Sunday, April 29, 2012

முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா





மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. 



வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷபக்கொடி ஏற்றப்
பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் சிற்ப்பு தீபாராதனைகள் நடைபெறும்...

மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் ப்ரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டு சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. 


  • பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.
  • பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். 
  • நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.


 பல உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். 

 அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். 

திருக்கல்யாணம் தேரோட்டம் .நடைபெறுகிறது. 

தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். 

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளுவார்


தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். 

கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார்.  

அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.


மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழா
 முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டு கவருகிறது


முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்மவதாரம், ராமவதாரம், கிருஷ்ணவதாரம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்து மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில்  இருந்து புறப்பட்டு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில்  திருக்கண்களில் எழுந்தருளுவார்... 


தல்லாகுளத்தில் இருந்து அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி பூப்பல்லக்கில் புறப்பட்ட அழகரை வழியனுப்பி வைப்பார்கள்...  

அழகர், அழகர்கோவிலை அடைந்ததும் பெண்கள் திரண்டு வந்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். 








விநாயகர் புறப்பாடு

22 comments:

  1. அணைத்து புகைப்படங்களும் அருமை. சித்திரைத் திருவிழா பற்றி களை கட்டிய பதிவு

    ReplyDelete
  2. ;)
    ”முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா” வெகு அழகான தலைப்பு!

    ReplyDelete
  3. ;) 520 க்கு அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ;) வழக்கம்போல் எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன.

    விளக்கங்களும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. காதில், எனக்குப்பிடித்த மிகப்பெரிய ஜிமிக்கிகளுடன் காமதேனு வாகனமும்,

    குதிரை வாகனத்தின் மேல் பவனி வரும் கள்ளழகரும் மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  6. தலைப்பும் படங்களும் மிக அருமை.....

    ReplyDelete
  7. மதுரை மீனாக்ஷி ....................
    ..... விழாக்கோலம் பூண்டு வருகிறது

    என்பதற்குக்கீழே காட்டியுள்ள படத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்களை மொய்மொய்யென போட்டோ கவரேஜ் செய்துள்ளது வெகு அருமை/தனித்திறமை. மிகவும் பவர்ஃபுல் காமெராவாக இருக்கலாம். ;)

    வெள்ளி ரிஷபவாகனம், யாளி வாகனம், ஸ்வாமி அம்மனாக் 9 ஆம் நாள் குழந்தைகள் எல்லாம் நல்லாவே இருக்கு.

    சந்தோஷம்.

    ReplyDelete
  8. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  9. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  10. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  11. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  12. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  13. Aha, Neril parkatha kurai poi vitathamma ungal post.
    Very nice pictures.
    viji

    ReplyDelete
  14. மதுரைக்காரனான என்னை மீண்டும் அங்கே உலாவச் செய்து தரிசிக்கச் செய்ததற்கு மனம் நிறைந்த நன்றி.

    இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயம் கிடைக்கும் போது பார்வையிட்டு கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  15. சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் படங்கள் அருமை.

    ReplyDelete
  16. படங்களும் பதிவும் நல்லா இருக்கு ,. நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. மதுரையில் எல்லா திருவிழாக்களையும் நேரில் பார்த்து ரசித்து இருந்தாலும் , உங்கள் பதிவில் அன்னை மீனாட்சி , அழகர் திருவிழாக்களை பார்ப்பது ஆனந்தமே.

    படங்கள் எல்லாம் அழகு.

    நன்றி.

    ReplyDelete
  18. சித்திரை திருவிழா களை கட்டி விட்டது. மீனாட்சியை தரிசித்து வருடங்கள் பல ஆகி விட்டது. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. 105. கோவிந்தா ஹரி கோவிந்தா

    ReplyDelete