Wednesday, April 11, 2012

திருச்செந்தூர் திருமுருகன்





விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்கு துணை முருகாவெனும் நாமங்கள் 
முன்பு செய்த பழிக்கு துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி 
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
-கந்தர் அலங்காரம்.

























சித்திரை விஷுவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்...
கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை மேல வாசல் விநாயகர் முன் கணபதி ஹோமம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்...
காலை ஸ்ரீசண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறும்..
மாலையில் சுவாமி ஜெயந்தி நாதர் வசந்தமண்டபத்தில் எழுந்தருளி தங்க ரதத்தில் வீதி உலா நடைபெறும்...
சித்திரையில் புத்தாண்டு பிறந்ததும், விஷு தீர்த்தம் ஆடுவதும் ,  
திருச்செந்தூரில் கடல் ஸ்நானம், நாழிக்கிணறு ஸ்நானம் விசேஷம்...
திருச்செந்தூர் திருக்கோவிலில் பன்னிரு கால வழிபாடுகள் நடைபெறுவதாகக் கூறுவர்..

பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. 
இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.
Thousands of devotees pulling the temple car on the 10th day of Masi festival
பொதுவாகவே 'அழகென்ற சொல்லுக்கு முருகா' என்பதற்கு ஏற்ப அழகாகவும் சாந்தமாகவுமே திகழும் முருகன் இத்தலத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 'சூரசம்ஹார மூர்த்தி' அழகுடன் ஆவேசமும் வீரமும் ஒருங்கிணைந்துக் காணப்படும் காட்சியை வேறெங்கும் காணமுடியாது.



பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. 

பச்சை செழுமையைக் குறிக்கும். 

தன்னைத் தரிசித்தவர்கள் வீட்டிலும், 

தரிசிக்க வராவிட்டாலும் வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை. 

 திருச்செந்தூர் உட்பிரகாரத்தை முறைப்படி சுற்றி வந்தால் அது 'ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.
பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் பேச்சாற்றல் பெற்ற இத்திருத்தலத்தில் மூலவர் சன்னதியில் சந்தனமும் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட பன்னீர் இலையில் விபூதியும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. 

இதை உண்ட, ஆதிசங்கரர் நோய் நீங்கி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் பாடிய. மகிமைகளைக் கொண்ட திருச்செந்தூர் தலம்..!

The elephants - Subramaniyaswamy temple, Tiruchendur

21 comments:

  1. காலையில் திருச்செந்தூர் முருகன் தரிசனம் கோவையிலேயே கிடைத்தது.

    ReplyDelete
  2. நெல்லையில் வசித்தபோது அடிக்கடி திருச்செந்தூர் செல்வோம். கடற்கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் போதும்; மனம் அமைதியுறும். மீண்டும் நெல்லைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி

    ReplyDelete
  3. திருச்செந்தூர் முருகனை கண்குளிர தரிசிக்க வைத்தத்ற்கு நன்றி

    ReplyDelete
  4. பச்சை சாத்தி வந்த இறைவனை வீட்டிலிருந்து தரிசித்து விட்டேன். இந்த வருடப்பிறப்பில் எல்லோர் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்பட்டு நோய் நொடி இல்லாமல் வாழ பிராத்தனை செய்து கொண்டேன்.
    உங்களுக்கு நன்றி.
    உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வலை அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. போன் மாதம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வந்தோம்.

    ReplyDelete
  6. சிறப்பான தகவல்களைக் கொண்ட பதிவிற்கு நன்றி. முதல் வார்த்தையை ”விழிக்குத் துணை” என்று மாற்றிவிடுங்கள்.

    ReplyDelete
  7. சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் முருகன் தேரோட்டத்தை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது...நல்ல பதிவு!

    ReplyDelete
  8. சின்ன வயதில் லீவுக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் வில் வண்டியில் திருச்செந்தூர் ட்ரிப் உண்டு.இப்பொழுதும் போன ஏப்ரலில் தரிசித்தேன்.
    பதிவில் பல தகவல்கள் அறிந்தேன்.

    ***************

    உம்மாச்சி பதிவுகளாவும் போட்டு அதுல
    பொங்கல் கஞ்சி அப்பம் அதிரசம் தேன்குழல்னும் போட்டா நானெல்லாம் என்னத்த உம்மாச்சி சேவிப்பேன்? :-))

    ReplyDelete
  9. ; 497 ஆவது நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    முடிந்தால் பிறகு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  10. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருச்செந்தூர் திருமுருகனை நேரில் பார்த்தது போல இருக்கிறது. பலப் பல படங்கள் - விளக்கங்களுடன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete
  11. சமுத்திரக்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலுக்கு, ஒருசில நிர்பந்தங்களால், இதுவரை இருமுறை சென்று தரிஸிக்கும் பாக்யம் கிடைத்துள்ளது.

    ஏனோ நம் தொந்திப்பிள்ளையார், சிவன், அம்பாள். ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீஹனுமன் போன்ற தெய்வங்களின் மீது உள்ள ஓர் ஈடுபாடு எனக்கு இந்த ஸ்ரீமுருகன் மேல் ஏற்படுவது இல்லை.

    இன்று மதியம் 3 மணி முதல், வெள்ளி இரவு 8 மணி வரை, வெளிவேலைகளும், கலந்துகொள்ள வேண்டிய சுப நிகழ்ச்சிகளும் ஏராளமாக உள்ளன. நள்ளிரவு நேரங்களில் மட்டுமே பதிவுகளில் சிலவற்றைப் படிக்க முடியும்.

    கருத்துக்கள் கூறவும் சற்றே தாமதமாகலாம்.

    நெருங்க இருக்கும் 500 ஆவது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ;))))) பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிறு வயதில் திருச்செந்தூருக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன்.

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  13. ஆமாம், அந்த ஆசிரியர் நல்லவரா அல்லது கெட்டவரா?

    ReplyDelete
  14. தங்கள் பதிவு, செந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் – என்று பாட வைக்கிறது.

    ReplyDelete
  15. மேலிருந்து 8 ஆவது படத்தில்

    ஆறு குழந்தைகளை
    குளத்தினில் ஆறு பொற்றாமரைகளில்
    காட்டி, நடுவில் அம்பாள் நிற்பது போலக் காட்டியுள்ளது அருமை.

    இருப்பினும் அம்பாளுக்குப் பின்னால் உள்ள ஓரே ஒரு கைக்குழந்தை மட்டும் அம்பாளை ’பாராமுகம்’ என்று நினைக்காதோ?

    பாவம் அந்தக் கைக்குழந்தை. ;(

    அம்பாள் மன்மிறங்கி அதைத் திரும்பிப்பார்த்தால் தான் என்னவாம்?

    ReplyDelete
  16. ஆறுபடை வீடுகளில்


    01 திருப்பரங்குன்றம்
    02 திருச்செந்தூர்
    03 பழநி
    04 ஸ்வாமிமலை
    05 திருத்தணி

    இதுவரைப் போய் பார்த்தாச்சு.

    06 பழமுதிர்ச்சோலை

    போக நினைத்து மதுரை அழகர் கோயில் வரை கூட போனோம். அதன் பிறகு மேலே ஏறிச்செல்ல முடியாமல் பலத்த மழைபெய்ததால் திரும்பி வந்து விட்டோம்.

    ReplyDelete
  17. வழக்கம் போல

    தேரோட்டம்

    தோகை விரித்தாடும் மயில்

    அல்ங்கரிக்கப்பட்ட 2 யானைகள்

    கோபுர தரிஸனங்கள்

    கும்பாபிஷேக தரிஸ்னம்

    கடற்கரைய்டன் காட்டியுள்ள
    அழகிய முருகன் படம்

    முதலிய எல்லாமே அருமை.

    ReplyDelete
  18. அன்பின் வை.கோ

    பழமுதிர்ச் சோலைக்குச் செல்வதற்கு இப்பொழுது சாலை வசதிகல் உண்டு - மகிழ்வுந்துகளில் செல்லலாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. எங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் திருச்செந்தூர். அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. 83. வட்டிகாசனே கோவிந்தா

    ReplyDelete