Sunday, April 15, 2012

கர தரிசனம்
















இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். 

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. 
berunda
இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். 
கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் 
(அயம்மே ஹஸ்தோ பகவான்...). 
animated gifsanimated gifsanimated gifsanimated gifsanimated gifs
திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். 
அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். 

மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். 

முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும். 

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். 
ஹஸ்த ரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. 
அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, 
காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். 

கராக்ரே வஸதே லக்ஷ்மீ  கரமத்யே ஸரஸ்வதீ !
கர மூலே து கெளரீ ஸ்யாத்  ப்ரபாதே கரதர்சனம் !!
கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, 
விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. 

நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப்பார்த்தால் கந்தன் கை வேல் போல் இருக்கும்..


காலையில் எழுந்து கைகளை இதமாக தேய்த்துவிடுதல் இரத்த ஓட்டத்தையும், வெப்பஓட்டத்தையும், மன இயக்கத்தையும் சீராக்கும் .. மனம் லேசானால் மூச்சும் சீராகும்.. 
அன்றைய அலுவல்கள் உற்சாகத்துடன் தொடங்கமுடியும்... 

இருபது நிலவுகளாய் ஒளிவீசும் நகங்களையே மகுடங்களாய் கொண்டு விளங்கும் உணரும் சக்தி பெற்ற விரல் நுனிகளை கண்களாய் போற்றுவோம்..

நகக்கண் இருபது அகக்கண் ஒன்று ஆக மனிதருக்கு இருபத்தி ஒரு கண்கள் பிரகாசிக்கின்றன.  

ஹீலிங் ,ரெய்கி போன்ற மருந்தில்லா மருத்துவ முறைகளில் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை விரல்களே...

சிற்பியின் விரல்கள் கல்லில் களிநடம் புரிந்து காலத்தால் அழிக்கமுடியாத சிற்பங்களை நுணுக்கமாக உருவாக்கும்..
குயவனின் விரல்கள், ஓவியன் , கலைஞர்களின் கைத்திறன் மதிப்பிடமுடியாதவை..

குடும்பத்தலைவியின் கைவண்ணம் அன்றாட சமையலாக , இல்லத்தின் எழில் ஒளி விளக்காகப் பிரகாசிக்கும்..

வீட்டை லஷ்மிகடாட்சம் நிறைந்த இல்லமாக்குவது கிரஹலஷ்மிதானே! 
hands line 207x300 The Hands   Our Personal Signatureanimated gifs of handsanimations of hands - fist
ஊர்கூடினால் தேர் ஓடும் என்பது அனுபவ மொழி.. கூட்டுப்பிரார்த்தனைக்கு  அபரிமிதமான சக்தி உண்டு..
கைகளைத்தட்டி உற்சாகப்படுத்துதல் வாழ்வுக்கு வளம் சேர்க்கும்...வெற்றிக்கு வழிவகுக்கும்....

ஆலயங்களில் பஜனைகளில் கைகளைத்தட்டி தாளமிட்டு பாடுவது மன அழுத்தத்தையும், இரத்த அழுத்தையும் மன இறுக்கத்தையும் குறைத்து மகிழ்ச்சி அளிக்கும்.. 

முதுமைக் கால மூட்டுவலிகளை விரட்டி ஆரோக்கியம் அளிக்கும் மாமருந்து என்பது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை... 
கண்கள் கவிபாடினால் விரல்கள் மொழி "பேசும்"

விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ?
குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?....விழி...

அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?...விழி..


நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க 
சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால் 
விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?...விழி..

கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன், 
குரு உந்தன் அருள் இருந்தால் 
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் 
நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது 
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா ?

21 comments:

  1. கரங்கள் இல்லையென்றால் மனித வாழ்வே நாசமாகிவிடும்.

    "கராக்ரே லக்ஷ்மி" என்ற ஸ்லோகத்தில் "ப்ரபாதே" என்று எங்கோ படித்த நினைவு. என் நினைவு தவறாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் கரத்தைப்பற்றிய செய்திகள் அருமை.

    கர்ணனின் கொடைக்கு கொடுத்து சிவந்தது என்று அவர் கைகளைப்பற்றி சொல்வார்கள்.
    கைதட்டல் படமும் விளக்கமும் அருமை.
    முன்னோர்கள் எவ்வளவு காரண காரியத்துடன் செயல் ஆற்றி உள்ளார்கள்!
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கைகளின் இயல்பியல் பற்றிய
    அருமையான ஆக்கம் சகோதரி...

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் கரத்தைப்பற்றிய செய்திகள் அருமை.
    நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கைகளுக்கு இவ்வளவு சிறப்ப்புகளா?
    அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  6. கைகளின் முக்கியத்துவத்தை விளக்கியது அருமை ...கைகளை சுத்தமாக வைத்திருப்போம்....

    ReplyDelete
  7. ’கை’யைப்பற்றி ‘கர தரிஸனம்’ என்ற இந்தப்பதிவினில் ஒரு ‘கை’ பார்த்து விட்டீர்களே! ;))))) சபாஷ்.

    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
    மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  8. மிகவும் அழகான தகவல்கள்.

    கரத்தைப் பற்றி காரசாரமாகத் தந்துள்ளீர்கள்.

    நானும் கரவொலி எழுப்பி உங்களைப் பாராட்டிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. காட்டியுள்ள எல்லாப்படமுமே அழகு தான் என்றாலும், அந்த வளைகள் நிறைய அணிந்து, பல மோதிரங்கள் அணிந்து, பரத நாட்டிய சின் முத்திரை காட்டும் கரங்கள் இரண்டும் அழகோ அழகு அல்லவா!

    நகங்களில் சிகப்பு வர்ணம் பூசப்பட்டு கவர்ச்சியாக இருப்பினும் கூரிய ஆயுதம் போல தோன்றுகிறதே!

    NAIL CUTTER ஐ தயாராகக் கையில் எடுத்துவிட்டேன். வெட்டி அவற்றை சீராக்கிவிட துடிக்கிறது என் கரங்கள்.

    ஆனால் என்னால் வெட்டிவிட முடியவில்லையே! ;(

    ReplyDelete
  10. கரங்களைப்பற்றிய விளக்கங்களும் படங்களும் அருமை!

    ReplyDelete
  11. சிற்பியின், குயவனின், ஓவியனின், கலைஞர்களின், உழைப்பாளிகளின், குடும்பத்தலைவியின், கிருஹ லக்ஷ்மியின் கரங்களுக்கெல்லாம் மேலாக இந்தப்பதிவினைத் தந்த தங்கள் கோவைத் தங்கக் கரங்களை, கண்ணில் ஒற்றி மானஸீகமாக வணங்கத் தோன்றுகிறதே எனக்கு.

    மிகவும் வித்யாசமான, விளக்கமான, அருமையான, அழகான, திருக்கரங்கள் பற்றிய அற்புதமான பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள். ;)))))

    ReplyDelete
  12. ’கை’ யைப்பற்றி எழுதுவதெனத் தீர்மானித்து இன்று அதை ஒரு ’கை’ பார்த்து விட்டீர்களே!

    என்று நான் கொடுத்திருந்த முதல் கமெண்ட் எங்கோ காணாமல் போய் விட்டதே?

    கைகளால் மறைக்கப்பட்டு விட்டதோ, கணினியியால் காணாமல் போக்கப் பட்டு விட்டதோ? அடியேன் அறியேன்.

    அதனால் மீண்டும் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  13. உங்கள் படங்களின் தரிசனம் அருமை...

    ReplyDelete
  14. கரங்கள்..படங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று..நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

    ReplyDelete
  15. கரங்களைப் பற்றி இவ்வளவு அழகான பதிவா! அருமை.

    ReplyDelete
  16. கைகளை அலட்சியம் செய்யாமல் எங்களுக்கு எவ்வளவு மிக மிக முக்கியம் என்று சொல்லும் பதிவு.பாராட்டுக்கள் ஆன்மீகத்தோழி !

    ReplyDelete
  17. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete