தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி ..!
காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் .
வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும்.
ஆனால் திருக்கழுக் குன்றம் தீர்த்தக் குளத்தில்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு தோன்றுகிறது.
வேதகிரீஸ்வரர் ஆலயம் திருக்கழுக்குன்ற மலைமீது உள்ளது. மலையடிவாரத்தில் தாழக் கோவில் உண்டு .. இங்குள்ள இறைவன்- பக்தவத்சலர்; இறைவி- திரிபுரசுந்தரி.
புகழ் பெற்ற தீர்த்தம் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு)வன விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
மார்க்கண்டேய மகரிஷி வந்தபோது ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார்.
அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது.
அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித் தார் என்கிறது தல புராணம்.
அன்று முதல் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து
வலம்புரிச் சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.
இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம் புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன..!
சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வரும்.
மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும்.
தயாராக உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்.
பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு,
புதிய சங்கினால் அபிஷேகம் செய்வார்.
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர்.
ஈசனை இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்நிதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து பூஜித்து விட்டுச் செல்வதற்கு ஏற்றாற்போல் கோவில் விமானத்தில் உள்ள ஒரு துவாரம் வழியே இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்தவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர்.
இடி இறங்குவதால் ஆலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்கள் தான் அவை.
பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம்.
முடிவில் "சாருப்ய' என வரம் கேட்பதற்குப் பதில், "சாயுட்சய' என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக நண்பகல் நேரத்தில் , சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர்.
அருமையான தகவல் மனதில் மகிழ்ச்சியைத் ததும்ப வைத்தது .
ReplyDeleteஇந்திரன் இடியாக வந்திறங்கி எம் பெருமானை வலம் வந்து
பூஜித்துச் செல்வதும் ,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
ஆற்றில் மிதந்து வருவதும் இதுவரை நான் அறியாத தகவலே .
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
கண்கள் குளிர்ந்தன!..
ReplyDeleteகண்கள் குளிர்ந்தன!..
ReplyDeleteபடங்களுடன் விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகட்டுரைப் போட்டி: http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
படங்களும் பகிர்வும் அழகு அம்மா.
ReplyDeleteஇன்றைய பதிவு தங்களில் வெற்றிகரமான
ReplyDelete1 1 1 1 வது பதிவாகும்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;)
>>>>>
சங்கடங்கள் தீர்க்கும் சங்காபிஷேகம் என்ற தலைப்பில் இன்றும் தங்களின் ஸத் ஸங்க, சங்க நாத முழக்கம் அருமையான உள்ளது.
ReplyDelete>>>>>
இன்று பல்வேறு விசேஷங்கள் சேர்ந்துள்ளன.
ReplyDelete1] கார்த்திகை மாத திங்கட்கிழமை [க்ருத்திகா ஸோமவாரம்]
2] பித்ருக்களுக்கான ஸர்வ அமாவாசை
3] அதுவும் ஸ்ரீதர ஐயர்வாளை நினைவு கூறும் கார்த்திகை அமாவாசை
4] ஸோமவாரத்தில் அமாவாசை சேர்ந்து வருவது அபூர்வமான அரச பிரதக்ஷண அமாவாசையாகும் - அமாஸோம விரதம்
5] இன்று அநுராதா எனச்சொல்லப்படும் அனுஷ நக்ஷத்திரமும் சேர்ந்துள்ளது.
6] எல்லாக்கோயில்களிலும் சிறப்பான சங்காபிஷேகம் நடைபெறும் நாளாகவும் அமைந்துள்ளது
7] அத்துடன் தங்களின் இந்த 1111வது பதிவு வெளியீடும் சேர்ந்துள்ளது தனிச்சிறப்பாகவே தெரிகிறது.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
>>>>>
படங்கள் அத்தனையும் வழக்கம் போல அழகோ அழகு. கீழிருந்து இரண்டும் நாலும் நல்ல கவர்ச்சியாக உள்ளன.
ReplyDelete>>>>>
கீழிருந்து ஐந்தாவது படத்தைப்ப்பார்த்ததும் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினேன்.
ReplyDeleteஎன் வயதான தாயாருடன் திருக்கழுங்குன்றம் மலை உச்சிக்கு ஏறியது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு [1990] அப்போது சுமார் 80 வயது இருக்கும். மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு படியாக ஏறி வந்தார்கள். நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.
மிகச்சரியாக பகல் 12 மணிக்கு இரண்டு கழுகுகள் வருகை தந்து சர்க்கரைப்பொங்கலைச் சாப்பிட்டு சென்றதையும் எங்களால் நன்கு தரிஸிக்க முடிந்தது.
>>>>>
திருக்கழுங்குன்ற அடிவார தாழக்கோயில் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் வலம்புரிச்சங்கு பற்றிய தகவல்களை கதைபோல அழகாகச் சொல்லியுள்ளது அருமை.
ReplyDeleteooo ooo
அழகிய படங்களும் அருமையான விளக்கங்களும் இன்றும் மனதிற்கு மகிழ்வைத் தருகின்றன.
ReplyDeleteபகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
சிறப்பான பகிர்வு. திருக்கழுக்குன்றம் கோவில் பற்றி அறியாத தகவல்கள்....
ReplyDeleteதிருவானைக்காவல் கோவிலிலும் சங்காபிஷேகம் உண்டு..
படஙக்ளும் பகிர்வும் அருமை. நன்றி,.
ReplyDeleteதிருக்கழுகுன்ற கோவில் தகவலுடன் சங்கு பூக்கும் அதிசயத்தையும் அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteஓம் நமசிவய வாழ்க வளமுடன்
ReplyDeleteதிருக்கழுகுன்றம் தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு தோன்றும் என்பது அதிசயமான செய்திதான். உங்கள் பதிவின் வழியே இதனை முதன் முறையாக கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஆம் இதுவும் புதிய தகவலாக எனக்கு உள்ளது.
ReplyDeleteநன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நாங்கள் திருவெண்காடு சென்று சங்காபிஷேகம் பார்த்து வந்தோம்.
ReplyDeleteதிருகழுகுன்றம் ப்பற்றிய விரிவான தகவல் படங்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.