Friday, April 27, 2012

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்



ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் மகனாகி, இராமபிரானின் கட்டளைக்கு இணங்க சீதாபிராட்டியைத் தேடி தண்ணீர் நிரம்பிய கடல் மீது தாவி, வான்வழியில் பறந்து, பூமியில் (மண்ணில்) பிறப்பெடுத்த அச்சீதா பிராட்டியைக் கண்டுபிடித்து, எதிரி நாடாகிய இலங்கைக்கு நெருப்பு வைத்துவிட்டுத் திரும்பிய வெற்றி வீரர் ஆஞ்சநேயர்.

பக்தியினால் பெற்ற பலத்தினால் பஞ்சமுக உருவம் கொண்டு தான் வணங்கிய பகவானையே பாதுகாத்த பெருமை ஆஞ்சநேயருக்கு உண்டு.

ராமருக்கும்,ராவணனுக்கும் நடந்த போரில், ராவணன் தன் உறவினர்களுடன் அனைத்து படைவீரர்களையும் இழந்தான். 

கடைசியாக போரில் ராமரை நேருக்கு நேர் சந்தித்தான். இதனால் தன் படைக்கலங்களை இழந்து நிராயுதபாணியாக நின்றான். 

எனவே அவனைக்கொல்ல மனமின்றி, '' இன்று போய் நாளை வா'' என்று அனுப்பி வைத்தார் ராமர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தான் திருந்தத்தான் ராமர் வாய்ப்பளித்திருக்கிறார் என்பதை உணராத ராவணன், மற்றொரு அசுரனான மயில்ராவணனை உதவிக்கு அழைத்தான். 

தன்னிடம் உதவி கேட்டு வந்த ராவணனுக்காக, மிகவும் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான் மயில் ராவணன். 

இதன் மூலமாக பகவான் ராமரையும், லட்சுமணனையும் பலியிட திட்டமிட்டான். 

இந்த திட்டத்தை விபீஷணன் தெரிந்து கொண்டு,ராமரிடம் தெரிவித்தான். 

இந்த கொடிய யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை ராமர் அனுப்பி வைத்தார்.வாயுவின் மைந்தனான ஆஞ்சநேயர், யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர்,கருடன்,வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர், இந்த புனிதப் பணியில் வெற்றி பெற அந்தந்தக் கடவுளர்கள் தங்களின் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். 

இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சரூபத்தில் விஸ்வரூபம் எடுத்தார். 

இப்படி எடுத்த விஸ்வரூபத்தினால், மனித குல நல் வாழ்விற்காக மயில்ராவணனை அழித்தார்.


இப்படி பஞ்சமுகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததனால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். 


அதனாலேயே வெற்றியையும், வளத்தையும் குறிக்கும் 'ஜயமங்களா' என்ற விசேஷ புகழாரம் இந்த ஆஞ்சநேயருக்கு சூட்டப்பட்டுள்ளது.

தம்முடைய வாலினால் கோட்டை அமைத்து ராமலட்சுமணர்களை ஆஞ்சநேயர் பாதுகாக்க, மாயாவி அரக்கனோ உத்தமன் விபீஷணனின் உருவம் பூண்டு தந்திரமாக அவ்விருவரையும் பாதாள உலகிற்கு அழைத்துச் சென்று விடுகிறான்.
அவனுடைய பெரும்பலம் கருதி, 
பெரிய திருவடியான ஸ்ரீ கருடன், 
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ வராக மூர்த்தி, 
ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகக் கடவுள்) 
ஆகியோரின் அருளை வேண்டி, தம்முடைய திருமுகத்துடன் அந்த நால்வரின் திருமுகங்களும் இணைய, பஞ்சமுக ஆஞ்சநேயராகப் பேருருவம் கொண்டு மஹிராவணனை அழித்த ஆஞ்சநேயர் பகவானாகிய ஸ்ரீராமபிரானையும், அவர் தம்பி ஸ்ரீலட்சுமணனையும் பத்திரமாக மீட்டார். 
அஹங்காரத்தில் வீற்றிருந்த இராவணனின் சிம்மாசனமும்
ராமபக்தியில் சிறந்து உயர்ந்த அனுமனின் வாலாசனமும்..
பக்தியின் பெருமையைப் பாருக்கு உணர்த்திய வரலாறு இது.
இந்த ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கம்பீரமான 36 அடி உயரம் கொண்டவர். 118அடி உயர கோபுரம், 1200 கிலோ மணி ....
18மீட்டர் அகலம், 40மீ ஆழமும் கொண்ட தீர்த்தக்கிணறு உண்டு. 

இன்று பாப்பாஞ்சாவடி என்று அழைக்கப்படும் இப்பகுதி தொன்மையும், சீர்மையும் கொண்ட திருத்தலம் ஆகும். 


மெய்யுணர் முனிவர்களும், சித்தர்களும், அன்புநெறி போற்றிவாழ் அடியார்களும் பஞ்சவடியில் வாழ்ந்துள்ளனர். 


தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாக 'பஞ்சவடீ' என்ற இடத்தில் பஞ்சமுக வடிவம் கொண்ட ஆஞ்சநேயரை மக்கள் வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. 

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள், தங்களது மேம்பட்ட கல்வியறிவிற்காகவோ, தங்களைப்பிடித்த நோயிலிருந்து விடுபடுவதற்காகவோ இந்த பஞ்சவடீ தலத்திற்கு வந்திருக்கின்றனர். 

தேவப்ரஸ்னத்தில் ஆஞ்சநேய பகவான், விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயராக தானே பிரசன்னமாவார் என்றும், இவர் தன்னை வணங்குபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிப்பார் என்றும் தெரியவந்தது. 

இப்படி பிரமாண்டமாக விஸ்வரூப ஆஞ்சநேயரை அமைக்க 40 அடிக்கும் அதிகமான 150 டன் எடையிலான ஒரே கருங்கல், சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது நிலத்தில் கிடைத்தது. 

அதை வைத்து மகாபலிபுரம் அருகே கேளப்பாக்கத்தில் உள்ள முத்தையா ஸ்தபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார். 

இந்த ஆஞ்சநேயரைப் போலவே இந்த சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள எந்திரமும் 16''க்கு16''என்ற அளவில் 11 கிலோ எடை கொண்டதாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்,நரசிம்மர்,ஹயக்ரீவர்,வராஹர்,கருடர் ஆகிய கடவுளர்களின் அருளோடு தனது ஆற்றலையும் கொண்டு விளங்குகிறார். இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு:

நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றி மற்றும் லட்சுமி கடாட்சத்தையும், 

ஹயக்ரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல் மற்றும் ஆன்மிக பலத்தையும், 

வராஹரின் அருளால் மனத்துணிவையும், 

கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்தை விலக்கும் சக்தியையும், 


ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி-சகல சவுபாக்கியங்கள்-வளம்-மற்றவர்களுக்கு ஆபத்து என்றால் துணிந்து உதவி செய்வது 
போன்றவற்றை அருளுகிறார்.



அபிஷேக, அலங்காரம் செய்ய லிப்ட் வசதி உள்ளது.

திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சவடியில் 12 ஏக்கர் பரப்பில் கோயில் கட்டப்பட்டது. 

. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது.

 நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது.

ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள்.

அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.
ImageImage

உற்சவர் பட்டாபிராமர், வேணுகோபாலன் அலங்காரம்,
 நவராத்திரி திருவிழா, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்.









ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்,
வெள்ளி கவசம், கௌரிவாக்கம், சென்னை



ஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்சநேயர், பெங்களூர், 

TRYFRUITS,  முந்திரி திராட்சை, பழம் அலங்காரம்,  ராகிகுட்டா ஆஞ்சநேயர்




அரக்கன் அனுமன் வாலைத்தான் தீ வைத்தான்
அனுமன் தீவைத்தான் இலங்கைத் தீவைத்தான்



Monkey Buffet Festival: 

23 comments:

  1. பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு அநேக நமஸ்காரங்கள். ;)))))

    ReplyDelete
  2. இப்போது தான் 'அனுமன்' என்ற புத்தகம் படித்து வருகிறேன். அந்த சம களத்தில் தங்களிடம் இருந்து வந்த அனுமன் பற்றிய பதிவு நிறைவைத் தருகிறது. புற்ற்ஹிய பல தகவல்களும் தெரிந்தேன். புகைப் படங்கள் அனைத்தும் அருமை. முடிந்தால் பஞ்சவடி திருத்தலத்திற்கு சென்று வருகிறேன்.

    ReplyDelete
  3. ஆஹா! கடைசிபடத்தில் அழகான பழமலையின் மேல் ஏறி குரங்குக்கூட்டம் கும்மாளம் அடிக்கின்றனவே!

    எப்படித்தான் இவற்றைப்பிடித்தீர்களோ?
    ;)))))

    ReplyDelete
  4. ஆஞ்சினேயரின் அருள் பெற்றோம். படங்கள் வழக்கம்போல் அருமை

    ReplyDelete
  5. உக்காந்த இடத்லேந்தே எல்லா ஆஞ்ச நேயர்களையும் தரிசனம் பண்ண முடிந்தது. நன்றி

    ReplyDelete
  6. /அஹங்காரத்தில் வீற்றிருந்த இராவணனின் சிம்மாசனமும்

    ராமபக்தியில் சிறந்து உயர்ந்த அனுமனின் வாலாசனமும்../

    படமும் படத்திற்குத்தகுந்த வாசகங்களும் சிறப்பாய் உள்ளன.

    சம்பூர்ண இராமயணம் என்று அந்தக் காலத்தில் ஒரு படம் வந்தது. அப்போது நான் சின்னப்பையன்.

    தூதனான ஹனுமனுக்கு அமர இருக்கை தராமல் இராவணன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, ஹனுமன் தன் வாலை மிகப்பெரியதாக நீட்டி அதையே அப்படியே தேர்வடம் போல சுருட்டிக்கொண்டு நல்ல உயரத்தில் அமரும் காட்சியில் நான் ஒரே குஷியாகிப்போனதுண்டு.

    அந்த ஞாபகமே வந்தது இப்போதும்.

    ReplyDelete
  7. நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றி மற்றும் லக்ஷ்மி கடாக்ஷகம்

    ஹயக்ரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல் மற்றும் ஆன்மிக பலம்

    வராஹரின் அருளால் மனத்துணிவு

    கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்தை விலக்கும் சக்தி

    ஆஞ்ஜநேயரின் அருளால் மன அமைதி-சகல சவுபாக்கியங்கள்-வளம்-மற்றவர்களுக்கு ஆபத்து என்றால் துணிந்து உதவி செய்வது


    போன்றவற்றை பஞ்சமுக ஆஞ்ஜநேயரை வழிபடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகப் பெற்றிடலாம் என்பது நல்லதொரு அருமையான தகவல், இன்றைக்கு நம் தகவல் களஞ்சியத்திடருந்து.

    கேட்கவே மனதுக்கு இதமாகவும் தைர்யம் அளிப்பதாகவும் உள்ளது.

    ரொம்ப ரொம்ப நன்றிகள்.

    ReplyDelete
  8. மேலிருந்து 2 ஆவதாகக் காட்டியுள்ள கோபுரமும், அதில் சங்கு, ஸ்ரீசக்ரம், பெருமாள் நாமம் அதன் மேலே “ராம ராம” நாமங்கள் என வெகு அழகாகவும் பளிச்சென்றும் உள்ளன.

    ReplyDelete
  9. வெள்ளி கவசமிட்ட, சென்னை கௌரிவாக்கம், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சூப்பர்.

    கீழிருந்து ஏழாவது படத்திலுள்ள நம் டிரேடு மார்க் வடைமாலை ஹனுமனை தரிஸிக்க வாய்ப்புக்கொடுத்துள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.

    கண்களுக்கு மட்டும் நல்ல விருந்தாக உள்ளது. ஒரு வடையையும் எடுத்து புட்டு சாப்பிட முடியவில்லை. உங்களைக்கேட்டால், ’பார்த்தால் பசிதீரும்’ என்பீர்கள்.

    அது எப்படி தீரும்?

    அதுவும் வடை என்றால் எனக்குத் தனிப்பிரியமுண்டு.

    மிளகு போட்டு ஹனுமனுக்கு சாத்திய வடையென்றால் அதன் ருசியே தனியல்லவா!

    கண்டேன் சீதையை என்பது போல இல்லாமல் பதிவு பற்றிய தகவல், சற்றே தாமதமாக வந்துள்ளது. OK OK.

    எப்படியோ வந்ததில் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  10. கோயிலின் இருப்பிடம் போன்ற தகவல்கள் கொடுத்துள்ளது எல்லோருக்கும் மிகவும் பயன்படக்கூடியது.

    நாளை சனிக்கிழமை ஸ்திரவாரம், இன்றே ஸ்ரீ ஹனுமன் தரிஸனம், நாளை காலையும் மீண்டும் தரிஸிக்க ஏதுவாக.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    =========================
    2
    =
    ஸ்ரீராமஜயம்

    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்

    ஸ்ரீராமதூதா! ஸ்ரீராமபக்தா!!
    ஸ்ரீஆஞ்ஜநேய மஹாப்பிரபோ!!

    இந்த் மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஒவ்வொரு நாளும் நல்ல நாளாகப் பிறக்கணும்; நான் நல்ல சேதி கேட்கணும்; மன வருத்தங்கள் மறையணும். நல்லவை மட்டுமே என் கண்களில் படணும்.

    அருள் புரிவாயா அப்பனே?

    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்.

    ReplyDelete
  11. அருமையான தரிசனம்,.. அதுவும் முதல் படம் ஜூப்பர் :-)

    ReplyDelete
  12. அஞ்சனை மைந்தனின் பணிவு,ராமபக்தி, புகழ் ,வரலாறு அருள் அனைத்தும் அற்புதமானது! அருள் சுரக்கும் படங்கள்!

    ReplyDelete
  13. ஹனுமத் தர்சனம் பெற்றேன்.
    தன்யனானேன்.

    சுப்பு ரத்தினேன்.

    ReplyDelete
  14. ஆஞ்சனேயர் வாழ்க. அவரைப்பற்றி எழுதியவர்களும் வாழ்க, வாழ்கவே,

    ReplyDelete
  15. ராமாயண கதையும் இந்த தளத்தின் தகவல்களும் அருமை. சிலை மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  16. மயில் ராவணன் கதை படித்திருக்கிறேன்....மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்...ஜெய் ஸ்ரீ ராம்!

    ReplyDelete
  17. உங்கள் பதிவின் மூலம் ஆஞ்சநேயரின் அருள் பார்வையும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க பெற்றோம்.
    நன்றி. படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  18. அருமையான படங்களுடன் ஆபத்பாந்தவான். அருமை. வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. வழக்கம்போல் படங்களுடன் பதிவும் அருமை. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  20. வெகு அழகான பகிர்வு. DRYFRUITS ஆஞ்சநேயரும், கடைசி படம் என ஒவ்வொன்றும் அழகு தான்.

    ReplyDelete
  21. அருமையான பதிவு.
    நல்ல தரிசனம்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. 104. ஆஸ்ரிதபக்ஷா கோவிந்தா

    ReplyDelete