ஸ்ரீ ராம ராம ராமேதி ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
நலம்தரும் ராமநாம மந்திரம் ஒருமுறை சொன்னால்
நூறுதடவை விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதற்கு சமம்.
ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத இக்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ
புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸரணாத் / ஸ்மரணாத் பவேத்
விநய ஆஞ்சனேயராகக் அருள்பொழியும் இணையற்ற ராமபக்தரான அனுமன் ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர்.
தனது இளம் வயதிலேயே சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தவர்.
சத்குருவின் அனைத்து குணங்களையும் ஒருங்கே பெற்றவர் மாருதி.
உலக மக்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசிக்கும்
ஆசானாக இவர் விளங்குகிறார்.
அனுமன் விஷ்ணுவின் குணநலன்களும் கொண்டு ருத்ராம்சமாகவும் கருதப்படுகிறார்.
ராமன் சிவ பக்தராய்த் திகழ்வதுபோல சிவனும்
சிறந்த விஷ்ணு பக்தராக விளங்குகின்றார்.
சிறந்த விஷ்ணு பக்தராக விளங்குகின்றார்.
திருமாலுக்குத் தொண்டு செய்வதற்காகவே பரமேஸ்வரன்
அனுமனாக வடிவெடுத்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன.
அனுமனாக வடிவெடுத்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன.
அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர்..
என்றும் நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்.
அனுமனை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் வளரும்; தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வண்மை போன்றவற்றைத் தருபவர் அஞ்சனை மைந்தர்.
பாரதப் போரில் அர்ஜுன னின் தேர்க்கொடியில் அமர்ந்து, கிருஷ்ண பகவான் பார்த்தனுக்கு உபதேசித்த பகவத் கீதையை நேரில் கேட்டவர் ஆஞ்சனேயர். கீதைக்கு தத்துவமயமான ஒரு விளக்கத்தை அனுமன் அருளியிருக்கிறார்..!
சுந்தரன் என் று ஆஞ்சனேயரின் அன்னை அஞ்சனாதேவி அவருக்கு இட்ட நாமத்தை வைத்தே வால்மீகி சுந்தர காண்டத்தை எழுதினார்.
சுந்தரகாண்ட பாராயணம் நமக்கு எல்லா நற்பலன்களையும் அளித்து, ஸ்ரீ சீதா, லஷ்மண, பரத, சத்ருக்கன, ஹனுமத் சமேத ஸ்ரீராமபிரானின் திருவருளைப் பெற்றுத் தரும்.
அனுமனின் பிரபாவம் சொல்லப்பட்டதால்தான் சுந்தர காண்டத்துக்கு ராமாயணத்தில் உள்ள மற்ற காண்டங்களைவிட அதிகமான பெருமை வந்தது.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரின் சாந்நித்யம் நிறைந்திருக்கும்.
எங்கெங்கு அனுமனின் திருவருள் பாய்கின்றதோ அங்கெல்லாம் ஆனந்தம் பொங்கும் ..!
அனுமன் பாரதத்தின் தென்முனையிலிருந்து இலங்கைக்கு கடலைத் தாண்டிப் பாய்ந்து சென்றவர் ஆஞ்சனேயர்.
அப்போது கடலிலிருந்து புறப்பட்ட பல ஆபத்துகளைத்
தனது ராம பக்தியால் வென்று காட்டியவர் அவர்.
தனது ராம பக்தியால் வென்று காட்டியவர் அவர்.
ராம நாமம் சொல்லி அவரை ஆனந்தப்படுத்துவோருக்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை!
'ஆஞ்சி உம்மாச்சி'யின் அழகிய படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteவெகு நாட்களுக்குப்பின்பு அனுமனை மீண்டும் தரிஸித்தோம்.
ReplyDelete>>>>>
இன்று சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு,
ReplyDelete>>>>>
புத்துணர்வு ஊட்டிடும் படங்கள்.
ReplyDeleteஆனந்தம் பொங்கிடச் செய்யும் அற்புதமான வடைகள் !!!!!
>>>>>
ஹநுமனை வழிபட உதவிடும் ஸ்லோகங்கள் ஜோர் ஜோர்.
ReplyDelete>>>>>
ராம நாம மந்திரம்
ReplyDeleteஒருமுறை சொன்னால்,
நூறு தடவை சொல்வதற்கு சமம்.
[இதை ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும்]
>>>>>
சுந்தரகாண்ட மஹிமையைச்சொல்லி, ஹநுமனின் வீர தீர பராக்ரமங்களையும் சொல்லி, சிவனின் அவதாரமே ஹநுமன் என்றும் சொல்லி, அவரை ஆனந்தப்படுத்துவோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று சொல்லி, ஒரு மாதிரியாக இந்தப் பதிவு முடிக்கப்பட்டுள்ளதில் ஆனந்தம் .... ஆனந்தம் .... ஆனந்தமே !.
ReplyDeleteooo ooo
படங்களும் சிறப்பான தகவல்களும் மிகவும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteஅம்மா
ஸ்ரீ அனுமன் பற்றிய பதிவு மிக அருமை... படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா
எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைகிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைகிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com
ReplyDelete-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜெய் ஆஞ்சனேயா......
ReplyDeleteஅனுமனின் அழகிய தோற்றங்களுடன் அருமையான பதிவு!
ReplyDeleteநன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
ராமதாசனின் பகிர்வு படங்களுடன் அருமை.
ReplyDeleteஜெய் ஆஞ்சனேயா..
அருமையான தகவல்கள் மற்றும் படங்கள்.
ReplyDeleteஜெய் பஜ்ரங்கபலி!
ReplyDeleteசனிக்கிழமையன்று அனுமனின் பெருமைகளை சொல்லும் பதிவு படங்களுடன் அமர்க்களப்படுத்துகிறது.
ReplyDeleteஹனுமந்த புராணம் அருமை. நல்ல படங்கள் இனிய வாழ்த்து.
ReplyDeleteஇறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
ஸ்ரீஅஞ்சநேயரின் ஆற்றலையும் பெருமைகளையும்
ReplyDeleteநிறைந்த விளக்கங்களுடன் விவரித்த -
அழகிய பதிவு!..
வ்ணக்கம் அம்மா...
ReplyDeleteஅனுமனின் அழகிய படங்களோடு அவரின் சக்தியையும் அவரின் அற்புதங்களையும் படிக்கும் வாய்ப்பை நல்கிய தங்களுக்கு எனது அன்பான நன்றிகள். அழகான படங்களோடு அசத்தலான பகிர்வு. நன்றி.
அனுமன் என்றாலே எனக்கு கம்பனின் சுந்தரகாண்டம்தான் நினைவுக்கு வரும். அனுமனின் பல் வேறு நிலைகளை படங்களுடன் தந்தமைக்கு நன்றி!
ReplyDelete