
![[Murugan1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit1Tr3d_tm4Yz-sN8_4lxJ4vbqMpl5HQaiXjE2OP5KrNyOEogz6fMclaruJ4m30_cSWA8nxipIgxQwhLiQNYHfavc3ysupCmwNR0MIC-HPJi_5grGidoo7_BnjE5sY_orkReJ1Tey3Nxo/s320/Murugan1.jpg)



சிந்தனை செய் மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை – செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவணபவ குகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே ..மனமே..

விருப்பாச்சி ஆறுமுகநாயனார் கோயில் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி – தீர்த்தத் தொட்டியில்,முருகன் நாக சுப்பிரமணியர் என்று திருக்காட்சி தருகிறார்..
ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை
நாக சுப்பிரமணியர் நீக்குவதாக ஐதீகம்.
ராகு – கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் அன்பர்கள் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து பலனடையலாம்.
கருவறையில், நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன்
நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சியளிக்கிறார்.
கோயிலுக்கு அடியில் ‘தீர்த்தம்’ ஒன்று வற்றாமல் எப்போதும் சுரந்தபடியே இருக்கிறது.
இதன் பெயராலேயே இத்தலம் ‘தீர்த்தத் தொட்டி’ எனப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும்
என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத்தன்று இங்கு வெகு சிறப்பாக விழாக்கள் நடைபெறுகிறது.
தீர்த்தத் திருவிழாவை ‘நிலைபெற்ற உயிர்கள் பேரின்பப் பெருங்கடலில் மூழ்குதல் என்று சொல்லப்படும் ஒரு பாவனை...
கோயில்களுக்குச் சிறப்பைத் தரும் திருவிழாக்கள் அடியார்களின் அகத்தூய்மையையும் புறத் தூய்மையையும் வளர்த்து இறையுணர்வை ஊட்டுகின்றன.

உத்தமமான யாகம் எனப் பொருள்படும் மகோற்சவத்தில் கொடியேற்றமும் அதற்கு முன்னுள்ள கிரிகைகளும் இறைவனின் படைத்தல் தொழிலைப் பாவனையாகக் காட்டுகின்றன.
இதை அடுத்துவரும் திருவிழாக்கள் காத்தலையும்
தேர்த்திருவிழா அழித்தலையும்
தீர்த்தோற்சவம் அருளலையும்
சூர்ணோச்சவம் மறைத்தலையும்; குறிப்பனவாகும்.
“
மன்னுயிர்கள் பேரின்ப வாரிதியிற் படிதலெனப்
பன்னுமொரு பாவனையாம் பத்தாநாள் விழாவன்றே ..என்கிறது புராணம்...

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா… (என்ன கவி பாடினாலும்)
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை
அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
மதுரையை அடுத்த அழகர்கோவில் அமைந்துள்ள அழகர்மலை உச்சியில் என்றுமே வற்றாத அதிசய நூபுர கங்கை சுவை மிகுந்த தீர்த்தம்..
மலையில் தவழ்ந்து ஓடி அபூர்வ மூலிகைகள் மீது பட்டு வருவதால் அருமருந்தாகக் கருதப்படுகிற நூபுர கங்கை, சிறு பாதை வழியாக வெளியே கொட்டுகிறது. மற்றொரு பாதைவழியாக ஒரு தொட்டியில் வந்து சேர்கிறது. அந்தத் தண்ணீரை எடுத்து பக்தர்கள் நீராடுகிறார்கள்.
இதில் தொடர்ந்து 15 நாட்கள் நீராடினால் தீராத நோய்கள், வினைகள் விலகிச் செல்லும் ...
நூபுரகங்கை நீர் அழகருடைய திருமஞ்சனத்திற்கும், அபிஷேக பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் நீராடினால்
சிலை கறுத்து விடுமாம் .
திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம் என்கிற வரிசையில் அழகர் கோவிலின் பிரசாதம் சம்பா தோசை.தனிச்சுவைக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தில் தயாராவதே காரணம்.

தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான மகாபலிபுரத்தில் மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.

திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள அம்மைக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது
மதுரபாஷினி அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளார்.அகத்தியர்
மதுரபாஷினி அம்பாளை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,. பேச்சுத்திறமைக்காகவும் பூஜை செய்வது விஷேசம்..
பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் பங்குனி உத்திரம் நாளில். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலுக்கு சென்று வணங்கி வந்தால் மதுரபாஷினி அம்பாள் மனோபலமும் தருவாள்..

பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தரும் சந்திரன் பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்கும் பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தை அதிகம் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும்.
பல நற்பலன்களையும் கூடுதலாக அளிக்கும்....

தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் திருக்கருகாவூர் வந்து முல்லைவன நாதரை பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதை தரிசிக்கலாம்...
பங்குனி உத்திரத்தன்றும் முல்லைவன நாதர் தீர்த்தவாரி கண்டருளுகின்றார்
The annual Panguni Peruvizha of Sri Kapaleeswarar Temple in Mylapore

பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பது இல்லத்தில் மங்கள விழாக்கள் நடக்க அருளும்..


பத்துமலை திரு முருகன், கோலாலம்பூர், மலேசியா.
திருவிரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர். ஆலயத்தின் சிம்மகுளத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த யந்திரம் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது

தமிழகத்திலேயே உயரமான மாங்காடு ஸ்ரீ காமாக்ஷியம்மன் தங்க ரதம்
![[GoldCar.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqSbDQwy7Tk7qLMCKtLViWaHdRdSoR-UpBOqL1ndqyiXSWkUU8pcclSh9Q1JS-Dh8wfL_hbTCEuF4WugCvbOS5ooIIbpJXVw7_7VHIeIXxxBfDc9pACXU5h4VvOllmquzPGIRd2yeGQxk/s400/GoldCar.jpg)
ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே தேராக அமைந்துள்ள சக்ரராஜ விமானம் எனப்படும் கிண்ணித்தேர்
நாளெல்லாம் திருநாளாய் நமை காக்க வரும் கமடேஸ்வரி அன்னைக்கு பங்குனியில் வசந்த நவராத்திரி. பூந்தேர்
![[kalikambal3.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX9tHFnsDiv2M1tLRD7J-OYzhWkQO1oC3ml8j9Xp69uKvGrgLZmw0l3XNnzLjaCsiIvOaX4HGQodgYsKuzg-cOlLRqasVi__h0U1szANp50lHn2HFejhRBoUUxwN6rShyxLIFwqKq5gZM/s400/kalikambal3.jpg)
கபாலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா



![[7.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqdLt6qFke84eTq2MyLlcGiK7_EVRPIEKnSw0o6o-wV8jm0xiAR4u3LjkUIWoOOARP6GITXOBIKxoTMHetJ-FG2_gKI1SE2Qcwx9yjRAanyf46iyQWllL77xQV2ahdMKAQ0XI8x29FWWg/s1600/7.jpg)
மதுரை

நல்லூர் கந்தசுவாமி
அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
லண்டன் வோல்த்தம்ஸ்ரோ நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்ரிருவிழா

;) GLAD TO NOTE THE VERY ATTRACTIVE PICTURES & FRUITFUL INFORMATION.
ReplyDeleteTHANK YOU VERY MUCH, MADAM.
சிந்தனை செய் மனமே....
ReplyDeleteபாடலுடன் ஆரம்பித்த பகிர்வு அருமை....
பங்குனி உத்திரம் வரை தினம் தினம் சிறப்பு பகிர்வு தான் உங்கள் பக்கத்தில்...
வாழ்த்துகள்...
parka parak pathinaayiram kan ventume panguni utirathin mahimaiyai
ReplyDeleteஉற்சவ நிகழ்வுகளுக்கும்,ஆக்கல் அழித்தல் அருளல் போன்ற இறையின் தொழிலுக்கும் உள்ள சம்பந்ததிற்கு ஏதேனும் தொடர்பு காரணம் உள்ளதா?தாங்கள் அறிந்திருப்பின் பின்னூட்டம் மூலமோ அல்லது மற்றொரு பதிவின் மூலமோ தயவு கூர்ந்து விளக்கி தெளிவு படுத்த இயலுமா?
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
Aha what a pleasent experience of viewing all dieties and rathams by sitting at Home.
ReplyDeleteWounderful. Thanks Rajeswari.
viji
அருமையான ஆன்மிக பதிவு. பங்குனி உத்திர திருவிழாவை எங்கள் கண் முன்னே கொண்டுவந்த உங்களுக்கு என் நன்றி.
ReplyDeleteஅருமையான ஆன்மிக பதிவு. பங்குனி உத்திர திருவிழாவை எங்கள் கண் முன்னே கொண்டுவந்த உங்களுக்கு என் நன்றி.
ReplyDeleteஅருமையான பகிர்வு. எத்தனை எத்தனை படங்கள்....
ReplyDeleteபங்குனி உத்திரம் இன்று
ReplyDeleteபன்னிரு கையோன் புகழை
பழனி வேலன் முன் நின்று
பாடிப் பாடி மகிழ்ந்திடுவோம்.
பழ வினைகள் களைந்திடுவோம்.
தங்கள் வலைக்கு வந்தது
பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியது
தெய்வங்கள் சன்னதியில் நின்றது
தேர்களின் வடம் பிடித்தது
திருவின் அருள் பெற்றது
எல்லாமே கனவோ !
இல்லை. நடக்கும் நிசமே.
சுப்பு ரத்தினம்.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
72. கஜராஜ் ரக்ஷக கோவிந்தா
ReplyDelete2657+2+1=2660
ReplyDelete