Panguni AdhiBrahmotsavam at Thiruvarangam
கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் வண்ணம் திண்ணம் நாரணமே
மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனிமாதத்தில் நடைபெறும்
கருடன் கொண்டு வந்த'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது.
இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவமூர்த்தியை நாச்சியாருடன்
எழுந்தருளச் செய்துவைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர்.
இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக்கிடைக்காத
பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.
வைர முடி சேவை பங்குனி மாதம் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும்கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திர நாளில் அரை வட்ட வடிவ இரட்டை யாளி முகம் கொண்ட பிரபையின் நடுவில் உபய நாச்சியார்களுடன் வேத ஸ்வரூபனான கருடனில், அவன் கொண்டு வந்த வைர முடியுடன் பெருமாள் பவனி வரும் அழகுக் காட்சி..
பிரஹலாதனின் மகன் விரோதசனன் பாற்கடலுக்குச் சென்று வைரமுடியை கொண்டு வந்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிடுகிறான்.
கருடன் அதை மீட்டுக்கொண்டு வரும்போது கண்ணனின் வேய்ங்குழல் நாதம் கேட்டு அவனுக்கு அணிவித்து விடுகிறார்.
கிருஷ்ணன் அதைப் பிறகு இந்த உற்சவ மூர்த்திக்கு அணிவித்து விடுகிறான். கலியுகத்தில் அதை வருடத்தில் ஒருநாள் பங்குனி உத்திரத்தன்று அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.
கருடனுக்கு வைநதேயன் என்றொரு பெயர் உண்டு.
இந்த முடி பெரிய திருவடியின் பெயரால் வைநமுடி என்று வழங்கப்பட்டுப் பின்னாளில் வைரமுடி என்று மருவியதாகவும் ஐதீகம்.
மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் பெங்களூருவிலிருந்து மைசூரு செல்லும் வழியிலுள்ளது நான்கு யுகங்களிலும் பிரசித்தி பெற்று விளங்கிய தலமான மேல்கோட்டை செல்வப்பிள்ளை பெருமாள் கோயில். .....
பிரம்மா சத்தியலோகத்தில் ஆராதித்து வந்த பெருமாளை சனத் குமார் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டார். அதை இங்கே பிரதிஷ்டை செய்தார். கால்ப்போக்கில் பூமியில் புதைந்ததாம்..
ராமானுஜரால் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன் உதவியுடன் ராமானுஜர்மேல்கோட்டை கோயிலைக் கட்டினார்.
இங்குள்ள உற்சவர் சிலை முகலாயர் காலத்தில் மேல்கோட்டையிலிருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்யாணி குளம்
ராமானுஜர் அங்கு சென்று பாதுஷாவின் ஒத்துழைப்போடு, பெருமாளை மீண்டும் மேல்கோட்டைக்கு வர சென்றார்.
அப்பெருமாளைக் கண்டதும், "வாராய் என் செல்வப் பிள்ளையே!' என்று அழைத்ததும், பெருமாளும் அவரது மடியில் வந்து அமர்ந்து கொண்டார்.
அவரை மேல்கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இதனால் உற்சவருக்கு,"செல்வப்பிள்ளை',
"சம்பத் குமாரர்' என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு.
இதனால் உற்சவருக்கு,"செல்வப்பிள்ளை',
"சம்பத் குமாரர்' என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு.
அழகன்தானே அரியுருவத்தானே' மேல்கோட்டை யோக நரசிம்மர்
Panguni Uthiram function at Sundapalayam, Coimbatore
தங்க சேஷ வாஹனம்,
பத்மாவதி தாயார் கோவில், திருச்சானூர், திருப்பதி.
பங்குனி திருவிழாவாகிய வைரமுடி சேவை விழா பற்றி மிக அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
ReplyDelete;) The post contains very beautiful pictures & the details are also very informative. Very Glad and Thanks for sharing.
ReplyDeleteஅழகான படங்கள் தெளி வான விளக்கங்கள் நன்றி
ReplyDeleteவைரமுடி சேவை பற்றி பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமேல்கோட்டையைக் காட்டியதற்கு நன்றி.
ReplyDeleteதெளிவான படங்களுடன் நல்ல விளக்கத்தோடு பகிர்ந்ததற்கு நன்றி
ReplyDeleteஎன்ன அழகு, எத்தனை அழகு!!
ReplyDeleteஎவ்வளவு அழகான படங்கள்.சிறப்பான பகிர்வு
ReplyDeleteஆஹா!எம் செல்வப் பிள்ளையே!
ReplyDeleteராஜமுடிக்கும் கதை உண்டு.ஒரு முறை அரசன் வைரமுடி சேவிக்க வந்த சமயம்
பெருமாள் திரு வீதி உலா முடிந்து வாஹன மண்டபம் எழுந்தருளி விட்டதால், உடனே கெம்புக்கல் பதித்த திருமுடியை சமர்ப்பித்து பெருமாளுக்கு சாற்றி அழகு பார்த்து தரிசித்து மகிழ்ந்தான். அன்றிலிருந்து பெருமாள் வைரமுடி சேவை முடிந்து வாஹன மண்டபத்தில் இருந்து ஆஸ்தானம் எழுந்தருளும்பொழுது ராஜமுடி சாற்றும் வழக்கம் ஏற்பட்டது.ராஜா சமர்ப்பித்ததால் ராஜமுடி என அழைக்கப் படுகிறது.
எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் “வாராய் எம் செல்வப் பிள்ளையே! “
என்றழைத்ததும் ஓடி வந்து பெருமாள் மடியில் அமர்ந்து கொண்ட அந்த ஐதீகத்தில் இன்றும் அங்கு பெருமாள்தான் பக்தர்களை நோக்கி ஓடி வந்து சேவை சாதிப்பார்.அதாவது முதலில் வலது பக்கம் இருக்கும் வீடு நோக்கி எழுந்தருள செய்து பின்னர் மறுபடி பின்னால் சென்று இடது பக்கம் இருக்கும் வீடு நோக்கி எழுந்தருள செய்வார்கள்.பக்தனை தேடி ஓடி வரும் செல்வப் பிள்ளையின் அழகையும் தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி
வைர முடி சேவை கண்டு மகிழ்ச்சி....
ReplyDeleteஅற்புதமான படங்கள் தந்ததற்கு நன்றி.
வைரம் போன்றே ஜொலித்திடும் படங்களும், வைரமுடி ஸேவை பற்றிய விளக்கங்களும் அருமை. ;)))))
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
Nice
ReplyDeleteசனியன்று வைரமுடி சேவை தரிசனத்தை நேரில் கண்ட திருப்தி நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
73. வானர ஸேவித கோவிந்தா
ReplyDelete2660+2+1=2663
ReplyDelete