Thursday, April 5, 2012

பங்குனி உத்திரம் - பேரூர் தேர்த் திருவிழா







கோவையை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய பட்டீசுவரர் உடனமர் பச்சைநாயகி அம்மனுக்கு, அரை கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டு ,5,449 சிறியரக கோகினூர் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, தாமரை மலரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த வைரக்கிரீடம் சுவாமிக்கு பொருந்தும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள,40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கிரீடம்வழங்கியுள்ளார்..



கோவை மாவட்டத்தில், அவிநாசித்தேருக்கு அடுத்தபடியாக, மேலைச்சிதம்பரம் என்ச் சிறப்பிக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர், மிகப்பெரியதாகும். 

வட்ட வடிவமான அமைப்பு கொண்ட இத்தேரில்,சிவனின் 27 அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில், கலையம்சத்துடன் 
கூடிய மரச்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. 
புதிய இரும்பிலான சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனிஉத்திர தேரோட்டம் வெகு சிறப்பாகும்..
பட்டீஸ்வரர், பச்சைநாயகி சமேதரராக திருத்தேரில் எழுந்தருளி கோவிலைச்சுற்றி திருவீதி உலா வந்து,பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.


ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா,
10 நாள் உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவில் தினந்தோறும் வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தேவார இன்னிசை,அதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு, மலர் பல்லக்கு, சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், மலர் ரதம், காமதேனு வாகனம் உலா, பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி அறுபத்து மூவர் காட்சி , திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி யானை சேவை பூஜைகள் அருள் பொழியும்......

அழகிய பேரூர் திருக்குளம்..பதினாறு வளைவுகள் கொண்டது..
பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒன்பதாம் நடைபெறும் 
இந்திர விமானத் தெப்பத்திருவிழா கண்கொள்ளாக் காட்சி..
மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திரத் திரு நாளில் சிறப்பான முறையில்ஸ்கந்த யாகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும்.. 

பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திகழும் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி திருவிழா  சிறப்பு வாய்ந்தது ...

பேரூர் தேர்த் திருவிழா

22 comments:

  1. நல்ல படங்களுடன் அழகான விளக்கங்கள்

    ReplyDelete
  2. படங்களுடன் கூடிய பகிர்விற்கு நன்றி.
    தேரும் கிரீடமும் கண்ணைக் கவர்கின்றன

    ReplyDelete
  3. கண்கொள்ளா காட்சிகள். தேர் திருவிழா ரம்யம்

    ReplyDelete
  4. கண்ணைக் கவரும் க்ரீடம்!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. VERY BEAUTIFUL PICTURES & FRUITFUL INFORMATION. THANKS FOR SHARING.

    ReplyDelete
  6. அழகிய காட்சிகளுடன் அழகிய அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Fantastic post with wonderful pictures.
    Heartiest blessings.

    ReplyDelete
  8. Fantastic post with wonderful pictures.
    Heartiest blessings.

    ReplyDelete
  9. முதல் படத்தில் பல நெல்லிக்காய்களையும், ஒரு சில சாத்துக்குடிப் பழங்களையும் அழகாக கோர்த்து மாலையாக்கி அம்மனுக்கு அணிவித்துள்ளதும், அந்த அம்மனின் அருள் பார்வையும், மற்ற அலங்காரங்களும் மிகச்சிறப்பாக உள்ளன. ;)))))

    ReplyDelete
  10. ஜொலிக்கும் வைரக்கிரீடம் நன்றாக தனியாகக் காட்டப்ப்ட்டுள்ளது சிறப்பாக உள்ளது.

    அதன் நடுவே அமைந்துள்ள பச்சைத் திலகம் போன்ற பச்சைக்கல் அழகுக்கு அழகு சேர்க்கிறது. ;)))))

    ReplyDelete
  11. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் தேரினை படத்தில் மிக நன்றாகக் காட்டி, [அதுவும் பல்வேறு கோணங்களில் காட்டி] நாங்களும் நன்கு தரிஸிக்கச் செய்துள்ளது, மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  12. மேலிருந்து கீழாக ஐந்தாவது படமும் அற்புத அலங்காரங்களுடன் வெகு அழகாகவே உள்ளது.

    அதில் கீழே படுத்திருக்கும் நந்தி நல்ல எடுப்பாக உள்ளது.

    16 வளைவுகள் கொண்ட பேரூர் திருக்குளம் சூப்பர்.

    அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இத்தேரோட்டத்தை இரவில் காண்பது மிக அழகாண காட்சி. இரவில் எடுத்த சிறிய புகைப்படம் ஒன்று உள்ளது தங்களின் மினனஞ்சல் முகவரி தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  14. தேரும், கிரீடமும் கண்ணைக் கவருகின்றன.

    உட்கார்ந்த இடத்திலேயே பேரூர் தேரை காண முடிந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. அழகான படங்கள்.தேர்த்திருவிழா பார்த்த திருப்தி

    ReplyDelete
  17. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  18. தேர்த் திருவிழா சிறப்பு. வைரக்கிரீடம் மிக அழகு. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. EniyavaiKooral said...//
    நாம் பிறந்த ஊரைப்பற்றி யார் எதைப்பற்றி எழுதினாலும் மனதில் நம்ம ஊரு என்ற கர்வம் வருவதை தடுக்க முடியாது.

    மிக அழகாக செய்தி தகுந்த நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள். இரவில் தேரோட்டம் இருப்பதால் பெரும்பாலான வெளியுர்காரர்கள் பார்பதற்கு வாய்பில்லாம்ல் போகிறது. இருந்தாலும் இரவில் இத்தேரோடும் காட்சி புதிதாக பார்பவர் மனதை பரவசப்படுத்தவே செய்கிறது. சிறு வயது முதற்கொண்டு கண்டுவருவருபவர்களுக்கு இது ஒரு செய்தியே இல்லை.

    கிளாரிட்டியான போட்டொ என்று சொல்லமுடியாது. முடிந்தால் அதே வலைப்பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.//

    தங்கள் வேண்டுகோளுக்காக படம் இணைக்கப்பட்டது..

    நிறைய படம் சிறப்பாக நாங்களும் எடுத்திருக்கிறோம்..பதிவின் நீளம் கருதி வெளியிடவில்லை..

    ReplyDelete
  20. 74. வாரதிபந்தன கோவிந்தா

    ReplyDelete