதமான படங்கள்
ஆனந்தமான விளக்கங்கள்
அனைத்துக்குமே நன்றிகள்
அனந்தமான
அனைத்துக் கருத்துரைகளுக்கும்
இனிய நன்றிகள் ஐயா..
s suresh said...
ReplyDeleteநடராஜரை பற்றிய படங்களும் செய்திகளும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
கருத்துரைகளுக்கு
இனிய நன்றிகள்
Lakshmi said...
ReplyDeleteஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நன்றி
கருத்துரைகளுக்கு
இனிய நன்றிகள் அம்மா..
Mira said...
ReplyDeleteஅம்மை அப்பனின் ஆனந்த தரிசனம், கோபுர தரிசனம், குளம், உற்சவங்கள் என சிதம்பரதிர்க்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்!
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Atchaya said...
ReplyDeletesuper dharshan! thank you!
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
ராஜகோபுரம் பதிவுக்குள் அடங்க மாட்டேனென்கிறது!!!
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய நல்ல பகிர்வு... தொடருங்கள்...
ReplyDeleteநடராஜ தர்சனம் கிடைக்கப்பெற்றோம்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் அருமையான பதிவு ! நன்றி சகோதரி !
ReplyDeleteவழக்கம் போல் அருமையான தரிசனம்
ReplyDeleteஅருமையான் அறியாத விஷயங்களுடன்
பதிவு அற்புதம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
வழக்கம் போல் அருமையான தரிசனம்
ReplyDeleteஅருமையான் அறியாத விஷயங்களுடன்
பதிவு அற்புதம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
superb post
ReplyDelete3523+1+1=3525 ;)
ReplyDeleteபதிலுக்கு நன்றி.