தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே
காசிநிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே –
பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் பின்னும்
நேமியம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே –
காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கி விடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே – தேன்
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீ
அன்பதாய்ச் சேர்ந்தால் அனைத்துனைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே–
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்
அது வானகம் பாடிய முதல் பாடல் அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ர்ரி மெர்ரி கிரிஸ்த்மஸ்...ஹாப்பி ஹேப்பி கிரிஸ்ட்மஸ்....
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெர்ர்ரி மெர்ரி க்ரிஸ்ட்மஸ்...ஹாப்பி ஹேப்பி கிரிஸ்ட்மஸ்...........
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்க்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமபிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசு பிதா
ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்,
அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று
தன்னை நாடி வந்த மக்களுக்கு கர்த்தராகிய
ஏசு கிறிஸ்து உறுதியளித்தார்.
மானுட இனத்தை மட்டுமின்றி, மரம், செடி, கொடிகள் உட்பட தான் இப்புவியில் படைத்த ஜீவன்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் கைவிடாமல் காத்துவரும் இறைவன், எவருடைய வேண்டுதலையும் மறுப்பதில்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்தவே தேவ குமாரராகிய ஏசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்! மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்! என்று கோலாகலமாய் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!
கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!
இந்தியில் படா தின் (பெரிய நாள்) என்று இந்த கிறிஸ்துமஸ் தினத்தை அழைக்கின்றனர். அன்றைய தினம் இந்தியாவில் தேசிய விடுமுறை.
தென் மாநிலங்களில் இந்துக்களை போலவே அகல் விளக்குகளை வீட்டில் ஏற்றி வைத்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். அத்துடன், வழக்கமாக கிறிஸ்துமசின் ஒரு சின்னமான பைன் மரத்துக்கு பதில், பல மாநிலங்களில் வாழை மரம் கட்டியும், மாவிலை கட்டியும் வீட்டின் முகப்பை அலங்கரிக்கின்றனர்.
சுற்றுலா தலமான கோவாவில்தான் கிறிஸ்துமஸ் மிக பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். கொண்டாட்டத்தை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இந்த கால கட்டத்தில் கோவாவில் குவிகின்றனர்.
எங்கு பார்த்தாலும் ஸ்டார்கள், மின் விளக்கு தோரணங்கள், ஷாப்பிங்குகளில் மக்கள் கூட்டம், சிறப்பு பிரார்த்தனைகள், குழு பாட்டு என கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து வருகிறது.
வாழ்வின் ஒளியாய் திகழும் கர்த்தரின் பிறப்பை உளமார மகிழ்ந்து கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடுகிறோம் ..!
பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........
அன்புருவானவர் வந்தார்- மண்ணில் மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம் அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம் பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம் இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில் சிரிப்பார் மகிழ்வாய் மனமே
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அனைத்தும் சிறப்பு ...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெகு அழகானப் படங்கள்... அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...
ReplyDeleteஆன்மீகப் பதிவர் என்று பெயர் பெற்ற தாங்கள், இந்துமத கடவுள்களை மட்டுமல்லாது, ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் மறக்காமல் வாழ்த்துச் செய்திகளை தெரிவிப்பது, உங்கள் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் பற்றிய உங்களது இன்றைய பதிவும் வழக்கம் போல ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெகு அழகானப் படங்கள்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அழகான படங்களும் இயேசுவின் பாடல்கள் அனைத்தும் அருமை.....!
ReplyDeleteஎன் இனிய நல் நத்தார் வாழ்த்துக்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.....!
உங்களின் ஆன்மீக தாகம் அசத்தலாய் இருக்கிறது.எல்லா மதமும் நம்மதமே என்ற தங்களின் கொள்கைக்கு எடுத்துக்காட்டாய் இந்த பதிவு உள்ளது.வாழ்த்துக்கள்
ReplyDeleteகிறிஸ்துமஸ் சிறப்பு பதிவு அருமை!
ReplyDeleteCute baby.. Merry Christmas Mother..
ReplyDeleteஅற்புதமான தகவல் மற்றும் அழகான படங்கள்.. அசத்துங்கள் அம்மா!!
ReplyDeleteவாழ்க வளமுடன் ..
Deleteஇனிய கிறிதுமஸ் நல் வாழ்த்துக்கள்.
அசத்தலான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த
இனிய நன்றிகள்..!
மனதும் கண்களும் நிரைந்த சகோதரி யேசுவின் அழகான படங்கலாலும் பாடல் பதிவினாலும்! மிக அருமை!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்!
எம்மதமும் சம்மதம் என்று நிரூபிக்கிறது தங்களின் வலைப்பூ. படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக என்னுடைய இரு மகள்களும் அந்த பூனைக்குட்டி படங்களை ரசித்தார்கள்
ReplyDeleteHappy Christmas and a very Happy New Year.
ReplyDeleteஇந்த நாளுக்கேற்ற இனிமையான பதிவு.
ReplyDelete>>>>>
வழக்கம்போல அழகழகான பொருத்தமான படங்கள்.
ReplyDelete>>>>>
விளக்கங்கள் ஒவ்வொன்றும் ..... அடேங்கப்பா !
ReplyDelete>>>>>
http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_25.html
ReplyDelete’கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்’ என்று தாங்கள் கொடுத்துள்ள் இணைப்புக்கு மீண்டும் சென்றேன்.
அதிலுள்ள மொத்த கமெண்ட்ஸ்கள் : 61
அதில் யானை தந்தங்கள் போல
மிக நீண்ட என்னுடைய கஜக்கோல்
கமெண்ட்ஸ் மட்டுமே : 30
தங்களின் பதில்கள் மட்டும்: 18
மற்றவர்களின் கமெண்ட்ஸ்:13
தங்கள் பதில்கள் 18ல் தாங்கள் அன்புடன் நகைச்சுவையாக எனக்கு அளித்துள்ள பதில்கள் மட்டுமே : 8 [எட்டு ;)))))))) ]
எல்லாவற்றையும் மீண்டும் படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன்.
>>>>>
சென்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தத்தங்களின் பதிவினையும், குறிப்பாக அதற்கு நான் எழுதியுள்ள கமெண்ட்ஸ்களையும், வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய, எங்கள் உஷா டீச்சர் பெரிதும் பாராட்டி எழுதியிருந்தார்கள்.
ReplyDeleteஎனக்கு அதில் ‘பின்னூட்டப்புயல்’ என்றதோர் பட்டமும் அளித்து சிறப்பித்திருந்தார்கள்.
அந்த நாள் .... ஞாபகம் ... நெஞ்சிலே .... வந்ததே !
>>>>>
வலைச்சரம் 25.12.2012
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2007/02/blog-post_26.html
1) இராஜராஜேஸ்வரி
வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இவரின் பெரும்பாலான பதிவுகளில் நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.
ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள், வை.கோ
ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று
சொன்னால் மிகையாகாது.
1] அன்பென்ற மழையிலே
2] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்//
திருமதி. உஷா டீச்சர் [வேலூர்] அவர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.
>>>>>
அன்றைக்கு தங்கள் தளம் முதல் அறிமுகமாக வலைச்சரத்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டதற்கு இன்று நான் [மிகச்சரியாக ஓர் ஆண்டுக்குப்பின்] என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். அன்பான மனமார்ந்த நல்வாழ்த்துகள். எல்லாவற்றிற்கும் நன்றியோ நன்றிகள்.
>>>>>
வணக்கம் அம்மா
ReplyDeleteகிருஸ்துமஸ் தின வாழ்த்துப் பதிவு மிக அருமை. வழக்கம் போல் ஜொலிக்கிரது. எல்லோரும் எல்லாமும் பெற நாமும் இந்நாளில் வேண்டிக்கொள்வோம். பகிர்வுக்கு நன்றிகள்..
உலகெங்கும் உள்ள அனைத்து கிருஸ்துவ நண்பர்களுக்கும் என் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள்..
ReplyDelete25.12.2012 க்கான வலைச்சர இணைப்பினைத் தவறாகக்கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். இதோ சரியான இணைப்பு:
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html
நாளுக்கேற்ற நல்லதொரு ஆன்மிகப் பதிவு! பகிர்விற்கு நன்றி!
ReplyDeletevery nice pic
ReplyDeleteஅழகிய படங்கள். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDelete