Friday, April 6, 2012

புனித - பெரிய வெள்ளி


"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே!
மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை நினைத்து உலக வரலாற்றில் 
மிக முக்கியமான நாள் என்பதால் "பெரிய வெள்ளி' ,ஆங்கிலத்தில் 
"குட் பிரைடே'  என்க் கொண்டாட்ப்படுகிறது...
இயேசு உயிர்துறந்த நாளுக்கு முன்புள்ள நாற்பது நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சுகபோகத்தைத் துறந்து உபவாசம் மேற்கொள்கிறார்கள். 


பெண்கள் ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் தவிர்த்து, அர்ப்பண வாழ்வை நடத்துகிறார்கள். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. 

சுக போகத்தை ஒதுக்குவதால் மிச்சப்படும் பணத்தை ஏழைகளுக்கு உதவி, புண்ணியம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
நோன்பிருக்குங்கால் நோயாளி போல
வேடமணிந்து வேதனை காட்டி
போலித் தனத்தில் புகழ்பெற வேண்டாம்


முகத்தை கழுவி முடியினைச் சீவி
அகத்துத் தூய்மையை முகத்தினில் காட்டி
அடுத்தவர் நோன்பை அறியா வண்ணம்
ஆண்டவன் மட்டுமே அறியும் வண்ணம் இருந்தால்
அது தான் இகத்திலும் பரத்திலும் சுகத்தைத் தரும்

 
ஒருவர் செய்யும் தவறுகளுக்கு வேறொருவர் தண்டனை 
ஏற்கும் நிலை வந்தால் அவரை "பலிஆடு' என குறிப்பிடுவார்கள்..


பாவங்களுக்காக ஆடு மரித்ததன் மூலம் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' எனக்கூறி மன ஆறுதல் பெறுகிறார்கள்..

அந்த வகையில் இயேசுகிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், "இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் எல்லாருக்காகவும், அவர்களின் பாவங்களுக்காகவும் பலி ஆடாக இயேசு அவர்கள் பாவங்களை தன்மேல் ஏற்று, தன் ஜீவநாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமானார்.

புனிதவெள்ளி நாளில் பாவம் இல்லாத 
உலகை உருவாக்க உறுதியேற்கிறார்கள்..

இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற 
நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. 
அவரது பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிறார்கள்..
ஈஸ்டரை ஒட்டி ஜெருசலேம் நகரில் மக்கள் பவனி வருவது குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது..
சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை "பெரிய வியாழன்' என்றும், அவரது மரண நாளை "புனித வெள்ளி' என்றும் நினைவு கூறப்படுகிறது,,. 
சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை சந்தித்து, தான் கூறிய படியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான, "ஈஸ்டர்' பெருநாளே, உலக வரலாறுக்கு வித்திட்ட நாளானது. 


இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 
30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். 
இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
"" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,'' 
என பைபிள் தெளிவுபடுத்துகிறது.
ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். 
தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். 

ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவ வாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது.  'ஈஸ்டர்' உணர்த்தும் தத்துவம் இதுவே. 
உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்:
இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். 
நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை,
இயேசுவின் மரணம் புதைப்பல்ல,விதைப்பு.
மனுக்குலத்தின் மீட்பு மண்ணுக்குள் மரணிக்குமா ?
இல்லை அது தரையில் பயணிக்கும்.
சதிகளின் சட்டங்கள் உடலை வருத்தின,
நீதியின் தேவன் புது உயிரை வருத்தினார்.

நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

வரலாறுகள் எல்லாம் நரை முடி தடவ, 
புது வரலாறு ஒன்று புதிதாய் இதோ இங்கே நிகழ்ந்தது.

இது, ஏழைகளுக்காய் விழுந்த தங்கத் துண்டு,

மக்கள் தொண்டு கொண்டு வாழ்வை வென்றவரின் 
ஓர் இறவாக் காவியம் இது.

இயேசு, மனிதராய் வந்ததால் மனுமகனானவரல்ல,
மனுமகனாகியதால் மனிதனாய் வந்தவர்.

எனவே சாவு அவருக்கு சாய்வு நாற்காலி.
சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு, 
மரணம் அவருக்கு விசுவாச ஊழியன்.

இதோ, இந்த மகத்துவ சகாப்தம் இங்கே முற்றுப் பெறவில்லை… ஆரம்பமாகிறது.

இது மண்ணில் விழுந்து மனதில் முளைக்கும் விதை.
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

23 comments:

  1. வணக்கம் சகோ,
    உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பேன் என்றாலும் அதிகம் பின்னூட்டம் இட்டது கிடையாது.ஆயினும் இம்முறை பாராட்டி தெரிவிக்க வேண்டும் என தோன்றியது.

    வாழ்த்துக்கள்.

    ஒரு உண்மையான் ஆன்மீகவாதிக்கு மதம் ஒரு பொருட்டில்லை எனபதை மீண்டும் நிரூபித்து இருக்கிறீர்கள்.ஒரு நாத்திகர் மத சார்பற்றவ்ராக இருப்பதில் வியப்பில்லை.மத போட்டியும்,வெறியும் நிறைந்த பதிவுலகிலும், இக்காலத்திலும் எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பான விடயங்களை தேடி எத்து வழங்கும் தங்கள் பணி மக்த்தானது.

    மதம் உண்மையோ இல்லையோ ஏதோ ஒரு வழியில் அனைவரையும் நிம்மதி கொடுத்து ,சந்தோஷப்படுத்தி , ஒன்று படுத்தினால் நன்றாக் இருக்கும் எனற சிந்தனைக்கு வந்து விட்டேன்.

    மதமும் ஆன்மீகமும் வேறு என்பதை உணர்த்தியதற்கு நன்றி!!!!!

    நன்றி

    ReplyDelete
  2. என்னிடத்தில் வேறுபாடு இல்லை.. என்வழி நடக்கும் உனக்கேன் வேறுபாடு என சொல்லாமல் சொல்லும் முதல் படமே மனத்தைக் கவர்ந்தது சகோதரி..
    கருணையின் உருவகம் பாவங்களின் மீட்பர் பற்றிய இப்பதிவு மிக நன்று சகோதரி.
    புனிதவெள்ளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு கண்ணதாசனின் கவிதையும்
    இயேசுவுடன் கூடீய கண்ணன் படமும்
    தங்கள் விளக்கங்களும் அதிகம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. ;) புனித வெள்ளி என்கிற பெரிய வெள்ளி பற்றி நன்கு அறிய முடிந்தது.

    படங்கள், விளக்கங்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் என அனைத்துமே வழக்கம்போல் அருமையாக உள்ளன.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. முதல் படம், இரு வேறு பெரிய மதங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, கைகோர்த்துக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு.

    [ஏற்கனவே தங்கள் பதிவு ஒன்றில் இதே படத்தைப்பார்த்த ஞாபகமும் வந்தது]

    ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச்செல்ல பல்வேறு மார்க்கங்களும் பல்வேறு வாகன வசதிகளும் இருப்பது போல, பரம்பொருள் ஒன்றாயினும், அவரவர் விருப்பப்படி வசதிக்கேற்ற படி வாகனங்களையும், மார்க்கங்களையும் தேடிக்கொள்வது போலத்தான், பல்வேறு மதங்களும் வழிபாட்டு முறைகளும் இடையில் தோன்றியிருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    இன்றைய “புனித வெள்ளி” நாளுக்கு ஏற்ற சிறப்பான பதிவும் பகிர்வும்.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. நானும் திரு சார்வகன் அவர்களின்,
    //ஒரு உண்மையான் ஆன்மீகவாதிக்கு மதம் ஒரு பொருட்டில்லை// என்ற வரிகளை வழி மொழிகிறேன்.முதல் படம்
    மக்களின் மனதைப் பண்படுத்தும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல விதைகள் என்றுமே பயன்தராமல் போவதில்லை.உங்கள் ஆன்மீகப் பதிவுகளும் அப்படித்தான் ஆன்மீகத்தோழி !

    ReplyDelete
  10. உங்களோட ஒவ்வொரு படமும் உயிரோட்டமா இருக்கு.எப்போ என்ன பண்டிகை வருதுன்கிரத உங்க பிளாக்குக்கு வந்தாலே தெரிஞ்சிடும் போல.

    ReplyDelete
  11. தமிழில்தான் பைபிளை முதன் முதலுல் மொழிபெய்ர்த்தார்கள் என்பது புது தகவல்.

    ReplyDelete
  12. புனித வெள்ளி சிறப்பு பகுதி அருமை. படங்கள் கண்ணாஇயும், கருத்தையும் கவட்கிறாது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. எம்மதமும் சம்மதம். உங்கள் படங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அருமை. வாழ்த்துகள்.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  14. புனித வெள்ளியன்று வாசிக்க நல்லதொரு பதிவு. படங்கள் அருமை. கிறிஸ்துவும், கிருஷ்ணனும் படம் பொக்கிஷம். கருணை மழை பொழியும் இயேசு படமும் அருமை. புதுமை. பொருத்தமான வரிகள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  15. அருமையான "பெயிண்டிங்". முதல் படம் ஒன்றே போதும், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை எடுத்துரைக்க.

    ReplyDelete
  16. மத நல்லிணக்கத்தோடு, ஒரே பக்கத்தில், வண்ணப் படங்களுடன் இயேசுவின் வாழ்க்கை. ” எல்லா மதமும் என் மதமே; எதுவும் எனக்கு சம்மதமே “ – என்ற உயரிய எண்ணம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. Rajeswari, Somehow i am not able to give comment in your post. Sorry dear, I am having a 0 knowledge in computer so cannot do anything.
    But i cannot resist giving comment in your post. Yesterdays post i just love the Kanadasans quoting about virutham. It is apt for all//

    மிக்க நன்றி தோழி...

    சிற்ப்பான கருத்துரை வழங்கி உற்சாகமூட்டும் தங்கள் இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. இந்தப்பதிவில் உள்ள முதல் படம் நேற்று 18/04/2012 வலைச்சரத்தில் பேசப்பட்டுள்ளது.

    அதற்கு என் வாழ்த்துகள்.

    என் கண்களில் அது பட்டதால் தங்களுக்குத் தகவலாகத் தெரிவித்துள்ளேன்.

    ReplyDelete
  19. 75. ஏழுமலையானே கோவிந்தா

    ReplyDelete
  20. மிகவும் தாமதம்.
    அற்புதமான பதிவு. உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete