


கேரள மாநிலத்திலுள்ள காலடி என்ற கிராமத்தில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற உத்தம தம்பதியருக்கு மழலைச் செல்வம் இல்லாத குறையைப் போக்க மண்ணுலகத்தில் மனிதப் பிறவி எடுத்தார் சங்கரர்.

குருகுலம் சென்று படிக்கும்போது, அயாசகன் என்ற ஏழை அந்தணரின் வறுமையை அநாயசமாக போக்க அன்பு பொங்க அம்பாளை வேண்டி "கனகதாரா ஸ்தவம்' என்ற துதியைப் பாடினார்.
தங்க நெல்லிக் கனிகள் தாரையாகப் பொழிந்தன.
இது சங்கரர் செய்த அற்புதம்.
அறத்தை நிலை நிறுத்தவே சங்கரரின் அவதாரம் என்றாலும்,
அன்பின் சக்தியால் நிகழ்த்திய ஆச்சரியம் இது!
அற்புதங்களைவிட அன்பே முக்கியம். சங்கரர் இயற்றிய முதல் கிரந்தம்
கனகதாரா ஸ்தோத்திரம்தான்.

அன்னையின் அன்புப் பிடியிலிருந்து அவிழ்த்துக் கொள்ள தவித்த தவிப்பு- படிக்கும் போதே கல்லும் கரையும்.
அன்புமயமான சங்கரர் அன்னையிடம் அகிலத்திற்கே அன்பைப் பொழிய வேண்டும்'' என்ற கருணாமூர்த்தி "அந்திம காலத்தின்போது வந்து உங்கள் ஈமக்கிரியைகளைச் செய்வேன்' என்று தாயிடம் வாக்களித்துச் செல்லும்போது- அன்புமிக்க ஒரு மகனாக மனதில் நிலைக்கிறார்..
நர்மதை நதிக்கரையில் குரு கோவிந்த பகவத்பாதரைக் கண்டவுடன் குருவையும் கோவிந்தனையும் இணைத்து "பஜகோவிந்தம்' என்ற துதியைப்பாடி, கோவிந்தனின் அருளைப் பெறும்படி செய்த அன்பின் ஊற்று சங்கரர்..
காசிமா நகரத்தில், சனந்தனர் என்ற சீடனை மற்ற சீடர்கள் தவறாக நினைக்க, அவர்களுக்கு சனநந்தனரின் குரு பக்தியை விளக்க கங்கை நதியில் தாமரையை மலரச் செய்து உணர்த்திய அன்பு- சநந்தனரை பத்மபாதராக்கிய பரிவு.
கங்கா நதி தீரத்தில் சண்டாளனாக வந்த பரமேஸ்வரனைக் குறித்து "மனீஷா பஞ்சகம்' என்ற அற்புதமான பாடலைப் பாடி நம்முடைய
மன மாசுகளை எல்லாம் மாற்றிய மனித நேயம்...

நர்மதை நதிக்கரையில் உள்ள மாகீஷ்மதி நகரிலுள்ள தீவிர மீமாஸ்சகரான மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்று, அவருக்கு சுரேஸ்வரர் என்ற தீக்ஷாநாமம் சூட்டி அன்பு சீடராக்கிக் கொண்டார்.
மண்டன மிஸ்ரரின் மனைவியான சரஸவாணியின் சிக்கலான கேள்விகளுக்கு அழகாக விடை சொல்லி, சரஸவாணியை சாரதாம்பிகையாக சிருங்கேரியில் ஸ்தாபித்த ஆனந்த மயமான
அன்பு நிறைந்தவர் சங்கரர்..

பிரயாகையில், மீமாஸ்சக கொள்கையில் இருந்த குமரில பட்டருக்கு
அத்வைதத்தை உபதேசித்து ஆட்கொண்ட அன்பிற்கு ஈடு இணையே இல்லை.
ஸ்ரீசைல க்ஷேத்ரத்தில் கோவில்கொண்டுள்ள மல்லிகார்ஜுனரைக் கண்ட மாத்திரத்தில் அன்பு பொங்க- பக்தி வெள்ளம் கரை புரண்டோட நூறு பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்.
"மனம் மகேஸ்வரனின் திருவடிகளை நாடி அங்கேயே நிலை பெற்று விடுவதே பக்தி' என்று நமக்கெல்லாம் அன்பில் செய்த உபதேசமே அது!
எந்த தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ அத்தனைக்கும் அவரே நடமாடும் சான்றாக இருந்தார்.
உலகிலுள்ள சகல ஜீவராசிகளையும் தம்மில் கண்டு, தம்மை சகல ஜீவ ராசிகளிடமும் கண்டு பேரன்பின் உருவமாகவே திகழ்ந்தார்.
ஸ்ரீ வலி என்ற க்ஷேத்ரத்தில் ஊமைப் பிள்ளையை அழைத்து வந்து தன்னைச் சரணடைந்த பெற்றோர் மகிழ, "அத்வைதம்' பேச அருள்புரிந்த கருணை வள்ளலல்லவா சங்கரர்!
அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டு ஹஸ்தா மலகர் என்று பெயரிட்டு மகிழ்ந்த அன்புத்திரு உரு சங்கரர்.
சிருங்கேரியில் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த சமயம்,
அறிவு குறைந்த ஆனந்த கிரி என்ற சீடனை மற்ற சீடர்கள் அலட்சியப்படுத்தியதைக் கண்டு ஆனந்த கிரியை அறிவுக்களஞ்சியமாக்கி அனுக்ரஹம் செய்து, கடல் மடை திறந்தாழ் போன்ற "தோடகாஷ்டகம்' பாட வைத்து. கிரியை "தோடகாச்சார்யார்' என்ற தீக்ஷா நாமம் சூட்டி மகிழ்ந்தார். சங்கரர்.

அனைத்தையும் துறந்த அற்புதத் துறவி அன்பின் உருவமாகவே இருந்தார். அந்திமக் காலத்தில் வருவதாக அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது.
தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார்.
ஆதிசங்கரர் அகிலம் எங்கும் அத்வைதத்தை நிலை நாட்டினார்.
ஆறு சமய வழிபாடுகளையும் நம் போன்றவர்களுக்காகவே செய்தார். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைப் பாமாலைகளால் அர்ச்சித்தார்.
ஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர். எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக்கொள்ளும். அன்பிற்கு அழிவே இல்லை.




;) ஆதி சங்கரர் பற்றிய அழகான் படங்களுடன் கூடிய விளக்கமான பதிவு.
ReplyDeleteஸ்ரீ சங்கர ஜயந்தியான இன்று வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்த்கள்.
ஆதாசங்கரரின் அவதார மகிமைகளை அறிந்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர் எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக்கொள்ளும் அன்பிற்கு அழிவே இல்லை.//
ReplyDeleteஅன்பிற்கு அழிவே இல்லை.
அன்பின் வடிவாய் வாழ்ந்து ஞான உபதேசம் செய்த ஸ்ரீ ஆதிசங்கரரைப் பற்றிய வரலாற்றை மிக அழகாய் , எடுத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் எல்லாம் அருள் மழை.
நல்ல பகிர்வு.... படங்களும் அருமை.
ReplyDeleteஅத்வைத ஞானத்தின் அறிமுகம் ஆதி சங்கரர் மூலமே
ReplyDeleteஅனைத்துலகமும் அறிந்தது.
அது நீ. (ஆக இருக்கிறாய்.) தத் த்வமஸி .
அஹம் ப்ரஹ்மாஸ்மி ( நான் பிரம்மனே )
எனும் வேதோபனிஷத் வாக்கியங்கள்
ஆதி சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியது
அவரது அற்புத ஞானமே.
அந்த ஞானப்பிழத்தைப் பிளந்து
ரசத்தினை வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.
மாத்ருகா பஞ்சகத்தைப் பற்றி ஒரு நாள் எழுதுங்கள்
விரிவாக.
சுப்பு ரத்ன சர்மா.
http://pureaanmeekam.blogspot.com
sury said.../
ReplyDeleteமாத்ருகா பஞ்சகத்தைப் பற்றி ஒரு நாள் எழுதுங்கள்
விரிவாக.
சுப்பு ரத்ன சர்மா.
http://pureaanmeekam.blogspot.com
படிக்கும் போதே கலங்கவைக்கும் மாத்ருகா பஞ்சகம் நெகிழவைக்கும்..
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.
ஆதி சங்கரரின் படங்களுடன் தெளிவான விளக்கங்கலுடன் பகிர்வு நல்லா இருக்கு
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteOn this great day I bow down to the SatGuru.
ReplyDeleteJaya Jaya Sankara,
Hare hare Sankara.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தியை முன்னிட்டு, அவருடைய திருவுருவப்படத்தை, ஒரு குட்டித்தேர் போல அமைத்து மின்விளக்குகளால் அலங்கரித்து, பின்னால் வேதவித்துக்களின் வேத பாராயணங்கள் ஒலிக்க திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். இப்போது தான் கீழே போய் தரிஸித்து விட்டு பிரஸாதம் வாங்கி வந்தோம்.
ReplyDeleteஇது ஒவ்வொரு வருஷமும் இங்கு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
இப்போது செல்வது திருச்சி நன்றுடையான் கோயிலிலிருந்து புறப்பட்டது.
இன்னொன்று அத்வைத ஸபா என்ற அமைப்பிலிருந்து இனிமேல் தான் வரும்.
இன்று தங்கள் பதிவையையும் படித்து விட்டு, என் நாடகப்பதிவுகளையும் மனதில் நினைவு கூர்ந்து, தரிஸனம் செய்ததில், மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. ;)))))
ஆதி சங்கரர் பற்றி அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி அம்மா.
102. ராமானுஜஹரி கோவிந்தா
ReplyDelete2880+3+1=2884
ReplyDelete